Friday 13 March 2020

இறைநெறி கொள்கைகளும் கோட்பாடுகளும் தொல்காப்பியத்தில்


             தொல்காப்பியத்தில்  இறைநெறி கொள்கைகளும் கோட்பாடுகளும்  
                   புலவர் ஆ.காளியப்பன்.    அ.பே.எ. 9788552993
முன்னுரை:
    ஒல்காப் பெரும்புகழ்த் தொல்காப்பியர் இயற்றிய தொல்காப்பியம் செந்தமிழ்ப் புலமை மிக்கோர் பாராட்டும், நமக்கு முழுமையாய்க் கிடைத்த முதல்நூலாகும். மரபு நிலை திரியின் பிரிது பிரிதாகும் என்பதை நன்கு உணர்ந்து மயங்கா மரபின் எழுத்து முறை காட்டியவர் தொல்காப்பியர். அவர் பழந்தமிழர்களின் இறை உணர்ச்சியையும், சமயக் கோட்பாடுகளையும் தத்துவ அறிவையும் தமது நூலில் வெளிப்படையாகவும் குறிப்பாகவும் கூறியுள்ளார். மக்கள் தங்கள் மனப்பாங்கு,
அறிவுநிலை, வாழும் சூழ்நிலைக்கேற்ப  ஒவ்வொரு கடவுளை வழிபட்டுத் தங்கள் கடமைகளை ஆற்றி வந்தனர். அவர்கள் வழிபடும் தெய்வங்கள் அவரவர்களுக்குப் பக்கத்துணையாக நின்று காக்கட்டும் என்று தொல்காப்பியர்
வழிபடு தெய்வம் நிற்புறம் காப்பப்                                                                                                                           
பழிதீர் செல்வமொடு வழிவழி சிறந்து                                                                                                              பொலிமின்!   (தொல்.பொருள்.செய்யுள்422) என்று வாழ்த்துகிறார். நானும் அவ்வாழ்த்தைத் தலைமேற் கொண்டு தொல்காப்பியத்தில்  இறைநெறி கொள்கைகளும் கோட்பாடுகளும் பற்றி விளக்க முயல்கின்றேன்.

தொல்காப்பியர் இறை நம்பிக்கை உடையவர் என்பதற்கு அகச்சான்றுகள்
காமப்பகுதி கடவுளும் வரையார்” (தொல். நூ. 1029)
கொடிநிலை கந்தழி வள்ளி என்ற
வடுநீங்கு சிறப்பின் முதலான மூன்றுங்  
கடவுள் வாழ்த்தொடு கண்ணிய வருமே” (தொல். நூ. 1034)
அமரர்கண் முடியும் அறுவகை யானும்” (தொல். நூ. 1027) என்று, தேவர் நிலைமையில் வைத்து வாழ்த்துதற்குரிய அறுவகை நிலையான சான்றோர், புலவர், வேந்தர், ஆன், மழை, உலகம் என அறுவகையில் வாழ்த்துதல் மரபெனவும்தெய்வம் சுட்டிய பெயர் நிலைக் கிளவிஎன்றும் தொல்காப்பியர் சுட்டுகின்றார். தெய்வம்என்ற சொல் தொல்காப்பியத்தில் ஒன்பது  இடங்களில் இடம்பெற்றுள்ளது. இறை’, ‘இறைவன்என்ற சொற்கள் பண்டைய காலத்தில் தலைவனைக் குறிக்கும் சொல்லாகவும் காணப்படுகிறது.  .   1

இறைநெறி தோன்றக்காரணம்: தொடக்க காலத்தில் இயற்கையின் அச்சந் தரும் செயல்களே மனிதனை கடவுள் நெறிக்கு இட்டுச் சென்றது என்பது மானிடவியலாளர்  சிலரின் கருத்தாகும். மனிதன் தன் ஆற்றல் ஓர் வரம்புக்கு உட்பட்டது என்பதை உணர ஆரம்பித்த நிலையில், கடவுள் கோட்பாடு உருவாகியது என்பர். தன் அறிவுக்கும், ஆற்றலுக்கும் முறையே புலப்படாத உட்படாதவற்றின் மீதான அச்சம் காரணமாக  மனிதன் முதலில் இயற்கையை வழிபடத் தொடங்கி பின்னர் கடவுள் நம்பிக்கை கொள்ளத் தொடங்கினான். அவை வழிபாட்டு மரபாய்ப் பின்னர் மாறியது                                                                                                      
                       பண்டைய  தமிழரின் தெய்வ வழிபாட்டு முறைகளுக்குக் காரணமாக                         அச்சம், முற்காப்பு, நன்றியறிவு, பாராட்டு, அன்பு, கருதுகோள், அறிவு வளர்ச்சி ஆகியவற்றின் அடிப்படையில் இறை வழிபாடு தோற்றம் பெற்றதாகவும் குறிப்பிடுகின்றார். அவ்வடிப்படையில் பண்டைய தொல்காப்பிய காலத் தமிழ்ச்சமூக தெய்வக்  கோட்பாடுகள் ஐந்நில மக்கள் வாழ்வியலுக்கேற்ப உருவாகி இருக்கின்றன
  தெய்வம்என்பது கருப்பொருளில் ஒன்றாகக் கூறப்பட்டுள்ளது. கருப்பொருளானது நிலத்தில் காலத்தால் கருக்கொள்ளும் பொருளாகும். இவை தோன்றி நின்று மறைவனவே யாகும். இதன் மூலம் தெய்வம்என்று குறிப்பிடப்படுவது இறந்த முன்னோர்களே எனக் கருதவும் இடமுண்டு. அவர்கள் நினைவாக கற்களை  நட்டு (நடுகல்) அவற்றுக்குப் பூசனைகள் செய்துள்ளனர். (காட்சி கால்கோள் நீர்ப்படை நடுகல் சீர்த்தகு மரபின் பெரும்படை வாழ்த்தல்’). இவற்றால் கூட பல தெய்வ வழிபாடுகள் தோன்றியிருக்கலாம்
வெறியாடல் தமிழரின் வழிபாட்டு முறைகளில் மிகவும் பழமையானது வெறியாடலாகும். இவ்வெறியாடல் தொல்காப்பியர் காலத்திற்கு முன்பே இருந்திருக்க வேண்டும் என்பதற்கு,                                                                                                 ‘‘வெறியறி சிறப்பின் வெவ்வாய் வேலன்
வெறியாட் டயர்ந்த காந்தளும்’’(தொல்.புறத்.நூற்பா, 63)     என்ற நூற்பாவே சான்றாகும்.
நிலத்திற்கு ஏற்ப வழிபாடு                                                                       மாயோன் மேய காடுறை உலகமும்                                                      சேயோன் மேய மைவரை உலகமும்
 வேந்தன் மேய தீம்புனல் உலகமும்
 வருணன் மேய பெருமணல் உலகமும்
 முல்லை குறிஞ்சி மருதம் நெய்தல் எனச் சொல்லிய முறையாற் சொல்லவும் படுமே” (தொல். நூ. 951) என்றும் .                                        2

மறம்கடை கூட்டிய துடிநிலை சிறந்த கொற்றவை நிலையும் அத்திணைப் புறனே. (தொல். நூ. 1005)  என்றும் தொல்காப்பியம் கூறுகிறது..           
     ஐந்திணைகளாகப் பகுக்கப்பட்டிருந்த பண்டைத் தமிழகத்தில் குறிஞ்சிக்குச்சேயோன்என்ற முருகனும், முல்லைக்கு மாயோன்என்ற திருமாலும், மருதத்திற்கு வேந்தன்என்று குறிப்பிடப்படுகின்ற இந்திரனும்(ஆய்வுக்குரியது), நெய்தலுக்கு வருணன்  என்ற தெய்வமுமாக நானிலக் கடவுளைத் தொல்காப்பியர் வெளிப்படுத்துகின்றார் பாலை நிலத்திற்குக் கொற்றவையும் (காளி என்றும் அழைப்பர்) தெய்வமாய் இருந்துள்ளது தாம் வழிபடுகின்ற தெய்வம் ஊரைக் காக்கும் என்ற நம்பிக்கை தொல்காப்பியர் கால மக்களின் நம்பிக்கையாக இருந்தது, திணைத் தெய்வங்கள் வழிவழி வணங்கப்பெற்று, காலவோட்டத்தில் தமிழர் வழிபாட்டு மரபில் மாற்றங்கள் நிகழ்ந்து புறச்சமயங்கள் வந்து கலந்து கலப்பு வழிபாட்டு மரபுதோன்றிவிட்டது.                                                                      வாழ்வியலுக்கேற்ப வழிபாடு:போர் மரபில் வழிபாடுகளும் நம்பிக்கைகளும் தோன்றி  யிருக்கின்றன என்பதும் தொல்காப்பியத்தில் காணும் வழிபாட்டு மரபு கோட்பாடுகளாம். பண்டைய காலப் போர்மரபில் வழிபாட்டுச் சாங்கியங்கள் நிகழ்ந்துள்ளதைத் தொல்காப்பியம் உறுதி செய்கிறது.
காட்சி கால்கோள் நீர்ப்படை நடுகல்
 சீர்த்தகு சிறப்பிற் பெரும்படை வாழ்த்தல் என்று
 இருமூன்று வகையிற் கல்லொடு புணர  (தொல். நூ. 1006)
என்று தொல்காப்பியம்போர்க்களத்தில் இறந்துபட்ட வீரரை நினைத்து நடுகல் நட்டு வழிபட்ட முறையைக் குறிப்பிடுகின்றது. சங்க இலக்கியங்களிலும் இத்தகு நடுகல் வழிபாட்டு முறையைக் காண முடிகின்றது. வீரமரணம் அடைந்தவர்களுக்கே நடுகல்நட்டு வழி வழியாக வழிபாடு செய்யப்பட்டு வந்தது எனத் தொல்காப்பியர்   நடுகல் எடுத்தலுக்குரிய இலக்கணத்தைக் கூறியுள்ளார். கடவுள் கோட்பாடுகள் தோன்றுவதற்கு முன்னரே தமக்கு முன்னர் வாழ்ந்து தம் குடிகளைக் காத்து மடிந்த  வீரர்களை மூத்தோராகக் கருதித் தலைமுறை தலைமுறையாகத் தொடர்ந்த மரபே நடுகல் வழிபாடு என அறிய முடிகிறது. காட்சி கால்கோள் நீர்ப்படை முதலிய முறைகள் வீரனுக்கு நடுகல் நடுதலுக்கு உரியவை. அவற்றை ஒரு பெண்மணிக்குத் தெய்வத் திருவுருவு அமைப்பதற்குப் பயன்படுத்திப் பத்தினி வணக்கத்தைத் தமிழ்நாட்டில் காவியம் மூலம் தோற்றுவித்தவர் இளங்கோ, கோவில் மூலம் தோற்றுவித்தவன் செங்குட்டுவன். போரில் இறந்த வீரனுக்கு நடுகல் நட்டு அவனுடைய வீரத்தைப் போற்றினார்கள். அதற்குரிய கல்லை மலைக்குச் சென்று,   3

தேர்ந்தெடுத்து அதைக் கொண்டு வந்து நீரில் இட்டு நீர்ப்படை செய்து பிறகு அந்த வீரனுடைய பெயரையும் புகழையும் அக்கல்லில் எழுதி அதை நடவேண்டிய இடத்தில் நட்டு மக்கள் எல்லோரும் சிறப்புச் செய்து வாழ்த்துவார்கள். நடுகற் கோவில்களைப் போன்றே அரசனைப் புதைத்த இடத்தில் சமாதிக் கோவில்கள் உருவாயின இக்கோவில்கள் பள்ளிப்படைக் கோவில்கள் என்று கல்வெட்டுகளில் குறிக்கப் பெறுகின்றன. அரசன் இறந்த பின்னர் அன்பு மிகுதியால் அவனை வழிபட்டதும், கண்ணால் காணும் இயற்கைக் கூறுகள், நிகழ்ச்சிகள் ஆகியவற்றின் மூலம் தெய்வங்கள் கருதுகோளின் அடிப்படையிலும் தோற்றம் பெற்றன. அதுமட்டுமன்று அறிவு வளர்ச்சி பெற்ற பின்னர் மறுமையும், கடவுள் உண்மையும் கண்டு நம்பிக்கையின் அடிப்படையிலும் தெய்வம்தோன்றிற்று என்று தேவ நேயப்பாவாணர் அவர்கள் பழந்தமிழரிடம் உருவாகிய தெய்வம்பற்றிய சிந்தனையைப் பற்றி விளக்குவதைக் காண முடிகிறது. இத்தகைய வழிபாட்டு முறையே பழந்தமிழரின் வழிபாட்டு முறையாம். மேற்கூறப்பட்டவையே தொல்காப்பியம் குறிப்பிடும் வழிபாட்டு முறையாம்
நிலத்தின் நால்வகைப் பகுப்பு நிலைத்தது இல்லை.காலவட்டத்தில் எல்லாம் மாறக்கூடியது. இதனைத் திணைமயக்கம் என்று தொல்காப்பியர் குறிப்பிடுகிறார். ஒருகாலத்தில் எல்லாம் அழிந்து ஒழிந்து போகும்.இக்காலமே ஊழிக்காலம் அவ்வூழிக்கு முதல்வனாக நிற்கும் ஒருவனே கடவுள் என்ற எண்ணமும் தோன்றியது. இவ்வும்மையைத் தொல்காப்பியரும் ‘ஆங்ஙனம் விரிப்பின் அளவிறந்தனவே                                                                 பாங்குற உயர்ந்தோர்  பன்னுங் காலை  (செய்யுளியல் -50) மேலும் எல்லா மக்களும்  வானுலகம், அமரர், கூற்றுவன், பேய் முதலியவற்றிலும்  நம்பிக்கை   கொண்டிருந்தனர்.  முடிவுரை: உருவமும் பெயரும் இல்லாத முழுமுதற் கடவுள்  தம் அன்பர்கள் அன்பால்  அழைத்த ஏதாவது ஒரு பெயரைக் கொண்டு,அவர் நினைத்த வடிவைத் தன் வடிவாய்  ஏற்றுக் கொண்டு அவர்களது இதயமாம் மலர்மிசை ஏகுவான்.இக்கட்டுரை உருவாக பல நுனித்தகு புலவர்களின் நூல்கள் உதவின. அவ்வறிஞர்களின் மாணடி போற்றி நிறைவு செய்கிறேன்.                பயன்பட்ட நூல்கள்
1 தொல்காப்பியச் சிந்தனைகள் (வித்துவான் வெள்ளைவாரணனார்) சாரதா பதிப்பகம்           
2தொல்காப்பியம் பொருளும் விளக்கமும்(சொல்லாக்கியன்) சொல்லாக்கியம் வெளியீடு2018
3. தொல்காப்பியம் பொருளதிகாரம்,இளம்பூரணனார் உரை சாரதா பதிப்பகம் CODE 0118
4 பாவாணர் எழுதிய தமிழர்மதம்                                          4
                           
              
                         
                       என்னைப்பற்றி                                             காளியப்பன் ஆகிய நான்  தவத்திரு சாந்தலிங்க அடிகளார் தமிழ்க் கல்லூரியில் புலவர் பட்டம் பெற்றவன். அதன் பின் BLit,  M.A BEd MEd  பட்டங்களுடன் இந்தியில் டிப்ளமோ பெற்றுள்ளேன். ஆசிரியர் பணிக்கு முன் பேருந்து நடத்துனர்,பயணச்சீட்டுப் பரிசோதகர் பணி, அஞ்சல் துறையில் கிளை அஞ்சலக அதிகாரியாகப் பணி. அப்போது கோவைக் கோட்டத்திலேயே சிறந்த BPM என்ற பாராட்டுப் பத்திரத்தை SSP இடம் பெற்றுள்ளேன்.உடுமலை காந்திகலாநிலையத்தில் 25 ஆண்டுகள் பட்டதாரி, முதுகலை  ஆசிரியர் உதவித் தலைமையாசிரியராகப் பணியாற்றி உள்ளேன். மாநில அளவிலும் மாவட்ட அளவிலும் மாணாக்கர்களைத் தேர்ச்சி பெற வைத்தமைக்கு முதன்மைக் கல்வி அதிகாரியிடம் பாராட்டுப் பத்திரம் பெற்றுள்ளேன். கொச்சி மாநகர் 18 மலையாள இளைஞர்களுக்கு 60 நாட்கள் அங்கேயே தங்கி தமிழ் எழுதப் படிக்க கற்பித்ததால் கொச்சி ஐக்கியத் தமிழ்ச்சங்கம் என்னைப் பாராட்டி,  எர்ணகுளம் உயர்நீதி மன்ற நீதிபதி நீதியரசர் P.S கோபிநாதன் கையால் தொல்காப்பிச்செம்மல் என்ற விருதினை வழங்கிச் சிறப்பித்தது. 2ஆண்டுகள் தனியாகவும் 3 ஆண்டுகள் பேரூர் தவத்திரு சாந்தலிங்க அடிகளார் தமிழ்க் கல்லூரியுடன் இணைந்தும் பாமரனும் தொல்காப்பியத்தை உணர வேண்டும் என்னும் எண்ணத்தில் பணியாற்றி வருகின்றேன். தொல்காப்பியர் தமிழ்ச்சங்கமம்(அரசு ஏற்பளிப்பு எண்110/2018)என்ற அமைப்பின் மூலம் தொல்காப்பியர் தொடர்பான கருத்துகளை முனைவர் பட்டம் பெற்றவர்களைக் கொண்டு 32 அமர்வுகளை நிகழ்த்தி உள்ளேன். ஒவ்வொரு திங்களும் தலை ஞாயிறு அமர்வுகளை நடத்தி வருகிறேன். அதற்கான ஆக்கமும் ஊக்கமும் அளித்து வருபவர் தவப்பெரும் திரு சாந்தலிங்க மருதால அடிகள் என்பதை நன்றியுடன் பதிவு செய்கிறேன்.புதுச்சேரி முனைவர் இளங்கோவன் நியுசெர்சி முனைவர் நாச்சி.க.நிதியுடன் இணைந்து உலகத்தொல்காப்பிய மன்றம்   என்ற அமைப்பின் மூலம் தொல்காப்பியம் உலக முழுதும் அறியப்பாடு பட்டு வருகிறேன். tholkappiyam.org  என்ற இணையதளம் மூலம் தொல்காப்பியம் சார்ந்த கருத்துகளைப் பரப்பி வருகிறோம். எனது வாழ்க்கை வரலாற்றினைப்  பேரூர் கல்லூரி கொங்கு நாட்டு யாப்பறி புலவர்கள் என்ற நூலாக வெளியிட்டு என்னைச் சிறப்பித்து உள்ளது. கோவை நகரில் ஓடும் ஊர்திகளின் பதிவெண்களைத் தமிழ் எண்உருக்களில் எழுத வைக்க முயற்சி செய்கிறேன். அதற்காக ஆவன செய்வதாக தமிழ்வளர்ச்சித்துறையும் கடிதம் மூலம் எனக்குத் தெரிவித்து அதன்படி செயலும் புரிந்து வருகிறது. எனது பிறந்த நாள்13.05.1954                          5





தொல்காப்பியச் செம்மல்
புலவர்ஆ.காளியப்பன்,க.மு,.கல்.மு.,
தலைவர் தொல்காப்பியர் தமிழ்ச்சங்கமம்
முத்தம்மாள் நிலையம்,
பூலுவபட்டி(அஞ்சல்),
கோயமுத்தூர் 641101.
அலைபேசி 9788552993 / 8610684232                                                           
www tholkappiyam.org
 pulavarkaliappan.blogspot.in                                             

1 comment:

  1. நேரிசை வெண்பா

    கற்றோர்க்குத் தெள்ளமுதம் கற்போர்க்குக் கோடிவிழி
    மற்றோர் மருள்கெடுக்கும் மாமருந்து - கொற்ற
    முருகதா சக்குரவன் மூதறிவாற் சொன்ன
    இருமூன் றிலக்கண நூல்.

    ReplyDelete