Wednesday 17 August 2022

முனைவர் யார் தொல்காப்பியம் கூறுவது

 

          (தொல்காப்பியர் கூறும்முனைவர்)

முனைவன் பாதநன் மலர்பிரிந் திருந்துநான்
முட்டிலேன் தலைகீறேன்-  மணிவாசகப்பெருமான்

வினையின் நீங்கி விளங்கிய அறிவின்

முனைவன் கண்டது முதல்நூலாகும் (தொல்.பொருள்,மரபு 95)

    இதன் விளக்கம்: இருள்சேர்ந்த நல்வினை தீவினை எனும் இன்ப துன்பங்களை உண்டாக்கும் இருவகை வினையும் சேராது நீங்கி உள்ள, தூய அறிவினை உடையவன்; அறிவு விளக்கம் பெற்றவன் முனைவன் ஆவான். அவன் ஆள்வினை ஊழ்வினை , சூழ்வினை எனப்பட்ட வினைகளில் சூழ்வினை இல்லாதவன். இப்படிப்பட்ட முனைவன் தன் அறிவுக் கண்ணால் கண்ட உண்மைகளை வெளிப்படுத்தும் நூல் முதல்நூலாகும்.

   தமிழில் தோன்றிய நூல்களை அதன் உருவாக்கத்தைக் கருத்தில் கொண்டு இரண்டு வகையாகப் பார்த்தனர். நூலாசிரியர் தாமே ஆய்ந்து கண்ட உண்மைகளைக் கூறும் நூல் முதல்நூல். முதல்நூலைப் பின்பற்றித் தன் கருத்துகளையும் இணைத்து எழுதப்படும் நூல் வழிநூல். தொல்காப்பியம் நமக்குக் கிடைத்துள்ள நூல்களில் காலத்தால் முற்பட்டதேயன்றி அதுதான் தமிழின் முதல்நூல் என்று கருதிவிடுதல் கூடாது. முதல்நூல் பற்றித் தொல்காப்பியர் கூறும் கருத்தை நன்னூல் வழிமொழிகிறது. . 

   இதில் முனைவன்என்ற சொல்லுக்கு உடல் உயிரைத்தவிர அனைத்தையும் துறத்தல், ஐம்புலன் அடக்கம், உடல்மனத் தூய்மை நாட்டுநலனை உறுதியோடு தியானித்து அதை அடைதல், கொலை முதலான அறத்திற்கு ஒவ்வாத செயலைச் செய்யாதிருத்தல், போர் முதலிய வன்னையைச் செயற்படுத்தாது இருத்தல் இதைக்கடைப்பிடிப்பவனே முனைவன் என்று சான்றோர் பொருள் உரைத்துள்ளனர் முனைவர் என்ற சொல்லில் ஆண்பெண் என்ற பகுப்பு இல்லை

   பேராசிரியர், க.நெடுஞ்செழியன் "ஆசீவகம் என்னும் தமிழர் அணுவியம்" என்னும் டாக்டர்’(DOCTORATE) எனபதற்கு தமிழில் பண்டாரகர் என்ற சொல் உண்டு.என்றார்.  பண்டாரகர் என்ற  சொல்லைப்  பயன்படுத்தியவர் தேவநேயப் பாவாணர் ஆவார்.   இந்தச் சொல் தொன்மை தொல்காப்பிய வரிகளில் உள்ள பொருளைப் பற்றிப்  பிறந்த சொல்லே முனைவர். இந்த முனைவர் என்ற தமிழ் சொற்களுக்குச் சொந்தக்காரர் திரு இறையரசன் என்ற ஆசான்

    இது கருப்பொருள் ஒன்றில் தோய்ந்து, அதன் வழியில் சென்று, அதனை நிலை நிறுத்தும் பொருட்டு,அதன் நுண்மை கண்டறிந்து சொல்வது. அக்கருத்து பிறரால் முன்னரே சொல்லப்படாதிருத்தல் வேண்டும். ஆய்வை முனைந்து செய்து அரிய கருத்தைச் சொல்வதால் முனைவர் என்றனர்  அவ்வாறு செய்வோர் எத்துறையினராயினும் அவர்களுக்கு ‘Ph.D’ என்ற பட்டம் கொடுக்கப்படும் ஆராய்ந்து கண்ட உண்மைகளைத் தந்து பெறும் பட்டம் முனைவர் பட்டம்

அதாவது Doctor of philosophy என்பதன் சுருக்கம். Doctorate எனவும் சொல்லப்படுகிறது. Ph.D, Doctorate என்பதெல்லாம் ஆங்கிலத்தின் தாக்கம். அப்பட்டம் பெற்றோர் தன் பெயருக்கு முன்னொட்டாக Dr. என குறிப்பிட்டுக் கொள்வர்

மதிப்புறு முனைவர் பட்டம் அல்லது கௌரவ டாக்டர் பட்டம் (Honorary degree), தொழில் துறை, சமூக முன்னேற்றம், அரசியல், கலை, இலக்கியம், சமுதாயப் பணி போன்ற துறைகளில் சிறப்பாகப் பங்களித்த வாழ்நாள் சாதனையாளர்களைப் பாராட்டும் முகமாகப் பல்கலைக்கழகங்கள் மதிப்புறு முனைவர் பட்டங்களை வழங்கிப் பெருமைப்படுத்துகின்றன.

இது போன்ற மதிப்புறு பட்டங்களைப் பெற்றவர்கள் தங்கள் பெயருக்கு முன் இணைத்துக் கொள்வதில்லை என்பது மரபு பதிவு  தொல்காப்பியச் செம்மல் புலவர் ஆ.காளியப்பன் 9788552993

 

 

No comments:

Post a Comment