Sunday 11 June 2023

யார் அந்த நாலுபேர்

 

      நான்கைப் பற்றி நாலு விதம்

நானிலத்தில்  நான்கு பற்றி  நான் எடுத்துரைக்க உள்ளேன் நாலும் தெரிந்தவர்கள்  செவிமடுத்தும், பொருள் உணர்ந்தும், திருத்தியும் புதியது புணைந்தும்  தமிழின் பெருமையை தரணிக்கு உரைப்போம் வாரீர்

 நாள்: தொல்காப்பியர் ஆண்டு 2734 விடை க (15-5-23)

 

ஒருகோட்டு இருசெவி மும்மத நாற்தோள்  

      ஐந்து கரத்து அறுமுகன்  அண்ணனே

ஏழ்பிறவிக்கு(ம்) என்துணையே எண்டிசை போற்ற

      ஒன்பது கோள்களின் இயக்கியும்  நீயே

பத்துப் பிறவி எடுத்தான் மருகனே

      உருத்திரர் பதினொருவர் ஆடலும் கண்டவனே

பன்னிரு ஆதித்தர் பாடலும் கேட்டவனே

      பதினாறு செல்வமும் தந்தெமைக் காப்பாயே (புலவர் ஆ.கா)

 இஃது புதிய தொடர்; தொடர்ந்து  வருக

 

ஒன்றில் இரண்டாய்ந்து மூன்றடக்கி நான்கினால்

வென்று களங்கொண்ட வேல்வேந்தே-- சென்றுலாம்

ஆழ்கடல்சூழ் வையகத்துள் ஐந்துவென் றாறகற்றி

ஏழ்கடிந் தின்பற் றிரு     (புறப்பொருள் வெண்பா மாலை)

    இப்பாடல்கள் எண்ணாலும் எண்ணத்தாலும் உருவானவை. எண் என்றால் நினை,சிந்தி என்ற ஏவற்பொருளையும் ஒன்று இரண்டு எனக் கணக்கிடும் எண்ணல் அளவையின் அலகாகிய பண்புப் பெயரையும் குறிக்கும். எண்கள் வாழ்வின் கண்கள் என்பதால் ஔவைப்பிராட்டியும் ‘எண் எழுத்து இகழேல்’என்றும்   ‘எண்ணும் எழுத்தும் கண்ணெத் தகும்’ என்றும் கூறுகிறார், இதனையே ஐயன் திருவள்ளுவரும் ‘எண்ணென்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டும் கண்ணென்ப வாழும் உயிர்க்கு’ என்கிறார். எண்ணாகி எழுத்தாகி நின்றாய் போற்றி, என்று திருமுறைகளும் கூறுகின்றன, இவர்கள் கூறுகின்ற எண் என்பதற்கும் எழுத்து என்பதற்கும் இருவகையான பொருள் கூறுவர். எண் என்பது இலக்கணத்தையும் எழுத்து என்பது இலக்கியத்தையும் குறிப்பதாகக் கூறுவர்.மற்றொரு சாரார் எண் என்பது எண்ணிக்கையும் எழுத்து என்பது ஒலி அல்லது வரிவடிவ எழுத்தினைக் குறிக்கும் என்பர். எண்ணுக்கும் எழுத்துக்கும் தனித்தனி ஆற்றல்கள் உண்டு. எழுத்தை விட எண்ணுக்கு ஆற்றல் அதிகம். அதனால் எழுத்துகளைக் கூட எண்களால் குறித்தனர். அந்த அடிப்படையில் தோன்றியவையே எண் கணித சோதிடங்கள்.

            நான்கைப் பற்றி நாலு விதம் 1

ஆக்கம் தொல்காப்பியச்செம்மல் புலவர் ஆ.காளியப்பன்

     தலைவர் தொல்காப்பியர் தமிழ்ச்சங்கமம் அலைபேசி +91 9788552993

நாள்: தொல்காப்பியர் ஆண்டு 2734 விடைஉ (16-5-23)

 

 

      கணிதத்தில் எண்களுக்குத் தொடக்கமும் இல்லை முடிவும் இல்லை என்பார்கள். ஆகவே எண்களைத் தோற்றமும் முடிவும் இல்லா முடிவிலி என்பார்கள். இதனால் எண்களை ஆதியும் அந்தமும் இல்லா அருட்பெரும் சோதியாகி இறைவனுடன் ஒப்பிடலாம். ‘எண்ணுதற்கு எட்டா எழிலார் கழல்’என்று மாணிக்கவாசகரும் கூறுகிறார். எண் என்ற வேர்ச் சொல்லில் இருந்தே எண்ணம் தோன்றியது. எல்லாச் செயல்களுக்கும் அடிப்படை நம் எண்ணமே. அதனால்தான் வள்ளுவர் “எண்ணித் துணிக கருமம்”என்றார். ஆகவே எவ்வகையில் பார்த்தாலும் இயல் எண்கள், முழு எண்கள், முழுக்கள், விகிதமுறு எண்கள் என்னும் நால்வகை எண்கள் இன்றி வாழ்க்கை இல்லை எனலாம். நாம் உலகில் காணும் எல்லாப் பொருட்களின், சீவ ராசிகளின் தோற்றத்திற்கும், ஆதாரத்திற்கும், இருப்பிற்கும், அழிவிற்கும் எல்லாவற்றிற்குமே காரணம் எண் சக்திகள்தான்.

     அந்த எண்களிலேயே சிறப்புக்குரியது நான்கு என்று நான்முகனால் படைக்கப்பட்ட நான்கு வேதங்களும் ஓதுகின்றன. மேலும் நாலும் தெரிந்தவன் தான் பிழைக்க முடியும் என்பார்கள். இங்கு நான்கு என்பது எல்லாவற்றையும் என்ற பொருளைத் தருகிறது. எனவே நான்கினுள் எல்லாம் அடங்குவதால் நான்கு என்பது சிறப்பிற்குரிய எண்ணாகிறது.

 உகம் நான்கும் பொருள் நான்கும்,

   உபநிடதம் ஒரு நான்கும்

முகம்நான்கும் படைத்துடைய

   முதல்வனை யாம் பரவுதுமே

 

நிலம் நான்கும் திசை நான்கும்

    நெடுங்கடல்கள் ஒரு நான்கும்

குலம் நான்கும் காத்தளிக்கும்

   குலதீபன் வாழ்க! என்றே-- என்ற கலிங்கத்துப்பரணி

பாடலைப் படித்தவுடன் வேறு வகையான நான்கும் உள்ளனவோ என்ற எண்ணம் தோன்றியது. வாழ்கைக்கு நாலும் தெரிந்திருக்க வேண்டும் நல்லது கெட்டதுக்கு நாலு பேரிடம் கேட்க வேண்டும் என்ற வாசகங்கள் என் முன் வந்து நின்றன. அதனால் நான்கு நான்காக வள்ளுவனும் தொல்காப்பியரும் வகைப்படுத்தி உரைப்பன யாவை? எனத் தேடினேன். அத்துடன் திருமுறைகளும் நான்மறைகளும் பகவத்கீதையும் விவிலியமும் குரானும் சமண,பௌத்த இலக்கியங்களும், யூத, கன்பியூசியசு பகாய்,சொராசுட்டர், என்னும் மதங்களும்,சாணக்கியன், சாக்ரடீசு, பிளேட்டோ. அரிஸ்டாட்டில், காரல் மார்க்சு, ஐன்சுடீன் போன்ற அறிஞர்களும் சங்க இலக்கியங்களும் என்ன சொல்கின்றன எனவும் தேடினேன், பண்டிதர் பலரையும்  ஆதீனக் கருத்தாக்கள் தேவாலய ஆயர்கள் மசூதி அசரத்துகள், ஆத்திக நாத்திக உலகாயுதவாதிகள்  பகுத்தறிவுவாதிகள் பாமரர்கள் ஆகிய அனைவரையும் கேட்டேன். ஒருசமயம் பைத்தியம் கூட உளறலாம் என்றும் பார்த்தேன். ஆங்கில மொழியும் ஆரிய மொழியும் சொல்வதையும் என் சிற்றறிவுக்கு எட்டிய வரை தேடினேன் நாலும்  தெரிந்திருக்க வேண்டும் என்கிறார்களே அந்த நான்கு என்ன என்ற தேடலே இந்நூல். அந்த நான்கை என் சிற்றறிவுக்கு எட்டிய வரைத் தொகுத்துள்ளேன். இது முடிவன்று. என் அறிவுக்கு எட்டாது எத்தனை நான்குகள் ஒளிந்து உள்ளனவோ நான் அறியேன். மேலும் நாலும் தெரிந்தவர் இந்த உலகில் யாரும் இல்லை என்பதை உணர்ந்தேன். அப்படியானால் நான்கின் தொகுதிகள் யாவை என நாலும் தெரிந்த நல்லோரிடம் கேட்டேன் அவர்கள் அருந்தமிழிலும், ஆரிய மொழியிலும் ஆங்கிலத்திலும் திசைமொழிகளிலும் உள்ளவற்றையும் அடுக்கி வைத்தார்கள்

       அவற்றையும் ஐயன் திருவள்ளுவரையும் அவர் ஆசான் தொல்காப்பியரையும், சங்கப் புலவர்களையும் தற்காலக் கவிஞர்களையும் அணுகினேன் அவற்றை எல்லாம் அவியலாக அட்டுச்  சிறு நூலாகத் தரலாமே என்ற நோக்கில் எழுந்ததே இப்படைப்பு. இதைப் பற்றி நாலுபேர் நாலுவிதமாகப் பேசலாம்.பேச வேண்டும் என்பது எனது எண்ணம். தொடரும்

                   நான்கைப் பற்றி நாலு விதம்

ஆக்கம் தொல்காப்பியச்செம்மல் புலவர் ஆ.காளியப்பன்

     தலைவர் தொல்காப்பியர் தமிழ்ச்சங்கமம் அலைபேசி +91 9788552993

நாள்: தொல்காப்பியர் ஆண்டு 2734 விடை(17-5-23)

                     

 

         நானிலத்தில் (குறிஞ்சி முல்லை மருதம் நெய்தல்) நால்வகை யுகங்களில் (கிருதயுகம்,திரேதாயுகம்,துவாபர யுகம் கலியுகம்) ஒன்றாகிய கலியுகத்தில் பைசாசம் ஆலீடம் மண்டிலம் பிரத்தி என நான்கு நிலைகளில்  கருப்பை ,முட்டை, வித்து வியர்வை எனும் நால்வகை தோற்றங்களில் கருப்பை மூலம், சுரகதி அசுரகதி நரகதி மிருககதி எனநால்வகைக் கதி(பிறப்பு)களுள் நரகதி எடுத்து  நாம் வாழ்கின்றோம். கலி என்றால் துன்பம். என்று பொருள், பொய், புரட்டு சூது, வாது நான்கும் நிரம்பிய உலகம்  என்ற பொருளும் உண்டு. இப்படிப்பட்ட உலகத்தில் வாழக் கூட்டல் கழித்தல் பெருக்கல் வகுத்தல் என்னும் நான்கும் தெரிந்து இருக்க வேண்டும். அப்பர் சுந்தரர் மாணிக்க வாசகர் திருஞானசம்பந்தர் நால்வர்  துணையும் வேண்டும்.

மாதா பிதா குரு தெய்வம் எனும் நால்வரையும் போற்றி வடக்கு தெற்கு கிழக்கு மேற்கு என நாற்றிசையும் புகழோங்க,  உறவினர் பகைவர் நண்பர் நொதுமலர் எனும் நான்கு பேர் மெச்ச வாழ வேண்டும். அதற்காக நமக்குப் பெற்றோர், உழைப்பு, சேமிப்பு, தானம் என்ற நான்கின் மூலமும் வந்த வருவாயுக்குத் தக்கபடி வாழ்வதே வாழ்க்கை. அவ்வாழ்வு வலம் உள்ளதாகவும் வளம் உள்ளதாகவும் துன்பமின்றி இன்பமாக இருக்கவேண்டும் என்றால் அச்செல்வத்தைக் கடன் அடைத்தல் (பெற்றோர்க்குச் செய்யும் கடமை), கடன்கொடுத்தல், (மக்களுக்குச்செய்யும்கடமை), தனக்கும்(தான்,தன்மனைவி) தானத்துக்கும்  எனச் செலவிடும் முறைகளையும், அதற்கான தர்மம் அர்த்தம் காமம் மோட்சம்  அதாவது அறம் பொருள் இன்பம் வீடு. என்னும் நான்கு உறுதிப் பொருள்களையும் எடுத்துக் கூறுவன நாலும் இரண்டுமாகிய நாலடியாரும் திருக்குறளுமே ஆகும். அதனால் தான் நாலும் இரண்டும் சொல்லுக்கு உறுதி என்றனர். இவற்றுள் இரண்டு என்று சுட்டப்பெறும் உலகப் பொதுமறையாம் திருக்குறள் பதினெட்டு வகையான நான்கின் தொகைகளைக் குறிக்கிறது. இருக்கு, யசுர், சாம, அதர்வணம் எனும் நான்கு வேதங்கள், பதினெட்டு அத்தியாயங்களை  உடைய கீதை, பதினெண் சித்தர்கள் பதினெண் புராணங்கள், பதினட்டு ஆகமங்கள் பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள் 18 உறுப்புகள் பெற்ற கலம்பகங்கள் ஆகிய நூல்களின் சாரமாக உள்ளது அத்திருக்குறளே. அதுகூறும் நான்கின் தொகுதிகளைப் பற்றி அறிவதற்கு முன் நாமறிந்த சில நான்கின் தொகுதிகளைப் பற்றிப் பார்ப்போம்.

      பிராமணர் சத்திரியர் வைசியர் சூத்திரர் என நான்கு இனத்தார்களுள் அதாவது அந்தணர், அரசர் வணிகர் வேளாளர் என்னும் நான்கு குலத்தாருள் பிரமச்சரியம்  கிருகஸ்தன், வானபிரஸ்தன், சந்நியாசி எனவாழ்வின் நான்கு நிலைகளில் அதாவது  கலைபயில் நிலையினன், இல்லறதான், இறந்தார் (வாழ்ந்துசிறந்தார்) துறந்தார் இவர்களில் ஒருவராய் வாழும்  நிலையில்  சாம, பேத, தான, தண்டம் என நால் வகை உபாயங்களையும் அதாவது இன்மொழி, தருமொழி, புகழ்மொழி, ஒறுப்பு என நால்வகை விரகுகளைப் பயன்படுத்தி, ஆகாரம், மைதுனம், நித்திரை, பயம்  என நான்கால் வரும் இழப்புகளைச் சரிசெய்து  இந்திரிய ஒழுக்கம் கரண ஒழுக்கம். ஜீவஒழுக்கம். ஆன்மஒழுக்கம் என்னும் நால்வகை ஒழுக்கங்களில் வழுவாது நின்று மரணத்திற்குக் காரணமாம்  பிணி, மூப்பு, பயம், பசி முதலியவற்றால் வருத்தம் அடையாமல் வேனிற்காலம் பனிக்காலம் கூதிர்காலம் கார்காலம் எனும் நான்கு காலங்களுக்கும் ஏற்ற உண்ணல் தின்னல் பருகல் நக்கல் எனும் நால் வகை உணவுகளை உண்டு உடலை ஓம்ப வேண்டும், இதனைத் திருமூலர் நான்கு வரிகளில்

உடம்பார் அழியில் உயிரார் அழிவர்

திடம்பட மெய்ஞ்ஞானம் சேரவும் மாட்டார்

உடம்பை வளர்க்கும் உபாயம் அறிந்தே

உடம்பை வளர்த்தேன் உயிர்வளர்த் தேனே (திருமந்திரம் 724) என்றார்

 

அவரே அறமெனப்படுவது யாது என நான்கு அறங்களாக,

யாவர்க்கு மாம்இறை வற்கொரு பச்சிலை

யாவர்க்கு மாம்பசு வுக்கொரு வாயுரை

யாவர்க்கு மாம்உண்ணும் போதொரு கைப்பிடி

யாவர்க்கு மாம்பிறர்க் கின்னுரை தானே (திருமந்திரம் 252) என்றும் கூறுகிறார். 17-5-23

 

            நான்கைப் பற்றி நாலு விதம்

ஆக்கம் தொல்காப்பியச்செம்மல் புலவர் ஆ.காளியப்பன்

     தலைவர் தொல்காப்பியர் தமிழ்ச்சங்கமம் அலைபேசி +91 9788552993

நாள்: தொல்காப்பியர் ஆண்டு 2734 விடை(18-5-23)

 

      அவ்வாறு வாழும் போது நாம் கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகள்

மடையன் சுயநலக்காரன் முட்டாள் சோம்பேறி எனும் நான்கு ஆட்களைப் புறக்கணித்து பொய்யன், துரோகி, பொறாமைக்காரன், மமதை பிடித்தவன் ஆகிய நான்கு பேர் நட்பை விட்டு, தந்தை தாய் சகோதரன் சகோதரி என்னும் நான்கு பேர்களை வெறுக்காமல், மனைவி பிள்ளைகள் பெற்றோர்  சேவகன் ஆகிய நான்கு பேரிடம் கருணையுடன்  நடக்க வேண்டும். அனாதை ஏழை முதியவர் நோயாளி என்னும்  நான்கு பேரிடம் கடினமாக நடக்காமல், துக்கம், கவலை, இயலாமை, கஞ்சத்தனம் என்னும் நான்கு விசயங்களை தூக்கிப் போட்டு விட்டு, உணவு தூக்கம் சோம்பல் பேச்சு  என்னும் நான்கு விசயங்களைக் குறைத்து, பொய், குறளை, கடுஞ்சொல், பயனில்சொல் என்னும் நால்வகை இழிசொல் சொற்களை நீக்கி, மனத்தூய்மை உள்ளவன், வாக்கை நிறைவேற்றுபவன், கண்ணியமானவன், உண்மையாளன் எனும் நான்கு பேர்களுடன் சேர்ந்து, தியானம்,அல்லது  யோகா, நூல் வாசிப்பு,  உடற்பயிற்சி,  சேவை செய்தல் என்னும்  நான்கு செயல்களால்,  பொறுமை, சாந்த குணம், அறிவு, அன்பு எனும் நான்கு விடயங்களை அணிகலன்களாக அணிந்து, தானம் கல்வி தவம் ஒழுக்கம் எனும் நால்வகைப் புண்ணியங்களைச் செய்து ஆடவனாகில் அறிவு, நிறை, ஓர்ப்பு, கடைப்பிடி எனும் நாற்குணம் உடையவனாகவும் பெண்ணாகில் அச்சம் மடம் நாணம் பயிர்ப்பு எனும் நாற்குணம் உடையவளாகவும் வாழ வேண்டும்.

   வாழும் காலத்தில் காடு, மலை, மதில் நீர் என்னும் நான்கு வகை அரணும் பெற்று ரத,கஜ,துரக பதாதி எனப் படைகளையும் அதாவது தேர் யானை குதிரை காலாள் எனும் நால்வகைப் படைகளையும் உடைய வேந்தன் அரசன், குறுநிலமன்னன் வேளிர் எனும் நால்வரில் ஒருவரால் ஆளும் நாட்டில் பாதுகாப்பாய் மக்கள் இருப்பர். அப்போது சாதரூபம் கிளிச்சிறை ஆடகம் சாம்பூநிதம் எனும் நால்வகைப் பொன் நகைகள் அணிந்து,  கோட்டுப்பூ கொடிப்பூ நீர்ப்பூ, புதற்பூ எனும் நால்வகைப் பூக்களை அணிந்து பீதம் கலவை வட்டிகை புலி எனும் நால்வகைச் சாந்துகளைப் பூசி, உண்ணல் தின்னல் பருகல் நக்கல் எனும் நால்வகை உணவுகளை இனிப்பு, கசப்பு, புளிப்பு, கார்ப்பு, உவர்ப்பு, துவர்ப்பு என்னும் அறுசுவையுடன் உண்டு நலத்துடன் வாழ வேண்டும். அவ்வாறு உண்ணும் போது உணவு கால்பங்கு, நீர்கால்பங்கு, காற்று கால்பங்கு கழிவுக்குக் கால்பங்கு என இடம் வைத்தே உண்ண வேண்டும். உழைப்பு, உறக்கம், குலவதல் ஓய்வு என நான்கு விதமாகப் பொழுதைச் செலவிடவேண்டும். ஓய்வு என்பது நல்ல பயனுள்ள பொழுது போக்காக இருக்க வேண்டும்.அது இயற்றல், இசைத்தல், நடித்தல் படைத்தல் எனும் நால் வகையில் ஒன்றாக இருக்கலாம்.அவற்றுள் இசைத்தல் குறிஞ்சி முல்லை மருதம் செவ்வழி எனும் நால்வகைப் பண்ணையும் காற்றுக்கருவி கஞ்சக்கருவி, கம்பிக்கருவி, தோற்கருவி எனும் நால் வகை இசைக்கருவிகளையும் இசைத்து நட்பு நரம்பு, பகை நரம்பு துணைநரம்பு, இணைநரம்பு எனும் நால்வகை நரம்புகளை உடைய யாழினை மீட்டி  இன்பம் துய்த்தல் வேண்டும்.

அன்பின் வகைப்பாடுகளாகிய பாசம், காதல், நட்பு பக்தி. எனும் நான்கில் பாசத்தை மக்கள் மீதும் காதலை மனைவி மீதும் நட்பினை நண்பர்கள் மீதும் பக்தியைக் கடவுள் மீதும் செலுத்த வேண்டும். மேலும் எள்ளல், இகழ்தல், எரிச்சல், எதிர்த்தல் எனும்பேச்சால் பகை உண்டாக வாய்ப்பு உளது. அதனால் குத்தல் வெட்டல் எய்தல் எறிதல் எனும் நால்வகையிலும் உடலுக்கு ஊறுப்பாடுகள் ஏற்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

  

            நான்கைப் பற்றி நாலு விதம்

ஆக்கம் தொல்காப்பியச்செம்மல் புலவர் ஆ.காளியப்பன்

     தலைவர் தொல்காப்பியர் தமிழ்ச்சங்கமம் அலைபேசி +91 9788552993

நாள்: தொல்காப்பியர் ஆண்டு 2734 விடை   வெள்ளிக்கிழமை(19-5-23)

 

  வாழும் காலத்தில் கற்றல், கேட்டல், அவ்வழி நிற்றல்(பாவனை), ஒத்தல் (நிட்டை) எனும் நான்கு வழிகளில் அறிவு பெற்று  கவி, கமகன், வாதி, வாக்கி எனும் நால்வகைப் புலமை பெற்று ஆசுகவி மதுரகவி வித்தாரகவி சித்திரகவி எனும் நால்வகைக் கவி வல்லவராய்  விளங்கல் வேண்டும். எனவே உலக வழக்காகிய பேச்சிலிருந்தும் ஆங்கில மொழியிலிருந்தும் ஆரிய மொழியிலிருந்தும் திசை மொழிகள் பலவற்றிலிருந்தும் வந்த கருத்துகளைத்  தொகுத்தும் வகுத்தும் பகுத்தும் பகிர்ந்தும் வழங்குகிறேன். நானாவிதப் பொருட்கள் நிரம்பிய பண்டக சாலையாக இந்நூலை அமைக்க விரும்புகிறேன் நானாவிதப் பொருட்கள்  என்றால் பல சரக்குகளாகிய  மளிகைப் பொருள்கள் என்ற பொருளும் உண்டு.                                                                                     

 

தொல்காப்பியரே துணை தொல்காப்பியமே வழிகாட்டி என்று எந்நாளும் சிந்திக்கும் நான் இந்நூலை தொல்காப்பியர் கூறும்                                                                    மாயோன் மேய காடுறை உலகமும்

சேயோன் மேய மைவரை உலகமும்

வேந்தன் மேய தீம்புனல் உலகமும்

வருணன் மேய பெருமணல் உலகமும்

முல்லை குறிஞ்சி மருதம் நெய்தல் எனச்

சொல்லிய முறையால் சொல்லவும் படுமே(தொல்951) என்ற முறைமையில் நானிலமெனத் தொடங்கினேன்.

       தொல்காப்பியத்தைப் பாமரரும் அறிய வேண்டும் என்னும் திருவுள்ளம் கொண்டு  தொல்காப்பியர் தமிழ்ச் சங்கமத்தை இயக்கிவரும் சாந்தலிங்கர் திருமடத்தின் மூலநாயகன்     சாந்தலிங்கப் பெருமானும்  உலகம் உய்யவே கொலைமறுத்தல், வைராக்கியசதகம், வைராக்கி தீபம், அவிரோத உந்தியார் என்னும் நான்கு நூல்களையும் அருளியுள்ளார். அதன்மூலம் நான்கு என்ற எண்ணில் ஏதோவொரு சிறப்புள்ளது என்பதை உணர்ந்தேன், முதல்நூல் வழிநூல் சார்புநூல் மொழிபெயர்ப்பு எனும் நானாவித நூல்களிலும் தேடினேன். நாலு பேரிடமும்  கேட்டேன். அவையும் அவரும் அளித்த அறவுரையையும் அறிவுரையையும் படைப்புகளையும் பொழிவுகளையும் கொண்டு வானை அளக்க நினைக்கும் சிட்டுக் குருவியாக எண்ணிச் சிறகடிக்கிறேன்.   19-5 முடிய                   

             ௧ ௨    ௪ ௫ ௬ ௭          

          

            நான்கைப் பற்றி நாலு விதம்

ஆக்கம் தொல்காப்பியச்செம்மல் புலவர் ஆ.காளியப்பன்

     தலைவர் தொல்காப்பியர் தமிழ்ச்சங்கமம் அலைபேசி +91 9788552993

நாள்: தொல்காப்பியர் ஆண்டு 2734 விடை   (20-5-23)

               தொல்காப்பியர் கூறும் நான்குகள்

      உலகில் இதுவரை முழுமையாகக் கிடைத்த நூல்களுள் முதன்மை ஆனது;  ஆழிப்பேரலைக்கும் அனல் புனல் சீற்றங்களுக்கும் ஈடு கொடுத்து  இன்று வரை வாழ்கிறது. வளர் தமிழின் வரலாற்றுச் சுவடியாகவும் வருங்காலத் தமிழுக்கு வழி காட்டியாகவும் உள்ளது. முந்தைய இலக்கண நூல்களை வென்று பின்வரும் நூல்களைத் தன் ஆணைக்கு இணங்கச் செய்கிறது. ஐந்திலக்கணத்தையும் முத்தமிழையும் பல்கலைகளையும் பற்றிப் பேசுகிறது; திருக்குறளின் முன்னோடி; அதங்கோட்டாசான் தடைக்கு விடை கூறி வெளி வந்த நூல்; பனம்பாரனாரின் பாயிரம் கொண்ட நூல்; வள்ளுவனையும் கம்பனையும் வளைத்துப் போட்ட நூல்; சிலம்பு தந்த இளங்கோவைச் சிந்திக்க வைத்த நூல்; எல்லா இயங்களுக்கும் (இயம்=இசம்) வேராய் விளங்கும் நூல்; உயிருக்கு விளக்கம் உரைத்த உயிரியல் நூல்; அறிவியல் துறைகள்  அத்துணையையும் அடக்கியநூல்; பண்டைத் தமிழர்களின் பண்பாட்டைப் பகரும் நூல்; நாகரிகச் சிறப்பை நவிலும் நூல்; இடைச் சங்கத்தாருக்கும், கடைச் சங்கத்தாருக்கும் இதுவே இலக்கண நூல்; இன்றைக்கும் அந்நிலைதான்; இத்தனை பெருமைகளையும் இயல்பாய்க் கொண்டு  முழுமையாய்க் கிடைத்த முதல்நூல்; அதுவே தொல்காப்பியம். 

வழிபடு தெய்வம் நிற்புறம் காப்பப்                                                                                                                          

 பழிதீர் செல்வமொடு வழிவழி சிறந்து                                                                                                             

 பொலிமின்! (தொல்.பொருள்.செய்யுள்422) என நம்மை வாழ்த்தும் ஒல்காப்பெரும் புகழ்த் தொல்காப்பியர் நான்கின் தொகுதிகள் பற்றி நவில்வதைப் பார்ப்போம்.

    தொல்காப்பியர் கூறுவதற்கு முன்பே அவரைப்பற்றி கூறும் பாயிரத்தில் பனம்பாரனார் நான்கு திசைகளைக் குறிக்கும் பெயர்களாகிய வடக்கு தெற்கு என்பனவற்றைக் குறித்து “வடவேங்கடம் தென்குமரி ஆயிடை” என்றே தொடங்குகிறார். உலகில் இதுவரைக் கிடைத்த நூல்களில் முதல் நூல் முதன்மையான நூல் தொல்காப்பியம். அதுவே எழுத்தெனப் படுவ

அகரமுதல் னகர இறுவாய் முப்பஃது என்ப என எழுத்தின் எண்ணிக்கையைக் கூறியே  தொடங்குகிறார்.

   மேலும் அந்நூற் பாயிரத்தில் தொல்காப்பியம் அரங்கேறும் போது முன்னிலை வகித்த அதங்கோடாடசானைக் குறிக்கும்போது “அறம்கரை நாவின் நான்மறை முற்றிய

அதங்கோட்டு ஆசாற்கு அரில்தபத் தெரிந்து” என நான்கின் தொகுதியாகிய நான்மறையைச் சுட்டுகிறார். இப்படி உலகின் முதன்மையான நூல் தொல்காப்பியப் பாயிரத்திலேயே நாற்றிசையும் நாமறையும் என நான்கு சுட்டப்படுகிறது. தொல்காப்பியர் நான்கு எவை என ஏறக்குறைய முப்பது இடங்களில் குறிப்பிடுகிறார்.

  வடிவெழுத்து, பெயரெழுத்து, தன்மை எழுத்து முடிவெழுத்து என எழுத்து வகை நான்கைப் பற்றியும் உயிரெழுத்து மெய்எழுத்து உயிர்மெய்எழுத்து ஆய்த எழுத்து என்ற நான்கு வகை எழுத்துகளின் இலக்கணத்தைக் கூறத்தொடங்கும் தொல்காப்பியர் ‘எழுத்தெனப்படுப ....முப்பஃது ’ என எண்ணால் தமது நூலைத் தொடங்குகிறார். அவர் கூறும் நான்கின் பட்டியலைத் தொகுத்து அளிக்கிறேன்.நூற்பா மட்டும் குறித்துள்ளேன். அதன் விளக்கங்களை தகுந்த நூல்களால் அறிந்து கொள்ளவும்

     

1.உயிர்முன் உயிர் 2.உயிர்முன் மெய் 3.மெய் முன் மெய் 4 மெய்முன் உயிர் (107) எனப்புணர்ச்சி நால்வகை

 

2.உ ஊ ஒ ஓ என்னும் நான்குயிர்

வ என் எழுத்துடன் வருதல் இல்லை (63)

 

3.வகரக் கிளவி நான்மொழி ஈற்றது (81)அவ்,இவ்,உவ்,தெவ் என்பன

 

4.எழுத்துச்சாரியைநான்கு அகரம் கரம்,காரம், கான் க் -ககரம், அ- அகரம்,ஆ-ஆகாரம்,ஐ-ஐகான்

 

5.சொல் இலக்கண வகையால் நான்கு பெயர்ச்சொல், வினைச்சொல், இடைச்சொல்,  

      உரிச்சொல்

 

6.சொல் இலக்கிய வகையால் நான்கு  இயற்சொல் திரிசொல், திசைச்சொல், வடசொல் (880)

        அவற்றுள்

7.நான்கே இயற்பெயர் நான்கே சினைப்பெயர்,

நான்கென மொழிமனார் சினைமுதற் பெயரே (660)

 

8.இயற்பெயர் நான்கு  பெண்மை இயற்பெயர், ஆண்மை இயற்பெயர், பன்மை

    இயற்பெயர்,ஒருமை இயற்பெயர் (661)

 

9.சினைப்பெயர் நான்கு .பெண்மைசினைப்பெயர், ஆண்மைசினைப்பெயர், பன்மை சினைப்பெயர், ஒருமை சினைப்பெயர்(662)

 

10. நிலம் நான்கு  மாயோன் மேயக் காடுறை உலகமும்

சேயோன் மேய மைவறை உலகமும்

வேந்தன் மேய தீம்புனல் உலகமும்

வருணன் மேய பெருமணல் உலகமும்

முல்லை குறிஞ்சி மருதம் நெய்தலென

சொல்லிய முறையால் சொல்லவும் படுமே (951)

11.மேலோர் முறைமை நால்வர்க்கும் உரித்தே(975) (நால்வர்அந்தணர் அரசர் வணிகர் வேளாளர்)

12.பெருந்திணைக் குறிப்பு 4

ஏறிய மடற்திறம் இளமை தீர்திறம்

தேறுதல் ஒழிந்த காமத்து மிகுதிறம்

மிக்க காமத்து மிடலொடு  தொகைஇச்

செப்பிய நான்கே பெருந்திணைக் குறிப்பே (997)

13.கைக்கிளைக்குறிப்பு

   முன்னைய நான்கும் முன்தற் கென்ப (998)

 

14.பரத்தை வாயில் நால்வர்க்கும் உரித்தே(அந்தணர் அரசர் வணிகர் வேளாளர்)

நிலத்திரிபு இன்றுஅஃது என்மனார் புலவர் (1170)

 

15.தலைவின் மருட்கை நான்கு 

பொழுது தலைவைத்த கையறுகாலை

இறந்த போலக் கிளக்கும் கிளவி

மடனே,வருத்தம்,மருட்கை, மிகுதியோடு

அவைநாற் பொருட்கண் நிகழும் என்ப (1182)

 

16.தோழியைச் சிறப்பித்துக் கூறுமிடத்து

சினனே பேதைமை நிம்பிரி நல்குரவு

அனைய நால்வகையும் சிறப்பொடு வருமே (1191)

 

17.பண்ணைத் தோன்றிய எண்நான்கு பொருளும்

கண்ணிய புறனே நால்நான்கு என்ப (1195)

 

17&18.நாலிரண் டாகும் பாலுமா ருண்டே (1196), (1239)

 

19.நகை தோன்றும் இடங்கள்

எள்ளல் இளமை பேதைமை மடனென்று

உள்ளப் பட்ட நகைநான் கென்பா (1198)

 

20.அழுகை

இளிவே இழவே அசைவே வறுமைஎன

விளிவில் கொள்கை அழுகை நான்கே (1199)

 

21.இளிவரல்

மூப்பே பிணியே வருத்தம் மென்மை

யாப்புற வந்த இளிவரல் நான்கே (1200)

 

22.மருட்கை

புதுமை பெருமை சிறுமை  ஆக்கமொடு

மதிமை சாலா மருட்கை நான்கே (1201)

 

23.அச்சம்

அணங்கே விலங்கே கள்வர் தம்இறையெனப்

பிணங்கல் சாலா அச்சம் நான்கே (1202)

 

24.பெருமிதம்

கல்வி தறுகண் இசைமை கொடையென

சொல்லப் பட்ட பெருமிதம் நான்கே (1203)

 

25.வெகுளி

உறுப்பறை குடிகோள் அலைகொலை என

வெறுப்பின் வந்த வெகுளி நான்கே (1204)

 

26.உவகை

செல்வம் புலனே புணர்வு விளையாட்டு என

அல்லல் நீத்த உவகை நான்கே (1205)

 

25.அகன் ஐந்திணைக்குரிய மெய்ப்பாடுகள்

புகுமுகம் புரிதல் பொறிநுதல் வியர்த்தல்

நகுநயம் மறைத்தல் சிதைவுபிறர்க்கு இன்மையென

தகுமுறை நான்கே ஒன்றென மொழிப (1207)

 

26.கூழை விரித்தல் காதொன்று களைதல்

ஊழணி தைவரல் உடைபெயர்த் துடுத்தல்

கெழீஇ நான்கே இரண்டென மொழிப (1208)

 

27.அல்குல் தைவரல் அணிந்தவை திருத்தல்

இல்வலி யுறுத்தல் இருகையும் எடுத்தலென

சொல்லிய நான்கே மூன்றென மொழிப (1209)

 

28.பாராட்டு எடுத்தல் மடம்தப உரைத்தல்

ஈரமில் கூற்றம் ஏற்று அலர்நாணல்

கொடுப்பவை கோடல் உளப்பட தொகைஇ

எடுத்த நான்கே நான்கென மொழிப (1210)

 

29.தெரிந்து உடம்படுதல் திளைப்பு வினைமறுத்தல்

கரந்திடத்து ஒழிதல் கண்டவழி உவத்தலொடு

பொருந்திய நான்கே ஐந்தென மொழிப (1211)

 

30புறஞ்செயச் சிதைதல் புலம்பித்தோன்றல்

கலங்கி மொழிதல் கையறவு உரைத்தலொடு

புலம்பிய நான்கே ஆறென மொழிப (1212)

 

31.உவமை தோன்றும் நான்கு இடங்கள்

வினைபயன் மெய்உரு என்ற நான்கே

வகைபெற வந்த உவமை நான்கே (1222)

 

32.உவமை தோன்றும் நிலைக்களங்கள்

சிறப்பே நலனே காதல் வலியொடு

அந்நால் பண்பும் நிலைக்களம் என்ப (1225)

 

33.அடியின் அளவு

நாற்சீர் கொண்டது அடியெனப் படுமே (1289)

 

34.யாப்பின் மரபு

மரபே தானும்

நாற்சொல் இயலான் யாப்பு வழிப்பட்டன்று (1337)

 

35.நால்வகை ஒசை அகவல் செப்பல் துள்ளல் தூங்கல் (1338-1341)

 

36.தொடை வகை

   மோனை எதுகை முரணே இயைபு என

   நால்நெறி மரபின தொடைவகை என்ப (1345)

 

37.பா நான்கு ஆசிரியப்பா வெண்பா கலிப்பா வஞ்சிப்பா

ஆசிரியம் வஞ்சி வெண்பா கலிஎன

நால்இயற்று என்ப பாவகை விரியே (1363)

 

38.கலிப்பாவின்வகை

  ஒத்தாழிசைக் கலி கலிவெண்பாட்டே,

  கொச்சகம்,உறழொடு கலிநால்வகைத்தே (1387)

 

39.பரிபாடல் உறுப்புகள்

கொச்சகம் அராகம் சுரிதகம் எருத்தொடு

காமங் கண்ணிய  நிலைமைத் தாகும்  (1378)

 

40.வண்ணக ஒத்தாழிசை இலக்கணம்

தரவே தாழிசை எண்ணே வாரம் என்று

அந்நால்வகையின் தோன்றும் என்ப (1397)

 

41.நூலின் பெயரும் இயல்பும் பற்றி

 அதுவே தானும் ஈர்இரு வகைத்தே (1423)

 

42.ஒருபொருள் நுதலிய சூத்திரத் தானும்

இனமொழி கிளந்த ஓத்தி னானும்

பொதுமொழி கிளந்த படலத் தானும்

மூன்றுறுப்பு அடங்கிய பிண்டத் தானும்,

ஆங்கு அனைமரபின் இயலும் என்ப (1424)

 

43.உரையின் வகை நான்கு

பாட்டிடை வைத்த குறிப்பி னானும்

பாவின்று எழுந்த  கிளவி யானும்

பொருளொடு புணராப் பொய்ம்மொழி யானும்

பொருளொடு புணர்ந்த நகைமொழி யானும்

உரைவகை நடையே நான்கென மொழிப (1429)

 

           களவு

44.காமப்புணர்ச்சியும் இடந்தலைப்படலும்

பாங்கொடு தழாலும் தோழியிற்புணர்வும்

ஆங்கநால் வகையினும் அடைந்த சார்பொடு

மறையென மொழிதல் மறையோர் ஆறே (1442)

 

45.அந்தணர்க்குரிய நான்கு

நூலே கரகம் முக்கோல் மணையே

ஆயுங்காலை அந்தணர்க் குரிய (1570)

 

46.வழிநூல் நால்வகை

தொகுத்தல் விரித்தல் தொகைவிரி மொழிபெயர்த்து

அதர்ப்பட யாத்தலொடு அனைய மரபினவே

 

47.நாலெழுத்து ஆதி யாகி ஆறெழுத்து

ஏறிய நிலத்தே குறளடி என்ப (1293)

 

48.நாற்பேர் எல்லை அகத்தவர்  வழங்கும்

யாப்பின் வழியது என்மனார் புலவர் (1336)

 

49.வாழ்த்தியல் வகை நாற்பாவிற்கும் உரித்தே (1366)

 

50.நெடுவெண் பாட்டே முந்நால் அடித்தே (1414)

அடைப்பிற்குள் இருக்கும் எண்கள் தொல்காப்பிச்சூத்திர எண்கள்

 இவ்வாறு  நான்கின் தொகுதியை நன்முறையில் எடுத்து உரைக்கிறது பண்டைத்தமிழரின்  மரபினைக் காக்கும் தொல்காப்பியம் 22-5-23 முடிய

 

                  திருக்குறளில் நான்கு

                   நான்கைப் பற்றி நாலு விதம்

ஆக்கம் தொல்காப்பியச்செம்மல் புலவர் ஆ.காளியப்பன்

     தலைவர் தொல்காப்பியர் தமிழ்ச்சங்கமம் அலைபேசி +91 9788552993

நாள்: தொல்காப்பியர் ஆண்டு 2734 விடை க0    (24-5-23)

                    திருவள்ளுவர்  கூறும் நான்குகள்

 

 

    அடுத்து தொல்காப்பியர் வழிநின்ற வள்ளுவர் இடம் சென்றேன்.  தமிழ்த்தாயின் தவப்புதல்வன் திருவள்ளுவர் கால்கள் பதித்தது தமிழ்நாடு! எனினும் அவரின் கருத்துக்கள் ஓலையில் பதித்தது முழுதும் உலகை நோக்கியே! உலகில் மொழி பெயர்க்கப்பட்ட சமயச் சார்பற்ற  நூல்களுள் திருக்குறளே முதலில் நிற்கிறது என்பது ஒவ்வொரு தமிழனுக்கும் ஏன் ஒவ்வொரு இந்தியனுக்கும் பெருமை! மனிதன் மனிதனுக்ககாகச் சொல்லப்பட்டது திருக்குறள்!
ஆம் வள்ளுவர் என்ற மாமனிதர், மனிதன் மனிதனாக வாழ வழிகாட்டி எழுதியதுதான்  திருக்குறள்! மனிதன் அறவழிநடந்து பொருள் ஈட்டி இன்ப வாழ்வு வாழவேண்டும்! என்று உரைக்கும்  முப்பாலிலும் தேடினேன்
    நான்கு    என்ற எண்  தமிழருக்கு மிகவும் பிடித்த எண் அதனால் நாலும் இரண்டும் சொல்லுக்கு உறுதி என்று திருக்குறள் நெறிப்பட நின்றனர். அந்தத் திருக்குறளில் திருவள்ளுவர் கூறும் நான்கினைப் பற்றி எடுத்துக் கூற விரும்புகிறேன். அவரும் நான்கின் தொகுதிகள் பதினெட்டாகக் கூறி உள்ளதை அறிந்தேன். கடவுள் என நான்கு எழுத்தால் தொடங்கிய வள்ளுவர் தமது நூலில் பாயிரத்திற்கு நான்கு அதிகாரம் ஒதுக்கி உள்ளார்.

அவர் கூறும் குறளையும் பொருளையும் காண்போம்

1.அழுக்காறு அவாவெகுளி இன்னாச்சொல் நான்கும்
இழுக்கா இயன்றது அறம் (35)                                         

பொறாமை, ஆசை, சினம், கடுஞ்சொல் வாராமல் ஒழுகுவதே அறம்.

 

2.பகைபாவம்அச்சம் பழியென நான்கும்
இகவாவாம் இல்இறப்பான் கண்  (146)
பகை பாவம் அச்சம் பழி என்னும் இந்நான்கு குற்றங்களும் பிறன் மனைவியிடத்து நெறி தவறி நடப்பவனிடத்திலிருந்து நீங்காவாம்                                                                     

 

3.அஞ்சாமை ஈகை அறிவுஊக்கம் இந்நான்கும்
எஞ்சாமை வேந்தற்கு இயல்பு  (382)  
அஞ்சாமை, ஈகை, அறிவுடைமை, ஊக்கமுடைமை ஆகிய இந்த நான்கு பண்புகளும் குறைவு படாமல் இருத்தலே அரசனுக்கு இயல்பாகும்.                                          

 

4.இயற்றலும் ஈட்டலும் காத்தலும் காத்த
வகுத்தலும் வல்லது அரசு    (385)                                                              பொருள் வரும் வழிகளை மேன்மேலும் இயற்றலும், வந்த பொருள்களைச் சேர்த்தலும், காத்தலும், காத்தவற்றை வகுத்துச் செலவு செய்தலும் வல்லவன் அரசன்.

 

5.கொடைஅளி செங்கோல் குடிஓம்பல் நான்கும்
உடையானாம் வேந்தர்க்கு ஒளி   (390.)                                                                                                                             கொடை, அருள், செங்கோல்முறை, தளர்ந்த குடிகளைக் காத்தல் ஆகிய நான்கும் உடைய அரசன், அரசர்க்கெல்லாம் விளக்குப் போன்றவன்.

 

6.வினைவலியும் தன்வலியும் மாற்றான் வலியும்
துணைவலியும் தூக்கிச் செயல்  (471.)                                                                                                                                                                                செயலின் வலிமையும், தன் வலி மையும், பகைவனுடைய வலிமையும், இருவர்க்கும் துணையானவரின் வலிமையும் ஆராய்ந்து செய்யவேண்டும்

7.அன்புஅறிவு தேற்றம் அவாவின்மை இந்நான்கும்
நன்குடையான் கட்டே தெளிவு (513)                                                                                                                                                                                           
அன்பு, அறிவு, ஐயமில்லாமல் தெளியும் ஆற்றல், அவா இல்லாமை ஆகிய இந் நான்கு பண்புகளையும் நிலையாக உடையவனைத் தெளியலாம்

8.அறம்பொருள் இன்பம் உயிர்அச்சம் நான்கின்
திறம்தெரிந்து தேறப் படும்    (501)                                                                                                                                                                                           
அறம், பொருள், இன்பம், உயிர்க்காக அஞ்சும் அச்சம் ஆகிய நான்கு வகையாலும் ஆராயப்பட்ட பிறகே ஒருவன் (ஒரு தொழிலுக்கு உரியவனாகத்) தெளியப்படுவான்

9.நெடுநீர் மறவி மடிதுயில் நான்கும்
 கெடுநீரார் காமக் கலன்     (605)                                                                                                                                                                                                                                                              காலம் நீட்டித்தல், மறதி, சோம்பல், அளவு மீறிய தூக்கம் ஆகிய இந் நான்கும் கெடுகின்ற இயல்புடையவர் விரும்பி ஏறும் மரக்கலமாம்.

10.கருவியும் காலமும் செய்கையும் செய்யும்
அருவினையும் மாண்டது அமைச்சு.   (631)                                                                                                                                                                                                                                                                                                                                  செயலுக்கு உரிய கருவியும், ஏற்ற காலமும், செய்யும் வகையும், செய்யப்படும் அரிய செயலும் சிறப்படையச் செய்ய வல்லவன் அமைச்சன்

11.இருபுனலும் வாய்ந்த மலையும் வருபுனலும்
வல்லரணும் நாட்டிற்கு உறுப்பு .   (737)                                                                                                                                                                                                                                                                                                                                  
 
ஊற்றும் மழையுமாகிய இருவகை நீர்வளமும், தக்கவாறு அமைந்த மலையும், அந்த மலையிலிருந்து ஆறாக வரும் நீர் வளமும், வலிய அரணும் நாட்டிற்கு உறுப்புக்களாம்.

12.மணிநீரும் மண்ணும் மலையும் அணிநிழல்
காடும் உடையது அரண்   (742)
மணிபோல் தெளிந்த நீரும், வெட்ட வெளியான நிலமும், மலையும், அழகிய நிழல் உடைய காடும் ஆகிய இவை நான்கும் உடையதே அரண் ஆகும்

13.உயர்வகலம் திண்மை அருமைஇந் நான்கின்
 அமைவரண் என்றுரைக்கும் நூல். (743)

 உயரம், அகலம், உறுதி, பகைவரால் அழிக்க முடியாத அருமை ஆகிய இந்த நான்கும்   

 அமைந்திப்பதே அரண் என்று நூலோர் கூறுவர்.

 

14 .மறமானம் மாண்ட வழிச்செலவு தேற்றம்

  எனநான்கே ஏமம் படைக்கு (766)                                                                           

  வீரம் மானம் சிறந்தநடை தெளிவு என்ற நான்கும் படைக்கு வேண்டியவை

 

15 .குணனும் குடிமையும் குற்றமும் குன்றா
   இனனும் அறிந்துயாக்க நட்பு (793)
  ஒருவனுடைய குணத்தையும், குடிப்பிறப்பையும், குற்றத்தையும், குறையாத இனத்தாரின்  

  இயல்பையும் அறிந்து அவனோடு நட்புக் கொள்ளவேண்டும்

16.வழிநோக்கான் வாய்ப்பன செய்யான் பழிநோக்கான்
  பண்பிலன் பற்றார்க்கு இனிது (865)                                                                      

  வழியும் பொருத்தமும் பழியும் பாராதவன் பண்பும் இல்லாதவன் பகைவர்க்கு இனியவன்

17.உற்றவன் தீர்ப்பான் மருந்துழைச் செல்வானென்று
  அப்பால் நாற்கூற்றே மருந்து. (950)

  நோயுற்றவன், நோய் தீர்க்கும் மருத்துவன், மருந்து, மருந்தை அங்கிருந்து கொடுப்பவன்  

  என்று மருத்துவ முறை அந்த நான்குவகைப் பாகுபாடு உடையது

 

18.நகைஈகை இன்சொல் இகழாமை நான்கும்
  வகையென்ப வாய்மைக் குடிக்கு.  (953)                                                     

  உண்மையான உயர்குடியில் பிறந்தவர்க்கு முகமலர்ச்சி, ஈகை, இனிய சொல், பிறரை   

  இகழ்ந்து கூறாமை ஆகிய நான்கும் நல்லப் பண்புகள் என்பர்.

 அத்துடன் உழவைச்சிறப்பித்து .ஏரினும் நன்றால் எருவிடுதல் கட்டபின்                                                        

 நீரினும் நன்றதன் காப்பு   (1038)   ஏர் உழுதலை விட எருவிடுதல் களை கட்டல்,நீர்  

 பாய்ச்சல்,காப்பு என்ற நான்கே  சிறந்தது      

                                  

                    

                 வள்ளலார் கூறும் நான்கு  

                   நான்கைப் பற்றி நாலு விதம்

ஆக்கம் தொல்காப்பியச்செம்மல் புலவர் ஆ.காளியப்பன்

     தலைவர் தொல்காப்பியர் தமிழ்ச்சங்கமம் அலைபேசி +91 9788552993

  நாள்: தொல்காப்பியர் ஆண்டு 2734 விடை கஉ    (26-5-23) அருட்பெருஞ்ஜோதி  அருட்பெருஞ்ஜோதி””தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதிஎன்ற மகா மந்திரத்தை உலகம் உய்ய அருளிய மாண்பாளர். திருவருட் பிரகாச வள்ளலார் என்று அழைக்கப்படும் இராமலிங்க அடிகளார்   சத்திய ஞான சபையை நிறுவியவர். வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம், வாடினேன்" என்று பாடியவர் கடவுள் ஒருவரே என்ற கருத்தை வலியுறுத்தியவர். எம்மத நிலையும் நின் அருள் நிலையில் இலங்குதல் அறிந்தனன் எல்லாம் சம்மதம் ஆக்கிக் கொள்கின்றேன் அல்லால் தனித்து வேறு எண்ணியது உண்டோ? செம்மல் உன்பாதம் அறிய நான் அறியேன் சிறிதும் இங்கு இனித்துயர் ஆற்றேன் இம்மதிக்கு அடியேன் குறித்தவாறு உள்ளது இயற்றுவது உன்கடன்  என்றவர். கலையுரைத்த கற்பனையை நிலை எனக் கொண்டாடும் கண்மூடி பழக்கமெல்லாம் மண்மூடிப் போக எனக் கூறிய வள்ளலார் இடம் சென்றேன்.                                                   

பிறப்பு இறப்பு கடவுள் இறைவன் தெய்வம்,இதயம் உயர்வு உலகம் ஊக்கம் முயற்சி, செல்வம், ஆக்கம், ஊக்கம், இயற்கை, செழிப்பு, உழைப்புப் போன்ற வாழ்வியலோடு தொடர்புடைய சொற்கள் நான்கு எழுத்துக்களால் ஆகி உள்ளன. இவற்றில் சிலவற்றை  ஏற்கனவே கூறி இருப்பினும் இங்கே பட்டியல் இடுகிறேன் 

வள்ளலார், இன்பமான வாழ்வுக்கு நான்கு வகையான ஒழுக்கங்கள் தேவை என்று எடுத்துரைத்துள்ளார். இந்திரிய ஒழுக்கம், கரண ஒழுக்கம், ஜீவ ஒழுக்கம், ஆன்ம ஒழுக்கம் ஆகியன

  
இந்திரிய ஒழுக்கம் 1.கேடான வார்த்தைகள் செவி புகாதபடி . இறைவனின் நாமங்களை கேட்பது.2. குரூரமாக பார்க்காமல் இருப்பது. 3. சுவையை விரும்பாமல் இருப்பது 4 இனிமையாக பேசுவது.

 

சுத்த சன்மார்க்க சத்திய சிறு விண்ணப்பம்
சுத்த சன்மார்க்க சத்தியப் பெரு விண்ணப்பம்

சமரச சுத்த சன்மார்க்க சத்திய ஞான விண்ணப்பம்

சமரச சுத்த சன்மார்க்க சங்க சத்திய விண்ணப்பம்

 

மேற்கண்ட நான்கு ஒழுக்கத்தையும் நாம் கடைபிடித்தால் நமக்கு கிடைக்கு இலாபம் என்னவெனில்,

1. ஏமசித்தி

2. சாகாக்கல்வி

3. கடவுள் நிலையறிந்து அம்மயமாதல்

4. தத்துவ நிக்கிரகம்.

இந்த நான்கு புருஷார்த்தங்களும் / உறுதியான பொருட்களும் நமக்குக் கிடைக்கும் என்கிறார் வள்ளலார்.

 

ஆகாரத்தில் அதிகம் சேர்க்க வேண்டிய நான்கு  தேன் சர்க்கரை கற்கண்டு வெல்லம்

                    

இறந்தபின் தூக்கிச் செல்ல நான்கு பேர் வேண்டும் அந்த நால்வர் மனைவி வீட்டார், தாய்வகை தந்தைவகை குழந்தை வகை உறவினர்.

மடையன், சுயநலக்காரன்,முட்டாள்,ஓய்வாக இருப்பவன் நான்கு நபர்களை புறக்கணி

பொய்யன், துரோகி, பொறாமைக்காரன். மமதை பிடித்தவன் நான்கு நபர்களுடன் தோழமை கொள்ளாதே

 

அனாதை, ஏழை, முதியவர், நோயாளி  நான்கு நபர்களுடன் கடினமாக நடக்காதே

 

மனைவி, பிள்ளைகள், குடும்பம், சேவகன் நான்கு நபர்களுக்கு உனது கொடையைத் தடுக்காதே

 

தந்தை, தாய், சகோதரன் சகோதரி நால்வரையும் வெறுக்காதே

 

பொறுமை, சாந்தகுணம்,அறிவு அன்பு நான்கு விசயங்களை ஆபரணமாக அணி

 

,உணவு, தூக்கம், சோம்பல், பேச்சு நான்கு விசயங்களைக் குறை

 

துக்கம், கவலை, இயலாமை, கஞ்சத்தனம் என்னும் நான்கு விசயங்களைத் தூக்கிப்போடு

 

மனத்தூய்மை உள்ளவன், வாக்கை நிறைவேற்றுபவன், கண்ணியமானவன்

,உண்மையாளன் என்னும் நான்கு நபர்களுடன் சேர்ந்து இரு.

 

, தியானம் அல்லது யோகா, நூல் வாசிப்பு,  உடற்பயிற்சி,  சேவை செய்தல் என்னும் நான்கு விசயங்களைச் செய் வாழ்க்கை வளம் பெற இத்தகைய செயல்களைக் கடைபிடியுங்கள்....

என்று வள்ளலார் உலக மக்களுக்கு உரைக்கின்றார் 26-5-23

 

 

 

 

 

 

 

 

 

               நிகண்டு முதலிய நூல்களில் நான்கு

 .                நான்கைப் பற்றி நாலு விதம்

ஆக்கம் தொல்காப்பியச்செம்மல் புலவர் ஆ.காளியப்பன்

     தலைவர் தொல்காப்பியர் தமிழ்ச்சங்கமம் அலைபேசி +91 9788552993

நாள்: தொல்காப்பியர் ஆண்டு 2734 விடை ௧௭ (31-5-23)

                          நிகண்டு

நிகண்டு என்பது சொற்களுக்கான பொருள்களைத் தருவதற்காக ஆக்கப்பட்ட நூல் வகையாகும்.

·  நிகண்டு என்னும் சொல் தொகை, தொகுப்பு, கூட்டம் என்னும் பொருள் தரும்.

· தமிழில் அகராதிகளுக்கு முன்னோடியாக இருந்தவை நிகண்டுகளே.

 

                          பிங்கல நிகண்டு

நான்கு திசைகள் - வடக்கு, தெற்கு, கிழக்கு, மேற்கு                                                     நாற்கதி: தேவகதி, மிருககதி,மக்கள்கதி,நரககதி (354)

நால்வேதம் : இருக்கு, எசுர், சாமம், அதர்வணம்(355)

நால்வகை: இழிசொல்:  குறளை, பயனில் சொல், கடுஞ்சொல் பொய்ச்சொல் (356)

ஆடவர் நாற்குணம்: அறிவு நிறை, ஓர்ப்பு,கடைப்பிடி (357)

பெண்கள் நாற்குணம்:  அச்சம் மடம்,நாணம்.பயிர்ப்பு (358)

நால்வகைப் புண்ணியம்: தானம் கல்வி தவம், ஒழுக்கம்(359)

நால்வகை உயிர்த்தோற்றம்: பை, முட்டை, வியர்வை, நிலம்(360)

நால்வகைப்புலமை: கவி, கமகன், வாதி, வாக்கி (361)

நால்வகை: கவி ஆசு, மதுரம், சித்திரம், வித்தாரம் (362)

நாள்வகைக்கவிஞர் கள்ளக்கவிமற்றொருவன் பாட்டைத் தன்பாட்டாகத் தருபவன்

சார்த்துகவிமற்றொருவன் இசையில் பாடுபவன்

பிள்ளைக்கவிதனக்கென மொழிநடை இல்லாமல் பாடுபவன்

வெள்ளைக்கவிபுன்மொழியால் பாடுபவன்

 

நாற்பொருள்: அறம், பொருள், இன்பம், வீடு (370)

நால்வகைக் கேள்வி: கற்றல், கேட்டல், அவ்வழிநிற்றல், ஒத்தல்(371)

நானிலம்:குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல்(372)

நால்வகைச்சேனை: யானை, தேர், பரி, காலாள் (373)

நால்வகைப்படை: தேர், யானை, குதிரை, காலாள் (1476)

நால்வகைப்பொன்:சாதரூபம், கிளிச்சிறை, ஆடகம், சாம்பூநிதம்(374) 

நால்வகைப்பூ: கோட்டுப்பூ, கொடிப்பூ, நீர்ப்பூ, புதர்ப்பூ (375)

நால்வகைப்புசிப்பு: உண்பன, தின்பன, நக்குவன, பருகுவன்(376)

நால்வகை ஊறுபாடு: குத்தல், வெட்டல், எய்தல், எறிதல் (377)  

நால்வகை உபாயம்: சாமம்,பேதம், தானம், தண்டம் (378)

நால்வகை விரகுகள் இன்மொழி, தருமொழி, புகழ்மொழி, ஒறுப்பு   

நால்வகை நிலை: பைசாசம், ஆலீடம், மண்டிலம், பிரத்தி (379)

நால்வகை சாந்து: பீதம், கலவை, வட்டிகை, புலி (1307)

நால்வகை எழுத்து: வடிவு, பெயர், தன்மை, முடிவு (2087)

நால்வகையரண் : மலை, காடு, மதில், நீர்(722)

நாலறிவு உயிர்:  உற்றறி புலனா(வாய்) மூக்கொடுகண்ணும் பெற்ற வண்டு ஞெண்டு (1095)

நால்வகை பண்: பாலை, குறிஞ்சி, மருதம்,செவ்வழி (1375)

நால்வகைப்பெண் பருவம்: வாலை, தருணி, பிரவிடை, விருத்தை(939)

நால்வகை மருந்து: சல்லியகரணி, சந்தானகரணி, சமனியகரணி, மிருதசஞ்சீவனி (2782)

நால்வகை யாழ்:   பேரியாழ், சகோடயாழ், மகரயாழ், செங்கோட்டியாழ்(1401)

நால்வகையுகம்: கிரேதா, திரேதா, துவாபரம், கலி (308)

நால்வகை நெருக்கம்:எக்கல், குவித்தல, நளி, நிபிடம் (2253)

நால்வகைப்படை வகுப்பு: ஒச்சு, யூகம், உண்டை, அணி(1503)

 

 

                   நான்கைப் பற்றி நாலு விதம்

                    சூடாமணி நிகண்டு

ஆக்கம் தொல்காப்பியச்செம்மல் புலவர் ஆ.காளியப்பன்

     தலைவர் தொல்காப்பியர் தமிழ்ச்சங்கமம் அலைபேசி +91 9788552993

  நாள்: தொல்காப்பியர் ஆண்டு 2734 விடை (02-6-2023)                                          

வில்லின் பெயர் கொடுமரம்,துரோணம், சாபம்,சிலை

புத்தர் பெயர் -சீவகர்,பௌத்தர்,தேரர், சாக்கியர்

முல்லை நிலத்தலைவர் கானகநாடந்,குறும்பொறை நாடந், அண்ணல்,தோன்றல்

நெய்தல் நிலப்பெண்கள் பெயர் - பரத்தி,நுளைச்சி,அளத்தி, கடற்பிணா

நெய்தல் நிலத்தலைவன் கொண்கன்,துறைவன்,மெல்லம்புலம்பன்,கடற்சேர்ப்பன்

படைவகுப்பின் பெயர்- உண்டை,ஒட்டு,அணி,யூகம்

படைஉறுப்பின்பெயர்- அணி,நெற்றி,கை,தூசி

வடிவத்தின் பெயர்- வடிவம், உருவம், மேனி, சட்டகம்

பிணத்தின் பெயர்-- பிரேதம்,சவம்,களேவரம், அழனம்

தொடையின் பெயர் -- ஊரு,குறங்கு, வாமம், கவாந்

கைத்தலப்பெயர் - கரம், அத்தம்,பாணி,தோள்

கழுத்தின்பெயர்- கந்தரம்,கிரீவம்,களம்,கண்டம்

முதுகின் பெயர்-புறம் நெரிந்,அபரம்,வெந்

பிடரியின் பெயர்- சிறுபுறம்,கயில், எருத்தம்,சுவல்

முகத்தின் பெயர்- வதனம் ஆனனம்,துண்டம் வத்திரம்

உதட்டின் பெயர்- இதழ்,அதரம்,பாலிகை,முத்தம்

புலாலின் பெயர்- முடை,ஊழ்த்தல்,பூதி,தசை

ஆட்டுக்குட்டியின் பெயர் குட்டன்,சோரன்,மறி,பறழ்

முட்பன்றியின் பெயர்  சல்லியம்,முளவுமா,எய் சல்லகம்

கவரிமாவின்-படகம்,பட்டம் மானமா,எகின்

கலையின் பெயர்- இரலை,வச்சயம்,புலிவாய்,கருமான்

கத்தூரியின் பெயர் -துருக்கம்,நானம்,மாந்மதம்,நரந்தம்

தகர்- துருவாடு,வேழம் யாளி,சுறா

பிணை- உழை,புல்வாய்,நாய்,வராகம்

நாகு- எருமை மரை,பெற்றம்,நீர்ச்சாதி

மறி- ஆயு,அழுங்கு,மாந், குதிரை

குழவி -கடமை,மான், எருமை, யானை

விலங்கின் பொதுப்பெயர் மா,மான்,மிருகம்,குரங்கு

பருந்து- சேனம்,பாரசிகை,பாறு,கங்கம்

சில்வீடு- சிதடி,சில்லிகை,சில்லி,சிமிழி,

முட்டை- அரிட்டம்,கோசம்,அண்டம்,சினை

முதலை- இடங்கர்,கிஞ்சுமாரம்,வன்மீன்,கராம்

ஆமையின் -கூர்மம்,உறுப்படக்கி,கச்சபம்,கமடம்

குருக்கத்தி- குருகு,நாகரி,வாசந்தி,மாதவி

துளசி-- கில்லை துளவு,துழாய்,வனம்

பலாமரம் -- பனசம்,வருக்கை,பாகல், பலவு

தெங்கு -- தாழை,தென்,நாளிகேரம், இலாங்கலி

கரும்பு - வேழம்,கன்னல்,இக்கு,கழை

கொன்றை -- இதழி,தாம்ம், மதலை, கடுக்கை

அத்தி  - அதவு,உதும்பரம்,கோளி, அதம்

இலந்தை -வதரி,கோற்கொடி, கோலி,குவலி

முல்லை - தளவு,மாகதி,மௌவல்,யூதிகை

செங்காந்தள் -- காந்தள், பற்ரை, இலாங்கலி,தோன்றி

கடம்பு-- இந்துளம்,மரா,கதம்பம்,நீபம்

அத்தி - கவி,இரத்தி,இரத்திரி,இறலி.

எட்டி -கோடரம், காளம், காஞ்சிரை,முட்டி

ஆச்சாமரம் - சாலம்,சுள்ளி,மராமரம், ஆ

தருப்பை- குசை, குமுதம், கூர்ச்சரம்,குசம்

 மஞ்சலின் பெயர் - நிசி, அரிசனம்,பீதம்,காஞ்சனி

கிழங்கு --மூலம்,சகுனம்,கந்தம்,மூலகம்

மரக்கன்று - குழவி,பிள்ளை,போதகம்,போத்து.

பூந்தாது -- மகரம்,கொங்கு,கேசரம்,துணர்

மலர்தல் - அலர்தல்,அவிவ்தல்,விள்ளல்,நெகிழ்தல்

பூவிதழ் - ஏடு,தோடு,தளம்,மடல்

விதை - பரல்,காழ், பீசம், வித்து.

தெற்கு - யாமியம்,அவாசி, தக்கிணம், சிவேதை

நிலம் -- திணை,மா,வேலி,பூ

மலைப்பக்கத்தின் பெயர் -வாரம்,தடம்,சாரல்,சானு

பொதியமலையின் பெயர் -மலயம், தென்மலை, சிமயம் தென்றல்வருமலை

திரையின் பெயர் -சீரகம், கல்லோலம்,அறல்,தரகங்கம்

கழியின்பெயர் -முரம்பு,காயல்,கானல், உப்பளம்

ஆழத்தின் பெயர்- குண்டு,அழுந்து,கயம், கம்பீரம்

மருதநிலம் - அசணி,பானல்,வயல்,பணை

அம்பலத்தின் பெயர் -- மன்றம்,பொதி,பொது,சபை

திண்ணை - குறடு,வேதிகை,மண்ணீடு,திட்டை

முனி வாசத்தின் பெயர் பாழி,தாபதம்,கரண்டை, பள்ளி

முத்து - ஆரம்,தரளம்,நித்திலம்,மௌதிகம்

செம்பின் பெயர் -எருவை உதும்பரம், தாமிரம்,வடு

திரு நீற்றின்பெயர் பற்பம்,பொடி,விபூதி,காப்பு.

கவண்-- குணில்,கவணை,ஒடிசில் ,குளிர்

விலங்கின் பெயர் -புனை,தளை,சிருங்கலை,நிகளம்

மோதிரம் -- விரலணி,ஆழி,வீகம், இலச்சினை

மணிவடத்தின் பெயர் -சரம்,காவ்,ஆரம்,தாமம்

பூணின் பெயர் -கோளகை ,தாங்கி,வைரம்,கிம்புரி

சிவிகை  வையம்,தண்டிகை, அனிகம்,யாசனம்

கட்டிலின் பெயர்- பாரி,மஞ்சம், புரியங்கம்,பாண்டில்

உறியின்பெயர் -சிதர்,சிக்கம், தூக்கு,சிமிலி

மரக்காலின் பெயர் - அம்பணம்,தூம்பு,குளகம், கச்சம்,

விளக்குத்தண்டின் பெயர் - கம்பம்,தம்பம், கௌசிகம், மத்திகை

முறத்தின் பெயர்  தட்டு,சின்னம், சேட்டை,முற்றில்

மிடாவின் பெயர் -- தயா,கரீரம்,முகை,குழிசி

துகிலின் பெயர்- இடையல் வேதகம், பட்டு,ஏடகம்

மேற்கட்டு -கம்பலம்,படங்கு, வானி விதானம்

பற்றுக்கோட்டின் பெயர் ஊற்றம்,கந்து,தூ, தஞ்சம்

தெளிவு நனவு,உணர்வு,தேறல், தேற்றம்

தவத்தின் பெயர் -- விரதம்,நோந்பு,உவவு,தவசு

நிலைபெறுதலின் பெயர் மன்னல் துஞ்சல் திதி,தாணு

வருவாய் --மல்லல்,வளம்,வாரி,பகுதி

முன்கோபத்தின் பெயர் வெம்பல்,கொந்தல்,கனிதல்,கோம்பல்

குணமின்மையின் பெயர் செடி,சீத்தை,சிதம்பு,சீரணம்

பயனின்மையின் பெயர் --வறிது,கொன்,வீண்,விருதா

சந்தேகத்தின் பெயர்- அயிர்ப்பு, ஐயம்,கடுத்தல்,சங்கை

தடுத்தல் -தட்டல்,வாரித்தல்,ஆணை, தகைத்தல்

சிந்தலிந் பெயர் சிதர்த்தல்,உகுத்தல்,தூவல்,நவித்தல்

வாருதல் - வளைத்தல்,கவர்தல்,வௌவல், கொளல்

காத்தல் - திதி,நிலைபெறுத்தல்,நோக்கல், புரத்தல்

கொலை - ஊறு,கோள், அணங்கு,வேட்டம்

பகுத்தல் - பாத்து,பாகம்,பங்கீடு,பாதி

தேடல்- நாடல்,லேடல்,கையரிக்கொளல், துருவு

தொடுதல் -திவளல்,ஊறு,பரிசனம்,துவளல்

தாளம்போடல்-- வட்டித்தல் ஒற்ற்றுத்தல், வட்டணை,தட்டல்

மௌனம் --மூகம் ,மோனம்,வாளா, கேளா

அரசிறை - திறை, மிறை, கப்பம், பாகுடம்

சுமத்தல் - தரித்தல், பொருத்தல்,தாங்குதல், பரித்தல்

முளைத்தல் -- உருத்தல்,நாறல், தோற்றல்,பொடித்தல்

அலர்தல் - விரித்திடல்,எதிர்தல், விள்ளல், அவிழ்தல்

பிணிக்கு - மறல்,அரில், அபரம், துவக்கு

காய்தல் -- முளிதல்,வறத்தல்,முதிர்ந்திடல் உலரல்

கொப்பளித்தல் -- பிளிற்றல்,பில்கல், காலல் உமிழ்தல்

வாசகத்தின்பெயர் -- வசித்தல்,பாசுரம், வார்த்தை,வசனம்

இயம்புதல்-- இசைத்தல், பிதற்றல், பேசல்.இறுத்தல்

பழித்தல்- பழிச்சொல்,சிறுசொல், தீச்சொல்,பரிவாதம்

படித்தல்- வாசித்தல்,ஓதல்,பாயல் அத்தியயனம்

பழிமொழி -அம்பல்,கௌவை,ஏசல், அலர்

புகழ் -- கீர்த்தி,சீர்த்தி, ஒளி,மீக்கூற்று

மருதயாழ்திறத்தின்பெயர் நவிர்,படு,குறிஞ்சி, பியந்தை

முல்லை யாழ்திறத்தின்பெயர்- நேர்திறம்,பெயர்திறம், யாமை,சாதாரி

யாழின் பெயர் கோடாவதி,விபஞ்சி,கருவி,கலம்

நரம்பிந் பெயர்-- குரல்,கோல்,துயரி, தந்திரி (02-6-2023)  முடிய                                      

 

             

.                நான்கைப் பற்றி நாலு விதம்

                நன்னூல் இலக்கணம் கூறும் நான்கு

ஆக்கம் தொல்காப்பியச்செம்மல் புலவர் ஆ.காளியப்பன்

     தலைவர் தொல்காப்பியர் தமிழ்ச்சங்கமம் அலைபேசி +91 9788552993

நாள்: தொல்காப்பியர் ஆண்டு 2734 விடை உரு (8-6-23)

 

நூலின் பயன் 

அறம் பொருள் இன்பம் வீடு அடைதல் நூல் பயனே  10

 

சூத்திர நிலை

 ஆற்று ஒழுக்கு அரிமா நோக்கம் தவளைப்
பாய்த்து பருந்தின் வீழ்வு அன்ன சூத்திர நிலை 19

 

ஆசிரியருக்குக் காட்டப்பட்ட சான்றுகள்

நிலம் மலை நிறைகோல் மலர் நிகர் மாட்சி 26

 

ஆசிரியர் ஆகாதாருக்குக் காட்டப்பட்ட சான்றுகள்                                             கழற்குடம் மடற்பனை பருத்தி குண்டிகை
முடத்தெங்கு ஒப்பு என முரண் கொள் சிந்தை உம்
உடையோர் இலர் ஆசிரியர் ஆகுதலே  31

 

கடை மாணாக்கருக்குக் காட்டப்பட்ட சான்றுகள் 

இல்லிகுடம் ஆடு எருமை நெய்யரி
அன்னர் கடை மாணாக்கர்                   38

நூல் வகை

 தொகுத்தல் விரித்தல் தொகைவிரி மொழிபெயர்ப்பு
என தகும் நூல் யாப்பு ஈரிரண்டு என்ப        50

 

பாயிரம் இயம்புவோர்

தன் ஆசிரியன் தன்னொடு கற்றோன்
தன் மாணாக்கன் தகும் உரைகாரன் என்ற
இன்னோர் பாயிரம் இயம்புதல் கடனே        51

 

தற்புகழ்ச்சிக்கான இடங்கள்

மன்னுடை மன்றத்து ஓலைத் தூக்கினும்
தன்னுடை ஆற்றல் உணரார் இடையினும்
மன்னிய அவையிடை வெல்லுறு பொழுதினும்
தன்னை மறுதலை பழித்த காலையும்
தன்னைப் புகழ்தலும் தகும்புல வோனுக்கே   53

 

எழுத்துசாரியை

மெய்கள் அகரமும் நெட்டுயிர் காரமும்
ஐஔ கானும் இருமை குறிலிவ்
இரண்டொடு கரமுமாம் சாரியை பெறும்பிற 126

புணர்ச்சி

உயிர்  முன் உயிர்,உயிர் முன்  மெய், மெய் முன் உயிர், மெய் முன் மெய்  151

 

புணர்ச்சி வகை

சாரியைப் புணர்ச்சி, விகுதி புணர்ச்சி,  பதம் புணர்ச்சி, உருபு  புணர்ச்சி    253

 

 முதற்பெயர் நான்கும் சினைப்பெயர் நான்கும்
சினைமுதற்பெயர் ஒரு நான்கும் தன்மை நான்கும்              282

 

அளவை

எண்ணல் எடுத்தல் முகத்தல் நீட்டல்
எனும்நான்கு அளவையு ளும்மிலது அத்தொகை           368

               பிற இலக்கண நூல்கள் கூறும் நான்கு

.                நான்கைப் பற்றி நாலு விதம்

               பிற இலக்கண நூல்கள் கூறும் நான்கு

ஆக்கம் தொல்காப்பியச்செம்மல் புலவர் ஆ.காளியப்பன்

 தலைவர் தொல்காப்பியர் தமிழ்ச்சங்கமம் அலைபேசி +91 9788552993

நாள்: தொல்காப்பியர் ஆண்டு 2734 விடை (9-6-23)

 

எழுத்து வகை வடிவெழுத்து, பெயரெழுத்து, தன்மை எழுத்து முடிவெழுத்து(தண்டபாணிசுவாமிகள் அறுவகை இலக்கணம் )

எழுத்து நால் வகை உயிர் எழுத்து, மெய் எழுத்து  உயிர்மெய் எழுத்து  ஆய்தஎழுத்து

 

கனம் நான்கு உயிர்க்கனம் வன்கனம் மென்கனம் இடைக்கனம்

இலக்கிய வகையால் சொல்நான்கு இயற்சொல், திரிசொல், வடசொல், திசைச்சொல்

இலக்கண வகையால் சொல்நான்கு பெயர்ச்சொல் வினைச்சொல் இடைச்சொல், உரிச்சொல்

ஒருநூலைக் கேட்போன் அறிய வேண்டிய நான்கு  

1.நூலால் நுவலப்படும் பொருள் 2 நூலால் நுவலப்படும் பொருள் 3. நூல் கேட்டலால் பெறப்படும்பயன் 4. கேட்டற்குரிய அதிகாரிகள்

 

நால்வகை உரைகள்           - கருத்துரை, பதவுரை, பொழிப்புரை, அகலவுரை

 

விடை துணிந்து சொல்லல், கூறிட்டு மொழிதல், வினாவின் விடுத்தல், வாய்வாளாமை  கும்

இதன் பொருள் அடித்துச் சொல்வது ஒரு வகை; விலாவாரியாகச் சொல்லுவது ஒரு வகை; கேள்விக்கு மறுகேள்வி எழுப்புவது ஒரு வகை; பதில் எதுவும் சொல்லாமல் மெளனமாக இருப்பது ஒருவகை என்று வினாவிடை நான்கு வகைப்படும்

 

நால்வகைப் பாக்கள் - வெண்பா, ஆசிரியப்பா, கலிப்பா, வஞ்சிப்பா

பெரும்பாலான செய்யுள் அடிகள் நான்கு சீர்களையே பெற்று வரும்

ஓரடியில் நான்கு சீர்கள்கொண்ட அளவடி வருதலே சிறப்பு அதில்தான் தொடைஇலக்கணம் பார்க்க வேண்டும்.

ஒரு பாவில் பயின்றுவரும் சீர்கள் மாச்சீர், விளச்சீர், காய்ச்சீர், கனிச்சீர் என்ற நான்கும்

சீர்நான்கு ஒரசைச்சீர் ஈரசைச்சீர் மூவசைச்சீர் நாலசைச்சீர்

இயற்சீர்நான்கு தேமா புளிமா கூவிளம் கருவிளம்                                                           

களவுப் புணர்ச்சி 4 வகை இயற்கைப்புணர்ச்சி,  இடந்தலைப்பாடு. பாங்கொடுதழால், பாங்கியர்க்கூட்டம்    

            அறமுதனான்கினுங் குறைபாடு உடையது
              காப்பிய மென்று கருதப்படுமே.   - (தண்டியலங்காரம்-10)                                          நால்வகைக்குறுக்கம் ஐகாரக்குறுக்கம் ஔகாரக்குறுக்கம் மகரக்குறுக்கம் ஆய்தக்குறுக்கம்

தளை 4 ஆசிரியத்தளை வெண்டளை வஞ்சித்தளை, கலித்தளை

  1. ஆசிரியப்பா நேரிசை ஆசிரியப்பா
  2. நிலைமண்டில ஆசிரியப்பா
  3. அடிமறிமண்டில ஆசிரியப்பா
  4. இணைக்குறள் ஆசிரியப்பா

ஓசை நான்கு பா நான்கு அகவல்,செப்பல், துள்ளல் தூங்கல

 அளவொத்த நான்கு அடிகளையுடையது விருத்தம் எனப் பொதுவாகக் கூறலாம். வெளி விருத்தம், ஆசிரிய விருத்தம், கலிவிருத்தம், வஞ்சி விருத்தம் என்பன விருத்தப்பா வகைகள். இவற்றுள் வெளிவிருத்தம் தவிர்த்த ஏனையன அறிய வேண்டியனவாகும்.

ஆசிரிய விருத்தம்  கழிநெடிலடி நான்கு உடையது இது. சீர்களின் எண்ணிக்கைக்கேற்பப் பெயர் பெறும். 9-6-23 முடிய

 

                                                                            

                        இலக்கியம் கூறம் நான்கு

தொன்மை வாய்ந்த பல தமிழ் நூல்கள் பெரும்பாலும் நான்கு நூறு பாடல்களாகத் தொகுக்கப்பட்டன,   (அகநானூறு, புறநானூறு  நாலடி நானூறு பழமொழிநானூறு நற்றிணைநானூறு  குறுந்தொகை நானூறு,  இன்னும் பல ) என எண்ணிகையில் பாடல்கள் தமிழில் அமைக்கப்பட்டன. இனியவை நாற்பது இன்னாநாற்பது,கார்நாற்பது களவழிநாற்பது நான்மணிக்கடிகை, நால்வர் நான்மணி மாலை என நூல்களுக்கு நான்கின் அடிப்படையிலேயே பெயர்கள் வைத்தனர்                                                                ஒரு மொழியில் மக்கள் வழக்கு, இலக்கியக்கலைவழக்கு, அறிஞர்இயல்நூல்வழக்கு, இயற்றுறை கடந்த மறைப்பேரறிஞர் துறை வழக்கு என்ற நான்கையும் கொண்டே நூல்கள் அமையும்.

தமிழ் இலக்கியப் பிரிவுகள் நான்கு                                                                     1 பதினென்மேல்கணக்கு  2. பதினென்கீழ்க்கணக்கு  3. காப்பியங்கள் 4. சிற்றிலக்கியங்கள்  

.முருகு என்னும் சொல்லின் பொருள்                                                                  மணம், தெய்வத் தன்மை, இளமை, அழகு என்னும் நான்கு பொருள்

சாந்தலிங்க அடிகள்  எழுதிய நான்கு நூல்கள்

கொலைமறுத்தல் வைராக்கிய சதகம் வைராக்கிய தீபம் அவிரோத உந்தியார்

                     

இன்னா நாற்பது பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்றான இன்னா நாற்பதில் கடவுள் வாழ்த்து நீங்கலாக நாற்பது பாடல்கள் உள்ளன. ஒவ்வொரு பாடலிலும் நான்கு கருத்துக்களைக் கொண்டு, ஒவ்வொன்றையும் 'இன்னா' என எடுத்துக் கூறுதலின் இந்நூல் 'இன்னா நாற்பது' எனப் பெயர்பெற்றது.இன்னா நாற்பதுஎன்பது மக்களை நல்வழிப்படுத்தும் அறவுரைகளை 40 வெண்பாக்களில் வடித்துக் கொடுக்கும் ஓர் சிறிய நூலாகும் ஒவ்வொரு இன்னா நாற்பது பாடலும் நான்கு துன்பம் தரும் தவிர்க்கப்படவேண்டிய கருத்துகளை இன்னா என்று உரைக்கிறது. ஆகவே, 164 (41 X 4) துன்பம் தருவனவற்றைப் பட்டியலிடுகிறார் இந்நூலை இயற்றியவர் கபில தேவர்.                                                                                     

இனியவை நாற்பது இந்நூல் பதினெண் கீழ்க்கணக்கில் உள்ள 'நாற்பது' எனமுடியும் பெயர்கொண்ட நான்கு நூல்களில் இரண்டாவதாகும். இதன் ஆசிரியர் மதுரைத் தமிழாசிரியர் மகனார் பூதஞ் சேந்தனார் எனப்படுவர். இவர் தந்தையார் மதுரைத் தமிழாசிரியர் பூதன் ஆவார். இவர் வாழ்ந்த நாடு பாண்டி நாடு.இந்நூலில் நான்கு இனிய பொருள்களை எடுத்துக் கூறும் பாடல்கள் நான்கே நான்கு தான் உள்ளன(1, 3, 4, 5).  அவை

பிச்சை புக்குஆயினும் கற்றல் மிக இனிதே;

நல் சபையில் கைக்கொடுத்தல் சாலவும் முன் இனிதே;

முத்து ஏர் முறுவலார் சொல் இனிது; ஆங்கு இனிதே,

தெற்றவும் மேலாயார்ச் சேர்வு. 1

 

ஏவது மாறா இளங் கிளைமை முன் இனிதே;

நாளும் நவை போகான் கற்றல் மிக இனிதே;

ஏருடையான் வேளாண்மைதான் இனிது; ஆங்கு இனிதே,

தேரின், கோள் நட்புத் திசைக்கு. 3

 

கொல்லாமை முன் இனிது; கோல் கோடி, மா ராயன்,

செய்யாமை முன் இனிது; செங்கோலன் ஆகுதல்,

எய்தும் திறத்தால், இனிது என்ப; யார் மாட்டும்

பொல்லாங்கு உரையாமை நன்கு. 5


அந்தணர் ஓத்துடைமை ஆற்ற மிக இனிதே;பந்தம் உடையான் படையாண்மை முன் இனிதே;

தந்தையே ஆயினும், தான் அடங்கான் ஆகுமேல்,

கொண்டு அடையான் ஆகல் இனிது. 7

கார் நாற்பது. அகப் பொருள் சார்ந்தது. மதுரையைச் சேர்ந்த கண்ணங் கூத்தனார் என்னும் புலவரால் இயற்றப்பட்டது

களவழி நாற்பது  புலவர் பொய்கையார் செங்கணான் போரைச் சிறப்பித்துப் பாடியது புறப்பொருள் சார்ந்த நூல்   

நான்மணிக்கடிகை     பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள், ஒன்று. இது ஒரு நீதி நூல். விளம்பி நாகனார் என்னும் புலவரால் இயற்றப்பட்ட இந் நூல் நூற்றியொரு பாடல்களைத் தன்னகத்தே கொண்டுள்ளது[ ஒவ்வொரு பாடலும் நான்கு அடிகளால் ஆனது. இந் நூற் பாடல்கள் ஒவ்வொன்றிலும், நான்கு மணியான கருத்துக்கள் சொல்லப்படுகின்றன                             

ஆற்றுப்பாடை நூல்கள் நான்கு

பெரும்பாணாற்றுப்படை சிறுபாணாற்றுப்படை திருமுருகாற்றுப்படை,பொருநராற்றுப்படை 

சிலம்பு

ஓர் இசை வல்லான்  முதல் நடை, வாரம், கூடை, திரள் என்ற நான்கு வகை இசை இயக்கங்களையும், வட்டார மொழி வழக்காறுகளையும் அறிந்திருத்தல் வேண்டும். நான்குவீதிகள் கூடும்  சதுக்கபூதம் பற்றிப் பேசுகிறார்

அறவோர்க்கு அளித்தலும் அந்தணர் ஓம்பலும்
துறவோர்க்கு எதிர்தலும் தொல்லோர் சிறப்பின்
விருந்தெதிர் கோடலும் இழந்த என்னை (கொலைக்களக் காதை 71-73)

பாவேந்தரின் நாடகங்கள் கவிதை நாடகங்கள், உரைநடை நாடகங்கள், சமூக நாடகங்கள், வரலாற்று நாடகங்கள் என நான்கு பிரிவுகளாக உள்ளன.

நான்முகன் திருவந்தாதி என்ற ஒரு இலக்கியமும் உள்ளது.

                    

                         சமயம்    

இந்தியாவில் நான்கு முக்கிய மதங்கள் இந்து கிறித்துவம்,இஸ்லாம் சீக்கியம்

சைவ சித்தாந்தம்  மதுரை, சிதம்பர கோயில் வாயில்கள் நான்கு                                                                         

மார்க்கம் 1பக்தி மார்க்கம் -  2.ஞான மார்க்கம் -3.தவ மார்க்கம் -4.தான மார்க்கம் -                       தாச மார்க்கம், சற்புத்திர மார்க்கம், சகமார்க்கம், சன்மார்க்கம் என்னும் நான்கு மார்க்கங்களாக அடியார்களால் அனுசரிக்கப்பட்டன

.சன்மார்க்கம் சகமார்க்கம் சற்புத்திர மார்க்கம்
தாதமார்க்கம் மென்றுஞ்சங் கரனை யடையும்
நன்மார்க்கம் நாலவைதாம் ஞான யோகம்
நற்கிரியா சரியையென நவிற்றுவதும் செய்வர்

 

திருநாவுக்கரசர் சரியை நெறி நின்றே இறைவனை வழிபாடு செய்தார்.

திருஞானசம்பந்தர் கிரியை நெறியில் நின்றே இறைவனை வழிபாடு செய்தார்.

சுந்தரமூர்த்தி நாயனார் யோக நெறி நின்றே இறைவனை வழிபாடு செய்தார்.

மாணிக்கவாசகர் ஞான நெறி நின்றே இறைவனை வழிபாடு செய்தார்.

நால்வர் நான்மணிமாலை - திருஞான சம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரமூர்த்தி நாயனார், மாணிக்கவாசகர் ஆகியோரின் சமயப் பணி பற்றிக் கூறும் நூலாக சிவப்பிரகாசர் எழுதியது

 

சமயக்குரவர் நால்வர் திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரமூர்த்தி, மாணிக்கவாசகர்  

 

அகச்சந்தானக்குரவர்   திருநந்திதேவர், சனற்குமாரர், சத்தியஞானதரிசினிகள், பரஞ்சோதியார்  

 

புறச்சந்தானக்குரவர் நால்வர் மெய்கண்டார் அருணந்தி சிவாச்சாரியார், மறைஞான சம்பந்தர், உமாபதி சிவாச்சாரியார்

 

மனத்தின் கூறுபாடு நான்கு:  ஜீவப்பற்று, பந்துப் பற்று, களத்திரப்பற்று, தேகப்பற்று

அதாவது உயிர்ப்பற்று உறவினர் பற்று குடும்பப்பற்று உடம்புபற்று                                

 

வாக்கு நான்கு  அபரவாக்கு, பரவாக்கு, துரியவாக்கு, அனுபவ வாக்கு மேலும்

 சூக்குமை பைசந்தி மத்திமை வைகரி (சைவ சித்தாந்தம்) எனவும் கூறுகிறது

சமய நூல்கள் பரா,பஸ்யந்தி,மத்யமா, வைகரீ எனவுமகூறுகின்றன

 

வாக்கின்மூலம் நான்கு தீவினைகள் உண்டாகின்றன. அவை பொய், குறளை, இன்னாச் சொல், பயனில்லாத சொல் என்ற நான்கு வைகையாகும்

சுவாசம் நான்கு: பூரக, ரேசக, கும்பக, தம்பன

 

கர்மம் நான்கு நித்தியக்கருமம், நைமித்தக கருமம், காமிய கருமம் நிஷித கருமம்

 

அந்தக்கரணம் நான்கு மனம் புத்தி சித்தம் அகங்காரம்

உபாதை நான்கு பசி பிணி மூப்பு சாக்காடு

சமய சன்மார்க்கத்தின் / சத்துவ குணத்தின் அனுபவம் நான்கு வகையாகும், அவை:-                                                                

1. தன்னடிமையாகப் பலரையும் பாவித்தல்
2.
புத்திரனாகப் பாவித்தல்
3.
சிநேகிதனைப் போலப் பாவித்தல்
4.
தன்னைப்போலப் பாவித்தல்

நிற்குணத்தின் அனுபவம் நான்கு வகை

1. தான் கடவுளுக்கு அடிமையாதல்
2.
தான் கடவுளுக்கு புத்திரனாதல்
3.
தான் கடவுளுக்கு சிநேகனாதல்
4.
தான் கடவுளுக்கு நிகராதல் (கடவுளேதானாதல்)

பிண்ட ஒளியும் அண்ட ஒளியும்

பிண்ட ஒளி - அண்ட ஒளி

ஆன்ம ஒளி - அக்கினி ஒளி

ஜீவ ஒளி - சூரிய ஒளி

மன ஒளி - சந்திர ஒளி

கண்ணொளி - நட்சத்திர ஒளி

அண்ட பிண்ட திசைகள்

1. வடக்குப் பாகம், நக்ஷத்திரப் பிரகாசம்.

2. கிழக்குப் பாகம், சந்திரப் பிரகாசம்.

3. மேற்குப் பாகம், சூரியப் பிரகாசம்.

4. தெற்குப் பாகம், அக்கினிப் பிரகாசம்.

 

நால்வகைத் தீபங்களின் பயன்

கிழக்கு துன்பம் நீங்கும்,மேற்கு பகை விலகும், வடக்கு மங்களம் பெருகும்,தெற்கு பாவம் பெருகும்.

நால்வகை திக்பாலர் தீபங்கள் ஈசான தீபம், இந்திர தீபம், வருண தீபம், யம தீபம்.      நான்கு வகையான நெறிகளில் சுருதி, சிந்தனை, பாவனை, தரிசனம் என்ற நான்கையும் அடைந்து மயக்கத்தை ஒழிக்கவேண்டும்.                                           

சுருதி தக்க அறவுரைகளைக் கேட்டல் என்றால் சிந்தனை அவற்றைப் பற்றிச் சதா காலமமும் நினைப்பது என்றும் பாவனை என்பது அந்த அறவழிகளில் ஒழுகுதல் என்றால் இந்த மூன்றின் வழியாக அடையப்போகும் மெய்மை நிலை தரிசனமாகும். மேற்சொன்ன வழியே நடந்து மனத்தில் உள்ள இருள் நீங்கப் பெறவேண்டும்

நான்கு கண்டங்களாவன: இறந்த காலக் காரணங்கள், நிகழ் கால விளைவுகள்,                                    நிகழ் காலக் காரணங்கள்,  எதிர் கால விளைவுகள்

பயனற்ற நான்கு

.பொருளில் குலனும் பொறைமைஇல் நோன்பும்

அருளில் அறனும் அமைச்சுஇல் அரசும்

இருளினுள் இட்ட இருண்மையிது என்றே                                                      மருளில் புலவர் மனம் கொண்டு உரைப்ப                                             

 

மக்கள் யாக்கை இதுவென உணர்ந்து                                              இறத்தலும் உடையது இடும்பைக் கொள்கலம்                                    பிறத்தலும் மூத்தலும் பிணிபட்டு இரங்கலும்

 

                   புத்தம்  .

புத்தர் கூறும். நால்வகை வாய்மை

The four noble truths பெளத்த தருமத்திற்கு அடிப்படையான நான்கு உன்னத உண்மைகள் அல்லது சத்தியங்கள் துக்கம், துக்க காரணம், துக்க நிவாரணம், துக்க நிவாரண மார்க்கம் ஆகியவை

புத்தர் உபதேசிகள்                                                                                                          மத்தியா மிகர், யோகாசாரர், வைபாடிகர், செளத்திராத்திரகர் என நால்வர்.

இப்பெயரால் அமைந்த மதங்களாவன: மாத்திமிகம், யோகாசாரம், வைபாடிகம், செளத்திராந்திரிகம்.                               

பௌத்த மரபினர் நான்கு உண்மைகளை மேற்கொண்டார்.  1. துக்கம், 2. துக்க உற்பத்தி, 3. துக்க நிவாரணம், 4. துக்க நிவாரண வழி என்பன இவை (தீ கநிகாயம், கூடதந்த சூத்திரம்).  

 

நயம்எனத் தோன்றப் படுவன ஒற்றுமை, வேற்றுமை, புரிவின்மை, இயல்பு (மணிமேகலை   

கௌதம புத்தர் தனது சீடர்களுக்கு அருளிய  நான்கு உயர்ந்த உண்மைகள்மனிதர்கள் மனநிறைவான வாழ்க்கையை வகுத்துக் கொள்ள, புத்தர் அருளியது  

  1. துன்பம் ("துக்கம்"): பிறப்பு, நோய், முதுமை, இறப்பு மற்றும் பசி மனிதர்களால் தவிர்க்க இயலாத துன்பங்கள். மேலும் பகை, கொலை, வெகுளி, இழப்பு, மயக்கம் போன்றவைகளையும் மனிதருக்குத் துன்பத்தைத் தருபவைகள்.
  2. ஆசை / பற்று: துன்பத்துக்கான காரணம் ஆசை அல்லது பற்று.
  3. துன்பம் நீக்கல்: ஆசையை விட்டுவிடுவதுவே துன்பத்தை நீக்கும் முறைமை.
  4. எட்டு நெறிகள்: எட்டு நெறிகளும் துக்கத்தைப் போக்க உதவும் வழிமுறைகள் ஆகும்.

இந்த நான்கு உண்மைகளை விழிப்புணர்வுடன் அறிந்து, நன்னெறியுடன் வாழ்பவர்களை, அருகத நிலையை அடைந்தவர் என பௌத்தம் கூறுகிறது.  

     புத்தர் கண்ட நான்கு உண்மைகள்

  1. துன்பம் ("துக்கம்"): மனிதர்களால் துன்பத்தைத் தவிர்க்க முடியாது. பிறப்பு, நோய், முதுமை, இறப்பு ஆகியவை மனிதருக்குத் துன்பத்தைத் தருபவை. பசி, பகை, கொலை, வெகுளி, இழப்பு, மயக்கம் போன்றவையும் துன்பம் தருபவையே.
  2. ஆசை/பற்று: துன்பத்துக்கான காரணம் ஆசை அல்லது பற்று.
  3. துன்பம் நீக்கல்: ஆசையை விட்டுவிடுவதுவே துன்பத்தை நீக்கும் முறைமை.
  4. எட்டு நெறிகள்: எட்டு நெறிகளும் துக்கத்தைப் போக்க உதவும் வழிமுறைகள் ஆகும்.

 

சமண சமயம்

நான்கு வகை தானங்களை வலியுறுத்துகிறது. அவற்றுள் முதன்மையானது அன்னதானமே.

 

ஒற்றுமைப் படுத்தித் சொல்லுதல், வேற்றுமைப் படுத்திச் சொல்லுதல், சுற்றி வளைக்காமல் சொல்லுதல், இயல்பைச் சொல்லுதல் - ஆகியவை நான்கு வகை நயங்கள் ஆகும்

 

 . காரண காரியத்துடன்  இருக்கும் பொருளை ஒன்றாக ஒப்பிட்டு உணர்தல் ஒற்றுமை நயம். 

வேறு வேறாகப் பிரித்துக் பிரித்துக் காண்பது  வேற்றுமை நயம்

வேண்டும், வேண்டாம் என்று  கூறுவ்வதும், அழியாப் பொருள்களுக்கு ஒன்றி உதவும் காரியத்தைத் தருவதற்கு உள்ளந்தான் இல்லை என்பதைப் புரிவின்மை நயம் என்று சொல்லவேண்டும். 

நெல் வித்துக்குள் நெல்முளை தோன்றும் எனல் நல்ல இயல்பு-நயம்

                       சமசுகிருதம்

மனுக்களில் முக்கியமானவர் நால்வர்  சுவாரோசிஷர்,சுவாயம்புவர், ரைவதர், உத்தமர்

புருஷார்த்தம்நான்கு.  ஏமசித்தி. சாகாக்கல்வி.கடவுணிலையறிந்து அம்மயமாதல். தத்துவநிக்கிரகம்  

நான்கு வேதங்களும் (தைத்ரியம், பௌடிகம், தலவாகாரம், சாமவேதம்

 

நாலு என்பது உறுதியைக் குறிப்பதால், யுகம், ஜாதி, வேதம், பிரம்மாவின் மானச புத்ரர்,, நால்வர் (சைவப் பெரியார்), படைகள், உபாயங்கள் என்று நூற்றுக் கணக்கான விஷயங்களை இந்துக்கள் நான்காகப் பிரித்தனர்

 

ஆத்மோபதிஷத்தில் ஆத்மா,அந்தராத்மா, ஞானத்மா, பரமாத்மா என்ற நான்கு விதமாகக் கூறப்பட்டுள்ளது. அந்த நான்கு ஆத்ம ஸ்வரூபமாக இருப்பவளேதேவி. நான்கு வேதங்களை நான்கு முகமாகக் கொண்ட இவளைநான்கு முக தேவியாக சிதம்பரம் தில்லைக் காளி ஆலயத்தில் காணலாம். அன்னை ஸாம தான, பேத, தண்டம் என்கிற நான்கு வித உபாய வடிவாக உள்ளவள். பரா, பச்யந்தி, மத்யமா, வைகரீ என்ற நான்கு வாக்காக அம்பிகை விளங்குகிறாள். நாம் பேசுவதற்கு அம்பிகையின்அருள்இல்லையேல் ஊமைதான்

 வேதங்களுக்கு நான்கு பாகங்கள் உண்டு. அவையானவை:

  1. சம்ஹிதை - தொகுப்பு; "மந்திரங்கள்" (கடவுளால் தரப்பட்டவையாக கருதப்படும் பாடல்கள்)
  2. பிராமணம் எனப்படும் உரை அல்லது சடங்கு வழிமுறைகள்
  3. ஆரண்யகம் எனப்படும் காட்டில் வாழும் முனிவர்களின் உரைகள்
  4. உபநிடதங்கள் (வேதங்களுக்கான தத்துவ உரைகள்/ விளக்கங்கள்/ எதிர்ப்புக்கள்) ; இவை வேதத்தின் முடிவில் வருவன வேத அந்தம் (முடிவு) என்னும் பொருளில் வேதாந்தம் எனபப்டும்.                               

                                கிறித்துவம்

.பைபிளில் நான்கு என்ற எண் முழுமையைக் குறிக்க அடிக்கடி பயன்படுத்தப்பட்டிருக்கிறது. (ஏசா. 11:12; மத். 24:31; வெளி. 7:1) நான்கு என்ற எண்ணை இந்தத் தரிசனத்தில் மட்டும் ஒன்பது முறை எசேக்கியேல் குறிப்பிட்டிருப்பதைக் கவனியுங்கள். (எசே.

 

நான்கு ஆவிக்குரிய சட்டங்களில்

முதலாவது சட்டம் யாதெனில், "தேவன் உங்களை நேசிக்கிறார், உங்கள் வாழ்விற்கு ஒரு அற்புதமான திட்டம் வைத்திருக்கிறார்." யோவான் 3:16 நமக்கு சொல்கிறது

 

இரண்டாவது சட்டம், " மனுகுலம் பாவத்தினால் கறைபட்டுள்ளது, எனவே தேவனிடமிருந்து பிரிக்கப்பட்டு இருக்கிறது. இதன் விளைவாக, நமது வாழ்வில் தேவன் வைத்திருக்கிற அருமையான திட்டத்தை நாம் அறிய முடியாமல் போகிறது. "எல்லாரும் பாவஞ்செய்து, தேவமகிமையற்றவர்களானார்கள்" என்று ரோமர் 3:23 இந்த தகவலை உறுதிப்படுத்துகிறது. பாவத்தின் சம்பளம் மரணம்என்று ரோமர் 6:23 பாவத்தினுடைய விளைவை எடுத்துரைக்கிறது.

 

மூன்றாவது சட்டம், "நம்முடைய பாவத்திற்காக தேவன் ஏற்படுத்தியிருக்கிற ஒரே ஏற்பாடு இயேசு கிறிஸ்துவே. இயேசு கிறிஸ்துவின் மூலமாக நாம் நமது பாவங்கள் மன்னிக்கப்பட்டு தேவனுடன் நமக்குள்ள சரியான உறவை மீண்டும் பெற முடியும். " நாம் பாவிகளாயிருக்கையில் கிறிஸ்து நமக்காக மரித்ததினாலே, தேவன் நம்மேல் வைத்த தமது அன்பை விளங்கப்பண்ணுகிறார்என்று ரோமர் 5: 8 நமக்கு சொல்லுகிறது.

 

நான்காவது சட்டம் யாதெனில், “இரட்சிப்பின் பரிசை பெற்றுக்கொள்ளவும் நம்மைக்குறித்த தேவனுடைய அற்புதமான திட்டத்தை அறிந்துகொள்ளவும் இயேசு கிறிஸ்துவே இரட்சகர் என நாம் அவரில் விசுவாசம் வைக்க வேண்டும். அவருடைய நாமத்தின்மேல் விசுவாசமுள்ளவர்களாய் அவரை ஏற்றுக்கொண்டவர்கள் எத்தனைபேர்களோ, அத்தனை பேர்களும் தேவனுடைய பிள்ளைகளாகும்படி, அவர்களுக்கு அதிகாரங்கொடுத்தார்என்று யோவான் 1:12 நமக்கு இதை விவரிக்கிறது.

 

ஆயர் நிலைகள்

கத்தோலிக்க திருச்சபையில் பேராயர், ஆயர், இணை ஆயர், துணை ஆயர் என்ற நான்கு நிலைகளில் ஆயர்கள் பணி செய்கின்றனர்.

பேராயர்: ஒரு கத்தோலிக்க உயர்மறைமாவட்டத்தின் தலைவர் "பேராயர்" (Arch-Bishop) என்று அழைக்கப்படுகிறார்.

ஆயர்: ஒரு கத்தோலிக்க மறைமாவட்டத்தின் தலைவர் "ஆயர்" (Bishop) என்று அழைக்கப்படுகிறார்.

இணை ஆயர்: ஒரு ஆயருக்கு வாரிசாகவும், துணையாகவும் நியமிக்கப்படும் ஆயர் "இணை ஆயர்" (Co-adjutor Bishop) என்று அழைக்கப்படுகிறார்.

துணை ஆயர்: ஒரு ஆயரின் மேய்ப்பு பணியில் உதவுவதற்கு மட்டும் நியமிக்கப்படும் ஆயர் "துணை ஆயர்" (Auxilary Bishop) என்று அழைக்கப்படுகிறார்.                                

அகம், அகப்புறம், புறம், புறப்புறம் என்கின்ற நாலிடத்திலும் கடவுட் பிரகாச முள்ளது.

தேம்பாவணி, இரட்சணிய யாத்திரிகம், இரட்சணிய மனோகரம், இயேசு காவியம் ஆகியன கிறித்துவ சமயத்தன.

 

 

 

                         

                       இசுலாம்

 

There are four books in Islam: Torah, Zaboor, Injeel, Quran.

இசுலாமியர் நால்வகை வேதநூல்கள் தோரா,ஸபூர், இஞ்ஜீல் குரான்

1.தவ்ராத் வேதம் நபி மூஸா (அலை) அவர்களுக்கும், (5:44)
2.
ஸபூர் வேதம் நபி தாவூது (அலை) அவர்களுக்கும், (17:55,21:105,)
3.
இன்ஜீல் வேதம் நபி ஈஸா (அலை) அவர்களுக்கும், (27:57,5:46)
4.
குர்ஆன் வேதம் நபி முஹம்மது (ஸல்) அவர்களுக்கும் (3:4,5:44, 5:48,12:2)
(
நான்கு வேதங்கள்) அருளப்பட்டுள்ளன

 

நான்கு விஷயங்களுக்காகப் பெண் மணமுடிக்கப்படுகிறாள். அவளது செல்வத்திற்காக, அவளது குலச்சிறப்புக்காக, அவளது அழகுக்காக, அவளது மார்க்கப்பற்றுக்காக. நீங்கள் மார்க்கப்பற்றுள்ள பெண்களையே மணந்து கொள்ளுங்கள். உங்களுக்கு நலம் உண்டாகட்டும்என்று நபிகளார் நவின்றார்கள்.

 

மார்க்கப்பற்றுள்ள பெண்களிடம் இறையச்சம், அன்பு, நற்பண்பு, நாணம் ஆகிய குணங்கள் குடிகொண்டிருக்கும் என்பது நபிகளாரின் நம்பிக்கையாகும்

 

கணக்கு

நால்வகை ஊழியெண்களாய் நவிலப்படுவது.
1
பாழ் 2 கால் 3 பாகு 4 ஒன்று, இரண்டு, ... என்றெல்லாம் எண்ணிக்கொண்டு செல்லும் பாங்கு.
பாழ் = 0
கால் = 0.25
பாகு = 0.5
1, 2, ...
என்று எண்ணிக்கொண்டே செல்லும் முடிவில்லாத பாங்கு.

 

இதனை அறிவியல் கோணத்திலும் எண்ணிப்பார்க்க முடியும்.
1
வெம்மை அடங்கிக் கிடக்கும் பாழ்நிலை (விண்) ஊழி
2
விண் வெடித்து ஓடும் காற்றுஊழி
3
கால் வெம்மையும் தண்மையுமாய்ப் பாகுபட்ட ஊழி (தீ, நீர்)
4
எண்ணிக்கை உருவம் கொண்ட நிலை

 

இரண்டையும் இரண்டையும் கூட்டினாலும் பெருக்கினாலும்  ஒரே விடைவரும்  எண் நான்கு மட்டுந்தான். 2 + 2 = 2 × 2 = 22 = 4

 

வர்க்க எண்ணில் முதலெண் நான்கு,

 

வரிசை    4ம், நான்காம்

காரணியாக்கல்   22

காரணிகள்   1, 2, 4

எண்ணுரு    quaternary

ரோமன்      IV

ரோமன் (ஒருங்குறியில்) ,

கிரேக்க முன்குறி  tetra-

இலத்தீன் முன்குறி quadri-/quadr-

Greek δ (or Δ)

Arabic ٤,4

Persian ۴

செஸ்  

வங்காளம் 

சீனம்  四,亖,肆

கொரியம் ,

தேவநாகரி

தெலுங்கு

மலையாளம்

தமிழ்

 

ארבע (Arba, உச்சரிப்பு அர்-பா)

எபிரேயம் அல்லது ד (Dalet, 4th letter of the Hebrew alphabet)

கெமர்                                                தாய் 

 

இரும எண்  1002

முன்ம எண் 113

நான்ம எண்  104

ஐம்ம எண்    45

அறும எண்   46

எண்ணெண்   48

பன்னிருமம்  412

பதினறுமம்   416

இருபதின்மம் 420                                                                                                   36ம்ம எண்   436  

நான்கு   தமிழ் எண்களில் ௪ என்பதைக் குறிக்கும்                                                             இந்து-அராபிய எண் ஆகும்.[நான்கு என்பது மூன்றுக்கும் ஐந்துக்கும் இடைப்பட்ட இயற்கை எண்ணாகும்

  • நான்கு ஓர் இரட்டை எண்ணாகும்.
  • 4 = 2 2 {\displaystyle 4=2^{2}} நான்கு  என்பது ஒரு நிறை வர்க்க எண்ணாகும்.
  • நான்கு என்பது மூன்றாவது லூகாஸ் எண்ணாகும். மூன்று ஆகவே, நான்கை அடி இரண்டில் எழுதும்போது ஒரே எண் மீண்டும் தொடர்ந்து வருகிறது
  • நேர்விளிம்பையும் கவராயத்தையும் பயன்படுத்தி ஒரு சதுரத்தை உருவாக்கலாம்.

·         நான்கு கோடுகளால் உருவாக்கப்பட்ட உருவம் நாற்கரம் எனப்படும்.

·         இவை சதுரம், செவ்வகம், இணைகரம் சாய்சதுரம் என நான்கு வகைப்படும்

·         சதுரத்தில் நான்கு பக்கங்கள் சமமாக அமைந்திருக்கும். நான்கு கோணங்களும் நான்கு சமநிலையில் உள்ள கோடுகள் அமைத்து உருவாக்கப்பட்டது சதுரம்.  

சதுரம் என்றாலே நான்கு என்ற பொருளும் உண்டு. சதுர், சதுரங்கசேனை, சதுக்கம் சதுர்த்தி, சதுர்புயம்,சதுரங்கம், சதுர்முகன், சதுர்வேதி(மங்கலம்), சதுரகராதி,(பொருள் அகராதி,பேரகராதி,தொகையகராதி,தொடையகராதி) சதுர்க்குணி,சதுர்த்தம்,சதுர்த்தர்,சதுர்ப்பாடு சதுரன், சதுரகிரி மலை                                                                        

.அளவைகள் 4 எண்ணல் எடுத்தல் முகத்தல் நீட்டல் அளவை                                               நால் வகைக் கணக்குகள் - கூட்டல், கழித்தல், பெருக்கல், வகுத்தல்

                                 பொது

சொத்து அமைந்துள்ள இடத்தின் நான்கு பக்கங்களில் உள்ள மற்ற சொத்து உரிமையாளர்கள் பெயரை குறிப்பிடாமல், அந்த இடங்களுக்கான சர்வே எண்ணை குறிப்பிடும் பட்சத்தில் பல்வேறு சிக்கல்கள் தவிர்க்கப்படும்.

 

நாயகன் கமல் கூட, நாலு பேருக்கு நல்லதுன்னா எதுவும் தப்பில்லை என்று, நான்கு என்ற எண்ணுக்கு தன் பங்கைச் செலுத்தியிருக்கிறார்.

 

பாடை தூக்கும் நாலுபேர் தன்பங்காளி(தந்தை உடன்பிறந்தஆண்மக்கள்)) அத்தை(தந்தை உடன்பிறந்த பெண்மக்கள்வகை),மாமன் (தாய்உடன்பிறந்தார்) மனைவி வகையினர்

 

சூரிய உதயம் நான்கு  வைகறை புலரி விடியல் அருணோதயம்

 

தசரதன் மக்கள் நால்வர்  இராமன் இலக்குவன் பரதன் சத்துருக்கன்

 

குடி:மக்கள் நால்வர் துடியன், பாணன், பறையன், கடம்பன் என்று இந்நான்கு அல்லாது குடியும் இல்லை - புறநானூறு 335

 

சங்கரர் சீடர்களில் குறிப்பிடத்தக்கவர் நால்வர் சுரேசுரர், பதுமபாதர், அத்தாமலகர், தோடகாசிரியர்

 

தேவர் நால்வர்  ஆதித்தர், அச்சுவினிகள், ஈசர், வசுக்கள்

 

மக்கள் நால்வர்  அந்தணர்,அரசர்,வணிகர், வேளாளர்

 

அரண்  நீர் அரண், நில அரண், மலையரண், காடு அரண் என்ற நால்வகை                        

 

பெரும்பாலான தட்டு முட்டுச் சாமான்கள் நான்கு  பீடங்களைப் பெற்றுள்ளன.

 

பெரும்பாலான தரைப்போக்குவரத்து வாகனங்கள் நான்கு சக்கரங்களைப் பெற்றுள்ளன

 

பெரும்பாலான விலங்குகள் நான்கு கால்களைப் பெற்றுள்ளன

 

அச்சகத்தில் பயன்படும் முதன்மை நிறங்கள் நீலம் சிவப்பு பச்சை கருப்பு

 

நமது தேசியக் கொடியில் சிவப்பு வெள்ளை பச்சை நீலம் என்ற நான்கு நிறங்கள்

 

ஒலிம்பிக் கொடியில் நான்குவண்ணமும் நான்குவளையமும் உள்ளன.

 

நான்காண்டுக்கொரு முறை கோடைகால ஒலிம்பிக் விளையாட்டு நடைபெறுகிறது

 

நான்காண்டுக்கொரு முறை குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டு நடைபெறுகிறது

 

நானாகாண்டுக்கு ஒரு முறை நெட்டாண்டு வருகிறது

 

நான்காண்டுக்கொரு முறை அமெரிக்க ஜனாதிபதி தேர்தலும் நடைபெறுகின்றது

 

நான்காண்டு  பி.இ.கல்வி

 

முன்னால் பிரதம மந்திரி மொராஜிதேசாய் பிறந்த நாள் நான்கு ஆண்டுக்கு ஒருமுறை வரும் பிப்ரவரி 29 ல் பிறந்தவர்

 

குடும்பச் செய்திகள் நான்கு  சுவருக்குள் இருக்க வேண்டும் என்பர்.

 

நான்கு சுவர்கள் 1971 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கே. பாலச்சந்தர் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜெய்சங்கர், வாணிஸ்ரீ மற்றும் பலரும் நடித்திருந்தனர்

 

மட்டைப்பந்து விளையாட்டில் அடிபட்ட பந்து உருண்டி எல்லைக் கோட்டைத் தொட்டால் 

நான்கு ஓட்டம் என்று கணக்கிடுவார்

விளையாடும்  சீட்டுக்கட்டில் ஸ்பேட் ஆட்டின் கிளாவர் டைமண்ட என்ற நான்கு குறிகள்: (hearts, diamonds, clubs, spade). உள்ளன.

மேலும் ராஜா ராணி ஜாக்கி ஆஸ்  என்ற நான்கு பொம்மைகள் உள்ளன

 

இசைக்கருவிகள் நால்வகை

1நரம்புக் கருவிகள் (தந்தி வாத்தியங்கள் - chordophones). யாழ், தம்புரா, வீணை,    

 வயலின்,கோட்டு வாத்தியம் ஆகியன நரம்புக் கருவிகள்.

2துளைக் கருவிகள் (காற்று வாத்தியங்கள் - aerophones). புல்லாங்குழல், நாதசுரம், கிளாரினெட் முதலியவை துளைக்கருவிகள்.

3.தோற்கருவிகள் (அவனத அல்லது கொட்டு வாத்தியங்கள் - membranophones). தவில், மிருதங்கம், கஞ்சிரா, பறை முதலியவை

4.கனகக் கருவிகள் (கஞ்சக் கருவிகள் (idiophones அல்லது autophones). ஜால்ரா, குழித்தாளம், ஜலதரங்கம் முதலியவை கனகருவிகள்

 

பெரியாழ், மகரயாழ், சகோடயாழ், செங்கோட்டுயாழ் என நான்கு வகை யாழ், ...

யாழின் நான்கு நரம்புகள் உறவு நரம்பு நட்பு நரம்பு, இணைநரம்பு ,கிளைநரம்பு 

நால்வகைச் சாதிப்பண்கள் : இணை, கிளை, பகை, நட்பு

 

கான்கிரிட்  சல்லி  சிமிட்டி மணல் நீர் நானும் சேர்ந்த கலவை

 

தொழிற்சாலைக்குத்தேவை மூலதனம் மூலப்பொருள் ஆட்கள் போக்குவரத்து 

புகை, ஜோதி, நீர்த்துளி, காற்று இவற்றின் சேர்க்கையே மேகம்

 

கோட்டினும் கொடியினும் நீரினும் நிலத்தினும்
காட்டிய பூவின்    (சிலம்பு. அழற்படுகாதை : 93, 94)

 

நால்வகை உணவு

மெல்லுதல், பதார்த்தம்

உறிஞ்சுதல் -நுங்கு இளநீர்

நக்குதல்,-தேன்

விழுங்குதல்- பாயாசம் அல்வா

 

நால்வகை நிலம்

வன்புலம் புன்புலம் மென்புலம் களர்புலம்(குறிஞ்சி,முல்லை மருதம் நெய்தல்)

 

காற்று நால்வகை

காற்று தென்றல் தெற்கிலிருந்து வரும் காற்று

கொண்டல் கிழக்கிலிருந்து வருவது

கோடை மேற்கிலிருந்து வருவது

வாடை   வடக்கிலிருந்து வருவது                        

 

சில பொருகளின் நான்கு நிலைகள்

அரும்பு மலர் காய் கனி

பஞ்சு நூல் துணி சட்டை

பால் தயிர் வெண்ணெய் நெய்

சிமிட்டி சல்லி, மணல் நீர் சேர்ந்தது காரை

குழந்தை  சிறுவன் வாலிபம் வயோதிகம்

                அறிவியல்

உலகில் உள்ளபொருகள் நிலைகள் நான்கு திட திரவ வாயு பிளாஸ்மா

 

மக்களின் வாழ்வாதாரங்கள் நிலம், நீர், காற்று, நெருப்பு

 

எம்பிடோகில்ஸ் ( 490–430 கி.மு) நீர்,நிலம்,காற்று,நெருப்பு ஆகிய நான்கே அடிப்படை பொருள் என்று கூறினார்

குரோமசோமிற்கு நான்கு நுனிகள் உண்டு. இந்த குரோமசோம்களின் நான்கு நுனிகளையும் டிலோமியர் (Telomeres)-கள் என அழைப்பார்கள்

 

மண்வகைகள் வண்டல மண், கரிசல் மண், செம்மண், துருக்கல் மண்  

     

நுண்பாசிகள் 1. நீரில் மிதப்பது 2 நீர்நிலையின்அடியில் நிலத்தில் வளர்வது 3. நெற்பயிரோடு வளர்வது 4. மாசுகலந்த நீர்நிலைகளில் வளர்வது

                    

                           சமூகம்

கிராம ஊராட்சி வாக்காளர்கள் நான்கு வாக்குச்சீட்டு 1 வார்டு உறுப்பினர் 2 ஊராட்சித் தலைவர் 3.ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர், 4. மாவட்ட ஊராட்சிக்கான உறுப்பினர் 

.

கடமை ஆவன: தன்னைக் கட்டுதல்
பிறர் துயர் தீர்த்தல் பிறர் நலம் வேண்டுதல்
விநாயகத் தேவனாய் வேலுடைக் குமரனாய்
நாராயணனாய் நதிச்சடைமுடியனாய்
பிற நாட்டிருப்போர் பெயர் பல கூறி
அல்லா யெஹோவா என தொழுது இன்புறும்
தேவரும் தானாய் திருமகள் பாரதி
உமையெனும் தேவியர் உகந்த வான் பொருளாய்
உலகெங்கும் காக்கும் 'ஒருவனை'ப் போற்றுதல்
இந்நான்கே இப்பூமியில் எவர்க்கும்
கடமை எனப்படும்

 

                           ஆங்கிலம்                                                                               

பிரிட்டிஸ் அரசில் இங்கிலாந்து வேல்ஸ் ஸ்காட்லாந்து வடஅயர்லாந்து  நான்கு இராஜ்ஜியங்கள் உள்ளன

 

Most furniture has four legs – tables, chairs, etc.

 

in cricket, a four is a specific type of scoring event, whereby the

ball crosses the boundary after touching the ground at least one time, scoring four runs

 

Four is the only number in English that is equal to the number of letters in its name.

 The ancient Greeks associated the number four with earthly balance, believing that everything was made of four elements: earth, air, fire and water.

Promoted Story

·  Four Great Elementsearth, water, fire, and wind                                                       There are four basic states of matter: solid, liquid, gas, and plasma.

 

The four color process (CMYK) is used for printing.

 

Credit card machines have four-twelve function keys

 

Four seasons: spring, summer, autumn, winter.

A leap year occurs every four years.

Four suits of playing cards: hearts, diamonds, clubs, spades.

Four nations of the United Kingdom: England, Wales, Scotland, Northern Ireland.

 

There are four books in Islam: Torah, Zaboor, Injeel, Quran.

 

 

                     தொட்டணைத்தூறும் நான்கு

      ஒவ்வொரு நூல்களைப் படிக்கும் போதும் ஒவ்வொருவரிடம் பேசும்போதும் புதிய புதிய செய்திகள் வந்து கொண்டே இருப்பதால் நூலை முடிக்க முடியவில்லை.  அதனால் கிடைக்கும் செய்திகளைத் தொகுத்து வழங்கிறேன். இவை தவிர சான்றோர்கள் தாம் அறிந்தவற்றை இவற்றுடன் இணைத்துக் கொள்க.

1.திருக் குறுக்கை வீரட்டம்  ராஜகோபுரத்தில் உள்ள சிற்பங்களில் பன்றி, யானை, நரசிம்மம், மனிதன் ஆகிய நான்கு முகங்களையுடைய ஒரு மூர்த்தியின் சிற்பம் காணத்தக்கது.    கொடிமரமில்லை

நான்கு வழிச்சாலை நாற்சந்தி சதுக்கம் எனப்படும்

கற்க, படியெடுக்க, பகிர்ந்துக் கொள்ள, மேம்படுத்த தங்களை அனுமதித்த தங்களின் மென்பொருள் அங்ஙனம் செய்த மாற்றங்களை, மேம்பாட்டினை வெளியிடுவதற்கான உரிமத்தினையும் தரவேண்டும். அதாவது ஒட்டுமொத்த சமூகமும் பயனுற வேண்டி, நிரலினை மேம்படுத்தி, செய்த மாற்றங்களைப் பொது மக்களுக்கு வெளியிடுவதற்கான சுதந்திரம். இந்நான்கு சுதந்தரங்களையும் தரக் கூடிய மென்பொருள் யாவர்க்குமான அறம் போற்றும் கட்டற்ற மென்பொருள்

 

புனற்கண் நின்ற நான்குமாய்நீருக்குரிய ஓசை, தொடுகை, உருவம், சுவை என்ற 4 குணங்களாகவும் (பொதுவாக நீருக்கு மணம் கிடையாது)

 

பெண்களுடைய உறுப்பை நான்கு வகையாகப் பிரிக்கலாம். அதாவது, தாமரை மொட்டுபோல் குவிந்தது வளர்பிறை போல் வட்டமானது மடிப்பாகச் சேர்ந்திருப்பது எருமை நாக்குபோல் தடித்தது என நான்கு வகையாகும்.
              அகத்தியர் வைத்திய சிந்தாமணி

இதில் கீழ்கண்ட நான்கு நூல்கள் உள்ளன.
1.
அகத்தியர் வைத்திய சிந்தாமணி
2.
அகத்தியர் வைத்தியம்
3.
அகத்தியர் வாக்கியம் ஐம்பது
4.
அகத்தியர் நூல் திரட்டு
இவை அனைத்தும் மிக அரிய நூல்கள். இவைகளில் அநேக விதமான சிகிச்சை முறைகள் உள்ளன

உடலில் உள்ள நால்வகை நீர் கண்ணீர் செந்நீர் சிறுநீர்,நிணநீர்

சுவாதி: நான்கு பாதங்களும் தோஷமற்றது.                                                              கேட்டை: நான்கு பாதங்களும் தோஷத்தை தருவன.                                        நான்கு மூலையிலும் ஒரு விளக்கு என நான்கு விளக்கு பைரவரை நினைத்து கொண்டு 90 நாட்களுக்கு விளக்கு ஏற்ற வேண்டும்                                  

வருமானத்தை உயர்த்தி லாபத்தை அதிகரிக்க செய்யும் சில திட்டங்கள் இதோ...பங்கு சந்தை ,  பத்திர முதலீடு கடன் கொடுத்தல், மனை வாங்கல் விற்றல்

                    முடிப்பு                 

நான் அறிந்த நான்கின் தொகுதிகளைத் தந்துள்ளேன். இன்னும் எத்தனையோ இருக்கும் என மனம் சொல்கிறது. இதில் குறிப்பிடப்படாதவற்றை ஆன்றோர் அறிந்தால் 9788552993 என்ற எண்ணிற்குத் தெரியப்படுத்தினால் மிக்க கடப்பாடு உடையவன் ஆவேன்.

 

                  நால்வர் துதி

பூழியர்கோன் வெப்பொழித்த புகலியர்கோன் கழல்போற்றி

ஆழிமிசைக் கல்மிதப்பில் அணைந்தபிரான் அடிபோற்றி

வாழிதிரு நாவலூரார் வன்தொண்டர் பதம்போற்றி

ஊழிமலி திருவாதவூரர்  திருத்தாள் போற்றி

                                                               

      

    நாவுக்கரசர் கூறும் நால்வகை விளக்குகள்                                               இல்லக விளக்கது விருள்கெ டுப்பது
சொல்லக விளக்கது சோதி யுள்ளது
பல்லக விளக்கது பலருங் காண்பது
நல்லக விளக்கது நமச்சி வாயவே.

       

   தொல்காப்பியரே துணை!            தொல்காப்பியமே வழிகாட்டி!

 

 

சூரியனுக்கு சமுங்கை, பிரபை, ரைவத இளவரசி, சாயாதேவி ஆகிய நான்கு மனைவிகள் உள்ளனர்.

  அரசனுடன் இருந்த நால்வர் ஆசான்,பெருங்கணி, அமைச்சர், தானைத்தலைவர்

 

ஒர்ரு பெண்ணின்

[1] நான்கு குடும்பங்கள் என்பது 1. தன் தாயின் குடும்பம் 2. தன் தந்தையின் குடும்பம், 3. தன் கணவனின் தாயுடைய குடும்பம் 4. தன் கணவனின் தந்தையுடைய குடும்பம் ஆகியவை ஆகும்

 

திருநீறானது, ‘கல்பம், அனுகல்பம், உபகல்பம், அகல்பம்என்று நான்கு வகைப்படும். அவற்றைப் பற்றி பார்க்கலாம்


அதுவே
மாலை விருத்தம் ஒருபொருள் சிலேடையென
நால்வகை யானும் நடைபெறும் என்ப .

 

எ-ன்: 1அத்தீவகாலங்காரம் பிற அலங்காரங்களோடுங் கூடி வருமாறு உணர்த்துதல் நுதலிற்று .

இ-ள் : அச்சொல்லப்பட்ட தீவகம் மாலாதீவகம் , விருத்த தீவகம் , ஒருபொருள் தீவகம் , சிலேடா தீவகம் என நான்கு அலங்காரங்களோடு கூடியும் வருமென்று சொல்லுவர் புலவர் எ-று .

 

மகுடம் நான்கு வகை  கிரீட மகுடம்,கரண்ட மகுடம், மணிமகுடம், சடாமகுடம்

 

 

சப்தத்தில், நான்கு விதங்கள்

முதல் சப்தத்தின் பெயர் 'வைகாரி'.

இரண்டாவது 'மத்யமா'

மூன்றாவது பரிமாணத்தின் பெயர் 'பஷ்யந்தி'.

 நான்காவது பரிமாணத்தின் பெயர் 'பர வாக்'. 'வாக்' என்றால் குரல், 'பர' என்றால் தெய்வீகம் அல்லது படைப்பின் மூலம் என்று பொருள். 'பரவாக்' என்றால் படைப்பவனின் குரல்

கும்பாபிஷேகம்  ஆவர்த்தம், அநாவர்த்தம், புனராவர்த்தம், அந்தரிதம் என்ற பொதுவான நான்கு வகைகளில் உள்ளது.

நால்வகை எச்சில் மலம்,சிறுநீர், விந்து உமிழ்நீர்

 

 

மரக்காணத்தில் ஆறாக ஓடும் நான்கு வகை சாராயம், அதில் புதுச்சேரி சாராயம் ,  இன்னொன்று, தொழிற்சாலை, சாராயம் பட்டச்சாராயம், கள்ளச்சாராயம் .

 

மனிதன் ஆதியில் கட்டிய குடில்கள், குடிசைகள் எல்லாம் உலகெங்கிலும் வட்ட வடிவிலே இருந்தன திசைகளைப் பற்றிய அறிவு பின்னர் தோன்றிற்று. முக்கியமாக, பாரத உபகண்டத்தில், திராவிட மக்கள் கடலாடும் திறன் பெற்று, பிற நாடுகளுடன் வணிகம் செய்கையில் நடுக்கடலில் திசையறிதல் மிக முக்கியமானது. இதற்கு வடமீன் என்னும் துருவ நட்சத்திரத்தை நோக்குதல் ஆதாரமாக அமைந்தது. வடமீன் (North Star) ஒரு மகரமீனாக உருவகம் செய்தனர். சாத்தந்தை, கண்ணந்தை, தொல்காப்பிய உரைகாரர்கள் கூறும் பூந்தை (பூதன்+தை), ஆந்தை (ஆதன்+தை), ... போன்ற சொற்களில் உள்ள தை தான் இது. தமிழின் 12 திங்கட் பெயர்களில் தை ஒன்றுதான் தமிழ். வட்ட வடிவில் இருந்த குடிசைகள், கட்டம் சதுரமாக மாறியது வானியல் அறிவு பெறும்போதுதான். அப்போது நகர நாகரிகம் தோன்றுகிறது.  இல்லங்கள் சதுர வடிவைப் பெறலாயின. திசைகள் 4. எனவே,

களவழி நாற்பது, கார் நாற்பது, இன்னா நாற்பது, இனியவை நாற்பது, உள்ளது நாற்பது (வேதாந்தபரமான நூல்), அழகு நாற்பது, புற நானூறு, அக நானூறு, கோவைகளில் 400 செய்யுள், ஆழ்வார் பாசுரம் 4000 எனத் தொகுக்கலாயினர்.

 1.பொருள்

2.புகழ்

3.புலன்இன்பம்

4.அதிகாரம்

இந்நான்கிலும் பற்று கொண்டு மனம் இயங்கும்போது வருவது தன்முனைப்பு! (Ego