Sunday 10 March 2019

கருப்பொருள்


தமிழ் இலக்கணத்தில்  கருப்பொருள்  என்பது மூன்று பொருள் வகைகளுள் ஒன்றாகும். முதற்பொருள், உரிப்பொருள் என்பன ஏனைய இரண்டு வகைகள். ஐந்து திணைகளுக்கும் உரிய நிலங்களில் வாழும் உயிரினங்களும் வழங்கும் பொருள்களும் கருப்பொருள்என வழங்கப்படுகிறது. கருப்பொருள் அகத்திணைக்குக் கருவாய் அமைவன. உரிப்பொருள் சிறந்து விளங்க கருப்பொருள் அமைகிறது. மனிதனின் வினை நிகழ்ச்சிக்குத் துணையாக இருப்பவைகளும் நிலம் பொழுது இவற்றின் இயல்பால் தோன்றுபவைகளும் படைக்கப்படும் மானுட நிகழ்ச்சியை விளக்குவதற்குரிய வாயிலாக அமைபவைகளும் கருப்பொருள்களாகக் குறிக்கப்படுகின்றன
      கரு என்றால் மூலம் அடிப்படை, வித்து, விந்து, சந்ததிக்கான உயிரி கருதுகோள், கருப்பு, கருமுட்டை எனப்பல பொருள் உண்டு. சில உயிரிகள் தம் இனத்தைப்  பெருக்கிக் கொள்ள,  தம்முள்ளே உருவாக்கும் ஓர் உயிர் அங்கமாகும். நீர், காற்று  மற்றும் அளவான வெப்பநிலை போன்ற தமக்கு சாதகமான சூழல் வழங்கப்படுகையில் புதிய உயிரினம் உண்டாகிறது
      கருப்பொருள் முதற்பொருளான இடத்தாலும் காலத்தாலும் தோன்றுவது பொருட்களின் தன்மையும் ஒவ்வொரு நிலத்திலும் மாறுபடும். இவை அப்பொருள்கள் இருக்கும் இடத்தில் உள்ள தட்ப வெட்ப நிலையையும், அழுத்தத்தினையும் பொருத்து மாறுபடும். உதாரணமாக நீர் இப்புவியின் வெவ்வேறு இடங்களில்,திட நிலை(பனிக்கட்டி), திரவ நிலை(நீர்),வாயு நிலை(நீராவி) ஆகிய வெவ்வேறு நிலையில் ஒரே நேரத்தில் காணப்படுகிறது. இந்நிலங்களின் தன்மையே கருப்பொருளும் உரிப்பொருளும் தோன்றுவதற்குக் காரணமாயின. அதேபோல் நிலத்தின் தன்மைகளுக்கு ஏற்ப ஒழுக்கங்கள் அமைவதால் நிலத்தின் பெயராலேயே ஒழுக்கங்களுக்கு (திணைகளுக்கு)ப் பெயர் வைத்தார். அவ்வவ் நிலங்களில் சிறந்து விளங்கும் மலர்களின் பெயர்களால் திணைகளின் பெயர்களைச் சுட்டுவார்.
நிலத்தையும்   அடிப்படையாகக் கொண்டு அந்நிலங்களில் வாழ்ந்த மக்களின் தொழிலையும், ஒழுக்கத்தையும்,  உணவு ஈட்டலையும் சமூக நடத்தையையும் தெய்வங்களையும் வகுத்திருந்தார்கள் என அறிகிறோம்
நிலங்களுக்குத் தெய்வத்தை வரையறுத்த தொல்காப்பியர் கருப்பொருளில் பொதுவாகவே சுட்டிச் செல்கிறார், நிலங்களின் இயல்பான பண்புகளிலிருந்து அந்நிலத்து மக்களின் சமூக வாழ்க்கை முறை அமைகிறது. நிலத்தின் பண்புகள், அங்கு வளரும் தாவரங்கள், வாழும் உயிரினங்கள் ஆகியவற்றின் நடத்தையிலிருந்து மனிதரின் நடத்தையும் தகவுகளும் அமைகின்றன கருப்பொருள் என்பது அந்தந்தத் திணைக்கு உரியனவும், அவற்றின்கண் உள்ளனவும்ஆகிய பொருள்கள். ஒவ்வொரு நிலத்தையும் சார்ந்து அங்கு விளங்கும்,வாழும், திகழும் பொருள்கள் யாவும் கருப்பொருள்களே. அவற்றைத் தொல்காப்பியர்
தெய்வம் உணாவே  மா மரம், புட்பறை
 செய்தி யாழின் பகுதியொடு தொகைஇ
அவ்வகை பிறவும் கருவென மொழிப  என்று கூறுகிறார்
தொல்காப்பியர் கருப்பொருளை மட்டும் பட்டியலிட்டதோடு நிறுத்திவிட்டார். உரை ஆசிரியர்களும் பிற்காலத்தில் வந்த இலக்கண ஆசிரியர்களும் திணைக்குரிய கருப்பொருள்களைப் பட்டியலிட்டுள்ளனர் அவை  ஆரணங்கு (தெய்வம் மக்கள் (உயர்ந்தோர், அல்லோர் (உயர்ந்தோர் அல்லாதவர்),புள்(பறவை), விலங்கு, ஊர், நீர், பூ, மரம், உணவு, பறை, யாழ், பண், தொழில் முதலான பதினான்கும் கருப்பொருள்களாகும்என்பர். அந்த அந்த திணைகளுக்குரிய கருப்பொருள்களை  அந்த அந்த திணைகளைப்பற்றிக் கூறும்போது காண்போம்.

எண்
கருப்பொருள்
குறிஞ்சி
முல்லை
மருதம்
நெய்தல்
பாலை
1
தெய்வம்(ஆரணங்கு)
முருகன்
சேயோன்
திருமால்
வேந்தன்
(இந்திரன்)
வருணன்
கொற்றவை
2
தலைமக்கள்
பொருப்பன், வெற்பன், சிலம்பன், குறத்தி, கொடிச்சி

குறும்பொறை நாடன் தோன்றல், கிழத்தி

ஊரன், மகிழ்நன், மனைவி

சேர்ப்பன்

விடலை, மீளி,  எயிற்றி

3.
குடிமக்கள
கானவர்,
குறவர் - குறத்தியர்

இடையர் - இடைச்சியர்
ஆயர் - ஆய்ச்சியர்
உழவர் உழத்தியர் கடையர்- கடைசியர்

நுளையர்நுளைச்சியர் பரதர்-பரத்தியர்

எயினர்- எயிற்றியர்,
மறவர்              மறத்தியர்

4.
விலங்கு
புலி, யானை, கரடி, சிங்கம்

மான், முயல்

எருமை, நீர்நாய்

சுறாமீன்
செந்நாய்

5.
பறவை
கிளி, மயில்

காட்டுக்கோழி

அன்னம், நாரை, மகன்றில்

கடல் காகம்



புறா,                      பருந்து                  ,கழுகு
6
மரம்
சந்தனம்,தேக்கு, அகில், மூங்கில்

கொன்றை, குருந்தம், காயா

காஞ்சி, வஞ்சி, மருதம்

புன்னை, ஞாழல்

உழிஞை,                      பாலை,                       ஓமை

7.
பூ
குறிஞ்சிப் பூ, காந்தள் பூ, வேங்கைப் பூ

முல்லை, பிடவம், தோன்றி

தாமரை, குவளை

நெய்தல், தாழை

குரவம்                                             மரவம்  

8
நீர்
அருவி நீர், சுனை நீர்

குறுஞ்சுனை, காட்டாறு

ஆறு, கிணறு, குளம்

உவர்நீர்க் கேணி

வற்றிய                      அருவி                      நீர்,சுனை                       நீர்

9.
ஊர்
சிறுகுடி

பாடி

பேரூர், மூதூர்

பாக்கம், பட்டினம்

குறும்பு                             பறந்தலை                                                               

10.
உணவு
மலைநெல், தினை, மூங்கில் அரிசி

வரகு, சாமை, முதிரை

நெல்லரிசி

மீனும் உப்பும் விற்றுப் பெற்ற உணவுப் பொருள்

வழிப்பறி,               கொள்ளை           யிட்டுக்                    கவர்ந்தவை




11.
பண்
குறிஞ்சிப் பண்

சாதாரி

மருதப் பண்

செவ்வழிப் பண்

பஞ்சுரம்
12.
பறை
தொண்டகப் பறை

ஏறுகோட்பறை

நெல்லரி, கிணை, மண முழவு

மீன்கோட் பறை,நாவாய்ப் பம்பை

துடி

13.
யாழ்
குறிஞ்சி யாழ். பறை

முல்லை யாழ்.
மருத யாழ்.

விளரி யாழ்.

பாலை                 யாழ்.


14
தொழில்
வெறியாடல், தினையும் மலை நெல்லும் விதைத்தல் தேன் அழித்தல், கிழங்கு எடுத்தல், அருவி நீர் ஆடல்
சாமை, வரகு விதைத்தல் களை கட்டல்,கடா விடல்,குழலூதுதல் குரவை ஆடுதல், கொல்லேறு தழுவுதல்

வயல் களை-கட்டல்; அரிதல், கடா விடல், விழாச் செய்தல், புதுநீர் ஆடுதல்

மீன் பிடித்தல், உப்பு உண்டாக்கல், மீன் உணக்கல் கடல் ஆடுதல்.


போர்,                              பகற்சூறை                                   ஆடல்