Sunday 8 January 2017

புறப்பொருள்- புறத்திணை



                  இன்றைய இலக்கணம்5-01-16
                       புறப்பொருள்
புறம் என்றால் வெளியே,முதுகு, சுற்று, பக்கம், வீரம்,புறத்திணை, புழக்கடை, இறையிலி நிலம்,- வரியில்லா நிலம்-அன்னியம், அலர் மொழி, காலம் உடம்பு எனப்பல பொருள் உள.இங்கு புறத்திணை, வீரம் என்ற பொருளில் கையாளப்படுகிறது.
      ஒருவனது கல்வி,செல்வம்,வீரம்,புகழ், கொடை,சாதனை ஆகியவற்றை எடுத்துக் கூறுவது.இத்திணையில் ஒருவனது பெயர் வெளிப்படையாகக் கூறப்படும்.
     புறத்திணை மருங்கின் பொருந்தின் அல்லது
     அகத்தினை மருங்கின் அளவுதல் இலவே.-தொல்காப்பியம்
புறத்திணை ஏழு என்று தொல்காப்பியமும், பன்னிரண்டு என்று புறப்பொருள் வெண்பாமாலை,பன்னிருபடலம் போன்ற நூல்களும் உரைக்கின்றன.
முதலில் தொல்காப்பியம் கூறுவதைக் காண்போம்
  மலையும் மலைசார்ந்த இடமும் ஆகிய குறிஞ்சித்திணைக்குப் புறம்பாக நிரை கோடலாகிய வெட்சியும், நிரைமீட்டலாகிய கரந்தையும் கூறப்படுகிறது.
     காடுறை உலகமாகிய முல்லைக்குப் புறம்பாக மண்ணாசை கொண்டு போர்புரியச் செல்லும் மன்னன் வீரம், அவனை எதிர்த்து நிற்கும் வேந்தன் வீரம் பற்றியும் பேசுவது வஞ்சித்திணையாகும்.
     புனல்சார்ந்த உலகமாகிய மருதத்திணைக்குப் புறம்பாக மதிலை அழிக்கும் உழினைத்திணையும் அதனைக் காக்கின்ற நொட்சித்திணையும் கூறப்படுகிறது.
     மணல் சார்ந்த நெய்தல் திணைக்குப் புறம்பாக சமவலிமை உடைய இருபெரும் வேந்தர்கள் செய்யும் போரினைத் தும்பைத்திணை என்றும் கூறுகின்றார்.
     பாலைத்திணைக்குப் புறம்பாக வாகைத்திணையைக் கூறுகிறார்.
பெருந்திணைக்குப் புறம்பாக நிலையாமையைக் குறிக்கும் காஞ்சித்திணை கூறப்படுகிறது.
     கைக்கிளைக்குப் புறம்பாக பாடாண்திணை கூறப்படுகிறது.
மணல் சார்ந்த என்பதால் பாலையை நினைக்கூடாது.தொல்காப்பியர் கூற்றுப்படி பெருமணல் உலகம் என்பது நெய்தல் நிலத்தையே குறிக்கும்
     இனி மற்றநூல்கள் கூறும்முறைகளைப் பற்றிப் பார்ப்போம். பன்னிரு படலத்தைப் பழிப்பின்றி உணர்ந்த ஐயானாரிதனார் தாம் இயற்றிய புறப்பொருள் வெண்பாமாலையில்
புறப்பொருளைப் பன்னிரண்டாகப் பகுத்துக் கூறியுள்ளார்.
  அவை
வெட்சி,கரந்தை,வஞ்சி,காஞ்சி,உழினை,நொச்சி,தும்பை,வாகை,பாடாண்,பொதுவியல்,
கைக்கிளை,பெருந்திணை எனப்பன்னிரண்டாகும்.இத்திணைக் கருத்துகளைப் பழம்பாடல் ஒன்று பின்வருமாறு கூறுகிறது.
          வெட்சி நிரைகவர்தல் மீட்டல் கரந்தையாம்
          வட்கார்மேற் செல்வது வஞ்சியாம்—உட்காது
          எதிரூன்றல் காஞ்சி எயில்காத்தல் நொச்சி
           அதுவளைத்தல் ஆகும் உழினை—அதிரப்
பொருவது தும்பையாம் போர்க்களத்து மிக்கோர்
செருவென் றதுவாகை யாம். என்று கூறுகிறது.

   போர்நெறி முறைகளைப் பற்றி சங்க இலக்கியங்கள் பலவாறு கூறுகின்றன.



No comments:

Post a Comment