Tuesday 18 December 2018

தொல்காப்பியமுத்துகள் தாவரங்களுக்கு உயிருண்டு



தாவரங்களுக்கு உயிருண்டு என்று அறிவியல் அறிஞர் ஜகதீஸ் சந்திரபோஸ் நிறுவிக்காட்டுவதற்கு பல நூற்ராண்டுகளுக்கு முன்பே நம் தொல்காப்பியர் புல்லும் மரனும் ஓரறிவுயரே என்று கூறிவிட்டார்.புறப்பகுதி திண்மை இல்லாமல் உட்பகுதி சோறாக இருப்பனவற்றைப் புல் என்பது மரபு.  ஓரறிவுயிராகிய புல்லும் தனக்கென உறுப்புகளைக் கொண்டிருக்கும் என்று தொல்காப்பியர் உணர்ந்து எழுதி உள்ளார். பண்டைத்தமிழ்ப்புலவர்களின் இயற்கை இதனைச்சான்றாக் கொள்ளலாம்அந்த நூற்பா தோடே மயலே ஓலை என்ற
ஏடே இதழே பாளை என்றா
ஈர்க்கே கலையென நேர்ந்த பிறவும்
புல்லொடு வரும்எனச் சொல்லினர் புலவர்(தொல்.பொருள.மரபு)பிறவும் என்பதனால்  குரும்பை,நுங்கு முதலியனவும் அடங்கும்.எனவே தொல்காப்பியம்
எனவே ஞாயிறு திங்கள் எனக்குறிப்பிடுவதால் வான நூல் என்றும்
முல்லை முதலிய நிலங்கைச்சுட்டுவதால நிலநூல் என்றும்
பயிர்வகைகளை புல் மரம் எனப்பாகு படுத்திக் கூறுவதால் ப.யிர் நூல் என்றும்
பறவை விலங்கு இவற்றின் இளமைப்பெ.ர்களைக்குறிப்பதால் உயிர் நூல் என்றும்
உந்தி மிடறு நெஞ்சு என உயலின் அகத்துறுப்புகையும் புறத்துறுப்புக்களையும் சுட்டுவதால் உயல் நூல் என்றும்
மெய்ப்பாட்டியலில் உள்ளத்தின் தன்மைகளை உரைப்பதால் உளநூல் என்றும்
வண்ணம் அளவு வடிவம் சுவை எனப்பொருட்களின் தன்மைகளை க்கூறுவதால் இயக்க நூல்(physics) என்றும்கண்மை,செம்பஞ்சுக் குழம்பு முதலியன செய்தல் பற்றிக்கூறுவதால் இயைபு(chemistry) நூல் என்றும் கூறலாம்
தாமரை, சங்கம், வெள்ளம் என்று பேரெண்களையும் கலம் சாடி பானை வட்டில் என முகத்தல் அளவைகளையும் கழஞ்சு சீரகம் தொடி பலம் என்னும் நிறுத்தல்   அளவைகளையும் உரைப்பதால் கணக்கு நூல் என்றும்
போர் வீரர்க்கு நடுகல் நட்டு அவர்களின் வடிவத்தை வடிக்கும் முறைக் கூறுவதால் சிற்ப நூல் என்றும்
மடலூறும் தலைவன் மடலில் தலைவின் உருவத்தை வரைவதைக்கூறுவதால் ஓவிய நூல் என்றும் கூறலாம் அனைத்துத் துறையினரும் அறிய வேண்டியது நன்றி உலகத் தொல்காப்பிய மன்றம்.தொல்காப்பியம். பதிவு புலவர் ஆ.காளியப்பன் தலைவர் தொல்காப்பியர் பேரவை கோயமுத்தூர்




No comments:

Post a Comment