Thursday 30 April 2020

ஆண்மகனுக்கு உரிய அழகு தொல்காப்பியம் கூறுவது


தொல்காப்பியம் கூறம் ஆண்மகனுக்கு உரிய அழகு
         ஆண்மை ( ஆண்மகனுக்கு உரிய அழகு ) 28-12-19
                    
       பெருமையும் உரனும் ஆடூஉ மேன (தொல்காப்பியம்1044)
   இந்த நூற்பா களவியயில் தலைமகன் பற்றிக் கூறும்போது வருவது   இருப்பினும் நாம் பொதுவாக உலகில் உள்ள ஆண்கள் அனைவருக்கும்  எடுத்துக்கொள்வோம். ஆண்களுக்குரிய அறிவு நிறை ஓர்ப்பு கடைப்பிடி என்று நான்கினையும் கூறினாலும்  தொல்காப்பியர் பெருமையும் உரனும்  ஆண்களுக்கு உரியன என்கிறார்.                                     
  பெருமை என்பது  பிறர் செய்ய முடியாத நல்லனவற்றை நான் செய்வேன் என்று எண்ணும் மன ஊக்கமே. அதாவது கல்வி தறுகண் (அஞ்சாமை) புகழ் கொடை  இவற்றில் மேம்பட்டு நிற்றல். விளக்கமாகக் கூறின் அறிவு, ஆற்றல், புகழ், கொடை, ஆராய்தல், பண்பு, நண்பு, பழிபாவங்களுக்கு அஞ்சுதல் முதலியவற்றில் மேம்பட்டு நிற்றல். இது தவிர செயற்கரிய செய்தல், தருக்கின்மை, பிறர் குற்றம் கூறாமை, தன்னிலையில் மேன்மேலும் உயர்ந்து நிற்றல் தன்னிலைமைக்கண் தாழாமை. பிறர் அவமானத்தைக் கூறாதிருத்தல் இவற்றையும் ஆண்களுக்கான பெருமைகளாகக் கூறுவர். இந்தப் பெருமைப் பண்பும் ஒருவன் தன்னைத் தான் காத்துக் கொண்டு நடந்தால் மட்டுமே உண்டாகும். பெருமைப் பண்பு எக்காலத்திலும் பணிந்து நடக்கும்,  பெருமையால்தான் உரன்  பிறக்கும்                                                                   
  உரன் என்பது கடைப்பிடியும் நிறையும் கலங்காது துணிதலும் முதலியவற்றில் வல்லமை உடையவனாகத் திகழ்தல்.அதாவது நன்றென அறிந்த பொருளை மறவாது, உறுதியாகப் பற்றிக் கொண்டு அதன் வழி நடத்தல், தன்னிடம் காக்க வேண்டியனவற்றைக் காத்துப் போக்க வேண்டியவற்றைப் போக்கி நடக்கும் நடத்தை. மேலும்  அன்பு நாண் ஒப்புரவு கண்ணோட்டம் வாய்மை என்பனவற்றால் நிறைந்திருத்தல். தாம் எடுத்துக்கொண்ட செயலின் அருமை கருதி கலங்காது  மனத்திட்பத்துடன் செயலாற்றுதல்.
இப்படிப்பட்ட ஒருவனே சிறந்த ஆண்மகள் ஆவான்.        
 பதிவு தொல்காப்பியச்செம்மல் புலவர் ஆ.காளியப்பன். தலைவர் தொல்காப்பியர் தமிழ்ச்சங்கமம்                                                               .

No comments:

Post a Comment