Saturday 15 September 2018

கையறுநிலைப்பாடல் கலாம்


      ஈரடியால் உலகளந்தாய்   
தீவில் உதித்த தீபகற்ப ஞாயிறே
ஒழுக்க விதையால் உயர்ந்த விருட்சமே
ஈரடிக் குறளால் எவரஸ்டியில் அமர்ந்தவனே
இளநீரை நெற்றாக்க நித்தம் உழைத்தவனே
தளிர்கள் துளிர்க்கத் தண்ணீர் விட்டவனே
தெற்கில் உதித்து கிழக்கில் மறைந்தவனே
பகலவனாய்ப் பொன்னுடல் பாரதம் சுற்றியதே
அல்லாஜீசஸ் பெருமாள் மூன்று  தெய்வத்தை
முன்னெழுத்தாய்க் கொண்டிருக் கலாம் என்றாயே
அணுவைப் பிளந்தது எழுகடல் புகட்டவா?
 பாரதத்தை பாரோர் உற்று நோக்கவா?
கடல்மீன்விட விண்மீனை அளக்க நினைத்தாயே
உடலிருக்குப் பேக்கரும்பில் உயிரெங்கே சொல்லாயோ?




கலாம்  காலம்                   23-08-2015
     கி.பி. அல்ல க.பி.தான்
தீவில் பிறந்த தீபகற்பத் தலைவனே
தென்கோடி மலர்ந்து வடகோடி உதிர்ந்த 
பன்னீர் தெளித்த மலரே  
குருத்தோலை வாழக் கற்பித்த
கருத்தான பழுப்பு ஓலையே
அறிவியலை மணந்த உனக்கு
நாங்கள் அனைவரும் குழந்தைகளே
இறந்த பின்னும் ஒலிம்பிக் கோப்பையாய்
இந்தியாவைச் சுற்றியதே உனதுடல்
அல்லாவைத் தொழுதாலும் புலாலை மறுத்தாயே
தளிர்களை நேசித்ததால் அவர்நடுவே உயிர்விட்டாய்
பாரோர் பாரதத்தை உன்னால் பார்த்தனர்
ஆள்வோர் ஆசைக்கு அடிபணிய மறுத்தாய்
அரியணையில் இருந்தாலும் ஆசிரியராக ஆசைப்பட்டாய்
மண்ணில் இருந்து விண்ணை ஆண்டாய்
விண்ணில் இருந்து கொண்டு
எங்கள் மனதை ஆள்கிறாய்
இனிக்காலம் கி.மு.கிபி அல்ல
இனிக்காலம் கலாம் காலம்.


                            கலாமை அழைத்த காலன் சாகானோ?             27-07-2015                                                      .                             இந்திய மண்ணின் இதயமே
ஏன்உன் துடிப்பை  நிறுத்தினாய்
எங்கள்உயிர்  மூச்சேஉன்
மூச்சை நிறுத்தியது ஏனோ?
இளைஞர் பட்டாளத்தின்
கண்ணின் ஒளியே
எங்கே ஒளிந்தாய்?
ஒளிவிளக்கைத் தூண்டும்
உன்விரல் எங்கே போனது?
இருபதை நோக்கி
                     நடக்கும் எங்களை
நெருஞ்சிமுள் காட்டில்
நிறுத்தி விட்டுச் சென்றாயே!
கங்கையும் காவிரியும்
தண்ணீரால் இணைக்க
முயன்றநீ எங்களைக்
கண்ணீரால் இணைத்து விட்டாயே!
ராமேஸ் வரத்தில் அன்று                                                                 ராமன் வில்லை ஊன்றியது
உன்னை விதையாய் ஊன்றத்தானோ?
எமன் எருமைக்குப்  பதிலாய்
ஏவுகணை செய்ய உன்னை அழைத்தானோ
பாரதப்புகழை பாரில்
பரப்பிய உனக்கே பாசக் கயிறு
வீசிய எமன் சாகானோ?
இந்தியாவே தேம்பியழ
தமிழகமோ தலைதலையாய்
அடித்தழ தவிக்கவிட்டு
எங்கு சென்றாய் பசுவிழந்த
கன்றாய்த் தவிக்கின்றோம்
அக்கினிக் குஞ்சே பறந்த
இடத்தைச் சொல்லி விடு
நாங்களும் அங்கே வருகின்றோம்
வள்ளுவன் கரம்பற்றி
வலம் வந்தநீ யின்றி
கையற்று நிற்கிறோம்
கனவு காண்கின்றோம் நீ
வந்துவிடுவாய் என்று !
வந்துவிடுவாய் என்று! 



              கலாமை அழைத்த காலன் சாகானோ?      27-07-2015
        
இந்திய மண்ணின் இதயமே
ஏன்உன் துடிப்பை  நிறுத்தினாய்
எங்கள்உயிர்  மூச்சேஉன்
மூச்சை நிறுத்தியது ஏனோ?
இளைஞர் பட்டாளத்தின்
கண்ணின் ஒளியே
எங்கே ஒளிந்தாய்?
ஒளிவிளக்கைத் தூண்டும்
உன்விரல் எங்கே போனது?
இருபதை நோக்கி
                  நடக்கும் எங்களை
நெருஞ்சிமுள் காட்டில்
நிறுத்தி விட்டுச் சென்றாயே!
கங்கையும் காவிரியும்
தண்ணீரால் இணைக்க
முயன்றநீ எங்களைக்
கண்ணீரால் இணைத்து விட்டாயே!
ராமேஸ் வரத்தில் அன்று                                                                 ராமன் வில்லை ஊன்றியது
உன்னை விதையாய் ஊன்றத்தானோ?
எமன் எருமைக்குப்  பதிலாய்
ஏவுகணை செய்ய உன்னை அழைத்தானோ
பாரதப்புகழை பாரில்
பரப்பிய உனக்கே பாசக் கயிறு
வீசிய எமன் சாகானோ?
இந்தியாவே தேம்பியழ
தமிழகமோ தலைதலையாய்
அடித்தழ தவிக்கவிட்டு
எங்கு சென்றாய் பசுவிழந்த
கன்றாய்த் தவிக்கின்றோம்
அக்கினிக் குஞ்சே பறந்த
இடத்தைச் சொல்லி விடு
நாங்களும் அங்கே வருகின்றோம்
வள்ளுவன் கரம்பற்றி
வலம் வந்தநீ யின்றி
கையற்று நிற்கிறோம்
கனவு காண்கின்றோம் நீ
வந்துவிடுவாய் என்று !
                  வந்துவிடுவாய் என்று!                                                                  5-08-2015அன்று சிபி அகாடமி யில் வாசிக்கப்பட்டது கலாம் நினைவஞ்சலி  புரந்தரதாசர் கலை அரங்கில் பூ.வே.ரவீந்தரன் தலைமையில் இணையதள படப்பிடிப்பில் வாசிக்கப்பட்டது                                                                               


                      கலாம்  காலம்                   23-08-2015
                       கி.பி. அல்ல க.பி.தான்
தீவில் பிறந்த தீபகற்பத் தலைவனே
தென்கோடி மலர்ந்து வடகோடி உதிர்ந்த 
பன்னீர் தெளித்த மலரே   
குருத்தோலை வாழக் கற்பித்த
கருத்தான பழுப்பு ஓலையே
அறிவியலை மணந்த உனக்கு
நாங்கள் அனைவரும் குழந்தைகளே
இறந்த பின்னும் ஒலிம்பிக் கோப்பையாய்
இந்தியாவைச் சுற்றியதே உனதுடல்
அல்லாவைத் தொழுதாலும் புலாலை மறுத்தாயே
தளிர்களை நேசித்ததால் அவர்நடுவே உயிர்விட்டாய்
பாரோர் பாரதத்தை உன்னால் பார்த்தனர்
ஆள்வோர் ஆசைக்கு அடிபணிய மறுத்தாய்
அரியணையில் இருந்தாலும் ஆசிரியராக ஆசைப்பட்டாய்
மண்ணில் இருந்து விண்ணை ஆண்டாய்
விண்ணில் இருந்து கொண்டு
எங்கள் மனதை ஆள்கிறாய்
இனிக்காலம் கி.மு.கிபி அல்ல
இனிக்காலம் கலாம் காலம்.
                           
      ஈரடியால் உலகளந்தாய்
தீவில் உதித்த தீபகற்ப ஞாயிறே
ஒழுக்க விதையால் உயர்ந்த விருட்சமே
ஈரடிக் குறளால் எவரஸ்டியில் அமர்ந்தவனே
இளநீரை நெற்றாக்க நித்தம் உழைத்தவனே
தளிர்கள் துளிர்க்கத் தண்ணீர் விட்டவனே
தெற்கில் உதித்து கிழக்கில் மறைந்தவனே
பகலவனாய்ப் பொன்னுடல் பாரதம் சுற்றியதே
அல்லாஜீசஸ் பெருமாள் மூன்று  தெய்வத்தை
முன்னெழுத்தாய்க் கொண்டிருக் கலாம் என்றாயே
அணுவைப் பிளந்தது எழுகடல் புகட்டவா?
 பாரதத்தை பாரோர் உற்று நோக்கவா?
கடல்மீன்விட விண்மீனை அளக்க நினைத்தாயே
உடலிருக்குப் பேக்கரும்பில் உயிரெங்கே சொல்லாயோ?


 




 






No comments:

Post a Comment