Tuesday 18 December 2018

வலிமிகும் இடங்கள்


              வல்லினம் மிகும் இடங்கள்  9-07-2018
க் ச் ட் த் ப் ற் ஆறும் வல்லினம்
இவற்றில்  ட் ற் மொழிக்கு முதலில் வாரா.
க் ச் ட் த் நான்கும் உயிர் எழுத்துகளுடன் கூடி மொழிக்கு முதலில் வரும்.
இவை 12 உயிரெழுத்துகளுடன் கூடி மொழிக்கு முதலில் வரும். முதலில் நிற்கும் மொழி நிலை மொழியாகும். நிலை மொழியுடன் வந்து புணரும் மொழி வருமொழியாகும் இவ்வாறு மொழிக்கு முதலில் நிற்கும் வல்லெழுத்துகள் நிலைமொழிகளுடன் சேரும்போது எவ்வெவ் இடங்களில் மிகும் என்பதைக்காண்போம். (இதைப்புணர்ச்சியுள் தோன்றல் விகாரத்தில் அடக்குவர்).
.
1.    கோயிலை+ கட்டினான் = கோயிலைக்கட்டினான் 
     வேலையை+ செய்தான்=  வேலையை ச் செய்தான் 
     பொருளை+  தந்தான்  =  பொருளைத்தந்தான்
பாடத்தை+ படித்தான்  =  பாடத்தைப்படித்தான்
இவ்வாறு இரண்டாம் வேற்றுமை உருபாகியவிரிந்து நின்று புணரும்   
போது வந்த வல்லினம் மிகும்.

2.    பெண்ணுக்கு+ கொடுத்தான்  = பெண்ணுக்குக்கொடுத்தான்
     கோவிலுக்கு+ செய்தான்          = கோவிலுக்குச்செய்தான்
     கந்தனுக்கு + தந்தான்       = கந்தனுக்கு த் தந்தான்
     கோவிலுக்கு+ போனான்          = கோவிலுக்குப் போனான்
இவ்வாறு நான்காம் வேற்றுமை உருபாகிய கு விரிந்து நின்று புணரும்   
போது வந்த வல்லினம் மிகும்.
3.    காணா+ கடவுள் = காணாக்கடவுள்
வாரா+ செல்வம்       = வாராச்செல்வம்
இரங்கா+ தெய்வம்     = இரங்காத்தெய்வம்
படியா+ பாடம்         = படியாப்பாடம்
ஈறுகெட்ட எதிர்மறைப்பெயரெத்துடன் வல்லினம்மிகும்
4.    பாடி+காட்டு= பாடிக்காட்டு
     தேடி+சென்றான்= தேடிச்சென்றான்
     தேடி+தா= தேடித்தா
ஓடி+போனான்= ஓடிப்போனான்
இவ்வாறு இகர ஈற்று வினை எச்சங்களுடன் வல்லினம்மிகும்
5.    மெதுவாய்+காட்டு= மெதுவாய் க் காட்டு ஆய் ஈற்று வினை எச்சங்களுடன்  
வல்லினம்மிகும்
6.    சாரை+பாம்பு  = =     சாரைப்பாம்பு
மோர்+குழம்பு= மோர்க்குழம்பு இவ்வாறு இருபெயரொட்டு பண்புத்தொகையில்  வல்லினம்மிகும்

7.    செய+சொன்னான் = செய ச்சொன்னான் இவ்வாறு செய ஈற்று வினை எச்சங்களுடன் வல்லினம்மிகும்
8.    கேட்டு+ கொண்டான்= கேட்டுக்கொண்டான் இவ்வாறு வன்தொடர்
     குற்றியலுகரங்களுக்கு முன் வல்லினம் மிகும்
9    அ+ குதிரை =அக்குதிரை
     இ+பொருள் = இப்பொருள் இவ்வாறு சுட்டெழுத்து முன் வல்லினம் மிகும்

10    அந்த+குதிரை =அந்தக்குதிரை 
இந்த+குதிரை = இந்தக்குதிரை இவ்வாறு அந்த, இந்த எனும் சுட்டுத்திரிபு முன் வல்லினம் மிகும்
11.   எ+ படம் =   எப்படம் இவ்வாறு வினா எழுத்து முன் வல்லினம் மிகும்

12.   எந்த+ குதிரை =எந்தக்குதிரை இவ்வாறு எந்த எனும் வினாத்திரிபு முன்
வல்லினம் மிகும்

13.   தீ+குணம் +தீக்குணம் இவ்வாறு தனி நெடிலுடன் வல்லினம்மிகும்.

14.   அப்படி+செய் =அப்படிச்செய்
     இப்படி+செய் =இப்படிச்செய்
     எப்படி+செய்தாய் =எப்படிச்செய்தாய்
     அங்கு+ போனான்= அங்குப்போனான்
     இங்கு+ போனான்= இங்குப்போனான்
     எங்கு+ போனாய்= எங்குப்போனாய்
இவ்வாறு அப்படி இப்படி எங்கு அங்கு போன்ற சொற்கள்முன்
வல்லினம்மிகும்
15.   இனி+காண்போம் = இனிக்காண்போம் இவ்வாறு இனி என்ற சொல்முன் வல்லினம்மிகும்
16.   ஆடு+கால்= ஆட்டுக்கால்
     ஆறு+பெருக்கு= ஆற்றுப்பெருக்கு
     நாடு+பற்று= நாட்டுப்பற்று
     இவ்வாறு நெடில் தொடர் குற்றியலுகரத்தில் ஒற்று இரட்டிக்கும்போது வல்லினம்மிகும்
17.   வயிறு+ பாடு= வயிற்றுப்பாடு
     குருடு+கண்=   குருட்டுக்கண் இவ்வாறு உயிர்த்தொடர் குற்றியலுகரத்தில் ஒற்று இரட்டிக்கும்போது வல்லினம்மிகும்
18.   அவனன்றி+ காட்டான்=அவனன்றிக்காட்டான் இவ்வாறு அன்றி இன்றி எனும் சொற்கள்முன் வல்லினம் மிகும்.
19.   மற்று+பற்று= மற்றுப்பற்று
     மற்ற+காரியம்= மற்றக்காரியம்
     மற்றை+ செயல்= மற்றைச்செயல்
     இவ்வாறு மற்ற,மற்று,மற்றை எனும் இடைச்சொற்கள்முன் வல்லினம் மிகும்.
20.   சால+கற்றான்= சாலக் கற்றான்
     தவ+சிறியது = தவச்சிறியது இவ்வாறு சால,தவ எனும் உரிச்சொற்கள்முன் வல்லினம் மிகும.

21.   பண்டு+காலம்= பண்டைக்காலம்
     இன்று+ பொழுது = இற்றைப்பொழுது
     நேற்று+கூலி= நேற்றைக்கூலி
     இவ்வாறு ஐகாரச்சாரியை பெற்ற குற்றியலுகரச் சொற்கள்முன் வலிமிகும்
22.   தாய்+குருவி= தாய்க்குருவி
     தயிர்+குழம்பு= தயிர்க்குழம்பு
     தமிழ்+ பாடம் =தமிழ்ப்பாடம்
     எனும் யகர,ரகர,ழகர ஈற்றுச்சொற்கள்முன் வலிமிகும்.

No comments:

Post a Comment