Monday 14 August 2023

திருவள்ளுவர் கூறும் எட்டு யானைகளும் யானைபற்றிய செய்திகளும்

 

 

     அறிவோம் ஆனையை புலவர் ஆ.காளியப்பன் 14-8-23

 

ஐந்து கரத்தனை யானை முகத்தனை

இந்தின் இளம்பிறை போலும் எயிற்றனை

நந்தி மகன்தனை ஞானக் கொழுந்தினைப்

புந்தியில் வைத்துஅடி போற்று கின்றேனே -திருமந்திரம்

 

இந்த பூமியை எட்டு யானைகள் தாங்குகின்றன இது புராணம்.திருவள்ளுவரும் தமது குறட்பாக்களில் எட்டு இடங்களில் யானை பற்றிக்கூறி உள்ளார்.

திருவள்ளுவர் அதிகம் பேசும் விலங்கு யானை  அந்த குறட்பாக்கள்

காலாழ் களரில் நரியடும் கண்ணஞ்சா
வேலாள் முகத்த களிறு குறள் 500

பரியது கூர்ங்கோட்ட தாயினும் யானை வெரூஉம் புலிதாக் குறின். ( குறள் எண் : 599 ...

சிதைவிடத்து ஒல்கார் உரவோர் புதைஅம்பின்
பட்டுப்பாடு ஊன்றும் களிறு  குறள் எண்:597)  

 

வினையான் வினையாக்கிக் கோடல் நனைகவுள்
யானையால் யானையாத் தற்று குறள் 678

குன்றேறி யானைப்போர் கண்டற்றால் தன்கைத்தொன்று
உண்டாகச் செய்வான் வினை குறள் 758

கான முயலெய்த அம்பினில் யானை
பிழைத்தவேல் ஏந்தல் இனிது குறள் 772

கைவேல் களிற்றொடு போக்கி வருபவன்
மெய்வேல் பறியா நகும் குறள் 774

கடாஅக் களிற்றின்மேற் கட்படாம் மாதர்
படாஅ முலைமேல் துகில் குறள் 1087

இது தவிர உரனென்னும் தோட்டியான் ஒரைந்தும் காப்பான்

வரனென்னும் வைப்பிற்கோர் வித்து குள் 24 ஐம்பொறிகளை யானையாக உருவகித்து அதை அடக்கும் அங்குசத்தைத்தோட்டி என்கிறார்

ஆனைக்கு மொத்தம் எத்தனை பெயர்கள் இருக்கின்றன தெரியுமா? ஒன்று, இரண்டல்ல,  நீங்களே எண்ணிப்பார்த்துக் கொள்ளுங்கள். இவை எல்லாமே தூய தமிழ்ப் பெயர்கள். தமிழ் சங்க இலக்கியங்களில் யானையை, 170க்கும் மேற்பட்ட பெயர்களில் குறிப்பிடுகிறார்கள்.

அஞ்சனாவதி

அதவை

அத்தி

அத்தினி  .

அரசுவா

அல்லியன் 

அறுகு

அறுபடை

ஆம்பல்

ஆனை

      இபம்

இம்படி,

இரதி

இருள்

      உம்பர்

      உம்பல் (உயர்ந்தது)

உவா (திரண்டது

எறும்பி

ஒருத்தல்

ஓங்கல் (மலைபோ ன்றது)

கடகம் (யானைத்திரளின்/கூட்டத்தின் பெயர்)

கடமா

கடிவை,

சுண்டாலி

கயம்

      கரி (கரியது)

      களபம்

களிறு

கள்வன் (கரியது)

கரிணி

கரேணு 

கறையடி (உரல் போன்ற பாதத்தை உடையது)

கைம்மலை (கையை உடைய மலை போன்றது)

கைம்மா (துதிக்கையுடைய விலங்கு)

கிரிசபுறவம்

குஞ்சரம்

கும்பி

கும்பிக்கைப்புலி

கோட்டுமா

சிந்துரம்

சூகை

தந்தாவளம்,

தந்தி

தாமம்

திண்டி

தும்பி

தூங்கல்

தெள்ளி,

தோல்

தோல்நாகம்,

நதிசரம் 

நாகம்

நால்வாய் (தொங்குகின்ற வாயை உடையது

நிருமதம்,

நூழில் பகடு,

      பிடி

புகர்முகம்

      பூட்கை (துளையுள்ள கையை உடையது)

பெருமா (பெரிய விலங்கு

பொங்கடி (பெரிய பாதத்தை உடையது)

போதகம்

மதோற்கடம் (மதகயத்தின் பெயர்

மாதங்கம்

மதாவளம்,

மந்தமா

மருண்மா

மதகயம் (முகத்தில் புள்ளியுள்ளது)

மொய்

யானை (கரியது)

வடவை

வயமா

வழுவை (உருண்டு திரண்டது)

      வல்விலங்கு

வனசரம்

      வாரணம் (சங்கு போன்ற தலையை உடையது

      விரமலி

      வேழம்  

  அகராதி நிகண்டு கொண்டு எழுதியது புலவர் ஆ.காளியப்பன் தலைவர்   

  தொல்காப்பியர் தமிழ்ச்சங்கமம் 9788552993

 

.

யானை பற்றி சில வரிகள்

·         1. யானைகள் தான் தரையில் வாழும் விலங்குகளில் மனிதனுக்கு அடுத்ததாக அதிக நாள் உயிர் வாழும் விலங்காக்கும   சராசரி வாழ் நாளாக 70 ஆண்டுகள் வாழும்.

·         2. யானையின் காதுகள் மடல் போன்று பெரியதாகக் காணப்படும்.

·         3. யானை தனது தும்பிக்கை மூலம் தான் உணவை எடுத்து உட்கொள்கிறது மற்றும் நீரையும் பருகுகிறது.

·         4. யானைகள் தினமாக செப்டம்பர் 2ம் தேதி கொண்டாடப்படுகிறது.

·         5. ஆண் யானையைக் களிறு என்றும் பெண் யானையைப் பிடி என்றும் யானையின் குட்டியை கன்று,   என்றும் அழைக்கிறோம்.

·         6. பெண் ஆசிய யானைகளுக்குத் தந்தம் இருக்காது யானையின் இரு தந்தங்களும் சம அளவில் இருக்காது.

·         7. யானை தன் தும்பிக்கையால் 350 கிலோவிற்கும் மேல் எடையை தூக்கும் திறன் உடையது.

·         8. யானைகள் தமக்குள் பேசிக் கொள்ளும் திறன் உடையவை.

·         9. நோயுற்ற யானைகளுக்கு உணவையும் நீரையும் மற்ற யானைகள் கொண்டு வந்து ஊட்டி விடும்.

·         10. பொதுவாக பெண் யானைகளுக்கு மதம் பிடிப்பதில்லை.

·         11. சிறந்த அறிவாற்றல் உடைய மிருகமாக யானை காணப்படுகின்றது.

·         12. 20 ஆண்டுகளுக்கு முதல் பழகிய மனிதர்களைக் கூட அடையாளம் காணும் திறன் யானைகளுக்கு உண்டு.

·         13. யானைகளுக்குச் சிறந்த கேட்கும் திறனும் மோப்பம் திறனும் உண்டு. இதன் மூலம் தான் அவற்றை வேட்டையாட வரும் விலங்கைக் கண்டு பிடிக்கும்.

·         14. யானைகளுக்கு இரக்கக் குணம் அதிகம் காணப்படும்.

·         15. யானையின் உடம்பில் உள்ள சூட்டை குறைப்பதற்காகவே அதன் காதுகளை ஆட்டிக் கொண்டே இருக்கும்.

·         16. யானைகளுக்குத் தன்னை அடையாளம் காணும் தன் உணர்வு உண்டு.

·         17. யானையின் கர்ப்ப காலம் 22 மாதங்கள் ஆகும்.

·         18. பெண் யானைகள் பொதுவாக ஒரு தடவையில் ஒரு குட்டியை மட்டும் தான் ஈன்றெடுக்கும். சில நேரங்களில் இரண்டாகவும் காணப்படும்.

·         19. யானையின் மூளை 5 kg ஆகும். இதற்கு ஞாபக சக்தி மிக அதிகமாக காணப்படும்.

·         20. இது பொதுவாக மூங்கில், கரும்பு போன்றவற்றை விரும்பி உண்ணும் . யானைகள் அதன் தும்பிக்கையின் மூலமாக தான் மூச்சு விடும். அதன் துவாரங்கள் தும்பிக்கையின் நுனியில் காணப்படும்.

·         தும்பிக்கையால் ஒரு ஊசியைக் கூட எடுத்துவிடும்

·         21.யானை ஒரே சமயத்தில் நான்கு கால்களையும் ஊன்றி நிற்காது அசைந்து கொண்டே இருக்கும்

·         இரண்டு முதல் மூன்று மணி நேரம் மட்டுமே யானைகள்          

உறங்குகின்றன. ...

·         யானை இறந்துவிட்டால் மற்ற யானைகள் இறந்த யானையை அடக்கம் செய்கின்றன. ...

  • யானைகள் மற்ற விலங்குகளை போல அடித்து கொள்ளாமல் ஒற்றுமையாக வாழக்கூடியவை. சிலசமயம் ஆண்யானைகள் சண்டையிட்டுக்கொள்கின்றன.
  • யானையால் துள்ளி குதிக்க முடியாது

·         அவ்வளவு பெரிய யானை பாகனது சிறு தோட்டிக்குப் பயந்து விடுகிறது.

·         யானை பருமனான உடலைக் கொண்டிருந்தாலும் மலை மீதும், நெடுங்குத்தான இடங்களிலும் திறம்பட ஏறவும் இறங்கவும் வல்லது. "ஆனைக்கும் அடி சறுக்கும்" என்னும் பழமொழி, யானையின் நெடுங்குத்தான ஏற்ற இறக்கங்களில் அதன் நடைத்திறனைக் குறிப்பிட்டு எழுந்ததாகும்.

·         யானைக் கோடானது யானையின் கடைவாய்ப் பற்களின் நீட்சியாகும்

·         யானையின் தோலை உரிக்க முடியாது சிவபெருமானே உரித்ததாகப் புராணச்செய்தி

·         ஆப்பிரிக்க யானைக்கு பின்னங்கால்களில் மூன்று உகிர்களும் (நகங்கள்) முன்னங்கால்களில் நான்கும் உள்ளன. ஆசிய யானைக்குப் பின்னங்கால்களில் நான்கும் முன்னங்கால்களில் ஐந்துமாக உகிர்கள் உள்ளன. யானைகளால் நன்கு நீந்தவும் ஏறவும் முடியும். இவற்றால் குதிக்க இயலாது.

·         யானை உரக்க எழுப்பும் ஒலியைப் பிளிறுதல் என்பர்.

பதிவு தொல்காப்பியச் செம்மல் புலவர் ஆ.காளியப்பன்

தலைவர் தொல்காப்பியர் தமிழ்ச்சங்கமம் பேரூர் ஆதீனம்