Wednesday 14 December 2016

உரையாசிரியர்கள்

                          உரையாசிரியர்கள்
1. நக்கீரர் இறையனார் களவியலுக்கு உரை எழுதியுள்ளார்.இநர் உரையில் தான் முச்சங்கம் பற்றி முழுமையான செய்திகள் காணப்படுகின்றன.
2. இழம்பூரணர்  உரையாசிரியர்களில் தலைமை சான்றவர். தொல்காப்பியம் முழுமைக்கும் உரை வகுத்துள்ளார். உரையாசிரியர் என்றாலே இவரைத்தான் குறிக்கும்.
3. பேராசிரியர்- தொல்காப்பியம் முழுமைக்கும் உரை எழுதியிருந்தாலும் மெய்ப்பாடு, உவம் ,செய்யுள்,மரபு ஆகிய இயல்களுக்கு மட்டுமே உரைகள் கிடைத்துள்ளன.குறுந்தொகை 380 பாடல்களுக்கும் ,திருக்கோவையாருக்கும்  உரை எழுதியுள்ளார். மதுரை ஆசிரியர் என்றும் இவரை அழைப்பர்.இவர் தண்டி அலங்காரத்தை மேற்கோள் காட்டுவதிலிருந்து இவரது காலம் 13 நூற்றாண்டு எனலாம்.
4. சேனாவரையர்  திருநெல்வேலி ஆற்றூரில் பிறந்தவர்.வடமொழிப் புலம் மிக்கவர். தொல் –சொல்லுக்கு மட்டும் உரை எழுதியுள்ளார் இவரை வடநூற் கடலை நிலைகண்டு அறிந்த சேனாவரையர் என்று  சிவஞான முனிவர் போற்றுகின்றார்.
5. நச்சினார்க்கினியர் மதுரை பார்த்துவாச குலத்தினர். அநதணர். இவர் சைவர். சிந்தாமணிக்கும் உரை எழுதியுள்ளார். சிந்தாமணிக்கு உரை எழுதும் போதுதான் சமணர் ஆனார்.தொல்காப்பியம் , பத்துப் பாட்டு, கலித்தொகை, சீவகசிந்தமணி, குறுந்தொகை இறுதி 20 பாடல்களுக்கு உரைகண்டவர். உச்சிமேற் புலவர்கொள் நச்சிளார்க்கினியர் என்று போற்றப்பட்டார்.
6 கல்லாடர் ,தெய்வச்சிலையார் போன்றோர்
     இவர்கள் தொல்காப்பியத்திற்கு உரை எழுதியவர்கள்.  புறநானூறு,பதிற்றுப்பத்து,ஐங்குறுநூறு, போன்றவற்றிக்கு உரைகள் உள.
7.அடியார்க்கு நல்லார் சிலப்பதிகாரத்திற்க்கு உரை எழுதியுள்ளார்.இவரைப் போற்றிப் புரந்தவன் பொப்பண்ணக் காங்கேயன்
8. பரிமேலழகர் திருக்குறளுக்கு உரை எழுதியுள்ளார் .திருமுருகாற்றுடைக்கும் உரை எழுதியதாகத் தெரிகிறது. நூலிற் பரித்தவுரையெல்லாம் பரிமேலழகன் தெரித்தவுரையாமோ என்று தொண்டைமண்டலச் செய்தி கூறுகிறது.இவர் காஞ்சி உலகளந்த பெருமாள் கோவில் அர்ச்சகர் குலத்தைச் சேர்ந்தவர்.
9. சிவஞானமுனிவர் இவர் தொல்காப்பியம் பாயிரத்துக்கும்,முதற்சூத்திரத்திற்கும் உரை எழுதியுள்ளார். சிவஞாபோதத்திற்கு மாபாடி.ம் என்னும் பேருரை எழுதி உள்ளார்.
10.மற்றும் பலர்
முதல் உரைகண்டவர்  மயிலைநாதர்
விருத்தி உரைகண்டவர் சங்கரநமச்சிவாயர்
காண்டிகை உரை கண்டவர் ஆறுமுகநாவலர்
வீரசோழியத்திற்கு உரைஎழுதியவர் பெருந்தேவனார்.
யாப்பருங்கலம். காரிகை இரண்டிற்கும் குணசாகரர் உரை எழுதியுள்ளார்.

ஆழ்வார்கள் இயற்றிய நாலாயிரத்திவ்வியப் பிறந்தத்திற்கு வைணவ ஆசிரியர்கள் மணிப்பிரளவ நடையில் உரை எழுதி உள்ளனர். இவ்வுரைகளை வியாக்கியானம் என்பர்.
பெரியவாச்சான் பிள்ளை திருவாய்மொழி தவிர்த்து மூவாயிரம் பாடல்களுக்கும் உரைஎழுதியுள்ளார்.
மணவாளமாமுனிகள் பெரியஜீயர் என்றும் அழைக்கப்படுவார்.



Thursday 1 December 2016

இன்றைய இலக்கணம்

             இன்றைய இலக்கணம் 2-12-16
            முல்லைக்குரிய தெய்வம்
       மாயோன் மேய காடுறை உலகமும்—தொல்
      திருமால் முல்லைக்குரிய தெய்வம்
     மால் என்றால் வெண்மை தூய்மை என்று பொருள். காத்தல் கடவுள்
    மக்கள் தம் தலைவனை-அரசனை திருமாலாகவே கருதினர்.
காத்தல் என்பது தம் ஆனிரைகளையும்,தம்மையும் மழை போன்ற இயற்கைச் சீற்றங்களிலிருந்து காத்தல்.கண்ணனே முல்லை நிலத்தெய்வம் ஆகையால் அவனை
இடையன்  என்றனர்.காடும் காடுசார்ந்த நிலம் முல்லை எனப்படும் காடு என்பது  மலையிலிருந்து வயல்வெளிகள் வரை பரந்துள்ள நிலப்பரப்பு.ஆகவே இந்நிலத்தைக் குறிஞ்சி நிலமக்களும் ,மருதநில மக்களும் பயன் படுத்துவர்.உழவுத் தொழில் செய்ய முடியாத குறிஞ்சி நிலத்திற்கும், உழவுத்தொழிலே நிரம்பிய மருத்திற்கும் இடைப்பட்ட நிலத்தை முல்லை என்றனர். அங்கு வாழ்ந்த மக்களை இடையர் என்றனர்.
           மருத நிலத்திற்குரிய தெய்வம்
        வேந்தன் மேய தீம்புனல் உலகமும்
வேந்தன்என்பது இந்திரனைக் குறிக்கும். வயலும் வயல்சார்ந்த இடமும் மருதம்ஆகும்.
குறிஞ்சியில்அருவியாய்த் தோன்றி முல்லையில் காட்டாறாய் ஓடிய ஓடை மருதத்தில் அகன்று விரிந்து பேராறாக ஓடிகிறது. குளம்,குட்டைகளை நிரப்புகிறது. மேலும் வீடுகள் தோறும் மனைக் கிணறுகளும் இருந்தன.அதனால் உழவுத்தொழில் மிகச்சிறப்பாக நடைபெற்றது.உணவுப் பஞ்சம் இன்றி மனநிறைவுடன் மக்களும் வாழ்ந்தனர். ஓய்வு நேரம் அதிகமாகக் கிடைத்ததால் விழாக்கள் நடைபெற்றன. எனவே இன்பம் நுகரும் இந்திரனே மருத நிலத்தெய்வம் ஆனான்.
                  நெய்தல் நிலத்திற்குரிய தெய்வம்
           வருணன் மேய பெருமணல் உலகமும்
வருணன் இடிமின்னலுக்கு உரிய தெய்வம். பெருமணல் என்பது இங்கு கடலும் கடல் சார்ந்த பகுதியைக் குறிக்கிறது.ஆனால் சிலர் மணலும் மணல்சார்ந்த நிலம் பாலை எனத் தவறாகக் குறித்துள்ளனர். பெருமணல் என்பது மணல் நிரம்பி கடற்கரையையே குறிக்கும்.தமிழ்நாட்டில் பாலை என்ற ஒருதனி நிலம் இல்லை.அதுபற்றி பிறகு பார்ப்போம். உயிரை ஒருபொருட்டாக நினையாது உள்நாட்டு மக்கள் உணவுப் பஞ்சத்தைப்போக்கப் பாடுபடும் மீனவனைப்போற்றுவோம். இடியுடன் கூடியமழை வரும் போது நடுக்கடலில் எங்கே செல்லுவான்.எனவே அவனது தெய்வம் இடிமழைக்கு முதல்வனான வருணன் நெய்தல் நிலத்தெய்வம் ஆனான்.
பாலை நிலத்திற்குரிய தெய்வம்
பாலை என்றவுடன் சகாரா,தார் போன்ற பாலை வனங்களை நினைத்துக்  கொண்டு,மணல் நிரம்பிய பகுதி என்றும் அங்கு ஒட்டகம் இருக்கும் என்றும் நினைத்துக் கொள்ளக் கூடாது.
 தமிழ் நாட்டில் பாலை என்பது முல்லை நிலமோ,குறிஞ்சி நிலமோ மழையின்றி வரண்டு போனால் மரம் மட்டைகள் வரண்டு,விலங்குகள் உணவின்றி வலிமையின்றித் திரியும்.  சிலப்பதிகாரமும்,பாலை உண்டாகும் முறையைக் கூறுகிறது.

முல்லையும் குறிஞ்சியும் முறைமையிற் திரிந்து
நல்லியல்பு அழிந்து நடுங்குதுயர் உறுத்துப்
பாலை என்பதோர் படிவம் கொள்ளும் என்று கூறுகிறது.

அங்குள்ள மக்கள் குறிஞ்சி மற்றும் முல்லை நிலமக்களே இருப்பர். அவர்களே வறுமை காரணமாக ஆறலைக் கள்ளவர்களாக மாறிடுவர். அம்பும், வில்லும் கைக்கொண்டு திரிவதால் எயினர் எனப்பட்டனர்.எயில் என்றால் அம்பு என்று பொருள்.
எனவே இவர்களது தெய்வம் கொற்றவையாக அதாவது காளியாகத் தானே இருக்க முடியும் .பதிவு புலவர்.ஆ.காளியப்பன்



உயிர்ப் பொருள்களின் பண்புகள்

                                               இன்றைய இலக்கணம்29-11-16
              உயிர்ப்பொருள்களின் குணப்பண்புகள்(நன்னூல் உரியியல்)
 அறிவு, அருள், ஆசை, அச்சம், மானம், நிறை(சொன்னசொல்தவறாமை), பொறை, ஓர்ப்பு(எடுத்தசெயலைமுடிக்கும்துணிவு), கடைப்பிடி, (கொண்ட கொள்கையில் விடாப்பிடிப்பு)மையல், வினைவு(செயல்திறன்), வெறுப்பு, உவப்பு, இரக்கம்,நாணம், வெகுளி, துணிவு, அழுக்காறு (பொறாமை), அன்பு எளிமை, எய்தல், துன்பம் இன்பம்,இளமைஉவப்பு,இகல்,வெற்றி,பொச்சாப்பு(முக்கியமானதைமறந்துவிடுதல்) ,ஊக்கம்,மறம்,மதம்,மறவி(எதையும் மறந்துவிடுதல்-முதுமை ),
  இவையெல்லாம் உடம்போடு கூடிய உயிரின் தன்மைகள் 
            உயிர்ப்பொருள்களின் தொழிற்பண்புகள்
துய்த்தல் ,துஞ்சல், ஒழுகுதல்,அணிதல், உய்த்தல்,இவைபோல் பிற
                  உயிர் அற்ற பொருள்களின் தன்மைகள்
பலவகை விடிவங்கள்(வட்டம், முக்கோணம்,நீளம் குட்டை,கோடு புள்ளிபோன்றன )
இருவகை நாற்றம்(நல்லவாசனை கெட்டவாசனை)
வண்ணம் ஐந்து( வெண்மை,செம்மை,கருமை,பொன்மை,பசும்மை)
அறுசுவை(இனிப்பு புளிப்பு,கசப்பு,உவர்ப்பு,துவரப்பு,கார்ப்பு)
ஊறு எட்டு(தொட்டுணர்வு)(வெம்மை, தண்மை, மென்மை, வன்மை, நொய்மை(தூள்),   
சீர்மை(அழகாக,ஒழுங்காக),இழுமெனல்(கொழகொழஎன்றுஇருத்தல்)சருச்சரை(சொரசொரப்பு.-)
        இருபொருள்களுக்கும் உள்ள பொதுத் தன்மைகள்
தோன்றல்,மறைதல்,வளர்தல்,சுருங்கல்,நீங்கல்,அடைதல்,நடுங்கல்,இசைத்தல்,ஈதல் என்னும் ஒன்பதும் ஆகும்.                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                          


சங்க இலக்கியம் ஒருவரி வினாவிடை

             சங்க இலக்கியம் ஒருவரி வினாக்கள்
1.சங்கம் என்ற சொல் முதன்முதலில் களவியல் உரையில்  காணப்படுகிறது.
2. சங்க இலக்கியங்களை மேற்கணக்கு, கீழ்க்கணக்கு என 
  இருவகைப்படுத்துவர்.
3. பாட்டும் தொகையும் மேற்கணக்கு ஆகும்.
4. பாட்டு என்பது பத்துப்பாட்டு, தொகை என்பது எட்டுத் தொகையைக் குறிக்கும்.
5. எட்டுத்தொகை நூல்கள்
1.  நற்றிணை
2.  (நல்ல) குறுந்தொகை
3.  ஐங்குறுநூறு
4.  (ஒத்த)பதிற்றுப்பத்து
5.  (ஓங்கு)பரிபாடல்
6.  (கற்றறிந்தார்ஏத்தும்)கலித்தொகை
7.  அகம் எனப்படும் அகநானூறு
8.  புறம் எனப்படும் புறநானூறு
6.மேற்கணக்கு, கீழ்க்கணக்கு நூல்களின் இலக்கணத்தைக் கூறும் நூல் பன்னிருபாட்டியல்.
7.மேல் என்றால் பெரிய கணக்கு என்றால் நூல் என்று பொருள்
8.உறுதிப்பொருள்கள் அறம்,பொருள்,இன்பம், வீடு என்ற நான்கும்
9.பல்வேறு காலங்களில் பல்வேறு புலவர்களால் பாடப்பட்ட பாடல்களின்  தொகுப்பு    
  ஆகையால் தொகை எனப்பட்டது
10. இதை எண்பெருந்தொகை என்றும் கூறுவர்
11.இதில் அகம் பற்றிய நூல்கள்-5   புறம் பற்றியநூல்கள்-2 அகம்புறம் பற்றியன 1
12.எட்டுத்தொகையில் காணப்படும் பாடல்களின்  எண்ணிக்கை கிட்டத்தட்ட 2360 பாக்கள்
13.பாடியோர் எண்ணிக்கை 500புலவர்கள்.
14.பரிபாடல்,கலித்தொகை இரண்டு நீங்கலாக ஏனைய ஆறும்ஆசிரியப்பாக்களால்ஆனவை.
15.நற்றிணை என்பது நற்றிணை நானூறு என்றும் வழங்கப்படும்
16 குறைந்தது. 9 அடி அதிகம் 12 அடிகளைக்கொண்டது.
17.நற்றிணையைத் தொகுப்பித்தவன் பன்னாடு தந்த பாண்டியன் மாறன் வழுதி
18.நற்றிணையைத் தொகுத்தவர் பெயர் தெரியாது.
19.நற்றிணையை பாடிய புலவர்கள்175 பேர்
20. .நற்றிணையின் கடவுள் வாழ்த்துப்பாடியவர் பாரதம் பாடிய பெருந்தேவனார்.
21. .நற்றிணையின் கடவுள் வாழ்த்து திருமால் பற்றியது.
22.எட்டுத்தொகை நூல்களில் முதலாவதாக வைத்து எண்ணப்படுவது நற்றிணை.
23. கண்ணகிகதை குறித்தபாடல் நற்றிணையில் வருகிறது.
24.முந்தையிருந்து நட்டோர் கொடுப்பினும் நஞ்சும் உண்பர் நனிநாகரிகர் தொடர் இடம் பெற்ற நூல் 
   நற்றிணை
25.ஒருமுலை அறுத்த திருமா உண்ணி கண்ணகி குறிப்பு வந்த நூல் நற்றிணை.
26.குறுந்தொகை—குறுமை+ தொகை எனப்பிரியும்.
27. குறுந்தொகை நானூறும் என்றும் கூறுவர்.
28. .நற்றிணையின் கடவுள் வாழ்த்துப்பாடியவர் பாரதம் பாடிய பெருந்தேவனார் 4 அடிச்சிறுமையும்   
     8 அடிப்பெருமையும் கொண்டது.
29. குறுந்தொகையைத் தொகுப்பித்தவன் பூரிக்கோ
30. குறுந்தொகையைத் தொகுத்தவர் உப்பூரி குடிகிழார்.
31. குறுந்தொகையில் பாடிய புலவர் எண்ணிக்கை 205
32.குறுந்தொகையின் கடவுள் வாழ்த்துப் பாடியவர் பாரதம்பாடிய பெருந்தேவனார்
33. குறுந்தொகையின் கடவுள் வாழ்த்து செவ்வேள்அல்லது முருகவேள் பற்றியது
34. குறுந்தொகை நல்ல என்னும் அடைமொழ் பெற்றநூல் ஆகும்.
35. இறைவன் தருமிக்கு எழுதிக் கொடுத்த கொங்குதேர் வாழ்க்கை என்றபாடல் இடம் பெற்றநூல்.
36.வினையே ஆடவர்க்கு உயிரே என்ற தொடர் இடம் பெற்றநூல் குறுந்தொகை.
37.ஊமன்கண்ணிற் காக்கும் வெண்ணெய் உணங்கல்போலஎன்றதொடர்இடம்பெற்றநூல் குறுந்தொகை
38.யாய்- என் தாய், ஞாய்—உன்தாய்,எந்தை- என்தந்தை,நுந்தை-உன்தந்தை.
39.ஒவ்வொரு திணைக்கும் தனித்தனியாக 100 பாடல்களைக்கொண்டது ஐங்குறுநூறு.
40. 3அடிச்சிறுமையும்  6 அடிப்பெருமையும் கொண்டது ஐங்குறுநூறு.
41.ஒவ்வொருநூறும் பத்துப் பத்துப் பாடலாகப் பிரிக்கப்பட்டது. ஐங்குறுநூறு
42..ஐங்குறுநூறு தொகுப்பித்தவன் யானைக்கட்சேய் மாந்தரஞசேரல் இரும்பொறை
43.ஐங்குறுநூறு தொகுத்தவர் புலத்துறைமுற்றிய கூடலூர்கிழார்..
44.ஐங்குறுநூறு பாடிய புலவர் எண்ணிக்கை  5 பேர்.
45.ஐங்குறுநூறு கடவுள் வாழ்த்துப் பாடியவர் பாரதம்பாடிய பெருந்தேவனார்
46.ஐங்குறுநூறு கடவுள் வாழ்த்து சிவன் பற்றியது  
47.ஐங்குறுநூறு குறிஞ்சி பற்றிப் பாடியவர்—கபிலர்
48. ஐங்குறுநூறு முல்லைபற்றிப் பாடியவர்—பேயனார்
49. ஐங்குறுநூறு  மருதம் பற்றிப்பாடியவர்—ஓரம்போகியார்.
50. ஐங்குறுநூறு நெய்தல் பற்றிப்பாடியவர்—அம்மூவன்
51. ஐங்குறுநூறு பாலைபற்றிப்பாடியவர்--ஓதலாந்தை

                   பதிற்றுப்பத்து.
89. பதிற்றுப்பத்து புறப்பொருள் பற்றி எடுத்துக் கூறும் நூல்
90 பதிற்றுப்பத்து சேர மன்னர் பத்துப் பேர் பற்றிப் பத்துப் புலவர்கள் பாடியது.
91 பதிற்றுப்பத்தில முதற்பத்தும் கடைசிப்பத்தும் கிடைக்கவில்லை
91. 2.ஆம் பத்து நெடுஞ்சேரலாதனைக் குமட்டூர் கண்ணனார் பாடியது
.92. 3 ஆம் பத்துஅவன் இளவல் பல்யானைச் செல்கெழுகுட்டுவனை பாலைக்கௌதமனார்        
    பாடியது
94. 4ஆம்பத்து களங்காய்க்கண்ணி நார்முடிச்சேரலை காப்பியாற்றுக் காப்பியனார் பாடியது
95. 5ஆம் பத்து கடல்பிறக்கோட்டிய செங்குட்டுவனைப் பரணர் பாடியதுய
96. 6ஆம் பத்து ஆடுகோட்பாட்டுச் சேரலாதனை காக்கைப்பாடினியார் நற்செள்ளையார் 
    பாடியது
97. 7ஆம்பத்து செல்வக்கடுங்கோ வாழியாதனைக் கபிலர் பாடியது.
98. 8ஆம் பத்து பெருஞ்சேரல் இரும்பொறையை அரிசில்கிழார் பாடியது.
99. 9ஆம் பத்துகுடக்கோ இளஞ்சேரல் இரும்பொறையைப் பெருங்குன்றூர்க் கிழார்பாடியது.
100.முதற்பத்துஉதியஞ்சேரல் பற்றியதாகவும்  இறுதிப்பத்து யானைக்கட்சேய் பற்றியதாகவும் இருக்கலாம்.
101 பதிற்றுப்பத்து பாடல்களின் தலைப்புகள் அப்பாடல்களில் பயின்றுவரும் பொருட்
    செறிவுடைய சொற்றொடர்களால் வைக்கப்பட்டது.
102.ஒவ்வொரு பாட்டின் இறுதியிலும் வண்ணமும் தூக்கும் துறையும் குறிக்கப்பட்டுள்ளன.
103.இதநால் இது இசையோடு பாடும் நூல் என்று அறியலாம்
104.பகைவர்களின் பெண்டிரது கூந்தலை அரிந்து கயிறாகத் திரித்து யானைகளைக் கட்டி
 இழுத்து வரும் பழக்கம் இருந்த்தை அறியலாம்-5ஆம் பத்தில்.
105.பதிற்றுப்பத்து சேரர் வரலாற்றைச் செப்பும் களஞ்சியம்.
                     புறநானூறு
108. புறப்பொருள் பற்றிய 400 பாடல்கள் கொண்டது.
109.எட்டுத் தொகை நூல்களில் பதிற்றுப்பத்தும் ,புறநூனூறும் மட்டுமே புறப்பொருள் 
    பற்றிக் கூறிகின்றன்.
110. புறம் ,புறப்பாட்டு,புறம்பு 400 என்ற வேறுபெயர்களாலும் வழங்கப் படுகிறது.
111.இதன் கடவுள் வாழ்த்துப் பாடலைப் பாடியவர் பாரதம் பாடிய பெருந்தேவனார்.
112. .இதன் கடவுள் வாழ்த்துப் பாடல் சிவபெருமான் பற்றியது
113 புறநானூறு பாடிய புலவர்கள்160 பேர். அதில் 10 க்கும் மேற்பட்ட பெண்பாற்
    புலவர்கள் உள்ளனர்
114. புறநானூறு 4 அடிமுதல் 40 அடிகளைக் கொண்டநூல்.
115. நெல்லும் உயிரன்றே நீரும் உயிரன்றே என்ற தொடர் இந்நூலில் தான் உள்ளது.
116. யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற கணியன் பூங்குன்றன்பாடல் உள்ளநூல்.
117.போப்பையர் இந்நூலை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ளார்
118.எவ்வழிநல்லவர் ஆடவர் அவ்வழி வாழியநிலனே என்ற கருத்து இந்நூலில் வருகிறது.
119இலக்கியங்கள் காலம் காட்டும் கண்ணாடி என்பதற்கு இந்நூலே எடுத்துக்காட்டு.
120.பாரதப்போரில் பெருஞ்சோறு இட்டதாக உதியஞ்சேரலாதன் குறிக்கப்படுகின்றான்




             

உயிர் உள்ள பொருளின் தன்மைகள்

           இன்றைய இலக்கணம்30-11-16
                 கருப்பொருள்
கருஎன்றால் மூலம்,முதல்,இன்றியமையாதது ,தோற்றத்திற்கு காரணம் எனப்பல பொருள் உண்டு. இங்கு அகபொருளில் கருப்பொருள் பற்றிப்பார்ப்போம்.
திணை இருவகைப்படும். அவை அகத்திணை, புறத்திணை எனப்படும்.எவற்றுள் அகத்திணைக்குரிய பொருள்கள் மூன்று எவை முதல், கரு, உரி என்பன.
அவற்றுள் முதற் பொருள்பற்றி முன்னர் சிறப்பாக விளக்கப்பட்டது. இன்று கருப்பொருள் பற்றிக் காண்போம்.
 கருப்பொருள் அந்தந்த நிலத்திற்கே உரியபொருள் வேறு நிலங்களில் காணமுடியாது.
ஒருநிலத்தில் தோன்றி அந்த நிலத்திலேயே மறைவன. நிலத்தோடு ஒன்றி நிற்பன. அவை
      தெய்வம் உணாவே மாமரம் புட்பறை
      செய்தி யாழின் பகுதியொடு
      அவ்வகை பிறவும் கருவென மொழிப (தொல்)
எந்நில மருங்கிற் பூவும்புள்ளும்
அந்நிலம் பொழுதொடு வாரா வாயினும்
வந்த நிலத்தின் பயத்த ஆகும். (தொல்)
சிலர் நூற்பாக்களைக் கேட்டதால் நூற்பாக்களை கொடுத்துள்ளேன். மற்றவர்கள் அதைக்கண்டு கொள்ள வேண்டாம்.
 நிலம் ஐந்து வகைப்படும் யாவரும் அறிவீர்.
முதலில் தெய்வம் (அனைவரையும் தெய்வம் என்றவுடன் மதத்துடன் சேர்த்துப் பார்த்தால் குழப்பம் உண்டாகும் இலக்கணத்தில் தெய்வம் பற்றி மட்டும் பார்ப்போம்).இங்கு நாம் தெரிந்து கொள்ள வேண்டியது பண்டைய இலக்கண இலக்கிய நூலோர் உலகிற்கு முதல்வனாக இருப்பவனைப் பிறவா யாக்கைப் பெரியோன் என்றே குறிக்கின்றன.ஆனால் ஒவ்வொரு நிலமக்களும் பிறவா யாக்கைப் பெரியோன் உடன், அந்தஅந்த நிலங்களுக்குரிய தெய்வங்களை வழிபடுவர்
அந்த அடிப்படையில் குறிஞ்சி நிலத்திற்கு உரிய தெய்வத்தைக் காண்போம்
சேயோன் மேய மைவரை உலகம் என்கிறது தொல்காப்பியம்
மைவரை உலகம் கருமையான மலை.உலகம் என்பது இங்கு இடம் என்ற பொருளில் வந்துள்ளது.
சேயோன் செம்மை நிறமுடையவன். முருகன் மலையும் மலைசார்ந்த பகுதி குறிஞ்சி
குறிஞ்சி என்றாலே செழிப்பான நிலம் பார்க்க அழகாக இருக்கும்.அந்த அழகையே தெய்வமாகக் கொண்டனர்.அழகை முருகு என்று கூறுவர்.எனவே முருகன் குறிஞ்சி நிலத்தெய்வம் ஆயிற்று.இந்த அடிப்படையிலேயே குன்று இருக்கும் இடமெல்லாம் குமரன் இருக்கும் இடமென்று குவலயத்தோர் வழிபடட்டும் என்று ஔவையார் படத்தில் வசனம் வருகிறது.இந்த அடிப்பைடையில்தான் திருப்பதி மலையில் உள்ள வேங்கடவனை முருகன் என்று வாதிடுகின்றனர்.ஆகவே குறிஞ்சி நிலத்தெய்வம் முருகன்.