Sunday 25 August 2019

புணர்ச்சி 25-08-19


                        எழுத்துப் புணர்ச்சி
இலக்கணம் படித்தவனும் விளக்கெண்ணெய் குடித்தவனும் பணக்காரன் ஆவான் இரண்டும் கடினம். pulavarkaliappan.blogspot.in இதில்கண்டு கொள்க
  புணர்ச்சி என்றால் சேர்தல் என்று பொருள்.  இலக்கணத்தில் சொல்லும் சொல்லும் சேர்தல் புணர்ச்சி எனப்படும். அதாவது ஒரு சொல்லின் இறுதி எழுத்தும் மற்றொறு சொல்லின் முதலெழுத்தும் சேர்வது  புணர்ச்சி எனப்படும்.ஆகவே சொல்லும் சொல்லும் சேர்தல்,எழுத்தும் எழுத்தும் சேர்தல் என்பதால் சொல்லின் வகையும் எழுத்தின் வகைகளையும் அறிதல் அவசியம் ஆகிறது.ஒலி வடிவங்களுக்கே இலக்கணம் படிப்பதாகக் கருதிக்கொள்ள வேண்டும். ஒரு சொல்லை சொன்னவுடன் மற்றொரு சொல்லை சொல்லும் போது (ஒலியை)  எழுத்துக்களை உருவாக்கும் கருவிகள் உடனே செயல் படவேண்டி உள்ளது
.(எழுத்துக்களை உருவாக்கும் கருவிகள் பல், உதடு, மேல்வாய் நாக்கு)
இது எல்லார்க்கும் பொதுவான் செயல்.நிற்க

சொல்லும் சொல்லும் சேரும் புணர்ச்சி
பெயர்சொல் முன் பெயர்சொல் = மரம்+ பலகை
பெயர்சொல் முன் வினைச்சொல் = கண்ணன்+ வந்தான்
வினைச்சொல் முன் பெயர்சொல் = வந்தான்+ கண்ணன்
வினைச்சொல் முன் வினைச்சொல் = உண்டான் + தூங்கினான்
இடை உரிச்சொற்களை எடுத்துக் கொள்வதிலை
எழுத்தும் எழுத்தும் சேரும் புணர்ச்சி
உயிர் முன் உயிர்= வாழை+ லை (ழை= ழ்+ ஐ)உயிர் எழுத்து மெய்யுடன் கூடியே இறுதியில் வரும்) ஐமுன் இ வந்துள்ளது
உயிர் முன் மெய்= வாழை+மரம்=(ம= ம்+அ மெய் எழுத்து உயிருடன்  கூடியே மொழிக்கு முதலில் வரும்) ஐ முன் ம் வந்துள்ளது)
மெய் முன் உயிர்= மயில்+ இறகு  ல்முன் இ வந்துள்ளது
மெய்முன்மெய்= மரம்+ப(ப்+அ)ட்டை ம்முன் ப் வந்துள்ளது

இதைப்படிக்கும் போது மொழிக்கு முதலில் வரும் எழுத்துகள், மொழிக்கு இறுதியில் வரும் எழுத்துகள் இவற்றைப் பற்றியும் அறியவேண்டும்

உயிர் எழுத்துகள் அ ஆ இ  ஈ உ ஊ எ ஏ ஐ ஒ ஓ ஔ 12
மெய் எழுத்துகள்
வல்லினம்   மெல்லினம்    இடையினம்
க்                   ங்                   ய்
ச்                   ஞ்                  ர்
ட்                   ண்                  ல்
த்                   ந்                   வ்
ப்                   ம்                   ழ்
ற்                   ன்                   ள்

உயிர் எழுத்துகள் 12 மொழிக்கு முதலில் வரும்
அம்மா ஆடு இலை ஈக்கள் உரல், ஊசி, எலி, ஏணி, ஐயன், ஒட்டகம், ஓடம்,ஔவையார்
மெய் எழுத்துகளில் 2ர 2ன 3ழ 1ட வராது அதாவது குழப்பம் தரும் எழுத்துகள்வாரா
அவை நீங்க10 மெய் எழுத்துகள் மொழிக்கு முதலில் வரும்
க் கடம்     
ச் சக்கரம்  ஞ் ஞாயிறு
த் தண்ணீர் ந் நகம்
ப் பந்தல்   ம் மரம் 
                           ய் யானை
                           வ் வால்
நு (ந்+உ)ந்தை இதில் குற்றியலுகரம் ந்+உ இதில் உ குற்றயலுகரம் என்பர்
ஆக 33 எழுத்துக்களில் 22 எழுத்துகள் மொழிக்கு முதலில் வரும் (தொல் எழுத்105)
12+9+1 = 22
ஆனால் நன்னூலார் நு வை விட்டு விட்டு ங் கைஎடுத்துக்கொள்வார்.  ஙனம் இதில் ங் மொழிக்குமுதலில் வந்துள்ளதாகக் காட்டுவார்(எ.டு) இங்ஙனம் இ+ ஙனம்= இங்ஙனம்

மொழிக்கு இறுதியில் வரும் எழுத்துகளை  நாளை பார்ப்போம். பதிவு
தொல்காப்பியச்செம்மல் புலவர் ஆ.காளியப்பன், தலைவர் தொல்காப்பியர் தமிழ்ச்சங்கமம்

No comments:

Post a Comment