Thursday 27 April 2017

அணிஇலக்கணம்9-02-17

 

                     அணி இலக்கணம்                                     அணிபல வகைப்படும். அவற்றுள் பின்வருநிலை பற்றிப் பார்ப்போம்.
    பின்வருநிலை
முன்வரும் சொல்லும் பொருளும் பலவயிற்
பின்வரும் என்னிற் பின்வருநிலையே  (தண்டி அலங்காரம்42)
பின்வரு நிலை அணி மூன்று வகைப்படும்.1.சொல்பின் வருநிலை அணி
2. பொருள்பின் வருநிலை
3. சொற்பொருள் பின்நிலைவரு அணி
              சொல்பின் வருநிலை அணி
ஒரு செய்யுளில் ஒரே சொல் பலமுறை வந்தபோதும் ஒவ்வொரு இடத்திலும் வெவ்வேறு பொருளைத் தருவது சொல் பின்வருநிலை நிலைஅணி எனப்படும்                                                                   எடுத்துக்காட்டு நீ தப்புத் தப்பா எழுதினால் நான் தப்புவேன்
              அத்தப்பிலிருந்து நீதப்ப முடியாது.
இதில் தப்பு என்ற சொல் பலமுறை வந்துள்ளது.
தப்புத் தப்பா என்பதற்குப் பிழையாக என்றுபொருள்.
நான் தப்புவேன் என்பதற்கு நான் அடிப்பேன் என்று பொருள்.
நீ தப்பமுடியாது என்பதற்கு தப்பிக்க முடியாது என்று பொருள்.
   இவ்வாறு  செய்யுளில் ஒருசொல் பலமுறை வந்து ஒவ்வொரு இடத்தி என்று பொருள் லும் ஒவ்வொரு பொருளைத் தருவது சொல்பொருள் பின்வருநிலை அணி எனப்படும்                                                 எடுத்துக்காட்டுச் செய்யுள்
துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்கு
துப்பாய தூஉம் மழை.
இதில் துப்பு என்பது உண்,தூய்மையான, உணவு என்ற பல பொருள்களில் வந்துள்ளது. இவ்வாறு  வருவது சொல்பொருள் பின்வருநிலை அணி எனப்படும்.                                                         
2.பொருள்பின்வருநிலை அணி
  செய்யுளில் ஒரே பொருள்தரும்  பலசொற்கள் வருவது பொருள்பின்வரு நிலை அணி எனப்டும்.
 எடுத்துக்காட்டு.
      அவிழ்ந்தன தோன்றி அலர்ந்தன காயா
     நெகிழ்ந்தன நேர்முகை முல்லை—மகிழ்ந்திதழ்
     விண்டன கொன்றை விரிந்த கருவிளை
     கொண்டன காந்தள் குலை.
இதனுள் அவிழ்தல்,அலர்தல்,நெகிழ்தல்,விள்ளல், மலர்தல் என்ற எல்லாச் சொற்களும் மலர்தல் என்ற ஒரே பொருளையே தருகின்றன. இவ்வாறு செய்யுலில் ஒரே பொருளில் பலசொற்கள் வருவது பொருள் பின்வருநிலை அணி எனப்படும்.
              சொற்பொருள் பின்நிலைவரு அணி
ஒரு செய்யுளில் ஒரேசொல் திரும்பத் திரும்ப வந்தபோதும் எல்லா இடத்திலும் ஒரே பொருளைத்தருவது சொற்பொருள் பின்வருநிலை அணி எனப்படும்.
எடுத்துக்காட்டு
     உதவி வரைத்தன்று உதவி உதவி
     செயப்பட்டார் சால்பின் வரைத்து.
இதனுள் உதவி என்னும் சொல் பலமுறை வந்தும் எலலா இடத்திலும் உதவுதல் என்னும் ஒரே பொருளையே தருகிறது.
    ஒரு செய்யுளில் ஒரேசொல் திரும்பத் திரும்ப வந்தபோதும் எல்லா இடத்திலும் ஒரே பொருளைத்தருவது சொற்பொருள் பின்வருநிலை அணி எனப்படும். இப்பகுதி 10 ஐம் வகுப்பிற்கு 5 மதிப்பெண்ணும் 12 ஆம் வகுப்பிற்கு 4 மதிப்பெண்ணும் தருவினா.

No comments:

Post a Comment