Sunday 11 June 2023

                          ஒன்பதி்ன் சிறப்புகள்

                 ஒன்பது என்ற எண்ணின் சிறப்பு

ஒன்பது போலவர் வாசல் வகுத்தன

ஒன்பது போலவர் மார்பினில் நூலிழை

ஒன்பது போலவர் போலக் குழற்சடை

ஒன்பது போலவர்  பாரிடந் தானே  விடந்தீர்த்த திருப்பதிகம் 4 ஆம்திருமுறை

 

ஒன்ப தொன்பதி யானை யொளிகளிறு

ஒன்ப தொன்பது பலகணம் சூழவே

ஒன்ப தாமவை தீத்தொழி லின்னுரை

ஒன்பது ஒத்துநின் றென்னு ளொடுங்குமே 9 தனித் திருக்குறுந்தொகை 5 ஆம்திருமுறை

      தலைமை என்னும் பொருளைத்தரும்  என்னும் எழுத்தை  ஏன் தமிழ்  நெடுங்கணக்கில் ஒன்பதாதவது எழுத்தாக வைக்க வேண்டும் (ஆங்கிலத்திலும் இந்தி பிரஞ்ச் ஆகிய மொழிகளிலும் ஒன்பதாவது எழுத்தாகவே உள்ளது. ஒன்பதின் சிறப்புக்கருதியே . ஒன்பது அவ்வளவு சிறப்பிற்கு உரிய ஓரெண் அந்த ஒன்பது என்னும் எண்ணின் சிறப்பியல்புகளை இயம்புவது. இக்கட்டுரை

     இறைவன் தன்மை என்னவென்றால் சுதந்திரம் உடையவனாய் விளங்குதல். அதாவது பிறர் வயப்பட்டுச் செயல்புரியாது  அனைத்திலும் சுதந்திரமுடையன் ஆதல்.அந்த இறைவனைப் போன்றே . ஒன்பது எந்த எண்ணுடன் சேர்ந்தாலும்  தன் தன்மை மாறாது ஒன்பதாகவே இருக்கும் சான்று

9 உடன் எந்த எண்ணைப் பெருக்கினாலும்  விடையின் கூட்டுத்தொகை 9                                        9x6  =54  5+4= 9,     8x9  =72 7+ 2 = 9                                                      

 9 உடன் எந்த எண்ணை கூட்டினாலும்  விடையின் கூட்டுத்தொகை கூட்டப்பட்ட எண்ணாக இருக்கும் சான்று  9+ 9  =18  8+1= 9 கூட்டப்பட்ட எண் 9                      9+ 7  =16   1+6= 7 கூட்டப்பட்ட எண் 7 

ஆகவே எந்த எண்ணுடன் சேர்ந்தாலும் ஒன்பது  தன்தன்மை மாறாது அதேபோல் ஒன்பதுடன் எந்த எண் சேர்ந்தாலும்  அதன்தன்மைகளை ஏற்றுக்கொள்வதில்லை, அதேபோல்ஒருவன் எவ்வளவு பெரிய ஆளுடன் சேர்ந்தாலும் தன்னிலையை விட்டுவிடக்கூடாது. என்று ஒன்பது உணர்த்துகிறது.

ஒன்பதிற்குச் சுழியத்தின் தன்மை உள்ளது(ஒன்றுமில்லாமல் போதல்). 4995 4+ 9+ 9+ 5= 27 =2+7= 9

இதில் நடுவில் உள்ள இரண்டு ஒன்பதுகளைச் சுழியம்(0)  என்று வைத்துக் கொண்டாலும்  கூட்டுத்தொகை மாறுவதில்லை இன்னும் ஒரு சான்று 9652=9+6+5+2 =22 =2+2= 4 ஒன்பதை பூஜ்ஜியமாகக் கருதிக் கொண்டு அதைக் கூட்டினால் 9652 =0+ 6+ 5+ 2= 13= 1+3=4 ஆகவே ஒன்பதிற்கு 0 என்ற மதிப்பும் பிற எண்களுடன் சேர்ந்து வரும் போது உண்டு.எனவே ஒன்பதின் மதிப்பு எண்களிலேயே ஓரிடஎண்ணில் சிறிய எண்ணாகிய 0 ஆகவும் இருக்கும். ஓரிட எண்களில் பெரிய எண்ணாகிய 9 ஆகவும் இருக்கும்.எனவே ஆதியும் அந்தமுமாக  உள்ள இறைவன்போல் உள்ளது ஒன்பது.

   எந்தவொரு மூன்று இலக்க எண்ணை எழுதி அதைத்திருப்பி எழுதினால் இன்னொரு மூன்று இலக்க எண்கிடைக்கும்(ஓர் எண்ணை இருமுறையோ 0 வோ எழுதக்கூடாது)

அப்போது பெரிய எண்ணிலிருந்து சிறிய எண்ணைக் கழித்தால் வரும் விடையும் ஒன்பதின் மடங்காகவே இருக்கும்.

சான்று 685 திருப்பி எழுதினால் 586 ஆகும் பெரிய எண்ணிலிருந்து 685—586 =99

963 திருப்ப 369 ஆகும் பெரிய எண்ணிலிருந்து சிறிய எண்ணைக் கழித்தால் வரும் விடை 594 அவற்ன் கூட்டுத்தொகை 9

 

9 யைத்திருப்பினால் 6 ஆகும் வேறு எண்களுக்கு இந்தத் தன்மை இல்லை.

ஆகவே ஒன்பது  எண்களின் அரசன் என்று அழைக்கப்படுகிறது. அதனால் தான் சிறப்பு, தலைமை எனும் பொருள் தரும் ஓரெழுத்து ஒரு மொழியாகிய ஐ-யை ஒன்பதாவது எழுத்தாகத் தமிழ் நெடுங்கணக்கில் வைத்துள்ளனர்.   .  . 

     அக்காரணம் பற்றியே தொல்காப்பியர் ஒவ்வொரு அதிகாரத்தையும் ஒன்பது ஒன்பது இயல்களாகப் பிரித்துள்ளார். அது ஒன்பதைப் பற்றியும் அதன் புணர்ச்சியைப் பற்றியும் நிறைய  நூற்பாக்களை கூறியுள்ளார் நூற்பாக்களின் எண்ணிக்கையும் 1611இதுவும் ஒன்பதின் மடங்கே

 

     திருமூலர் திருமந்திரத்தை  ஒன்பது உட்பிரிவுகளைக் கொண்டதாகச் செய்துள்ளார் . ஒவ்வொரு பிரிவும் ஒரு தந்திரம்எனக் குறிக்கப்பட்டுள்ளன. இந்த ஒன்பது தந்திரங்களும், ஆகமங்கள் ஒன்பதின் சாரமாக அமைந்துள்ளன.  அந்த எண்ணில் நீண்ட வாழ்வு எனும் பொருள்  பொதிந்திருப்பதாகச் சொல்கின்றனர்

 

.,.

   ஒன்று முதல் எட்டுவரை சொல்லப்படும் எண்கள் தனிதன்மையாக இருக்கும் ஆனால் ஒன்பது என்பது மேற்கூறிய எண்ணில் ஒன்றின்(ஒன்) தன்மையையும் அடுத்துவரும் பத்தின் தன்மையும்(பது) பெற்று விடுகிறது. அதாவது மேற்சொன்ன எட்டு எண்களுடனும் சேரும் அடுத்துவரும் பத்துடனும் சேரும். அதனால் தான் ஒன்பதை அலி எண் என்பர். அதனால் தான் ஆணுமின்றி பெண்ணுமின்றி உள்ள மூன்றாம் பாலினரை அலி என்றனர். அலி என்பதில் தவறேதும் இல்லை, இதுபற்றித் தொல்காப்பியத்திலேயே பேசப்படுகிறது ஆண்தன்மை பெற்ற பெண்களைப் பேடு என்றும், பெண்தன்மை பெற்ற ஆண்களைப் பேடி என்றும் கூறுவர் அவர்களை அழைக்கும் போது அஃறிணை விகுதியால் சுட்டப்படும் என்றும் உரைப்பர். இவர்கள் மாற்றுத் திறனாளிகள் வரிசையில் சேர்க்கக்கூடாது. மூன்றாம் பாலினர் என்றே கூறலாம். அவர்களைப் பெருமைப்படுத்தும் நோக்கில் திரு நங்கையர் என்று அழைக்கப்பட்டனர் பெண்தன்மை பெற்ற ஆண்களைத் திரு நங்கையரை என்கிறோம். ஆண்தன்மை பெற்ற பெண்களை எவ்வாறு அழைப்பது திருமதி  நம்பி என்று அழைக்கலாமா?   .

   தொல்காப்பியர் காலத்திற்கு முன்பு ஒன்பது தொண்டு என்று கூறப்பட்டது. தொல்காப்பியரும் இரண்டு இடங்களில் தொண்டு என்று ஒன்பதைக் குறிக்கிறார். தொல்காப்பியர் காலத்திலேயே ஒன்பது என்னும் பெயர் வந்துவிட்டது. அதனால் அதற்கேற்றவாறு  நூற்பாக்களை அமைக்க வேண்டியதாயிற்று. அவ்விதிகள் ஒன்பது  என்ற எண்ணுடன் பத்து’ ,`நூறுஎன்ற இரு எண்களும் வந்து புணரும்போது பத்தினை நூறாகவும், நூற்றை ஆயிரமாகவும் திரித்து, நிலைமொழியில் முதலிலுள்ள என்னும் உயிர் எழுத்துடன் த்என்னும் மெய்யைக் கூட்டி, நிறுத்தி, நிலைமொழியில் உள்ள பத்தை நீக்கி, அந்த நிலைமொழியில் முதல் எழுத்துக்குப் பக்கத்து எழுத்தினை முறையே ண்என்ற மெய்யாகவும், ‘ள்என்ற மெய்யாகவும் மாற்றுவது முறையாகும்.   நன்னூலும் அவ்வாறே உரைக்கிறது                                                                  (உ-ம்)
ஒன்பது+பத்து=தொண்ணூறு
ஒம்பஃது+பத்து=தொண்ணூறு

ஒன்பது+நூறு=தொள்ளாயிரம்
ஒன்பஃது+நூறு=தொள்ளாயிரம்

``ஒன்பா னொடுபத்தும் நூறும் ஒன்றின்
முன்னதின் ஏனைய முரணி, ஒவ்வொடு
தகரம் நிறீஇப் பஃது அகற்றி, ணவ்வை
நிரலே ண, ளவாகத் திரிப்பது நெறியே”. ( நன்னூல் 194)

      பொருள்களைத் தொகைப்படுத்தும்போது தமிழர் ஒன்று, இரண்டு, மூன்று, நான்கு, ஐந்து, ஆறு, ஏழு, எட்டு, தொண்டு, பத்து என எண்ணிக்கையை ஒன்றொன்றாகக் கூட்டி வளர்த்துக்கொண்டனர் . இந்த வரிசையில் தொண்டு என்னும் சொல் ஒன்பதைக் குறிக்கும்  இந்தச் சொல் தொல்காப்பியர் காலத்திலேயே அருகிய வழக்காக மாறிவிட்டது. தொல்காப்பியர் எண்ணுப் புணர்ச்சியை விளக்கும்போது தொண்டு என்னும் சொல்லை விட்டுவிட்டு ஒன்பது என்னும் சொல்லை வைத்தே புணர்ச்சி விதி கூறுகிறார். ஒன்பதை 'ஒன்பான்' என்றும், பத்தைப் "பஃது" என்றும் இலக்கியங்களில் வழங்கினர். பத்து என்னும் சொல் புணர்ச்சியின்போது பான் என விகாரப்படுதலும் உண்டு. இவற்றை அடியில் வரும் சொல்லாக்கங்களில் காணலாம்.

 

ஒன்று என,
இரண்டு என, மூன்று என, நான்கு என, ஐந்து என,
ஆறு என, ஏழு என, எட்டு என, தொண்டு என,
நால்வகை ஊழி எண் நவிற்றும் சிறப்பினை

 ஸ்ரீகிருஷ்ணருக்கு விருப்பமான மாதம்... மார்கழி. இது வருடத்தின் 9-வது மாதம்!

 மனிதராகப் பிறந்தவன் எப்படி வாழ வேண்டும் என வாழ்ந்து காட்டிய ஸ்ரீராமபிரான் பிறந்தது, 9-ஆம் திதியான நவமி நாளில்தான்.

தங்கம், வெள்ளி மற்றும் பிளாட்டினத்தின் சுத்தத்தை 999 என்று மதிப்பிடுவார்கள்.

பெண்களின் கர்ப்பம், பூரணமாவது ஒன்பதாம் மாத நிறைவில்தான்!.

9 மருத்துவமனைகளுக்கு தர நிர்ணயம் பெறுவது என்பது அரசு மருத்துவமனைகளில் சிகிச்சைகளின் தரத்தை மேம்படுத்தும் நடவடிக்கைகளில் ஒன்றாகும்

ஒன்பது என்ற எண்ணுக்கு வடமொழியில் நவம் என்று பெயர்.நவ என்ற சொல் புதிய, புதுமை எனும் பொருள் உடையது

 9 என்ற எண்ணை  திருநங்கையரைக் குறிக்கும் கேளிக்கையாக எண்ணாமல் புராணங்களிலும், நடைமுறையிலும் சிறப்பிடம் பெற்றுள்ளது என்பதைப் போற்றுவோம்  

அதனால்தான் ஒரு மந்திரத்தை108,1008 முறை சொல்ல வேண்டும் என்கின்றனர். இவை ஒன்பதின் மடங்குகளே.

காயத்ரி மந்திரத்தை 108 முறை ஜபிக்க வேண்டும்.
எல்லா தெய்வத்தின் நாமாவளியும் ஜப மாலையின் எண்ணிக்கையும் இதை அடிப்படையாகக் கொண்டதுதான்!
 

புத்த மதத்தில், மிக முக்கியமான சடங்குகள் யாவும் ஒன்பது துறவிகளைக் கொண்டே நடைபெறும் புத்த மதத்தினர் 108 முறை மணியடித்து, புது வருடத்தை வரவேற்றுக்
கொண்டாடுகின்றனர்.

 சீனர்களின் சொர்க்க கோபுரம், ஒன்பது வளையங்களால்
சூழப்பட்டுள்ளது.
சீனாவில், 36 மணிகளை மூன்று பிரிவாகக் கொண்டு, சு ஸூ எனப்படும் மாலையைக் கொண்டு ஜபம் செய்வார்கள்.

எகிப்து, ஐரோப்பா, கிரீக் முதலான நாடுகளும் 9-ஆம் எண்ணை விசேஷமாகப் பயன்படுத்திப் போற்றுகின்றன.

சகரியா 1:1) ஆகாய் 2:18 காட்டுகிறபடி, ஆலயத்தின் அஸ்திவார வேலை ஒன்பதாம் மாதத்தில் தீவிரமடைந்தது.

செவ்வாய் கிரகத்திற்கு நம்மால் ஒன்பதே மாதங்களில் சென்றடைந்துவிட முடியும்.

 பரதனின் மூன்று மனைவிகள் மூலம் ஒன்பது குழந்தைகளும் பிறந்தன.

துன்பயில் நாடகத்துக்குரிய பெண் தெய்வம்கலைத்தெயவங்கள் ஒன்பதினுள் ஒன்று

 முதல் ஒன்பது பகா எண்களின் கூட்டுத்தொகை நூறு ஆகும்

  . ஒன்பது என்ற எண்ணுக்கு வடமொழியில் நவம் என்று பெயர்.
நவ என்ற சொல் புதிய, புதுமை எனும் பொருள் உடையது.
 ஒன்பது என்ற பொருளிலும் வரும். இந்தியில் நவ் என்றும் ஆங்கிலத்தில் நைன் என்றும் கூறுவர்.  18 புராணங்கள்,
18 படிகள் ,தேவாசுரர் போர் 18 ஆண்டுகளாகவும்,இராமாயணப்போர் 18 மாதங்களாகவும், பாரதப்போர் 18 நாட்களும், செங்குட்டுவனுடன் கனக விசயர் போர் 18 நாளிகையும் நடந்ததாகக் கூறுவர்.கீதையின் அத்தியாயங்கள் 18, கலம்பகத்தின் உறுப்புகள்18, பதினெண் மேற்கணக்கு பதினண்கீழ்க்கணக்கு என சங்க இலக்கியங்களை பிரித்திருப்பதும்,
9-ன் மூலமாக தான் உள்ளன
  பதினெட்டுச் சித்தர்கள் 18 படிக்கட்டுகளை ஏறிக் கடந்தவரே ஐயப்பனைத் தரிசிக்க முடியும். பதினெண் புராணங்கள், பதினெண் ஆகமங்கள்  , பதினெண்கீழ்க் கணக்கு நூல் ஆடிபதினெட்டு

காயத்ரி மந்திரத்தை 108 முறை ஜபிக்க வேண்டும். எல்லா தெய்வத்தின் நாமாவளியும் ஜப மாலையின் எண்ணிக்கையும் இதை அடிப்படையாகக் கொண்டதுதான்!.27 மீன்கள் 27 யோகங்கள்9-ன் மூலமாக தான் உள்ளன


 நவ துவாரங்கள் என்பன இரண்டு கண்கள், இரண்டு காதுகள், மூக்கின் இரு துவாரங்கள், வாய், மலம் மற்றும் சிறுநீர் வெளியேற்ற துவாரங்கள் தான் மனித உடலின் நவ துவாரங்கள் ஆகும்

  ஒன்பதின் தொகுதிகளை அறிவோம்  வடமொழிதென்மொழி இரண்டிலும் இருக்கும்

நவ சக்திகள்:
1,வாமை,
2,ஜேஷ்டை,
3,ரவுத்ரி,
4,காளி,
5,கலவிகரணி,
6,பலவிகரணி,
7,பலப்பிரமதனி,
8,சர்வபூததமனி,
9,மனோன்மணி,
நவ தீர்த்தங்கள்:
,கங்கை,
2,யமுனை,
3,சரஸ்வதி,
4,கோதாவரி,
5,சரயு,
6.நர்மதை,
7,காவிரி,
8,பாலாறு,
9,குமரி

நவ வீரர்கள்:
1,வீரவாகுதேவர்,
2,வீரகேசரி,
3,வீரமகேந்திரன்,
4,வீரமகேசன்,
5,வீரபுரந்திரன்,
6,வீரராக்ஷசன்,
7,வீரமார்த்தாண்டன்,
8,வீரராந்தகன்,
9,வீரதீரன்
நவ அபிஷேகங்கள்:
1,மஞ்சள்,
2,பஞ்சாமிர்தம்,
3,பால்,
4,நெய்,
5,தேன்,
6,தயிர்,
7,சர்க்கரை,
8,சந்தனம்,
9,விபூதி.

நவ ரசம்:
1,இன்பம்,
2,நகை,
3,கருணை,
4,கோபம்,
5,வீரம்,
6,பயம்,
7,அருவருப்பு,
8,அற்புதம்,
9,சாந்தம் ,
ஆகியன நவரசங்கள் ஆகும்.

தமிழில் ஒன்பான் சுவை

நகை

அழுகை

ளிவரல்

மருட்கை

அச்சம்,

பெருமிதம்,

உவகை,

வெகுளி

சமநிலை

நவக்கிரகங்கள்:
1,சூரியன்,
2,சந்திரன்,
3,செவ்வாய்,
4,புதன்,
5,குரு,
6,சுக்கிரன்,
7,சனி,
8,ராகு,
9.கேது
நவமணிகள்:-அல்லது
நவரத்தினங்கள்:
1,கோமேதகம்,
2,நீலம்,
3,வைரம்,
4,பவளம்,
5,புஸ்பராகம்,
6,மரகதம்,
7,மாணிக்கம்,
8,முத்து,
9,வைடூரியம்
நவ திரவியங்கள்:
1,பிருதிவி,
2,அப்பு,
3,தேயு,
4,வாயு,
5,ஆகாயம்,
6,காலம்,
7, திக்கு,
8,ஆன்மா,
9,மனம்

நவலோகம் (தாது):
1,பொன்,
2,வெள்ளி,
3,செம்பு,
4,பித்தளை,
5,ஈயம்,
6,வெண்கலம்,
7,இரும்பு,
8,தரா,
9,துத்தநாகம்

நவ தானியங்கள்:
1,நெல்,
2,கோதுமை,
3,பாசிப்பயறு,
4,துவரை,
5,மொச்சை,
6,எள்,
7,கொள்ளு,
8,உளுந்து,
9,வேர்க்கடலை

சிவ விரதங்கள் ஒன்பது:
1,சோமவார விரதம்,
2,திருவாதிரை விரதம்,
3,உமாகேச்வர விரதம்,
4,சிவராத்ரி விரதம்,
5,பிரதோஷ விரதம்,
6,கேதார விரதம்,
7,ரிஷப விரதம்,
8,கல்யாணசுந்தர விரதம்,
9,சூல விரதம்

நவசந்தி தாளங்கள்:
1,அரிதாளம்,
2,அருமதாளம்,
3,சமதாளம்,
4,சயதாளம்,
5,சித்திரதாளம்,
6,துருவதாளம்,
7,நிவர்த்திதாளம்,
8,படிமதாளம்,
9,விடதாளம்


அடியார்களின் பண்புகள்:
1,எதிர்கொள்ளல்,
2,பணிதல்,
3,ஆசனம் (இருக்கை) தருதல்,
4,கால் கழுவுதல்,
5,அருச்சித்தல்,
6,தூபம் இடல்,
7,தீபம் சாட்டல்,
8,புகழ்தல்,
9,அமுது அளித்தல்,

விக்ரமார்க்கனின்
சபையிலிருந்த 9 புலவர்கள்; நவரத்னங்கள் எனச் சிறப்பிக்கப்படுவர்)
1,நவரத்னங்கள் (முனிவர்கள்)தன்வந்த்ரி,
2,க்ஷணபகர்,
3,அமரஸிம்ஹர்,
4,சங்கு,
5,வேதாலபட்டர்,
6,கடகர்ப்பரர்,
7,காளிதாசர்,
8,வராகமிஹிரர்,
9,வரருசி

அடியார்களின் நவகுணங்கள்:
1,அன்பு,
2,இனிமை,
3,உண்மை,
4,நன்மை,
5,மென்மை,
6,சிந்தனை,
7,காலம்,
8,சபை,
9,மவுனம்.

நவ நிதிகள்:
1,சங்கம்,
2,பதுமம்,
3,மகாபதுமம்,
4,மகரம்,
5,கச்சபம்,
6,முகுந்தம்,
7,குந்தம்,
8.நீலம்,
9.வரம்

நவ குண்டங்கள்:
யாகசாலையில் அமைக்கப்படும்
ஒன்பது வகையிலான
யாக குண்ட அமைப்புக்கள்:
1,சதுரம்,
2,யோனி,
3,அர்த்த சந்திரன்,
4,திரிகோணம்,
5,விருத்தம் (வட்டம்),
6.அறுகோணம்,
பத்மம்,
எண்கோணம்,

பிரதான விருத்தம்.
1,நவவித பக்தி :
2,சிரவணம்,
3,கீர்த்தனம்,
4,ஸ்மரணம்,
5,பாத சேவனம்அர்ச்சனம்,
6,வந்தனம்,
7,தாஸ்யம்,
8,சக்கியம்,
9,ஆத்ம நிவேதனம்

நவ பிரம்மாக்கள் :
1,குமார பிரம்மன்,
2,அர்க்க பிரம்மன்,
3,வீர பிரம்மன்,
4,பால பிரம்மன்,
5,சுவர்க்க பிரம்மன்,
6,கருட பிரம்மன்,
7,விஸ்வ பிரம்மன்,
8,பத்ம பிரம்மன்,
9,தராக பிரம்மன்

நவக்கிரக தலங்கள் -
1,சூரியனார் கோயிவில்,
2,திங்களூர்,
3,வைத்தீஸ்வரன் கோவில்,
4,திருவெண்காடு,
5,ஆலங்குடி,
6,கஞ்சனூர்,
7,திருநள்ளாறு,
8,திருநாகேஸ்வரம், 9,கீழ்ப்பெரும்பள்ளம்

நவபாஷாணம் -
1,வீரம்,
2, பூரம்,
3, ரசம்,
4,ஜாதிலிங்கம்,
5,கண்டகம்,
6,கவுரி பாஷாணம்,
7,வெள்ளை பாஷாணம்,
8,ம்ருதர்சிங்,
9,சிலாஷத்

நவதுர்க்கா -
1,ஸித்திதத்ரி,
2,கஷ்முந்தா,
3,பிரம்மாச்சாரினி,
5,ஷைலபுத்ரி,
7,மகா கவுரி,
8,சந்திரகாந்தா,
9,ஸ்கந்தமாதா,
6.மகிஷாசுரமர்த்தினி, -,காளராத்ரி

நவ சக்கரங்கள் -
1,த்ரைலோக்ய மோகன சக்கரம்,
2,சர்வசாபுரக சக்கரம்,
3,சர்வ சம்மோகன சக்கரம்,
4,சர்வ சவுபாக்ய சக்கரம்,
5,சர்வார்த்த சாதக சக்கரம்,
6,சர்வ ரக்ஷõகர சக்கரம்,
7,சர்வ ரோஹ ஹர சக்கரம்,
8,சர்வ ஸித்தி ப்ரத சக்கரம்,
9,சர்வனந்தமைய சக்கரம்.

நவநாதர்கள் -
1,ஆதிநாதர்,
2,உதய நாதர்,
3,சத்ய நாதர்,
4,சந்தோஷ நாதர்,
5,ஆச்சாள் அசாம்பயநாதர்,
6,கஜ்வேலி கஜ்கண்டர் நாதர்,
7,சித்த சொவ்றங்கி
8,நாதர், மச்சேந்திர நாதர்,
9,குரு கோரக்க நாதர்

உடலின் ஒன்பது சக்கரங்கள் :
1,தோல்,
2,ரத்தம்,
3,மாமிசம்,
4,மேதஸ்,
5,எலும்பு,
6,மஜ்ஜை,
7,சுக்கிலம்,
8,தேஜஸ்,
9,ரோமம்

திருவள்ளுவர் 9 சிறப்புப் பெயர்களாலும் அழைக்கப்படுகிறார். அவை:

      தேவர்

  • நாயனார்
  • தெய்வப்புலவர்
  • செந்நாப்போதர்
  • பெருநாவலர்
  • பொய்யில் புலவர்
  • பொய்யாமொழிப் புலவர்
  • மாதானுபங்கி
  • முதற்பாவலர்

 

9 என்ற எண்ணை கேளிக்கையாக எண்ணாமல் புராணங்களிலும்,
நடைமுறையிலும் சிறப்பிடம் பெற்றுள்ளது என்பதைப் போற்றுவோம்.இத்தனை சிறப்புகள் ஒன்பது என்னும் எண்ணுக்கு இருப்பதால்தான் யை ~ஒன்தாவது எழுத்தாகத் தமிழ் ஆங்கிலம் இந்தி ஆகி. மொழிகளில் வைத்துள்ளனர்.

 ஆங்கிலத்தில் ஓரெழுத்து ஒரு மொழி  I  மட்டுமே எனக்குத் தெரிந்த ஒன்பதின் தொகைகள் இவை அறியாமல் இருப்பன எவ்வளவோ அறிந்தோர் தெரிவித்தால் பதிவில் சேர்த்துக் கொள்ளப்படும். பதிவு புலவர் ஆ.காளியப்பன் 9788552993

 

 

 

 

 



.

No comments:

Post a Comment