Thursday 4 January 2018

முப்பாலில் முதற்பால்



                   தமிழ்த்தாய் வாழ்த்து
                    இன்பம தெங்கும் நிலைகொண் டிருக்கவும்
                                                துன்பமது தூசெனத் தூரமாய்ப் போகவும்
    மன்பதை போற்றும் கவிவளம் கொண்டவென் 
    இன்றமிழ் தாயே துணை.
 உலகில் சாதி சமய வேற்றுமைகளாலும் லௌகிக வெறியாலும் சிதறுண்டு
சீர்அழிந்துவரும் சமுதாயத்தை பொய்மையிலிருந்து மெய்மைக்கும்,இருளிருந்து வெளிச்சத்துக்கும், அறியாமையிலிருந்து அறிவொளிக்கும் அழைத்துச்சென்ற மெய்ஞானச்சுடராக விளங்கிய தவத்திரு. சச்சிதானந்த சுவாமிகளின் பொன்னார் திருவடிகளை என் சென்னிமிசை அணியாய்ச் சூடுகின்றேன்.
   கொங்குத் திருநாட்டின் கோவைக்குத் தென்புறமாய் எங்கும் புகழ் பரப்பும் தாமரைக்கோவில் அறங்காவல் குழுவோரே
குலன் அருள் தெய்வம் கொள்கை மேன்மை கொண்ட நம் குருவின் அருள் விதையை நட்டு ஆன்மீகப்பயிர் வளர்க்கும் கார்த்திகேயன் அவர்களே
ஊனம் ஒருபோதும் தமிழை அண்டாது காக்கும் இரவி அண்ணன் அவர்களே
கல்வி கேள்விகளால் திட்பமும் நுட்பமும் பெற்றொளிரும் சான்றோர்களே
எதிலும்  படிபடியாய் முன்னேறுவதே சிறந்த வழி குறுக்குவழி ஒருபோதும் உதவாது என்னும் நம் குருதேவரின் வாக்கினைச் செயல்படுத்தக் காத்திருக்கும் சின்ன மலர் மொட்டுக்களே சிங்காரச் சிட்டுக்களே உங்கள் அனைவருக்கும் என்பணிவான தமிழ் வணக்கம்.                                       1

    

தாமரைக்கோவிலாம் ஆலமரத்தின் பெருமைதனை எடுத்துரைக்க வந்துள்ள அருகம்புல் நான், ஞாயிற்றின் புகழ் பாட வந்துள்ள மின்மினிப்பூச்சி நான், இமயத்தின் சீர்மையைச் செப்ப வந்துள்ள சிறுமண்மேடு நான். மணக்கும் தாமரையை பேச வந்துள்ள கள்ளிப்பூ ஆகிய நான் மேதைகள் நிறைந்த அவையில் பேதையாய் வந்து நிற்கும்  நான். வள்ளுவன் வழங்கிய முப்பாற் கடலை கடக்க நினைக்கும் கட்டெறும்பு நான். முப்பாற் கடலின் முதற்பாலாம் அறக்கடலை நக்கிச்சுவைக்க வந்த ஆசைமிக்க பூனை நான். தொல்காப்பியக் கை விளக்கால் உலகைக்காண நினைக்கும் நான், வள்ளுவரும் தொல்காப்பியரும் காட்டும் வழி சென்றால் காசினிக்கு ஒரு துன்பமும் வாராது என்று நினைப்பவன் நான்.
 முப்பாலின் முதற்பாலை உரைக்கையிலே தப்பேதும் நான்செய்தால் எப்பாலும்சொல்லாது, இப்பால் வாவென்று இடித்து உரைத்துத் திருத்துங்கள் என்று கூறி என் உரையைத் தொடங்குகின்றேன். முதலில் பெரியவர்களுக்காய்ப் பேசி அவர்கள் ஆசியோடு  குழந்தைகளே குறட்பாவாம் தேன்துளிகளைச் சுவைப்போம். இனிப் பெரியவர்களின் ஆசியோடு அவர்களோடு பேசுகிறேன்.
சுட்டு விரல் பிடித்து அகரத்தை ஒலியோடு எழுதிக்காட்டிய என்அருமை ஆசிரிய தெய்வங்களை வணங்கித் தொடங்குகின்றேன்.                                2

அகரம் உகரம் மகரம் ஆகிய மூன்றெழுத்தும் கூடித்தான் ஓம் என்னும் பிரணவ
மந்திரம் பிறக்கிறது என்பார் நம்குரு.. அந்த ஓங்காரத்தின் ஆதியாய் அமைவது அகரம். அகரமோ சுழியத்தில் தொடங்குகிறது. சுழியம் என்பதோ சூனியத்தின் குறியீடு. சூனியத்திலிருந்தே அண்டமும் சராசரங்கள் வாழும் வையகமும் வந்ததாய் உரைப்பர் மேலோர்.
அதனால்தான் உலகத்தின் முதல் நூலாம் தமிழரின் தலை நூலாம் தொல்காப்பியம் எழுத்தெனப் படுவ அகரமுதல் னகர இறுவாய் முப்பஃது என்ப என்று அகரத்தில் தொடங்குகிறது.
    அளவற்ற அருளாளனும் அன்புடையோனுமாகி அல்லாஹ் என்று இசுலாமியரின் வேதம் குரானும் அகரத்தில் தொடங்குகிறது
    அல்லுலூய என்று ஏசு சபையோரும் அகரத்தையே முன்னிறுத்தினர். எழுதாக்கிளவியாய் வெறும் ஓசையால் மட்டும் வாழ்வன வடவரின் நான்கு மறைகள் அவையும் ஆ என வாய்திறந்தே அர்ச்சினை ஆக்கப்பட்டன.. அந்த அடிப்படையிலேதான் வையத்தின் வழிகாட்டி வள்ளுவமும் அகரமுதல எழுத்தெல்லாம் என்று அகரத்தில் தொடங்குகிறது.
அ என வாய்திறவாமல் எம்மொழியும் பேச முடியாது.அதனால் உலகமொழிகளின் முதல் எழுத்தானது அகரம். அது போலவே எல்லா உலகங்களுக்கும் ஆதியாய் இருப்பவன் பகவன் என்றார். பக்தியோடு சொல்லும் எந்தச் சொல்லும் பகவன் திருநாமங்களே.                                                          3.



ஒலிவடிவத்தில் மட்டும் அல்லாமல் வரிவடிவிலும் அகரமே உலக மொழிகளுக்குக் கெல்லாம் முதல் எழுத்தாகும்.எவ்வாறு என்றால் சுழியத்தில் தொடங்கி பிறையாய் வளைந்து நின்றும் கிடந்தும் இருப்பது அகரம்.உலக மொழிகளின் எல்லா வரிவடிவ எழுத்துகளும் தமிழ் அகரத்தின் ஏதாவது ஒருபகுதியின்றி உருவாக முடியாது. ப்படிபார்த்தாலும் அகரமே உலக மொழி எழுத்துகளுக் கெல்லாம் முதல் அதுபோல உலகத்து உயிர்களுக்கெல்லாம் ஆதியாய் அனாதியாய் உள்ளவன் பகவனே. என்கிறார் நம் ஐயன்.
வினயமாய்ப் பேசியதைவிட்டு விளையாட்டாய்ப் பேசவிழைகிறேன். விளையாட்டில்
மகிழ்ச்சியைத் தவிர சோர்வுக்கு இடமில்லை. அதனால்தான் ஆக்கல் காத்தல் அழித்தல் என்னும் முத்தொழிலையும் இறைவன் விளையாட்டாக   செய்வதாகவே கம்பரும்சொல்லுகிறார்
ஏன் நாம் குருவணக்கம் சொல்லவேண்டும் குருவின் துணையின்றி ஒன்றும் நடக்காது. அதனால்தான்
 ஆற்றைக்கடக்கும் குருசீடர் கதை. ஆகவேதான் குரு வணக்கம் கூறி என் உரையைத் தொடங்கினேன். என்னுடையமாணாக்கர்களும் இப்படித்தான் உள்ளார்களா?     இன்ஸ்பெக்டர், கைதி
மற்றொருசம்பவம் ஜெயிலுக்குப் பேசக்கூப்பிடுதல்                        4.


     முதன் முதலில் பள்ளிக்குச் சென்றவுடன் ஆங்கில எழுத்துக்களை அறிமுகம் செய்கின்றார்கள்.எப்படி A for Apple B for Ball என்றுதானே.தின்னு விளையாடு என்பதுதானே.அதுக்கு மேலே பாட்டுச்சொல்லிக்கொடுக்கிறார்கள் என்ன பாட்டு ரெயின் ரெயின் கோ அவே. வெள்ளை மனதுடன் எல்லாக் குழந்தைகளும் பாடும்போது தமிழ்நாட்டில் எப்படி மழைபெய்யும். ஆனால் நம்தமிழ் மொழியில்  எழுத்துக்களை அப்படியா அறிமுகம் செய்கிறோம். அ என்றால்  அம்மா என்றும் என்றும் பாட்டாக இருந்தால்   அறம் செய விரும்பு என்றல்லவா. கற்பிக்கிறோம் முதன்முதலில்குவந்தைக்கு கற்றுக்கொடுப்பது அறம் செய்யவே. ஏன் என்றால்  கருவறை முதல் கல்லறை வரை மட்டுமல்ல கடைசி வரைத்துணையாய் வருவது அறம் மட்டுந்தான்.   
 . வீடு வரை மனைவி. வீதிவரை உறவு காடுவரை பிள்ளை கடைசி வரை யாரோ கடைசி வரை யாரோ என்று கண்ணதாசன் பாடியுள்ளது எல்லாருக்கும் தெரியும். ஆனால் கடைசி வரை வருவது ஒன்று உண்டு. அதுதான் நாம் செய்யும் அறம்.
                  தர்மர்கதை
'அறம் செய்ய  விரும்பு' என்றார் ஒளவையார். 'அறம் செய்' என்று சொல்லாமல், 'விரும்பு' என்று ஏன் சொன்னார்? அறத்தை விருப்பமின்றி செயல்படுத்தினால் ஒரு பலனும் இல்லை என்பதால், விரும்பு என்று சொல்லியிருக்கிறார் ஒளவையார்
அறத்தை தர்மம், புண்ணியம், ஒழுக்கம், நோன்பு, தவம், ஆசாரம், சமயம்     27 ஒகங்களில் (யோகம்) ஒரு வகை.என்ற பல சொற்களால் அழைப்பர்.    5.



அப்போ அறம் என்பது செயலா, சொல்லா, எண்ணமா. செயலுக்கு அடிப்படையாக இருப்பது எண்ணமாகும். எண்ணம் தூய்மையாக இருந்தால்தான் சொல்லும் செயலும் தூய்மையாக அமைய முடியும். எண்ணம் எழுவதற்கு இருப்பிடமாக உள்ள மனம் மாசு இல்லாததாக இருக்க வேண்டும். மனத்தின் மாசினைப் போக்குவதற்கு முயலுவதே அறமாகும் மன மாசு என்பது யாது? மன மாசினைப் போக்குவது எவ்வாறு? பொறாமை, பேராசை, வெகுளி, கடுஞ்சொல் ஆகியவை மனமாசுகளாகும். அவை இல்லாமல் இருப்பதே அறம். இதையே குறளாசிரியர்.   
மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்தறன்
ஆகுல நீர பிற
அழுக்கா றுஅவாவெகுளி இன்னாச்சொல் நான்கும்
இழுக்கா இயன்றது அறம்  . இப்படிபட்ட அறத்தை எடுத்துக் கூறும் இலக்கியங்கள் எல்லா மொழிகளிலும் இருந்தாலும் நம் தமிழ்மொழி இலக்கியங்கள் எல்லாமுமே அறத்தை மட்டுமே எடுத்துரைக்கின்றன. எட்டுத்தொகை பத்துப்பாட்டு பதினெண்கீழ்க்கணக்குஅத்தனை இலக்கியங்களில் எல்லாம் அறத்தை எடுத்துக் கூறுவதில் முதன்மையானது திருக்குறளே. அதனால் தான் திருக்குறளையே அறம் என்று புறநானூறு கூறுகிறது.                                            6.





1330 குறட்பாக்களில் 52 முறை அறம் என்ற சொல்லைப் பயன்படுத்துகிறார்
அறத்துப்பாலில்உள்ள 38 அதிகாரங்களில் 41 முறை அறம் என்றசொல்லைப் பயன் படுத்தி உள்ளார். பொருட்பாலில் 11முறை அறம் என்றசொல்லைப் பயன் படுத்தி உள்ளார்.
 இன்பத்துப்பாலில் ஒருமுறையும் பயன்படுத்தவில்லை. ஆனால் அறத்தான் வருவதே இன்பம் மற்றெல்லாம் புறத்த புகழும் இலஎன்று அறத்தின் வழியில் வரும் இன்பமே நிலைத்தது சிறந்தது என்கிறார்.                                ஒழுக்கம் என்றால் என்ன? நம் சுவாமிகள் போன்றோர் கூறும் வழிகளே துறவிகளின் சக்தி  இருமை வகைதெரிந்து ஈண்டு அறம் பூண்டவர்கள் நம் சுவாமி போன்றோர்.                                                                                என் அடிமைகளுக்கு நீ அடிமை                                                                     மாவீரன் அலெக்ஸாண்டர் இந்தியாவை வென்று வரக் கிளம்பினான். அப்போது அவன் மனைவி தனக்கு இந்தியாவில் இருந்து ஒரு முனிவரைப் பரிசாகக் கொண்டு வரும் படி கேட்டுக் கொண்டாள். அவளுக்கு முனிவர்களிடம் பெரிய மரியாதை. முனிவர்கள் அடுத்த பிறவியில் என்ன நடக்கும் என்று தெளிவாகக் கூற வல்லவர்கள் என்றும் அவள் நம்பினாள்.                                     7.






ஆனாலும் எத்தனைபேர் போலித்துறவிகள் தம்மை அறவோர் என்று கூறிக்கொண்டு திரிகிறார்கள். அப்படி பலர்இருக்கத்தான் செய்வார்கள் என்று  திருவள்ளுவரே கூறுகிறார்.
மனத்தது மாசாக மாண்டார் நீராடி
மறந்தொழுகும் மாந்தர் பலர் 278 அந்தப் போலித்துறவிகளைப் பார்த்து பஞ்ச பூதங்களே சிரிக்கும் என்கிறார்
வஞ்ச மனத்தான் படிற்று ஒழுக்கம் பூதங்கள்
ஐந்தும் இகத்தே நகும்.271                   .                                                  
        அறம் என்பதற்கு அறிவியல் தரும் விளக்கம்
ஒரு மனிதக்குழு தனக்குள் உருவாக்கிக்கொள்ளும் நெறிகள். இறுதியாக வகுத்துக்கொண்ட நடத்தைகள். செய்யக்கூடியவை, செய்யக்கூடாதவை, செய்தே ஆகவேண்டியவை அடங்கிய ஒரு வழிகாட்டித்தொகை.அதுவே அறம்.  ஆன்மீக  விளக்கம்
பிறவிதோறும் மனிதனைப் பற்றிக் கொண்டு வரும் தீவினையை அறுத்தெறிவதே அறம்என்ற அளிக்கிறது
அகப்பொருளில் அறத்தொடு நிற்றல் என்ற ஒரு துறையும் உள்ளது    8.
                   

                         அறத்தின் சக்தி
பெருங்குடிமன்னனுக்கு எந்தக் கட்டுப்பாடும் இல்லை. அவன் தவறுசெய்தால் தட்டிக்கேட்பது எது? அரைசியல் பிழைத்தோர்க்குக் கூற்றாக வரும் அறம்  என்கிறார் இளங்கோ.   
அதையே வள்ளுவர் அல்லற்பட்டு ஆற்றாது அழுத கண்ணீரன்றே செல்வத்தைத் தேய்க்கும் படைஎன்றார்.
தொழுதகை யுள்ளும் படைஒடுங்கும் ஒன்னார்
அழுதகண் ணீரும் அனைத்து 828                                      
பெரும் துன்பப்பட்ட கவிஞன் அதற்குக் காரணமானவர் அழியும்படியாகப் பாடும் பாடல். நந்திவர்ம பல்லவனை அவன் சகோதரன் அறம்பாடிக் கொன்றான்.
            1.இறைவன் நம்மைச்சோதிப்பது ஏன்
      கொத்தநாரும் இஞ்சினியரும்
அறவாழி அந்தணன் தாள்சேர்ந்தார்க்கு அல்லால்
பிறவாழி நீந்தல் அரிது          
         சிறப்பீனும்  அறம் எச் .எம் பியூன்  
         செல்வமும்   ஈனும் பாட்டி டாக்டர் கதை.       
சிறப்பீனும் செல்வமும் ஈனும் அறத்தினூஉங்கு
ஆக்கம் எவனோ உயிர்க்கு.                                       9.



அறம்செய்ய நேரங்காலம் இல்லை
கொடுப்பதற்கு நீ பணக்காரனாக இருக்க வேண்டுமென்பதோ,பணக்காரன் ஆகும் வரை காத்திருக்க வேண்டும் என்பதோ கிடையாது....
உதவ வேண்டும் என்ற குணத்திற்கு கால, நேரம் அல்லது ஏழை, பணக்காரன் என்பது  கிடையாது பில்கேட்ஸ்                                     
குமணன் தலையைக்கொடுத்தல்
கர்ணன் தங்கக்கிண்ணத்தைக்கொடுத்தல்
பாரி முல்லைக்குத்தேர்கொடுத்தல்
இடனில் பருவத்தும் ஒப்புரவுற்கு ஒல்கார்
கடனறி காட்சி யவர்.
அன்றறி வாம் என்னாது அறம்செய்க மற்று
பொன்றுங்கால் பொன்றாத்துணை
நேரம் கிடைத்த போதெல்லாம் அறம் செய்க
ஒல்லும்வகையான்அறவினை ஓவாதே

                                                                              10.




அறம் செய்ய பொருள் தேவையில்லை மனம் இருந்தால் போதும்
யாவர்க்கு மாம்இறை வற்கொரு பச்சிலை
யாவர்க்கு மாம்பசு வுக்குகொரு வாயுறை
யாவர்க்கு மாம்உண்ணும் போதொரு கைப்பிடி
யாவர்க்கு மாம்பிறர்க் கின்னுரை தானே
அல்லவை தேய அறம்பெருகும் நல்லவை
நாடி இனிய சொலின் 96
பசித்தவன் வயிற்றில் போட்டுவை
சென்னை வெள்ளம், சென்னைசில்க்ஸ் தீ ஓடும்ரயில் கூரை
--பசித்தவன் வயிறு
அற்றார் அழிபசி தீர்த்தல் அஃதொருவன்                                              பெற்றான் பொருள்வைப் புளி
                    சுயநலனும் பொதுநலமும்
  கோழிக் குஞ்சுக்கு சந்தேகம் அம்மா எல்லா மனிதனுக்கும் ஒவ்வொரு பேரிருக்கு நமக்கு மட்டும் கோழின்னு ஒரே பேரு மட்டுமே இருக்கு மனிதன் தனக்காக மட்டும்  வாழறான் நாம பிறர்க்காக வாழறோம். ஏழை செத்தாலும் பணக்காரன் செத்தாலும் பிணம் என்னுதான் சொல்லுவார்கள் ஆனால் நாம் செத்தால் எத்தனைபேரு வைக்கிறார்கள். சிக்கன்65, சிக்கன் மசாலா, சில்லி சிக்கன் சிக்கன் கிரேவி சிக்கன்பிரயாணி
பாயிரம் கூறிய வள்ளுவர் நூலைத் தொடங்கும் போதே இல்வாழ்க்கை
அறனெப் பட்டதே இல்வாழ்க்கை அஃதும்
பிறன்பழிப்பது இல்லாயின் நன்று                                       11.



தந்தைக்கு ஒரு கடன்இருக்குது பெண்குழந்தை
பலூன்,சைக்கிள்,ஸ்கூட்டி ஏன்கேட்டால் அப்பாவின் கடமை என்கிறோம்
ஆனால்அவள்விருப்பப்படி கணவனைத்தேர்ந்தெடுத்தால் மட்டும் எதிர்க்கிறோம் பெற்றோர் லவ் மேரேஜ் இப்போ தந்தையின் அறத்தில் தவறுவது ஏன்   
அதேபோல் மகனுக்கும் ஒருகடமை இருக்கிறது. அது இவனை மகனாகப் பெற்றெடுக்க இவன் அப்பா என்ன தவம் செய்தாரோ என்று ஊரார் மெச்சும்படி செய்வதல்லவோ மகனுடைய அறமாகும்.                                 
உன்னைப் பெற்ற நேரம் விறகுக்கு போயிருந்தால் ஒருசுமை விறகு வந்திருக்கும்.
ஈன்ற பொழுதிற் பெரிதுவக்கும் தன்மகனைச்
சான்றோன் எனக்கேட்ட தாய்.
அதேதாய் மது அருந்துகிறவனைக் கண்டால் வெறுக்கிறாள். என்று அதே வள்ளுவர்தான் ஈன்றால் முகத்தேயும் இன்னாதல் என்று கூறுகிறார்.
என்மாணாக்கன் இடம் கேட்டல் ஏன்டா தம்பி அப்பா அம்மாவை முதியோர் இல்லத்தில் வைத்திருக்கிறாய்                                          12.

             பெண்ணே தைரியசாலி
பெண் தைரியசாலியா ஆம்பளை தைரியசாலியா
பெண் பார்க்க வுரும்போது 5பேறோடு வந்தே
நிச்சியத்தினபோது 50 பேரோடுவந்தே
கலியாணத்தின்போது500 பேரோடு வந்தே ஆனாநான் பாரு தனியா வந்திருக்கேன்
நீ தைரிசாலியா நா தைரியசாலியா                                    
1)மனைவிக்குப்பிடித்தது திருக்குறள் காரணம் நிறைய அதிகாரங்கள் உள்ளன
2) திருக்குறள். விளங்கியும் விளங்காமலும் இருப்பாள்
திருக்குறளில் ஏழு சொற்கள் ஆனால் மனைவியின் ஒரே சொல்லில் எத்தனை அர்த்தங்கள்
சமையல் அறையில் இருந்து என்னுங்க என்றால் சாப்பாடு ரெடி என்று பொருள்
பூக்கடையைக்கண்டவுடன் என்னுங்க என்றால் பூவாங்கிக்கொடுங்க என்று பொருள்
துணிக்கடையில் நின்றுகொண்டு என்னுங்க என்றால் இந்தச்சேலை எனக்குப் பிடித்திருக்கு பணம்கொடுங்க என்று பொருள்
வெளியில் யாராவதுடன் பேசிக்கொண்டிருக்கும் போது என்னுங்க என்றால் அஙகு என்ன வெட்டி ஞாயம் உள்ளே வாங்க என்று பொருள்
இரவு படுக்கை அறையில் என்னுங்க என்றால் ..... செல்லை ஆப்செய்திட்டு தூங்குங்க என்று பொருள் எனவே திருக்குறள் பெண்களும் ஒன்றுதானே   13.       
                    


                   பெண்ணே புத்திசாலி
               இளையான் குடிமாறன் வரலாறு
இல்லதென் இல்லவள் மாண்பானால் உள்ளதென்
இல்லவள் மாணாக் கடை
                ஔவையார் கதை
இருந்து முகம் திருத்தி ஈரோடுபேன் வாங்கி
விருந்து வந்தது என்று விளம்ப- வருந்திமிக
ஆடினாள் பாடினாள் ஆடிப்பழ முறத்தால்
சாடினாள் ஓடோட தான் இப்படிப்பட்ட மனைவி
  மனைவி சரியில்லை என்றால் கெத்து இல்லை
  புகழ்புரிந்த இல்லிலோர்க்கு இல்லை இகழ்வார்முன்
  ஏறுபோல் பீடு நடை                         கற்பு  என்றால்என்ன?
காவல் போட்டால் கற்பைக்காக்க முடியுமா
காதால் கேட்டே கற்பை இழப்பார் எத்தனை பேர்
கண்ணால் பார்த்தே கற்பை இழப்பார் எத்தனை பேர் காரணம்
தொட்டில் குழந்தைமுதல் கட்டில் கிழவன்வரை அனைவரையும் கட்டிப்போட்டிருக்கும் செல்போன் அல்லவா?
சிறைகாக்கும் காப்பெவன் செய்யும் மகளிர்
நிறைகாக்கும் காப்பே தலை                                                14

.
               

                     ஆண்மை
நல்லாண்மை என்பது ஒருவற்குத் தான்பிறந்த
இல்லாண்மை ஆக்கிக் கொளல்1026
பிறன்மனை நோக்காத  பேராண்மை சான்றோர்க்கு
அறன்ஒன்றோ ஆன்ற ஒழுக்கு 146
அறன்வரையான் அல்ல செயினும் பிறன்வரையான்
பெண்மை நயவாமை நன்று 150
                       வேந்தன் அறம்
குடிபுறங் காத்து ஓம்பிக் குற்றம் கடிதல்
வடுவன்று வேந்தன் தொழில் 549                                      
அறவினை யாதெனின் கொல்லாமை கோறல்
பிறவினை எல்லாம் தரும்
அவரே
கொலையின் கொடியாரை வேந்துஒறுத்தல் பைங்கூழ்
களைகட் டதனோடு நேர்.550                                            15.




ஒத்தது அறிவான் உயிர்வாழ்வான் மற்றையான்
செத்தாருள் வைக்கப் படும்.214

உலகத்தோடு ஒட்ட ஒழுகல் பலகற்றும்
கல்லார் அறிவிலா தார்.140

எவ்வது உறைவது உலகம் உலகத்தோடு
அவ்வது உறைவது அறிவு426

செயற்கை அறிந்த கடைத்தும் உலகத்து
இயற்கை அறிந்து செயல் 637

புண்ணியமும் பாவமும் சொல்லச் சொல்லக் குறையும்

யாருக்கு அறம் கூறத்தேவையில்லை
காந்தியின் மூன்று குரங்குகள்
 பிறர்மறை யின்கண் செவிடனாய்த் திறனறிந்து
 ஏதிலார் இல்கண் குருடனாய்த் தீய
 புறங்கூற்றிந் மூங்கையாய் நிற்பானேல்
 அறங்கூற வேண்டா அவர்க்கு நாலடியார்.                              16.




இன்றுகொல் அன்றுகொல் என்றுகொல் என்னாது
பின்றையே நின்றது  கூற்றம் என்றெண்ணி
ஒருவுமின் தீயவை ஒல்லும் வகையால்
மருவுமின் மாண்டார் அறம்                                


திருக்குறள் வழிபாட்டிற்கு  உரியது. நம்பிக்கையுடன் நாள்தோறும்  சிறிது நேரமாவது படிப்பதல்ல ஓதவேண்டும் தொல்காப்பிய வேரை விளக்கமுறச்செய்யும்
திருக்குறளை நேசிப்போம்
திருமந்திரத்தை யோசிப்போம்
திருவாசகத்தை பூசிப்போம்
மூவர் தமிழும் வளர்க்கும்
தாமரைக்கோவிலை சுவாசிப்போம். என்று நன்றி கூறி அமைகிறேன் வணக்கம். 17.









No comments:

Post a Comment