Thursday 13 July 2023

கருப்பு நிலா(காமராசர்) உதித்த நாள்

 

நாளை 15-7-23 கருப்பு நிலா(காமராசர்) உதித்த நாள்           

வழிபடு தெய்வமாய் வணங்கு கின்றோம்

பழிதீர் புகழொடு பாரில் இருந்தவரே

காமத்தை நாமமாய் ஏற்றதாலே கடைசிவரை

ஏமமாம் இல்லறத்தை ஏற்றதில்லை உன்றன்

ஆழ்மதியால் அணைகள் பலவும் ஆக்கினீரே

சூழ்ந்தார்கள் சான்றோர்கள் உம்மைச் சுற்றி

உண்டியொடு  கல்வி தந்து கடையனுக்கும்

அண்டாது அறியாமை என்று சொன்னாய்

பதவியெலாம் பாதத்தைப் பணிந்து நிற்க

உதறிய துண்டாக நினைத்து அதனைக்

கற்றவர்க்கும் மற்றவர்க்கும் ஈந்தாய் ராசா

பெற்றவளும் உழைத்துத்தான் உண்ண வேண்டும்

வரிப்பணம்  வறியவருக்கே உரிமை என்றாய்

சரியான திட்டத்தை நாளும் தீட்டி

இல்லாமை இல்லாது போகச் செய்தீர்

தேரிழுத்து  தெய்வத்தை வணங்கினாலும் உலகம்

ஏருழுவான் இல்லாட்டி என்னாகும் என்றீர்

வெளிநாடு சென்றாலும் வெள்ளை வேட்டி

களிப்புடனே அணிவாயேக் கதரும் தன்னை

பொறியாளர் காணாத வழியைக் கூட

நெறிகாட்டி நேர்மையுடன் செய்ய வைத்தீர்

காந்திக்குத் தொண்டனாய்  இருந்த தாலே

வேந்தனாய் வாழுகின்ற வாழ்வை விட்டு

வெள்ளாடைத் துறவியாய் வாழ்ந்து வந்தீர்

கள்ளுக்கடை வந்தபோது கதறி அழுதாய்

பகலுணவுத் திட்டத்தைக் கொண்டு வந்து

மகனாகக் காத்தீரே மாந்தர் தம்மை 

பஞ்சமர் வாழ்வில் பஞ்சம் போக்கி

வெஞ்சமர் செய்யாத வெற்றி ஆளன்

அரசுக் கட்டிலில் அமர்ந்த போதும்

பரவலும் போற்றலும் தொடர்ந்த போதும்

துரும்பாக அவற்றைத்  தூக்கி எறிந்தீர்

விருதுநகர் பெற்றெடுத்த வித்தகன் தானே

பாரதத்தின் நலம்மட்டும் எண்ணிப் பார்த்தீர்

ஆராத துயரில் எமையெலாம் ஆழ்த்திவிட்டு

அக்டோபர் இரண்டினில் அமர ரானீர்

துக்கத்தில்  அழுத கண்ணீர் உலரவில்லை

அன்றுமுதல் இன்றுவரை அருந்தமிழ் நாட்டார்

என்றைக்கு உன்னைப்போல் தலைவர் காண்போம்

அன்றைக்குத் தொல்காப் பியன்சொன் னபடியே

நன்றாக மரபினையே காத்து நின்றீர்

உன்றனது தாள்பணிந்து வாழ்வோம் நன்றே

 

மாமனிதன் நினைவில் என்றும் வாழும்

தொல்காப்பியச்செம்மல் புலவர் ஆ.காளியப்பன்

தலைவர் தொல்காப்பியர் தமிழ்ச்சங்கமம்  9788552993

 

 

நாளை 15-7-23 கருப்பு நிலா(காமராசர்) உதித்த நாள்           

வழிபடு தெய்வமாய் வணங்கு கின்றோம்

பழிதீர் புகழொடு பாரில் இருந்தவரே

காமத்தை நாமமாய் ஏற்றதாலே கடைசிவரை

ஏமமாம் இல்லறத்தை ஏற்றதில்லை உன்றன்

ஆழ்மதியால் அணைகள் பலவும் ஆக்கினீரே

சூழ்ந்தார்கள் சான்றோர்கள் உம்மைச் சுற்றி

உண்டியொடு  கல்வி தந்து கடையனுக்கும்

அண்டாது அறியாமை என்று சொன்னாய்

பதவியெலாம் பாதத்தைப் பணிந்து நிற்க

உதறிய துண்டாக நினைத்து அதனைக்

கற்றவர்க்கும் மற்றவர்க்கும் ஈந்தாய் ராசா

பெற்றவளும் உழைத்துத்தான் உண்ண வேண்டும்

வரிப்பணம்  வறியவருக்கே உரிமை என்றாய்

சரியான திட்டத்தை நாளும் தீட்டி

இல்லாமை இல்லாது போகச் செய்தீர்

தேரிழுத்து  தெய்வத்தை வணங்கினாலும் உலகம்

ஏருழுவான் இல்லாட்டி என்னாகும் என்றீர்

வெளிநாடு சென்றாலும் வெள்ளை வேட்டி

களிப்புடனே அணிவாயேக் கதரும் தன்னை

பொறியாளர் காணாத வழியைக் கூட

நெறிகாட்டி நேர்மையுடன் செய்ய வைத்தீர்

காந்திக்குத் தொண்டனாய்  இருந்த தாலே

வேந்தனாய் வாழுகின்ற வாழ்வை விட்டு

வெள்ளாடைத் துறவியாய் வாழ்ந்து வந்தீர்

கள்ளுக்கடை வந்தபோது கதறி அழுதாய்

பகலுணவுத் திட்டத்தைக் கொண்டு வந்து

மகனாகக் காத்தீரே மாந்தர் தம்மை 

பஞ்சமர் வாழ்வில் பஞ்சம் போக்கி

வெஞ்சமர் செய்யாத வெற்றி ஆளன்

அரசுக் கட்டிலில் அமர்ந்த போதும்

பரவலும் போற்றலும் தொடர்ந்த போதும்

துரும்பாக அவற்றைத்  தூக்கி எறிந்தீர்

விருதுநகர் பெற்றெடுத்த வித்தகன் தானே

பாரதத்தின் நலம்மட்டும் எண்ணிப் பார்த்தீர்

ஆராத துயரில் எமையெலாம் ஆழ்த்திவிட்டு

அக்டோபர் இரண்டினில் அமர ரானீர்

துக்கத்தில்  அழுத கண்ணீர் உலரவில்லை

அன்றுமுதல் இன்றுவரை அருந்தமிழ் நாட்டார்

என்றைக்கு உன்னைப்போல் தலைவர் காண்போம்

அன்றைக்குத் தொல்காப் பியன்சொன் னபடியே

நன்றாக மரபினையே காத்து நின்றீர்

உன்றனது தாள்பணிந்து வாழ்வோம் நன்றே

 

மாமனிதன் நினைவில் என்றும் வாழும்

தொல்காப்பியச்செம்மல் புலவர் ஆ.காளியப்பன்

தலைவர் தொல்காப்பியர் தமிழ்ச்சங்கமம்  9788552993

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

No comments:

Post a Comment