Saturday 15 September 2018

கையறுநிலை கண்ணதாசன்


 காவியத் தலைவன் கண்ணதாசன்  
உலகுபுகழ் கவிஞர்கள் உச்சிமேல் கொள்ளும்
பலபாடல் காவியத்தின் பங்காளி நீதான்
சாத்தப்பன் இச்சைக்கு விசாலாட்சி இசைந்ததால்
இருபத்தேழு சூனில் இத்தரைக்கு வந்தாய்
சிறுகூடல் பட்டியிலே  விளைந்த முத்தையா  
கூடலில் வளர்ந்த தமிழின் சொத்தையா 
கம்பனையும் பாரதியும் கண்டதில்லை நானும்
கலியுக மாமன்னன் கவிக்கு நீதான்
பள்ளிப் படிப்புக்கு புள்ளி  வைத்தாய்
பைந்தமிழ்க் காதலால் பாதை மாறினாய்
கல்லாமல்  காவியத்தில் கலந்தவன் நீயே 
ஆயகலை அத்தனையின் மொத்தம் நீயே 
படைத்தல் தொழிலால் பிரமன் ஆனாய்
காவியத் தாயின் இளைய மகனாய்
காதல் பெண்களின் பெருந்தலைவன் ஆனாய்
எல்லோரும் எல்லாமும் பெறவேண்டும் இங்கே
இல்லாமை இல்லாத நிலைக்கு ஏங்கினாய்    
எல்லாக் கட்சிக்கும் எடுப்பார் கைப்பிள்ளை
அர்த்தமுள்ள இந்துமதம் எழுதியநீ  ஏசு
காவிய மும்எழுதி ஏற்றம் பெற்றாய்
கல்லாய் மணலாய்க் கனவாய்ப் போகாமல் 
காலம் காலமாய் நினைவில் நின்றாய்
எண்ணத்தில் நின்றிலங்கும் கண்ண தாசா
                                         கா.இந்துமதி MA;BL
                                         ரெயின்போ எப்.எம்
                                         கோவை 
                                        12-07-2015 


காவியத் தலைவன் கண்ணதாசன்  
உலகுபுகழ் கவிஞர்கள் உச்சிமேல் கொள்ளும்
பலபாடல் காவியத்தின் பங்காளி நீதான்
சாத்தப்பன் இச்சைக்கு விசாலாட்சி இசைந்ததால்
இருபத்தேழு சூனில் இத்தரைக்கு வந்தாய்
சிறுகூடல் பட்டியிலே  விளைந்த முத்தையா  
கூடலில் வளர்ந்த தமிழின் சொத்தையா 
கம்பனையும் பாரதியும் கண்டதில்லை நானும்
கலியுக மாமன்னன் கவிக்கு நீதான்
பள்ளிப் படிப்புக்குப் புள்ளி  வைத்தாய்
பைந்தமிழ்க் காதலால் பாதை மாறினாய்
கல்லாமல்  காவியத்தில் கலந்தவன் நீயே 
ஆயகலை அத்தனையின் மொத்தம் நீயே 
படைத்தல் தொழிலால் பிரமன் ஆனாய்
காவியத் தாயின் இளைய மகனாய்
காதல் பெண்களின் பெருந்தலைவன் ஆனாய்
எல்லோரும் எல்லாமும் பெறவேண்டும் இங்கே
இல்லாமை இல்லாத நிலைக்கு ஏங்கினாய்    
எல்லாக் கட்சிக்கும் எடுப்பார் கைப்பிள்ளை
அர்த்தமுள்ள இந்துமதம் எழுதியநீ  ஏசு
காவிய மும்எழுதி ஏற்றம் பெற்றாய்
கல்லாய் மணலாய்க் கனவாய்ப் போகாமல் 
காலம் காலமாய் நினைவில் நின்றாய்
எண்ணத்தில் நின்றிலங்கும் கண்ண தாசா





தொல்காப்பியச் செம்மல்
புலவர்ஆ.காளியப்பன்,க.மு,.கல்.மு.,
தொல்காப்பியர் பேரவைத்தலைவர்,
முத்தம்மாள் நிலையம்,
பூலுவபட்டி(அஞ்சல்),
கோயமுத்தூர் 641101.
அலைபேசி 9788552993 / 8610684232



  

No comments:

Post a Comment