Thursday 30 April 2020

குடும்பப் பெண்களின் குணங்கள்தொல்காப்பியம் கூறுவது


பெண்ணின் இயல்புகள் 13-04-20
      செறிவும் நிறையும் செம்மையும் செப்பும்
     அறிவும் அருமையும் பெண்பாலன 1155 பொருளியல் 15
  இவை பொதுவாக பெண்ணிற்குரிய குணங்கள் எனினும், ஒருபெண் பெற்றோரை விட்டுப் பிரிந்து, காளை ஒருவனைக் கைப்பிடித்து இல்லறம் நிகழ்த்தும் வாழ்க்கைத் துணையின் குணங்களாக எடுத்துக்கொள்ளலே நலம்.
இதன்பொருள்: நிலையில் திரியாத அடக்கமும், மறைபுலப்படாத வாறொழுகும் நிறையும் மனக்கோட்டமின்மையும்  காலமும் இடமும் அறிந்து கூறத்தகுவன கூறலும்    நன்மை   தீமைகளை  ஆராய்ந்து   கொள்ளும் அறிவும்  தம் உளத்தினைப்  பிறர்  எளிதின் அறிய முடியா  தொழுகும்  அருமையும் பெண்பாலார்க்குரிய திறன்களாகும்.
                  இவற்றுள்
செறிவு என்பது அடக்கம். செறிவறிந்து சீர்மை தரக்கூடியது அடக்கம் அவ்வடக்கத்தைப் சிறந்த பொருளாகக் காக்கக் கூடியவள் பெண். செறிவு என்பதற்கு இறுகுதல், நெருங்குதல் என்னும் பொருள் கொண்டால் மிகுந்த உள்ள உறுதி உடையவள் எனலாம்.   செறிவெனப் படுவது கூறியது மறாஅமை எனும் போது திருமணத்தின் போது இருபெரும் பெற்றோர்களும் மூத்தோர்களும்  கற்பித்ததை  மறவாமல் பின்பற்றுபவள் பெண்

நிறைவு என்பது-அமைதி.எனப்பொருள் கொள்ளின் எந்தச் சூழ்நிலையிலும் அமைதி காத்தல். நிறையுடைமை என்றதற்கு காக்க வேண்டியவற்றைக் காத்து   நீக்க வேண்டியவற்றை நீக்கி  ஒழுகும் ஒழுக்கம். நிறை என்பதற்கு சால்புடைமை, பெருந்தன்மை, மனத்தை ஒருவழி நிறுத்தும் ஆற்றல், நெஞ்சத்தின் உறுதிப்பாடு, நன்மை, உள்ளத்தை ஒருநிலைப்படுத்தும் உயர்பண்பு, பண்பாட்டு நிறைவு, தன்பெருங்குணம், நிதான குணம் உள்ளவள் என்ற பெருமை உடையவள் என்றும் உரையாளர்கள் பொருள் கூறியுள்ளனர். ஆகவே  அன்பு, நாண் ஒப்புரவு கண்ணோட்டம் வாய்மை என்னும் எல்லாவிதமான நற்குணங்களால் நிறைந்திருக்கும் தன்மையோடு. அடங்கி இருத்தல். நிறை எனப்படுவது மறை பிறர்க்கு உரையாமை என்பதால் பிறர் குற்றத்தை வெளிப்டையாய்க் கூறாது நெஞ்சினுள் வைத்துக் காப்பாற்றுதல்

செம்மை என்பது-மனங்கோடாமை அதாவது நேர்மையான சிந்தனை உடையவன்
செப்பு என்பது காலம் கருதி இடத்திற்கும் சூழலுக்கும் தகுந்தவாறு பேச்சினைப் பேசுகின்றவள்
அறிவு என்பது- எப்பொருள் யார்யார் வாய்க் கேட்டபினும் எப்பொருள் எத்தன்மைத்தாயினும்  அதன் உண்மைத் தன்மையை அறிந்து நன்மை பயப்பனவும் தீமை பயப்பனவும் அறிதல்.
அருமை என்பது- தம் உளத்தில் உள்ளதைப்  பிறர்  எளிதில் அறிய முடியாத அளவு    அருமை உடையவளாக இருத்தல்.மேற்கூறிய அறுவகைக்குணங்களைப் பெற்றிருத்தல் ஒரு இல்லக் கிழத்தியின் திறன்களாகும்.  
பதிவு புலவர் ஆ.காளியப்பன் தலைவர் தொல்காப்பியர் தமிழ்ச்சங்கமம் 9788552993

ஆண்மகனுக்கு உரிய அழகு தொல்காப்பியம் கூறுவது


தொல்காப்பியம் கூறம் ஆண்மகனுக்கு உரிய அழகு
         ஆண்மை ( ஆண்மகனுக்கு உரிய அழகு ) 28-12-19
                    
       பெருமையும் உரனும் ஆடூஉ மேன (தொல்காப்பியம்1044)
   இந்த நூற்பா களவியயில் தலைமகன் பற்றிக் கூறும்போது வருவது   இருப்பினும் நாம் பொதுவாக உலகில் உள்ள ஆண்கள் அனைவருக்கும்  எடுத்துக்கொள்வோம். ஆண்களுக்குரிய அறிவு நிறை ஓர்ப்பு கடைப்பிடி என்று நான்கினையும் கூறினாலும்  தொல்காப்பியர் பெருமையும் உரனும்  ஆண்களுக்கு உரியன என்கிறார்.                                     
  பெருமை என்பது  பிறர் செய்ய முடியாத நல்லனவற்றை நான் செய்வேன் என்று எண்ணும் மன ஊக்கமே. அதாவது கல்வி தறுகண் (அஞ்சாமை) புகழ் கொடை  இவற்றில் மேம்பட்டு நிற்றல். விளக்கமாகக் கூறின் அறிவு, ஆற்றல், புகழ், கொடை, ஆராய்தல், பண்பு, நண்பு, பழிபாவங்களுக்கு அஞ்சுதல் முதலியவற்றில் மேம்பட்டு நிற்றல். இது தவிர செயற்கரிய செய்தல், தருக்கின்மை, பிறர் குற்றம் கூறாமை, தன்னிலையில் மேன்மேலும் உயர்ந்து நிற்றல் தன்னிலைமைக்கண் தாழாமை. பிறர் அவமானத்தைக் கூறாதிருத்தல் இவற்றையும் ஆண்களுக்கான பெருமைகளாகக் கூறுவர். இந்தப் பெருமைப் பண்பும் ஒருவன் தன்னைத் தான் காத்துக் கொண்டு நடந்தால் மட்டுமே உண்டாகும். பெருமைப் பண்பு எக்காலத்திலும் பணிந்து நடக்கும்,  பெருமையால்தான் உரன்  பிறக்கும்                                                                   
  உரன் என்பது கடைப்பிடியும் நிறையும் கலங்காது துணிதலும் முதலியவற்றில் வல்லமை உடையவனாகத் திகழ்தல்.அதாவது நன்றென அறிந்த பொருளை மறவாது, உறுதியாகப் பற்றிக் கொண்டு அதன் வழி நடத்தல், தன்னிடம் காக்க வேண்டியனவற்றைக் காத்துப் போக்க வேண்டியவற்றைப் போக்கி நடக்கும் நடத்தை. மேலும்  அன்பு நாண் ஒப்புரவு கண்ணோட்டம் வாய்மை என்பனவற்றால் நிறைந்திருத்தல். தாம் எடுத்துக்கொண்ட செயலின் அருமை கருதி கலங்காது  மனத்திட்பத்துடன் செயலாற்றுதல்.
இப்படிப்பட்ட ஒருவனே சிறந்த ஆண்மகள் ஆவான்.        
 பதிவு தொல்காப்பியச்செம்மல் புலவர் ஆ.காளியப்பன். தலைவர் தொல்காப்பியர் தமிழ்ச்சங்கமம்                                                               .

Saturday 25 April 2020

அகரம் அனைத்திற்கும் சிகரம்



                        அகரம் தமிழுக்குச் சிகரம்            
       
                  
எல்லா எண்களையும் உள்ளடக்கியது அ என்னும் எழுத்தில் 0, 1 ,2, 3 ,4, 5, 6, 7, 8, 9 ஆகிய பத்து எண்களும்  அடங்கி உள்ளதைக் கவனியுங்கள்

     தமிழ் நெடுங்கணக்கில் முதலாவதாக உள்ள எழுத்து ‘அ’ உயிரெழுத்தின் உண்மைத் தன்மையை நான் கற்ற, கேட்ட செய்திகளை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டதே இக்கட்டுரை
அ என்பது சுட்டும் பொருளைகளை அறிவோம்
1) தமிழின் முதல் எழுத்து; தமிழ் உயிரெழுத்துகளில் முதல் உயிரெழுத்து
2) எட்டு என்னும் எண்ணின் தமிழியக் குறியீடு
4) அந்த என்னும் சுட்டு (எ.கா.அப்பறவை,அக்கருவி) 
5)எதிர்மற முன்னொட்டு, வட மொழிகளிலிருந்து பெற்ற பிற்கால அமைப்பு;   
  வட மொழிச்சொற்களை எதிர்மறையாக்க வழங்குவது; இடைச்சொல்
6)ஓர் அசைச்சொல் (எ.கா.)(பெயரெச்ச விகுதியாக) => தன்வழிய காளை (சீவக சிந்தாமணி-494)
7) ஓர் இரக்கக் குறிப்பு (எ.கா.) ' அஆ! கீழே கொட்டி விட்டதே '
8) ஆறாம்வேற்றுமை உருபுகளுள் ஒன்று. (எ.கா.) என கைகள்
13)பாதரசம்
14)புள்ளி  எனப் பலபொருள்கள் உள்ளன.

   அ முதல் ஔ ஈறாக உள்ள உயிரெழுத்துகளின் வரிசையில் முதல் எழுத்து அ.                        ‘அ’ என்ற எழுத்து மற்ற 11 உயிர் எழுத்துகளுக்கும் மூல காரணமாய் உள்ளது. இது பிரமன், விஸ்ணு ,உருத்திரன், மகேஸ்வரன், சதாசிவன், ஒளி, ஒலி, பரமசிவன் வரையில் உள்ள நவ நிலைகளுக்கும் மூலகாரணமாய் உள்ள முழுமுதற் பொருளான இறைவனின் இயற்கை உண்மை உருவத்தைச் சுட்டிக் காட்டுவதாகும்.  
   அகரம் என்றால் புள்ளி என்று பொருள். எல்லா எழுத்துக்களும் புள்ளியை 
முதலாக கொண்டே  எழுதப்படுகின்றன. பல புள்ளிகளின் தொடர்ச்சியே கோடாகும் வரி வடிவங்களுக்கு
 முதலெழுத்து புள்ளி. (புறத்தில்)
   எழுத்துக்கள் இல்லாத மொழிகளுக்கு எப்படி புள்ளி முதலாகும். எவ்வாறெனில் வாயிலிருந்து சொல்லாய் வெளிவருவதற்கு முன் அது
 எண்ணமாய் இருந்தது. எண்ணம் நினைவு என்ற புள்ளியிலிருந்து தோன்றுகின்றது .இந்த நினைவே அகரம் என்றழைக்கப்படுகிறது. (அகத்தில்)
   மூலாதாரத்தில் தோன்றும் ஒலி உடலின் எந்த உறுப்புக்களின் உதவியும் செயலும் இன்றி இயல்பாக வெளிவருவதே அ என்பதாகும். எனவே அகரம் தனித்து இயங்குவதோடு பிற எழுத்துகளையும் இயக்கும். முதலில் தோன்றிய அகர எழுத்தும் அதன் வழியாகத் தோன்றிய எழுத்து, சொல், பொருள், யாப்பு, இலக்கண, இலக்கியம், மறை, சுருதி, வேதம் போன்ற கல்வி முறை அனைத்தும் உண்டாயின.                                                                    
    பிரணவ பொருள்  ஓம் என்பதை அ, , ம் என்று பிரிக்க வேண்டும். அதாவது அ, , ம் என்ற எழுத்துகளை இணைத்தால் ஓம் என்று வரும். ‘அ’ என்பது  படைப்பதையும், உ’ என்பது காப்பதையும்,  ம்’ என்பது அழிப்பதையும் குறிக்கும்.





“அ” என்பது முதலெழுத்து. இது வாழ்வின் ஆரம்பத்தை குறிக்கிறது.                             ‘உ’ என்பது  உயிரெழுத்துக்களின் வரிசையில் ஐந்தாவதாக வருகிறது. மெய், வாய், கண், மூக்கு, செவி என்னும் ஐந்து உறுப்புகளை மனிதர்கள் அடக்கி வைத்துக் கொண்டால், ஆயுள் அதிகரிக்கும் என்பதும், ஆயுள் கூடக் கூட, மனிதர்கள் துவங்கியது தடையின்றி நடக்கும் என்பதும் தெரிந்த செய்தி. மேலும், உ’என்பது காத்தல் எழுத்து என்பதால், இறைவன் நம்மை பாதுகாப்பதைக் குறிக்கிறது. நம் செயல்கள் தடையின்றி நடக்க வேண்டுமானால் நமக்கொரு பாதுகாப்பு வேண்டும். இதற்காகவே ஏதாவது எழுதத்தொடங்கும்போது ‘உ’ என எழுதுகிறோம்.இதைப்பிள்ளையார் சுழி என்கிறோம் ( இதுபற்றிப் பலகதைகள் உள)
‘அ’ என்பது விஷ்ணு. ‘அகர முதல எழுத்தெல்லாம்என்றபடி விச்வத்தின் ரூபமாக இருக்கிற விஷ்ணுதான் அ! அ, , ம் என்ற மூன்றும் சேர்ந்த ப்ரணவமான ஓம்என்பதில் கூட அ என்பது விஷ்ணு, ‘உ’ என்பது ஈச்வரன்,  ‘ம்’ என்பது ப்ரம்மா என்ற திரிமூர்த்தி ஸ்வரூபமாகத்தான் சொல்லியிருக்கிறது த் - அ:- தத்வரூபாதி சிவ போகானந்தமான தசகாரிய இயற்கை உண்மைக் கட்டளை  நிலையில், முன் அலகு நிலைப்பொருள் கூறிய விடத்துக் குறித்த ஏழாவது நிலையாகிய  த் என்பது சிவரூப இயற்கையுண்மைக் கட்டளையாம். அ - அகண்டாகார சித்கலா ரூப ஓங்காரத்துட் பொருட் பிரதம விலக்கிய வியக்தி அக்கரம். பன்னீருயிர்  நிலையில் தலையாய முதலக்கர மாதலில், அதுவே பிரமாதி பரசிவாந்த நவ நிலைக்கும் அனாதியாதி காரணமாயுள்ள இயற்கையுண்மைப் பரிபூரணப் பொருளிலக்காம். எனவே, சிவரூபமாகும் தகராகாசத்தில் சுத்த சிவமாகும் அருட்ஜோதியிணைந்துள்ள  பூரணானந்த ஸ்வரூப பரபதி வியக்தமாயிற்று.” என்கிறது தெய்வத்தின் குரல் (நான்காம் பகுதி திருப்பெயர்களின் பொருள்)    

   அ’ என்ற உயிரெழுத்து கடவுளின் செயலைக் குறிக்கும். இ என்ற உயிரெழுத்து உயிர்களின் செயல்களைக் குறிக்கும். உயிர்கள் எப்பொழுதும் இறைவனுடன் இணைந்தே செயல்படுகின்றன. அதுபோல் இ என்ற எழுத்தும் அ என்ற எழுத்துடனே எப்பொழுதும் இணைந்தே செயல்படும்(வள்ளலார்)

காளிங்கர் அகரமும் அதுவே முதலும் அதுவே. அகரமாகிய எழுத்தின்கண் விரித்தன ஏனை எழுத்துங்களும் அவற்றான் ஆய சொற்களும் மற்றைச் சொற்றொடர்களும் எனைத்துக் கலைகளும், மற்றும் யாவையுமாகிய அது மற்றியாதொருபடி அப்படியே மூலகாரணனாகிய இறைவன் கண்ணே விரிந்தனவும் அவை ஓசை ஊறு ஒளி சுவை கந்தம் என்கின்ற  நுண்பூதமும் மற்றும் அவற்றின் வழி விரிந்த   வான் வளி தீ நீர் நிலம் என்கிற ஐம்பெரும் பூதமும் அவற்றின் வழி விரிந்த நடப்பன நிற்பனவாகிய இருவகைப் பல்லுயிரும் மற்றும் இவ்வுயிர்கள் வாழ்கின்றன உலகங்கள் என்றவாறு.
விளக்கம் அகரம் ஆகிய முதல்  எழுத்து வாயைத் திறந்த அளவிலே பிறப்பது. வாயைத் திறவாமல் ஒலிக்கக் கூடிய ஏதேனும் எழுத்து உளதோ?அதனால்தான் ஒருவரை வாயைத் திற என்னும் பொருளில் ஆ என்னு என்கிறோம். ஆதலால் வாயை அங்காத்தலினாலே பிறக்கும் அகரம் அங்காப்புடன் பிறமுயற்சிகளும் சேர்ந்து பிறப்பனவாகிய  ஏனைய பதினோர் உயிரெழுத்துகளுடன் கலந்து இருக்கிறது என்பதை உணரலாம். அகரம் இல்லையெனில் ஏனைய உயிரெழுத்துகளும்  இயங்கா. மெய்யெழுத்துகளும் அப்படியே ககரமுதல் னகரம் இறுதியானவை மெய்யெழுத்துகள். கற்றவர்கள் அவற்றை க,ங,ச என இறுதியில் அகரம் சுட்டிச் சொல்வர். கல்லாதவர் இக்,இங்,இச் என முதலில் இகரவுயிர் கூட்டிச்சொல்லுவர். எழுதும் போதும். க,ங,ச என எழுதிப்பின்னரே அவற்றின் தலைமேற் புள்ளி வைத்து  எழுத்தாக்குவர். எனவே மெய்யெழுத்துகளும் அகரம் இன்றேல் இயங்கா என அறியலாம். மெய்யின் இயற்கை அகரமொடு சிவணும் (தொல்காப்பியம் எழுத்ததிகாரம் சூத் 46) என்றார் தொல்காப்பியனாரும்.

    நச்சினார்க்கினியர் “ இறைவன் இயங்கு திணைக்கண்ணும் நிலைத்திணைக் கண்ணும் பிறவற்றின் கண்ணும் அவற்றின் தன்மையாய் நிற்குமாறு எல்லார்க்கும் ஒப்ப முடித்தார்ப் போல அகரமும் உயிர்க்கண்ணும் தனிமெய்க்கண்ணும்  கலந்து அவற்றின் தன்மையாயே நிற்கும் என்பது சான்றோர்க்கெல்லாம்  ஒப்ப முடிந்தது”,
அகர முதல என்னும் குறளான் அகரமாகிய முதலையுடைய எழுத்துக்கள் எல்லாம் என வள்ளுவர் உவமை கூறினார்
    இயங்கு திணை நிலைத்திணை என்றது சரமும் அசரமும் ஆகிய உயிர்களை ,பிற என்றது உயிர் இல்லாத பொருள்களை .எனவே அகரமில்லாமல் ஏனைய உயிர் எழுத்துகளோ மெய் எழுத்துகளோ இயங்க வல்லுன ஆகாமைபோல் ஆதிபகவன் ஆகிய முதல் இல்லாமல் உலகம் இயங்காது என்பது பெறப்பட்டது. அகரத்திற்கும் இறைவனுக்கும் உள்ள ஒப்புமை சான்றோர் பலராலும் கூறப்பட்டுள்ளது,
 சில எடுத்துக்காட்டுகள் காண்க.
 நகர மணியருவித் தடமால் வசைசிலையா
 நகரம் ஒருமூன்றும் நலங்குன்ற வென்றுகந்தான்
அகர முதலானை அணியாப்ப னூரானைப்
பகரு மனமுடையார் ழினைபற் றறுப்பாரே -- திருஞானசம்பந்தர்

அகரம் முதலின் எழுத்தாகி நின்றாய்--சுந்தரர் - நெல்வாயிலரத்துறை

ஒன்றென்ற தொன்றேகாண் ஒன்றேபதி பசுவாய்
ஒன்றென்ற நீபாசத் தோடுனைக்காண்-- ஒன்றின்றேல்
அக்கரங்கள் இன்றால் அகரஉயிர் இன்றேல்
இக்கிரமத் தென்னும் இருக்கு --சிவஞானபோதம்

அகர உயிர்போல் அறிவாகி எங்கும்
நிகரில் இறைநிற்கும் நிறைந்து---  திருவருட்பயன்

க்ஷராணா மகாரோஸ்மி ---பகவத் கீதை

அகார: ஸர்வ வர்ணாக்ரய:  ப்ரகாஸ: பரம: சிவ: --- சிவமஹாபுராணம்
இவை யாவும் நியாயக்களஞ்சியத்தில் கண்டவை.

  திரு சொல்லாக்கியன் எழுதிய திருக்குறள் மறுவாசிப்பு எனும் நூலில் கண்டவை
உயிரெழுத்தின் தன்மை உடலும் மனமும் சலனமற்று இருக்கையில்  “அ” எனும் உயிர் அதிர்வு உடலின் மையத்தில் தோன்றி இயல்பாகத் தன்னிச்சையாகத் தொடர்ந்து வெளிப்பட்டுக் கொண்டுள்ளது. வெளிவரும் காற்றை வெவ்வேறு வகைகளில் இதழ்களாலும் நாக்காலும் தடுக்க முயல்வதன் மூலம் வெவ்வேறு உயிர் எழுத்தொலிகள் உருவாகின்றன. அப்போது உடலின் மையத்திலும் வெவ்வேறு(அகத்தெழு வளியிசை) அழுத்தங்கள் ஏற்படுகின்றன.
     “அ” எனும் எழுத்தில் புள்ளி அல்லது சுழி எனும் குறி அலகு, அண்ட வெளியில் இருப்பு நிலையையும் தொடக்கத்தையும் குறிக்கின்றது. மேல்வளைவும் கீழ்வளைவும் சேர்ந்து ஒருவட்டத்தை அல்லது கோளத்தைக் குறிக்கின்றது. படுக்கைக்கோடு உள் வெளி அச்சையும்,செங்குத்துக்கோடு மேல் கீழ் அச்சையும் குறிக்கின்றன. எனவே வடிவியல் படி “அ” எனும்  எழுத்து இருப்பின் அனைத்துப் பரிணாமங்களையும் குறிக்கின்றது. “அ” தனக்குள் துவக்கம் அல்லது மையத்தையும், இருப்பு வெளியையும் பரிமாணத்தையும்,உள் இயக்கத்தையும் குறிப்பதாய் உள்ளது. “அ” உயிரைச் சுட்டுகிறது. அகத்தைச்சுட்டுகிறது, அகர ஒலி பிற உயிர் எழுத்திலும் மெய் எழுத்திலும் கலந்தே உள்ளது. அகரம்=அ+கரம். ‘அ’ என்னும் எழுத்துக் கையினைப் போன்றது. ஒன்றே பலவாய்ப் பிரியக்கூடியது.அ,இ,உ,எ,ஒ எனப்பிரிவது
ஆக்கம் செய்வது. ஆயுதம்(ஃ)ஏந்தி,மெய்எழுத்துகளைஉருவாக்குவது.அகரம்=அ+க+ர+ம்
உயிர்+வல்லினம்+இடையினம்+மெல்லினம் அகரம்= தமிழ்(ஆதாரம் சொல்லாக்கியன் எழுதிய திருக்குறள் மறுவாசிப்பு)
அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு என்ற குறளில்  ஆதியை பகவன் உடன் சேர்க்காது எழுத்தெல்லாம் என்பதுடன் சேர்த்துப்  படித்தால் அகர முதல எழுத்தெல்லாம் ஆதி எனச் சேர்த்துப் படித்தால் எல்லா எழுத்துகளுக்கும் முதலாகவும் முதன்மையாகவும் இருப்பது அகரமே என்ற பொருளாகிறது. அகராதி, அகரமுதலி என்ற சொற்களும் இவ்வாறே  அமைந்தன
    அகரம் என்பதில் ‘அ’ -- உயிர்க்கனம், ‘க’ --- வன்கனம், ‘ர’ --இடைக்கனம்  ‘ம்’ மென்கனம். தமிழ் நெடுங்கணக்கில் எல்லா எழுத்துகளையும் உயிர்க்கனம், வன்கனம், மென்கனம், இடைக்கனம் என நான்கு வகையில் அடக்குவர் எனவே அகரம் எனக்கூறும் போது நாற்கன எழுத்துகளும் அடங்கி உள்ளதை அறியலாம்.
தமிழ் என்ற சொல்லிலும் நாற்கனங்களும் உள்ளன.த= த் +அ, மி= ம்+ இ, ழ் இதில் த் வன்கனம்,ம் மென்கனம், ழ் இடைக்கனம், அ இ என்பன  உயிர்க்கனம்
திருவள்ளுவரும் இந்த நாற்கன எழுத்துகளால் உண்டானது தமது நூல் எனக் குறிப்பால்  உணர்த்த தமது நூலில் முதற்குறளை அகர முதல என உயிர்க் கனத்திலும் இரண்டாம் குறளைக் கற்றதனால் என வன்கனத்திலும் மூன்றாம்  குறளை மலர்மிசை என மென்கனத்திலும் நான்காம் குறளை வேண்டுதல் என இடைக் கனத்திலும் தொடங்கினார். அது மட்டுமன்றி முதல் சொல்லை அகரம் என நாற்கன எழுத்தாலும் ஆகிய அகரம் எனத்தொடங்கினார்.
    எழுத்துக்களில் முதலாகவும் முதன்மையாகவும் உள்ளது அகரம். இதுவே.   மொழியின் ஒரு ஒலியையும், அவ்வொலியைக் குறிக்கும் வரிவடிவத்தையும் குறிக்கக்கூடும். இவ்வெழுத்தைஅகரம்என்பர். எனினும் பொதுப் பேச்சு வழக்கிலும், பிள்ளைகளுக்கு எழுத்துக் கற்பிக்கும் போதும் இவ்வெழுத்தை ஆனாஎன்பது வழக்கம். வாயைத்திற என்பதற்கு அ காட்டு என்றும் கூறுவர். ஆகவே எவ்வித முயற்சியும் இன்றியே தோன்றுவது ‘அ’ அ என வாய்திறக்காமல் யாரும் பேசமுடியாது. ஆகவே எம்மொழி பேசுவோரும் அ என வாய்திறந்துதான் பேசவேண்டும் ஆகவே  உலகமொழிகள் அனைத்திற்கும் அகரம் முதலாயிற்று.                                      
   கண்பார்வையற்றோர் படிப்பதற்கு உதவும் பிரெய்லி முறைப்படி தமிழ் எழுத்துக்களை  எழுதுவதற்கும் முறைகள் வகுக்கப்பட்டுள்ளன. இந்திய மொழிகளுக்கென  உருவாக்கப்பட்டுள்ள பாரதி பிரெய்லி” தமிழ் எழுத்துக்களையும்  உள்ளடக்கியுள்ளது. ஆறுபுள்ளி முறையைப் பின்பற்றி அமைக்கப்பட்டுள்ள இம்முறையில் ஓர்  எழுத்துக்கான இடம் ஒரு வரிசையில் இரண்டு வீதம் மூன்று வரிசையில் ஆறு புள்ளிகளுக்கான இடங்கள் உள்ளன. இதில் முதல் வரிசையில் இடது பக்கப் புள்ளி மட்டும் புடைத்து இருப்பின் அது வைக் குறிக்கும்  ஆகவே புள்ளியில் தொடங்குவது அகரம். எனவே பார்வையற்றவர் மொழிக்கும் அகரமே முதலாயிற்று
ஒரு வியாபாரம் பேசி முடித்தவுடன் பேச்சை உறுதிப்படுத்துவதற்கு சிறிய தொகையைக் கொடுத்து ஒப்பந்தம் செய்து கொள்ளப்படும். இதை அட்சாரம் என்பர் அல்லது அட்சக்காரம் என்பர் இது முதலெழுத்தாகிய அகரத்தைக் குறிக்கும்  அக்காரம் என்பதன் மறுவடிவே  அட்சாரம்
. எழுத்து முறையில்  எழுதும் முறை. முறை என்பது எழுத்துக்களின் ஒழுங்கு. தமிழ் நெடுங்கணக்கில் முதல் எழுத்தாக வைக்கப்பட்டுள்ளது என்று முன்னரே கூறப்பட்டது. அகரம் தானும் இயங்கித் தனி மெய்களையும் இயங்க வைக்கும் சிறப்பால் முதலில் வைக்கப்பட்டது  என்று தொல்காப்பிய உரையில் இளம்பூரணர் கூறுகிறார். உயிரெழுத்துக்கள் எல்லாமே தாமும் தனித்தியங்கி, மெய்களையும் இயங்க வைப்பதால் உயிர்கள் அனைத்தும் மெய்களுக்கு முன் வைக்கப்பட்டன என்றும், உயிர்களுள்ளும் என்பன பிற உறுப்புக்களின் முயற்சியின்றிப் பிற உயிர்களிலும் குறைந்த முயற்சியுடன் அங்காந்து கூறுவதனால் மட்டும் உருவாவதால் அவை முன் வைக்கப்பட்டன என்றும், வின் விகாரமே என்பதால் முதலில் வைக்கப்பட்டது என்பதும் நன்னூல் விருத்தியுரையில் தரப்படும் விளக்கம் ஆகும்.
 “வும் மெய்யெழுத்துக்களும் ‘அ’ வுடன் மெய்யெழுத்துக்கள் சேர்ந்து ககரம் முதலிய உயிர்மெய்யெழுத்துக்கள் உருவாகின்றன. இதனை அகர வரிசை எழுத்துகள் என்பர். மெய்யெழுத்துக்கள் முதலெழுத்துக்களாக இருப்பினும் வரிவடிவங்களில் எழுதும்போது மூல வரிவடிவங்கள் அகரத்தோடு கூடிய மெய்யெழுத்துக்களையே குறிக்கின்றன. தனி மெய்களை எழுதும்போது அவற்றுக்கு மேல் ஒரு புள்ளியிட்டுக் காட்டப்படுகின்றது.
   18 மெய்யெழுத்துக்களோடும் அகரம் சேரும்போது உருவாகும் உயிர்மெய் தனி சொற்களில் முதல் எழுத்தாக வரும். க், த், ந், ப், ம், வ் ஆகிய மெய்யெழுத்துக்களுடன் சேர்ந்தும்  சொற்களுக்கு முதலாக வரும் என்கிறது தொல்காப்பியம்.     தொல்காப்பியத்தின் படி , , , , , , , , , ள ற, ந ஆகிய எழுத்துக்கள் சொற்களுக்கு முதலாக வரா என்பது தெளிவு. ஆனால் நன்னூல், , , , , , , , , , ய ஆகிய 10 அகர உயிர்மெய்களும் சொல்லுக்கு முதலில் வரும் என்கிறது. இதன்படி தொல்காப்பியத்தில் சொல்லப்படாத ங, , , ய என்னும் நான்கு எழுத்துக்களும் கூட சொற்களுக்கு முதலாக வரும் என்கிறது நன்னூல்.                                    
சொல்லின் இறுதியில் அகரம் தனித்து நின்று சொல்லுக்கு இறுதியாக வருவதில்லை. ஆனால் எல்லா மெய்களோடும் சேர்ந்து அகரம் சொல்லுக்கு இறுதியில் வரும். எடுத்துக்காட்டாக: பல,சில என்பன. உயிரளபடைகளில் சொல்லுக்கு இறுதியில் இட்டு எழுதுவது வழக்கு ஆயினும், அது நெட்டுயிர்களின் மாத்திரை மிகுந்து ஒலிப்பதைக் காட்டுவதற்கான ஒருகுறியீடாக எழுதப்படுகிறதே அன்றி தனி  அகரமாக நிற்பதில்லை.

அகரம்ஒலிப்பிறப்பு                                                                தொல்காப்பியம் எல்லா உயிர்களும் தொண்டையில்(மிடறு) இருந்து பிறக்கும் வளியின் மூலம் உருவாகிறது என்றும், வெறுமனே வாயைத் திறக்கும் முயற்சியால் உருவாகும் என்றும் கூறுகிறது. இது இன்றைய மொழியியலாளர்களில் கருத்தோடு ஒத்துப் போகிறது. தற்கால மொழியியலின்  அடிப்படையில், தொண்டையின் ஊடாக வரும் காற்று நாக்கு கீழே படிந்திருக்க வாயில் தடையின்றி, வெளியேறும்போது உருவாவதே அகரம் ஆகும் ஆரிய மொழிகளிலிருந்து பெற்ற என்னும் எதிர்மறை முன்னொட்டைச் சொற்களுக்கு முன்னே சேர்த்தால் எதிர்மறைப் பொருள் கிடைக்கும். இது ஏறக்குறைய ஆரியமொழிச்சொற்களை எதிர்மறையாக்க மட்டுமே வழங்குவது; சில எடுத்துக்காட்டுகளைக் கீழே காணலாம்.நியாயம் x அநியாயம்,  நீதிx அநீதி.                           
முனைவர் பத்மநாபன் எழுதிய தொல்காப்பியத்தில் சில புதிய பார்வைகள் என்ற   நூலில் இடம்பெற்றுள்ளசெய்திகள்
தொல்காப்பியத்தின் முதல்நூற்பா
எழுத்தெனப் படுப
அகரம் முதல் னகர இறுவாய்
முப்பஃது என்ப
சார்ந்துவரல் மரபின் மூன்றலங் கடையே 
என்பதாகும்.
சார்பு எழுத்துகள் மூன்றும் சேர்க்காத இடத்துத் தமிழ் எழுத்துகளின் நெடுங்கணக்கு அகரம் தொடங்கி னகரம்  முடிய முப்பது ஆகும் என்கிறார் தொல்காப்பியர். தமிழில் உள்ள எல்லா எழுத்துகளுக்கும் தொடக்க எழுத்தாக  அடிப்படை எழுத்தாக  அகரம் அமைகிறது  என்பது தொல்காப்பியரின் கருத்தாகும்.வாயைத் திறந்தவுடன் இயல்பாக எழுகின்ற முதல் உயிர் ஒலி அகரமாகும். இதன் அடிப்படையில்தான்தாயை விளித்தழைக்கும்  அம்மா  என்றசொல் உருவானது. தமிழ் மொழியில் இடம்பெற்றுள்ள அனைத்து எழுத்துகளும்  அகரத்தை அடிப்படையாக வைத்தே இயங்கும். இதைத் தொல்காப்பியர் நன்கு உணர்ந்தவர் ஆவார்.உடலை இயக்குவது உயிர். அதுபோல் ஒற்றெழுத்துகளை இயக்குவது உயிரெழுத்து. உயிரெழுத்துகளில் வாயைத் திறந்தவுடன் முதலில் வெளிவரும் உயிரொலி அகரம் ஆகும். இதன் அடிப்படையில்தான் 
மெய்யோடு இயையினும் உயிரியல் திரியா (நூல் 10 )      என்றும்
 மெய்யின் இயற்கை அகரமொடு சிவணும்  (மொழி 13)
என்றும் கூறினார். உயிர்கள் தனித்தியங்க வல்லன என்பதையும் தங்குதடையின்றி ஒலிப்பன  என்பதையும் மெய்யெழுத்துகளை இயக்குவன உயிரெழுத்துகளே என்பதையும் தொல்காப்பியர் தமது நூற்பாக்களில் சுட்டியிருக்கிறார்.
உலக இயக்கத்திற்கு முதன்மையானவன் இறைவனே என்பதை எடுத்துக்காட்ட வள்ளுவர் தொல்காப்பியரை அடியொற்றி அகரத்தை எடுத்துக்காட்டாக முன் வைக்கிறார்.
அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு
எனமுதற் குறளைப் படைக்கிறார். உலகஇயக்கத்திற்கு முதன்மையானவன் இறைவனே.,அதுபோல எழுத்துக்களின் இயக்கத்திற்கு முதன்மையானது அகரமே. உணர்ச்சி மேலீட்டால் நாம் வாயைத் திறந்து எழுப்புகின்ற முதல்ஒலி அகரத்தில் தான்தொடங்கும். அகரம் தனித்தியங்க வல்லது.  ஆண்டவன் தனித்தியங்க வல்லவன். ஓம்  என்ற அண்டத்தின் முதல் ஒலியின் மூன்றெழுத்துகளில்  முதலாவதாக நிற்பது அகரமே. அதுபோல் அண்டத்தை முதன்மையாக நின்று இயக்குபவன் இறைவனே. இதனாற்றான் தொல்காப்பியரின் வழிவந்த வள்ளுவர் அகரத்தின் முதன்மையை ஆண்டவனின் முதன்மைத்  தன்மையோடு ஒப்பிடுகிறார்.  .
தமிழில் உள்ள சுட்டெழுத்துக்கள் மூன்றில் இதுவும் ஒன்று. இது சேய்மைச் சுட்டைக் குறிக்கப் பயன்படுகின்றது. எடுத்துக்காட்டாக அவன், அது, அங்கே போன்ற சேய்மைச் சுட்டுச் சொற்களில் முதல் எழுத்தாக நிற்பதைக் காணலாம். இந்த எடுத்துக் காட்டுக்களில் சொல்லின் உள்ளேயே வருவதால் அது அகச் சுட்டு எனப்படுகின்றது. அதாவது சொல்லில் உள்ள எழுத்தை நீக்கினால் அச்சொல் பொருள் தராது)  புறச் சுட்டாகவும் வருவதுண்டு. அவ்வாறு வரும்போது அது சொல்லுக்குப் புறத்தே நிற்கும். அப்பெண் (அ + பெண்), அம்மனிதன் (அ + மனிதன்) போன்ற சொற்கள் இதற்கு எடுத்துக்காட்டுக்கள்                                                     இனவெழுத்துக்கள் எழுத்து ஒலியின் பிறப்பிடம் (இடம்), முயற்சி என்பவற்றின் அடிப்படையில் உயிரெழுத்துக்களை இனங்களாகப் பிரிப்பதுண்டு. அது போலவே பொருள், வடிவு என்பவற்றாலும் இனங்கள் பிரிக்கப்படுகின்றன.                                                                இடம், முயற்சி என்பவற்றின் அடிப்படையில் பிரிக்கும்போது வுக்கு இன                                                                                                             எழுத்தாகஅமையும்.                                                        
பொருள் அடிப்படையில் என்பவற்றுக்கு இன எழுத்தாக அமையும்.
வடிவ அடிப்படையில், என்பன வுக்கு இன எழுத்துக்கள் எனவும் கூறப்படுகின்றது.
       எனவே ஒலிவடிவத்தில் உலகில் உள்ள அனைத்து மொழிகளுக்கும்  ‘அ’ வே முதலெழுத்தாகும் வரி வடிவத்திலும் எழுதும் போதும் உலகில் உள்ள அனைத்து மொழிகளின் வரிவடிவ எழுத்துகள் அ வின் ஏதோ ஒரு பகுதியுடன் தொடர்பு உற்றே இருக்கும் எனவே வரிவடிவத்திலும் உலக மொழிகளின் முதலெழுத்து அ வே ஆகும். பிரெய்லி முறையிலும் முதல் புள்ளி அ வே ஆகும். இத்தனை பெருமை உடையது அகரம் எனும் போது அதை முதன்மையாகவும் முதலாகவும். கொண்டு இயங்கும் தமிழ் மொழியின் சிறப்பினை என்னென்பது. தமிழரின் பெருமையைத் தாங்கும் தமிழ்மொழி மெல்ல இனி மேதினியில் ஓங்கும். ஆக்கம் புலவர் ஆ.காளியப்பன் தலைவர் தொல்காப்பியர் தமிழ்ச்சங்கமம் அலைபேசி 9788552993

          

.