Monday 27 February 2017

சாரியை



                        இலக்கணம்  25-02-2017                     
                  

                           சாரியை                                               பலருக்குச் சாரியை என்றால் என்ன? என்று ஐயம் வந்துள்ளது. ஆகவே அதையே இன்றைய இலக்கணத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டது
சமையல் செய்கிறார்கள். குழம்பு,மிளகுசாறு,பொரியல் எல்லாவற்றிலும் கறிவேப்பிலை போடுகிறார்கள்.அதை நாம் உணவு உண்ணும் போது உண்ணாமல் எடுத்து வைத்து விடுகிறோம்.உண்ணாத அந்தக் கறிவேப்பிலையை உணவில் ஏன் சேர்க்கவேண்டும்.அதனால் உணவின் சுவையும்,மணமும் கூடுகிறது. அதேபோல்தான் சாரியையும்.                           சொற்களின் இடையில் வரும்.ஆனால் அதற்குத் தனிப்பொருள் இல்லை.பொருள் கொள்ளும் போது அதை விட்டு விடுவோம்.
சாரியையை இரண்டுவிதமாகப் பிரிப்போம்.                                                               1) எழுத்துச்சாரியை                                                             2)பதச்சாரியை என இருவகைப்படும்.
                            எழுத்துச்சாரியை
குழந்தைகளுக்கு எழுத்துக்களைக் கற்பிக்கும் போது என்று சொல்வதில்லை. அ ன்னா,ஆவன்னா என்றே சொல்லுகிறோம்.இந்த ன்னா,வன்னா என்பவைகளே சாரியைகள்.
   ய், யி இவை மூன்றும் ஒரே ஒலியாகச் சொல்லப்படுகின்றன.
இவற்றில் எந்த எழுத்தைக் கூறினோம்.என்று கேட்டவர் மயங்குவர்.எழுதும் போது வேறுபாடு தெரியும். ஆனால் சொல்லும் போது வேறுபாடு உணரமுடியாது. அதற்காக ‘இ’ என்பதை இ கரம் என்றும் ய் என்பதை யகரம் என்றும் யி என்பதையிகரம் என்றும் வேறுபாடு உணர அந்த எழுத்துகளுடன் வேறு சில ஒலிகளைச் சேர்த்துச் சொல்லுகிறோம்.அந்தச் சில ஒலிகளே சாரியைகள் ஆகும்.
    {ஒலியின் அடிப்படையில் எழுத்துகளை மூன்று வகைப்படுத்துவர்.
அவை 1)குறில், 2)நெடில், 3) ஒற்று(மெய்) என்பன
    ,,,,ஒ என்ற ஐந்தும் குறில் அவை தொடர்பான க,, வையும் குறிலாகக்கொள்க. இவை ஒரு மாத்திரை அளவு ஒலிக்கும்
    ,,,,,,ஔ என்னும் ஏழும் நெடில். இவை இரண்டு மாத்திரை அளவு ஒலிக்கும். அவை தொடர்பான கா,ஙா,சா, வையும் நெடிலாகக் கொள்க.
க்,ங்,ச்.ஞ்,ட்,ண்,த்,ந்,ப்,ம்,ய்,ர்,ய்,ல்,வ்,ழ்,ள்,ற்,ன் என்னும் பதினெட்டும் மெய் எழுத்துகள் ஆகும் இவை அரை மாத்திரை அளவு ஒலிக்கும்அத்துடன் ஃ என்ற ஆய்த எழுத்தையும் சேர்த்துக்கொள்க.}
 எழுத்துச்சாரியை கரம்,காரம், கான் அகரம் என்று நான்கு உள்ளன.சிலசமயம் அஃகான் என்ற சாரியையும் வரும்.
அவற்றுள்
   குறில் எழுத்துகள் கரம்,காரம் என்னும் சாரியைகளைப் பெறும். அ என்பதைத் தனியாகக் கூறாமல் அ+கரம்=அகரம்என்றும் அகாரம்,அஃகான் என்றும் கூறுவர்.
    நெடில் எழுத்துகள் காரம் என்னும் சாரியை பெறும் . ஆ என்பதைத் தனியாகக் கூறாமல் ஆ+காரம்=ஆகாரம் என்று கூறுவர். ஆகாரம், ஈகாரம்,ஐகாரம்,ஔகாரம் என்றுகூறுவர்.
  ஆனால் ஐ,ஔ என்ற இரண்டும் காரம் சாரியையோடு கான் என்னும் சாரியையும் பெறும். ஐகான்,ஔகான்
     மெய் எழுத்துகள் அகரச்சாரியை பெறும்.சிலசமயம் அ என்ற ஒரே ஒரு எழுத்தையும் சாரியையாகப் பெற்று வரும்.எ-டு க் என்பதை க என அ வைச்சேர்த்துசில மெய்எழுத்துகள் அஃகான் சாரியை பெற்று வரும்.ய்,வ்போன்ற மெய் எழுத்துகள் அகரச் சாரியை பெற்று யகரம், வகரம் என்றுவரும்.மஃகான் வஃகான் என்றும் வரும்.
                                  
                         பதச்சாரியை
      இனிப் பதங்கள் சேரும் போது வரும் சாரியை பற்றிப் பார்ப்போம்.
பகுபதத்தின் ஒர் உறுப்பு சாரியை.    பகுபத்தில் இடைநிலைக்கும் விகுதிக்கும் இடையில் வரும். எடுத்துக்காட்டு                                                    
படித்தனன் இதை உறுப்பிலக்கணமாகப் பிரித்தால்
படி+த்+த்+அன்+அன் எனப்பிரிப்பர் இதில்
படி-பகுதி
த்சந்தி
த்இடைநிலை
அன்சாரியை**
அன்--விகுதி
** இது இடைநிலைக்கும் விகுதிக்கும் இடையில் வந்துள்ளது.
  பகுபதத்தில் பகுதிக்கும் இடைநிலைக்கும் இடையில் க்,ச்,த்,ப் தவிர பிற எழுத்துகள் வந்தால் அதையும் சாரியை என்றே கூறவேண்டும்.
 அமைகுவன்=அமை+கு+வ்+அன் எனப்பிரிப்போம் இதில் பகுதிக்கும் இடைநிலைக்கும் இடையில் வந்துள்ள கு சாரியை ஆகும்
சாரியைகள் பல அவை
அன் ஆன் இன் அல் அற்று இற்று அத்து அம்
தம் நம் நும் ஏ அ உ ஐ கு ன இவைபோல வருவன எல்லாம் பொதுச்சாரியை எனப்படும் சிலசமயம் தன் தான்,ஆம்,,து என்பனவும் சாரியையாக வரும்.
 எடுத்துக்காட்டு
ஒன்று+ கூட்டம்=அன்சாரியை பெற்றுஒன்றன்கூட்டம் வரும்.  ஒன்று+அன்+கூட்டம்இதில் அன் சாரியை இதைப்போலவே மற்றவற்றையும் சேர்த்துக்கொள்க.  
இனிப்புணர்ச்சிப்படி     சாரியையைப்பார்ப்போம்
பெயர்ச்சொல்லுடன் வேற்றுமை      உருபுகளைச்சேர்க்கும்போது சார்யைகள் வரும்
அவைதாம்
இன்னே வற்ரே அத்தே அம்மே
ஒன்னே ஆனே அக்கே இக்கே
என்னென் கிளவி உளப்படப்பிறவும்
அன்ன என்ப சாரியை மொழியே         (தொல் எழுத்130)      

நன்னூல்
அன் ஆன் இன் அல் அற்று இற்று அத்து அம்
தம் நம் நும் ஏ அ உ ஐ கு
இன்ன பிறவும் பொதுச் சாரியையே      இவைகளைப்பற்றி எழுத்துகளைச்சேர்த்தும் போது (புணச்சியில்)     பார்ப்போம் பதிவு புலவர் காளியப்பன் தலைவர் தொல்காப்பியர் தமிழ்ச்சங்கமம் 9788552993                           



Wednesday 8 February 2017

அரசுத்தேர்வு



TNTET 2017 BREAKING NEWS | ஆசிரியர் தகுதித்தேர்வு  பிப்ரவரி 15 முதல் விண்ணப்ப விநியோகம் துவங்க உள்ளது | விண்ணப்பம் பெற கட்டணம் ரூபாய் 50 | தேர்வுக்கட்டணம் ரூபாய்  500 / 250 (IN CHALLAN) | விண்ணப்பங்கள்  கிடைக்கும் இடங்கள் - தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு மேல்நிலைப்பள்ளி வளாகங்கள் |  பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அதே மையத்தில் ஒப்படைத்தல் வேண்டும் | கடைசி தேதி 28.02.2017 | விரிவான விவரங்கள் ... Last date for Sale of Application Forms tentatively 27-02- 2017 and receipt of Filled-in Application forms in the District Educational Offices on 28.02.2017 should be closed at 05.00 PM without fail. Paper I and Paper II Application Forms should be separated (two different colours).