Saturday 18 November 2017

நமக்குக்கிடைத்த முதல் நூல்



                           நமக்குக் கிடைத்த முதல்நூல்
உலகின் முதல் நூல்; திருக்குறளின் முன்னோடி; ஆழிப்பேரலைக்கு அகப்படா நூல்; அனல்  புனல்  அத்தனையும் வென்ற நூல்; அதங்கோட்டாசான் தடைக்கு விடை கூறி வெளிவந்த நூல்; பனம்பாரனாரின் பாயிரம் கொண்டதுநூல்; எல்லா இயங்களுக்கும்(இயம்=இசம் கம்யூனிசம், சோசலிசம் உள்பட) வேராய் விளங்கும்நூல் உயிருக்கு விளக்கம் விளம்பிய நூல்; வள்ளுவனையும் கம்பனையும் வளைத்துப் போட்ட நூல்; சிலம்பு தந்த இளங்கோவை சிந்திக்க வைத்தநூல்; இடைச்சங்கத்தாருக்கும், கடைச்சங்கத்தாருக்கும் இதுவே இலக்கண நூல்; இன்றைக்கும் அந்நிலைதான்; பண்டைத் தமிழர்களின் பண்பாட்டைப் பகரும்நூல்,  நாகரிகச் சிறப்பை நவிலும் நூல்; ' இத்தனை பெருமைகளையும் பெற்ற நமக்குக் கிடைத்த முதல்நூல்; அதுவே தொல்காப்பியம். தொன்மை + காப்பியம் = தொல்காப்பியம். காப்புத் (காவல்) பழந்தமிழர் தொன்மையைக் காக்கும்நூல். 
       தொல்காப்பியம் ஏன் அறியப்படா (பாமரருக்கு) நூலானது. பண்டிதர் மட்டுமே புரியமுடி.யும். அஃது ஒர் இலக்கணநூல். அதைப் பயில்வது உளி கொண்டு மலை பிளப்பதற்கு ஒப்பாகும் என்று உரைத்து வைத்தனர். வாழைப் பழமாய் உள்ளதைப் பலாக்கனி எனச் சொல்லி மிரட்டினர். அதனால் படிப்பு மட்டுப்பட்டோர் பயந்து நின்றனர். உரை எழுதியோர் தன் மொழிப்புலமையை வெளிப்படுத்த, உத்தி என்னும் விதி காட்டி, தம் எண்ணத்தை எல்லாம் கொட்ட நினைத்ததாலும், கைபர் கணவாய் வழியாகக் கால்நடை மேய்க்க வந்தோர் சூழ்ச்சியாலும் பரண்மேல் போடப்பட்டது. மொத்தத்தில் அனைவராலும் எழுத்திலும், சொல்லிலும் எடுத்து ஆளப் படாததே முதற்காரணம். 
       ஏன் தொல்காப்பியத்தை முதன்மைப் படுத்தவேண்டும்? எழுத்தையும் சொல்லையும் அவை தரும் பொருளையும் புலவர்கள் படிக்கட்டும். நமக்கு எதற்கு என்ற மழுங்கிய வாதத்தை விட்டு உண்மை யாதென உணர்வோம்.
   தொல்காப்பியம் என்பது இன்று கிடைக்கப் பெறும் மிக மூத்த தமிழ் இலக்கண நூலாகும். இஃது இலக்கிய வடிவிலிருக்கும் ஓர் இலக்கண நூலாகும். பழங்காலத்து நூலாக இருப்பினும்,  இன்றுவரை தமிழ் இலக்கண விதிகளுக்கு அடிப்படையான நூல் இதுவே. தொல்காப்பியத்தை முதல் நூலாகக் கொண்டு காலந்தோறும் பல வழி நூல்களும் சார்பு நூல்களும் தோன்றின. எல்லா நூல்களையும் திருக்குறள் ஆண்டது. திருக்குறளையே ஆண்டது தொல்காப்பியம்.
     தொல்காப்பியம் எழுத்து, சொல், பொருள் மூன்றின் இலக்கணங்களை முறைப்படக் கூறுவது. உலக மொழிகளில் எழுத்துக்கும், சொல்லுக்கும் மட்டுமே இலக்கணம் இருக்க தமிழ் மொழிக்கு மட்டுமே வாழ்வியல் கருத்துகள் பொதிந்து கிடக்கும் பொருளதிகாரம் தொல்காப்பியரால் அமைந்தது. பண்டைத் தமிழர் வாழ்வியலை அகம், புறம். என வகுத்து இயற்கை வழி நின்று வாழ்ந்து காட்டியுள்ளனர். புறம் புறவாழ்வியலோடு இணைந்த ஆண்மை, வீரம் பற்றி எடுத்துக் கூறும். அகம் அகவாழ்வான இன்ப உணர்வுகளோடு இணைந்த இல்வாழ்வு பற்றி விவரிக்கும். இப்படி வளமாக வாழ்ந்த தமிழினத்தின் உயர்ந்த கொள்கைகளையும் எண்ணங்களையும் உலகிற்கு உணர்த்தும் விழுமிய நூலாய் இஃது ஒளிர்கின்றது
   தொல்காப்பியம் என்னும் நூலை 'ஒல்காப் பெரும் புகழ்த் தொல்காப்பியன்' எனப் போற்றப்படுபவரும் தி.மு. (திருவள்ளுவருக்கு முன்) அறுநூற்றி எண்பதாம் (680 - கி.மு.711 உலகம் ஒப்பியது.) ஆண்டில் வாழ்ந்தவருமான தொல்காப்பியனார் இவ்வரிய இலக்கியவடிவில் இலக்கண நூலைப் பாடியருளினார். நிலம் தீ நீர் வளி விசும்பொடு ஐந்தும் கலந்த மயக்கம் உலகம் என்னும் ஐந்திரம் அறிந்திருந்தார். தமிழில் இருந்த 'முந்துநூல்' (அகத்தியம் ஆதாரம் இல்லை) கண்டிருந்தார். .                                 இந்நூல் தொன்மை, செழுமை, வளம், செப்பம், வனப்பு, நாகரிகம், பெருநிலை போன்றவற்றுடன் தோன்றிக் காலத்தால் பழமை வாய்ந்த ஓர் உயிர் நூலாய் நம்மிடையே உலா வரவேண்டும் தமிழ் மொழியின் தொன்மைக்கும் சிறப்பிற்கும் சான்றாய் விளங்கும் தொல்காப்பியம்  ஒவ்வொரு தமிழரின் உள்ளத்திலும் இல்லத்திலும் இருக்கச் செய்வதே தொல்காப்பியப் பேரவையின் நோக்கம். நோக்கம் நிறைவேற தமிழ்கூறு நல்லுலகம் உதவுக.
     தொல்காப்பியமே துணை                             தொல்காப்பியரே வழிகாட்டி.       
                           தொல்காப்பியச்செம்மல் புலவர். ஆ.காளியப்பன்
                           தலைவர் தொல்காப்பியர் பேரவை
                           முத்தம்மாள்நிலையம் பூலுவபட்டி(அஞ்சல்)
                           கோயமுத்தூர் 641101.
                           அலைபேசி 9788552993 / 8610684232

Thursday 12 October 2017

என்னைப்பற்றி




யார் நான் ?                                                                                                                                                                                                                    பெயர்                பெயர்  காளியப்பன்                                                                             பிறப்பும் வாழ்வும்  :  கோயமுத்தூர் மாவட்டம்,பேரூர் வட்டம்,பூலுவபட்டி, முத்தம்மாள்நிலையம்                        
           பிறப்பு : 13-05 1954  ஜயவருடம் சித்திரை மாதம் செவ்வாய்க்கிழம் 8 ந்தேதி
  முன்னறிதெய்வம்         :        ஆறுக்குட்டிக்கவுண்டர்,    முத்தம்மாள்
 வாழ்வின்வேர்         :  அம்சவேணி (இல்லத்தரசி)
விழுதுகள்மகள்      :   இந்துமதிBSc; MA;BL(வழக்குரைஞர்,பணிஅகில இந்திய வானொலிநிலையம் கோவை)                                            
           மகன்       : உமாபதி BSc; MA;BEdMPhil(கவிஞர்,முதுகலைத்தமிழாசிரியர் GRG மேனிலைப்பள்ளி )
        மருமகன்         :  ராஜேஷ் BA;BL(வழக்குரைஞர், மேடைப்பாடகர் ) 
   தளிர்  பெயரன்          :        சேந்தன்அமுதன்              :   
   கல்விக்களம்         :       ஊராட்சிஒன்றியஆரம்பப்பள்ளி பூலுவபட்டி, உயர்நிலைப்பள்ளி ஆலாந்துறை                          
                       தவத்திரு.சாந்தலிங்கஅடிகளார் தமிழ்க்கல்லூரி,பேரூர்
     பட்டம்                    :       புலவர்-சென்னைப் பல்கலைக் கழகம்
                               தமிழ்ப்பண்டிட் பட்டயம் புதுக்கோட்டை கல்வியியல் கல்லூரி,                                                                                                                          
                           இளங்கலை(தமிழ்) சென்னைப் பல்கலைக் கழகம்                   
                       முதுகலை(தமிழ்) மதுரைப் பல்கலைக் கழகம் 
                   இளங்கலை(கல்வியியல்) அண்ணாமலைப் பல்கலைக் கழகம்
                      முதுகலை(கல்வியியல்) அண்ணாமலைப் பல்கலைக் கழகம்
 
  பணி                :     பம்பாய் உணவுவிடுதி ஒன்றில் பரிசாரகராகப் பணியாற்றல்
                                  பேருந்து நடத்துநர் மற்றும் பயணச்சீட்டு ஆய்வாளர் 1978-1982
கிளைஅஞ்சலகஅதிகாரி நாளிதழ் விற்பனையாளர் மற்றும் செய்தியாளர்  1982-1987
                              இடைநிலை ஆசிரியர் தொடக்கப்பள்ளி பழனிவட்டம் 1987-1988
                                            தமிழாசிரியர் காந்தி கலாநிலையம் மேனிலைப்பள்ளி கரட்டுமடம் 1988-2009 
                                            உதவித் தலைமையாசிரியர் காந்தி கலாநிலையம்   2008-2009 
                                     முதுநிலைத் தமிழாசிரியர் காந்தி கலாநிலையம் 2009-2012

      பணிநிறைவு         :       2012 மே திங்கள் 

    மனநிறைவு:                                               1972ல் ஆலாந்துறை மேனிலைபள்ளியில் என்னுடன் பயின்ற11.ஆம்வகுப்பு         
மாணாக்கர்களோடு முன்னாள் மாணாக்கர்களையும் திரட்டி 15-02-2015 அன்று அவரவர்  குடும்பத்துடன்  சந்திப்பு .  சங்கம நிகழ்ச்சியை நடத்தியது அனைவர் முகவரியுடன் அக்கால தற்கால நிழற் படங்களுடன்  மலர் வெளியிடல் அத்துடன்  பள்ளிக்குசுமார் 19 இலட்சத்தில் 6400சதுரடி பரப்பில் அரங்கம்அமைக்க முன்னின்று வழிநடத்தல். முன்னாள் ஆசிரியர்களுக்குச் சிறப்புச் செய்தல்

       பெருமிதம்:                    கொச்சித் தமிழ் ஐக்கிய சங்கம் கேரள உயர்நீதி மன்ற நீதிபதி நீதியரசர் P.S கோபிநாதன் மூலம் தொல்காப்பியச்செம்மல் விருது வழங்கியது  
                                  சென்னை இலக்கியச்சோலை வழங்கிய தமிழமுது விருது
                           ஒரிஷா மாநிலம் புவனேஸ்வர் தமிழ்ச்சங்கம் வழங்கிய தமிழ்ச்சுடர்மணி  விருது
மாமதுரைத் தமிழ்மன்றம் வழங்கிய தமிழ்நம்பி விருது
உலகத்தமிழ் தமிழாராய்ச்சி நிறுவனம் வழங்கிய காஞ்சித்தலைவன் பேரறிஞர்  அண்ணா108  விருது






கோவை வசந்தவாசல்,முத்தமிழ் அரங்கம்,கணபதி தமிழ்ச்சங்கம் வளர்      
தமிழியக்கம் தமிழ்நாடுமுற்போக்கு எழுத்தாளர் கலைஞர் சங்கம் ஆகிய தமிழ் அமைப்புகளில். உறுப்பினர். பல வார,மாத ஆண்டு மலர்களில் சிறுகதைகள் கவிதைகள் கட்டுரைகள்   வெளியீடு  பத்திராவதி தமிழ்ச்சங்கம்(கர்நாடக),  கொச்சி தமிழ் ஐக்கியச்சங்கம் (கேரளா),      அந்தமான் தமிழ்இலக்கியமன்றம் (அந்தமான்நிக்கோபர்தீவு),     ஆகிய ஊர்களில் பட்டிமன்றங்களில் பங்கேற்பு                                
இலக்கியங்களை மட்டுமே முதன்மைப் படுத்துவது போல் அவற்றின் வேராகிய           
இலக்கணத்தை யாரும் பொருட்படுத்துவது இல்லையே  என்ற எண்ணத்தில் தொல்காப்பியர் பேரவையை கடந்த செப்டம்பர் 5 ந்தேதி பேரூர் ஆதீனம் தவத்திரு சாந்தலிங்க இராமசாமி அடிகளார் தொடங்கி வைத்தது என்வாழ்வின் பெரும் பேறாகக் கருதுகிறேன்.
உலகத்தமிழர் பேரவை சார்பாக வெளிவரப்போகும்  தமிழ் உலகம் என்னும் மாத இதழின் உதவி ஆசிரியர் மற்றும் உலகத்தமிழர் பேரவையின் கோவைமண்டல அமைப்பாளர்      

   சாதனை               அரசுப்பணி கையில் என்னும் whatsapp குழு மூலம் சுமார் 2000 இளைஞர்களுக்கு TNPSC தேர்வு எழுத உதவி புரிதல், எனது முற்சியால் ஆறு சிராம நிர்வாக அதிகாரிகள் மற்றும் 12 பட்டதாரி ஆசிரியர்கள் பணி பெற்றுள்ளனர். சுமார்100 க்கும் மேற்பட்ட தமிழாசிரியர்களுக்கு இலக்கண வழிகாட்டியாக இருப்பதை எண்ணிப் பெருமை கொள்கிறேன். பள்ளிப் பணியின் போது  பல 10 மற்றும் 12 வகுப்பு மாணாக்கர்களை மாநிலத்தில் முதல், இரண்டாம் இடங்களில் சிறப்பிடம் பெற வைத்துள்ளேன்.

         உறுதி .                         குவலயத்துக்கு குறளே வழிகாட்டி                                                                                                                                                                                  

        அஞ்சல்                                 தொல்காப்பியர் பேரவைத் தலைவர்
தொல்காப்பிச் செம்மல்
புலவர்.ஆ.காளியப்பன் MA;Med
முத்தம்மாள் நிலையம்
79 (1) பூலுவபட்டி(அஞ்),
கோவை 641101                
அலைபேசி 97885 52993 (whatsapp),  8610684232
email : amuthankaliappan@gmail.com
வலைதளம்  pulavarkaliappan.blogspot.in