Saturday 15 September 2018

திருமண வாழ்த்து சங்கரன்மகன்


                                                             திருமண வாழ்த்து                                                                 
    மணமகள்: க.சித்ரகலா                                                                மணமகன்: ச.மோகன்ராஜ்                      
நெடுமாலாம் திருமாலை மனதுள் வைத்து
     நெஞ்சத்தில் வஞ்சனைதான் கொஞ்சம் இல்லா
கடுமைகொள் சொல்பேசா ரங்கைய செட்டியாரும்
     கருத்துடைய எத்திராசு அம்மாள் தானும்
நெடும்புகைச் சூலையில் சுட்டெடுத்த தங்கமாய்
     நிலையான குலந்தழைக்க வந்தசங் கரனும்
கெடுமதி சற்றில்லா ராசாமணி ஈன்றெடுத்த
     கொள்கைப் பிடிப்புள்ள மோகன் ராசாவே!

வள்ளுவன் குறளாக வையத்தில்  என்றும்
     வரத ராசனுடன் கூடி வாழ்க!
தெள்ளுதமிழ்ச் சுவைபோல் என்றும் தீதிலா
     சித்ரகலா  எண்ணத்தில் நின்று வாழ்க! 
கள்ளமில்லா சிந்தையும் கபடமில்லாச்சொல்லும்            
     காசினியில் பெற்றுநீ களிப்புடன் வாழ்க!       
உள்ளத்தில்  திடத்தை வைத்து ஊர்மெச்ச         
     ஊழி தோறும் வாழ்க! வாழ்கவே!      
           
  திருவளர் செல்வி சித்ரகலாவிற்கு
தங்ககுண ராமுசெட்டி லட்சுமிப் பெண்தகையும்
     தவஞ்செய்து பெற்றெடுத்த கணேசன் உடன்கூடி
பங்கமிலா வீரம்மாள் ஈன்றெடுத்த சித்ரகலா
      பாங்கான குடும்பதிற் கேற்ற பெண்ணாய்
எங்கும் புகழ்மேவும் என்னருமைத் தமிழ்போலே
     எக்காலும் மோகனோடு இன்பமாய் இருந்திடுக
மங்காத செல்வமுடன் மட்டற்ற மனநிறைவும்
       மகராசி  நீபெற்று மகிழ்வுடன் வாழ்கவே!

           இல்லற இணையர் இருவருக்கும்
மங்கல முரசு கொட்ட
     மனதிலே மகிழ்வு பொங்க
இங்குயர் வதுவை கொள்ளும்
     இன்பம் சேர்அறிவால் மிக்க
நங்கையும் நம்பி நீயும்
     நானிலம் போற்ற வாழ்க!
பொங்குயர் மணியாம் மக்கள்
  பொருந்தநீர் வாழ்க! வாழ்க!
     இடம்: பேரூர்                             அன்புடன்  வாழ்த்தும்                                                 
     நாள்:  ௦௩-௦௯-௨௦௧௭                              தொல்காப்பியச்செம்மல்
                                                                                     புலவர்.ஆ.காளியப்பன்MA.,MEd
                                                         முத்தம்மாள்நிலையம் 
                                                          பூலுவபட்டி(அஞ்சல்) 
கோயமுத்

No comments:

Post a Comment