Tuesday 18 December 2018

பச்சைக்குப் பலபொருள்


பச்சை என்பதற்குப் பல பொருள் உண்டு
பச்சரிசி
பச்சை உடம்பு
பச்சைக் கட்டு(சிறு நன்கொடை)
பச்சைக்கல்(மரகதம்)
பச்சைக் கற்பூரம்
பச்சைக்காய்(பழுக்காத)
பச்சைக் கிளி
பச்சைக்குதிரை ( ஒரு விளையாட்டு)
பச்சைக்குருவி
பச்சைக்குழந்தை
பச்சைக் கொம்பு (இஞ்சி)
பச்சைக்கொள்ளு
பச்சைச்சாணம்
பச்சைச்சாறு(மூலிகை சாறு)
பச்சிலை(மூலிகை)
பச்சிலைப்பள்ளி (சிறுமரக்கிளைகளால் உண்டாக்கிய நிழல்
பச்சிரும்பு(இளகிய இரும்பு)
பச்செனல் (சிறப்பாக)
பச்சைச்செடி
பச்சை செலவு(சீரகம் பூண்டு கறிவேப்பிலை இவற்றைப்பச்சையாக அரைத்தல்)
பச்சைத்தண்ணீர்
பச்சைத் தமிழர்
பச்சைத்துரோகம்
பச்சைப் பட்டாணி
பச்சை பச்சையா பேசுகிறான்
பச்சப் பசேல்
பச்சைப்பசேனு இருக்கு
பச்சைப் பந்தல்
பச்சைப் பயறு
பச்சைப்பல்லக்கு(பாடை)
பச்சைப்பாம்பு
பச்சைப்பால்
பச்சப் புண்
பச்சைப் புளுகு
பச்சைப்பெருமாள்(ஒருவகை நெல்)
பச்ச மண்ணு(குழந்தை)
பச்சை மாவு
பச்சை மிளகாய்
பச்சைமுட்டை
பச்ச வயிறு(வெறும் வயிறு)
பச்சை வில்(இந்திரவில்)
பச்சை விளக்கு(பாரதிதாசன் நூல்)
இத்தனை பொருள் பச்சைக்கு இருக்கிறது    பதிவு
தொல்காப்பியர் பேரவை தலைவர் புலவர் காளியப்பன்

No comments:

Post a Comment