Sunday 28 April 2019

வள்ளுவன் தந்த சொத்துகள்பத்து


        வள்ளுவன் தந்த சொத்துக்கள் பத்து

                       தொல்காப்பியச் செம்மல்
                   புலவர்.ஆ.காளியப்பன் க.மு.,கல்.மு.,                                            

     











        









           


       





      





                  தொல்காப்பியர் பேரவை
                  கோயமுத்தூர் 9788552993




     



          நூல் கிடைக்கும் இடம் 
       புலவர்.ஆ.காளியப்பன் க.மு.,கல்.மு.,                                            
      தலைவர் தொல்காப்பியர் பேரவை,
      முத்தம்மாள் நிலையம்,
      79(1) பூலுவபட்டி(அ.நி)
      கோயம்புத்தூர் 641101
      அலைபேசி 9788552993
------------------------------------------------------------------------------------------------------------
   விலை    ; விருப்பப்பட்டது(தொல்காப்பியர் பேரவை வளர்ச்சிக்கு)
  பதிப்பு     :தி.பி 2050 விகாரி மேழம்(சித்திரை) 14-04-2019
  உரிமை   : ஆசிரியருக்கே
  நூலின்பெயர்      : வள்ளுவன் தந்த சொத்துக்கள் பத்து
  பக்கங்கள்   : 20
  தட்டச்சு    : புலவர்.ஆ.காளியப்பன்
 வெளியீடு   : தொல்காப்பியர் பேரவை,
                     முத்தம்மாள் நிலையம்,
                     79(1) பூலுவபட்டி(அ.நி)
              கோயம்புத்தூர் 641101
              அலைபேசி 9788552993
-------------------------------------------------------------------------------------------------

     


                                                                                                                 

                                                                                                                              
                                                                                                                                                                      

















              

                    உணர்வு தந்தார்

                   
                   







                                                                                                                                                                                                                                                                                               
       
        

       உயிர்தந்தார்

  













                                                                                                                                               



     இருவருக்கும் படையல் இந்நூல்








                                 





                               என்னுரை     
முந்தையரும் தந்தையரும் தம் பிந்தையர் சிறந்து வாழச் 
 சொத்துக்கள் சேர்த்து வைப்பர். அறப்படியோ மறப்படியோ
சேர்த்திருப்பர் அறத்தால் வந்த பொருள் இன்பம் ஈனும்
மறத்தால் வந்தவை கள்ளுக்கும், கள்ளர்க்கும்,    
வேசையருக்கும் செலவு செய்து அழியும். அழியாச்   
சொத்து அகிலத்தில் உண்டோ? அதுதான் வள்ளுவன் தந்த உடைமைகள் பத்து. பத்து உடைமைகளைப் பத்து அதிகாரங்களில் தந்துள்ளார்.  அவற்றின் பொருளைப் பாமரரும் அறிந்திடப் பாவடிவில் தந்துள்ளேன். அனைவருக்கும் பயன்படும் என நினைக்கிறேன். அத்துடன் பிணியின்றிப் பல்லாண்டு வாழ என் பட்டறிவால் அறிந்ததை தமிழ்நெடுங்கணக்கில் உள்ள 31  எழுத்துக்கள் வரிசையில் சிறிய ஆத்திசூடியாய்த் தந்துள்ளேன்.







                      


























                                             அடக்கமுடைமை
பண்பான மனிதன் பாரினில் யாரெனில் 
    பணிவோ டடக்கம் பனிமொழி உடையான்
திண்ணிய மனமும் திடமான மெய்யும் 
    திக்காத நாவும் திசைமாறிச் செல்லாது
நண்ணிய வழியில் நாடியே உய்ப்பது
    நற்றமிழ் வள்ளுவன் நாட்டிய அறத்துள்
விண்ணினும் உயர்ந்து விளங்கு நல்லடக்கம்
   வேண்டிய பொழுது விரும்பிய நல்குமே

தருநிழல் தன்னில் தங்க வைப்பது
     அருநர கிடையே ஆழ்த்தா திருப்பது  
வருபொருள் தன்னைக் காப்பது  போல
      வருந்தியே காக்க ஆக்கமாம் அடக்கத்தை  
பொருப்பினைக் காட்டிலும் உயர்ந்து நிற்பது
      பொறுமையும் அடக்கமும் பொருந்தி நிற்பது
பொருள்தனைப் பெற்றவன் பணிதல் என்பது
      பொன்மேல் மெருகு பூசுவ தாமே 

உறுப்பைந்தும் உள்வாங்கும் ஆமைபோல் இப்பிறப்பில் 
     ஐம்பொறி தன்னை அடக்கி வாழ்பவன்
மறுபிறவி ஏழிலும் மகிழ்வோ டிருப்பான்  
      மணமிகு சுவையோடு சொல்லினை அடக்கான் 
 செறுநர் பலராகிச் சீரழிந்து போவான்
      சினம்நீங்கி கற்றுணர்ந்து அடங்கியான் பிறவி
அறுத்து பேரின்பம் பெறுவதோ  டிப்புவியில்
      அல்லலின்றி அளவிலாப் புகழ்பெறு வானே.

















             

                                                        அருளுடைமை      
அருளெனப் பட்டது அனைத்துயிர் மாட்டும்
           அன்பொடு இரக்கம் அளாவி நிற்பது
பொருளெனப் பட்டது பதடிகள் கரத்திலும்
           பொருந்தி நின்று பொல்லாங்கு செய்வது
ஒருவழி  இல்லையே அருளது போல
           உற்ற துணையாய் எற்றைக்கும் வருவது
திருவருள் கூடும் தேவர் உலகில்
         தி்டமுடன் சேர்க்கும் அருளது தானே.

தன்னுயிர் அஞ்சும் தீவினை இல்லையே
          மன்னுயிர் மீதினில் கருணை உள்ளோர்க்கு
இன்மை மறுமை இரண்டு உலகிலும்
         இன்னல் அகற்றி இன்பம் தருவது
அன்னம் அளித்து அரும்பசி களைந்தது
         அருளால் வந்த அமுத சுரபியே
மன்னன் மனுநீதி மாட்டிடம் கொண்டதும்
         மருளது நீங்கிய அருளது தானே

பொருளெனும் செவிலி  போற்றி வளர்க்கும்
           அருளெனும் குழந்தையைப் பெற்றது அன்பே
பொருளைப் பெரிதாய் நினைக்கும் புல்லரே
            பொல்லாங் கெல்லாம் புவியில் செய்வார்
பொருளை இழந்தான் மீள்வான் ஒருநாள்
            அருளை இழந்தான் ஆழ்ந்தே போவான்
அருளின் ஆற்றல் அளத்தற்கு அரியது
          அகில இயக்கமே அதனால் தானே

அருளெனப் படுவது அற்றார் தனக்கு
          ஈட்டிய பொருளை ஈவது தானே.
அருட்பிர காசர் அருளால் தானே
         அரும்பசி களையும் சாலை அமைத்தார்
பொருள்தனைப் பெற்றோர் அருளொடு இருந்தால்
            பூமியில் இன்பம் பொங்கி வருமே
பொருள்தனை ஈட்டி அருள்தனை செய்து
         பொற்புடன் வாழ்வோம் புகழ்தனைப் பெற்றே. 
    


             


                                             அறிவுடைமை
புல்லுக்கும் புனிதனுக்கும் நல்லறிவு உண்டென்று
பூமிதனில் யாவரும் அறிந்ததை அன்றே
தொல்காப் பியனும் தொடுத்தார் நூற்பாவால்
தண்டமிழ் வள்ளுவனும் தந்தார் குறள்வடிவாய்
கல்லார்க்கும் கற்றார்க்கும் கழுகிற்கும் குருவிக்கும்
          கல்லினுள் தேரைக்கும் அறிவென்றும் உண்டாம்
அல்லல் நேராது தன்னைத்தான் காப்பதற்கு
         அறிவினைப்பெற்றிருக்கும்அனைத்து உயிர்களுமே!

வள்ளுவன் தானும் அறிவின் ஆற்றலை
வகையாய் விரித்து வழங்கினான் குறளாய்
உள்ளம் உடையார் எய்தும் மேன்மையை
       உயர்ந்த அறிவால் பெறலாம் என்றனன்
கள்ளும் கவறும் கணிகையர் தொடர்பும்
       கவனத்தில் இருந்து நீக்குவது அறிவே!
எள்ளளவு தீமையும் எண்ணத்தில் கொள்ளாது
       ஏற்றமுற வாழச் செய்வது அறிவே!

உயிர்க்கு வருகின்ற ஊறினைத் தடுக்கும்
       உயர்மதில் அரணாய் இருப்பது அறிவே!
துயருறு வாழ்வில் ஆவதை உணர்த்தி
       தூயநல் நெறியில் செலுத்துவது அறிவே!
துயில்கொண்ட போதில் தொடைதட்டி எழுப்பி
       தொடர்ந்து பணிசெயத் தூண்டுவது அறிவே!
குயிலும் காக்கையும் கூவிய ஒலியில்
       மெய்ப்பொருள் யாதென காண்பது அறிவே!

உலகத் தோடென்றும் ஒத்து வாழ்ந்திட
       உண்மையை உரைப்பது என்றும் அறிவே!
பலப்பல பேசி பகைப்பதை விடுத்து
பண்பாய்ப் பேசிடப் பழக்குவது அறிவே!
கலங்கி நிற்கையில் தெளிவான பாதையைக்
கைவிளக்கு போலவே காட்டுவதும் அறிவே! புலன்கள் ஐந்தின் போக்கினைத் தடுத்து    
       பெட்டிப் பாம்பாய் அடக்குவது அறிவே!




              


                                
                     அன்புடைமை         
அன்பால் தாயைத் தந்தை அணைந்ததால்
ஆருயிர் எல்லாம் அடைந்தன உலகை
துன்பம் துயரம் துடைத்து எறிந்து
தொல்லை போக்குவ(து) அன்பது தானே
இன்பம் எல்லாம் எடுத்துக் காட்டி
இன்னுயிர் வளர்ப்பதும் அன்பது தானே 
அன்பினை அடைக்கும் தாளும் உண்டோ
அவரவர் கண்ணீர் அதற்குச் சாட்சி

உலகம் அனைத்தும் எமதே என்பார்
உற்றார் மீதினில் அன்பே இல்லார்
இலகுவில் அழியும் உடலைக் கூட
எளிதில் ஈவார் அன்பினை உடையார்
சலமிகு உலகில் சடலம் ஆவியைச்
சார்ந்து இருப்பதும் அன்பால் தானே
நலமிகு நட்பும் நிலவாய் வளர்வதும்
நல்லவர் கொண்ட அன்பது தானே

அறியார் செய்யும் அவலம் தன்னை
அறமாய்ச் செய்வதும் அன்பது தானே
சிறிய புழுவும் சிதையும் வெயிலால்
அன்பில் லாரும் அழிவது உறுதி
வறண்ட பாலையில் உலக்கை துளிர்ப்பதும்
வன்மனம் கொண்டோர் செழிப்பதும் ஒன்றே
அறத்தைச் செய்யக் கைகள் நீளா
அகத்தில் அன்பு இல்லாப் போழ்தே.

தாயால் தொடங்கி தரணியில் விரியும்
       தன்மை கொண்டது அன்பது தானே
காயும் மரத்தைத் தளிர்க்க வைப்பது
       காரது கொண்ட அன்பது தானே
சேயும் மண்ணில் செழிப்புற வளர
தாயது கொண்ட அன்பது தானே
ஆயும் அறிஞரும் ஆய்வில் தோய்வது
அகில மீது கொண்ட அன்பே.  







                   
                          ஆள்வினையுடைமை                                          
இசைபெற வேண்டின் ஈதல் வேண்டும்           
       ஈதலைச் செய்யப் இரும்பொருள் வேண்டும்                            
திசையெட்டும் சென்று  நசைபல கூடியே
       திரைகடல் ஓடியே தேடியே வந்தால்
அசையும் அசையா சொத்தும் சேறும்
அயரா முயற்சியால் ஆகுமே செல்வம்!
வசையிலா வாழ்வும்  வந்து சேர்ந்திடும்
       வறுமையும் வழிதேடி ஓடிப் போகுமே!

விதியும் தெய்வமும் சதிசெய்த போதும்
       விடாது முயன்றால் விரும்பியது நடக்கும்
அதிகத் தூக்கமும் ஆகா மறதியும்
      அடுத்து வந்து கெடுத்த போதும்
நதிபோல் ஓடினால்  நம்மிடம் தேடியே
       நங்கையாம் திருமகள் நாடியே வருவாள்
முதியவள் அணைப்பாள் முயலாமை கொண்டானை
       முயற்சியும் பயிற்சியும் உயர்ச்சியைத் தருமே!

விதைத்தவன் உறங்கினும் விதையுறங் கிடுமா?
       விளைச்சல் பெருகிடும் வேளாளன் முயற்சியால்
சதைவருத்தி உழைத்தால் சம்பளம் உறுதியே
       சந்திரனும் காலடியில் சரணென வருமே
கதைபேசித் திரிவான் கஞ்சிக்கு வழியின்றி
       கால்கழுவி விடுவான் கசடருக் கெல்லாம்
எதையும் முடியும் என்று செய்பவன்
       எல்லா உலகிற்கும் எசமான் ஆவானே!

பயந்தவன் கையில் படையிருந்தாற் போலவே
       பாட்டாளி அல்லானும் பாரியாக முடியுமா?
கயவராய்ப் போவதும் க(ஸ்)ட்டதில் ஆழ்வதும்
       காலத்தை எண்ணாது தூங்கிக் கழிப்பதும்
முயலாமைக் கதையை முழுதும் உணராது
       முயலாது என்றும் முடங்கிப் போனதால்
அயலானை அண்டியை அன்றாடும் வாழனும்
       அருந்தமிழ் வள்ளுவன் அறைந்து சொன்னதே!
      






      ஊக்கம் உடைமை  
ஊக்கம் உடையான் உறக்கம் அடையான்
       உணவைக் கூட உண்பதை நினையான்
ஆக்கம் தேடிவரும் அயராது உழைத்தால்
       ஆசைப்பட்ட தெல்லாம் அடைந்தே தீரலாம்
தேக்கிய வெள்ளமென திரண்ட செல்வம்
       வழிகேட்டு வந்து  வாசலில் நிற்கும்
தாக்கும் அம்பையும் பொருட்படுத் தாத
       தகரென ஊக்கம் கொண்டான் தனக்கே

நீரது ஆழத்துக்கு நீளும் ஆம்பல்போல்
       நெஞ்சில் ஊக்கம் கொண்டான் உயர்வாம்
ஊரது மெச்ச உறுபொருள் கொடுக்கலாம்
       உள்ளத்தில் ஊக்கம் கொண்ட செறுக்கால்
மாரது கொண்டு நகரும் பாம்பையும்
       மார்பில் மாலையாய் சூட்டிட முடியும்
பாரது எதிர்த்து படைகொண்ட போதும் 
       பயப்பட மாட்டான்  பார்க்கலாம் என்பானே

எண்ணும் போதே  ஏற்றமாய் எண்ணிடில்
       எளிதில் வெற்றியை எட்டிப் பிடிக்கலாம்
மண்டியிட்டு இழுத்திடும் மாட்டினைப் போலவே
       மனதில் ஊக்கம் கொண்டவன் நினைத்தால
விண்ணையும் தொடலாம் உள்ளத்தின் ஊக்கத்ததால்
       வரிப்புலி கூட யானையை வென்றுடும்
கண்ணும் கருத்துமாய் காரியம் ஆற்றிடின்
       காலமும் இடமும் தப்பியனும் வெற்றியே!
      

















              ஒழுக்கமுடைமை   
அறனெனப் படுவது ஆன்றோர் உரைத்தது
       அதன்படி நடத்தல் அதுவே ஒழுக்கம்                               
மறவழி கொண்டு ஒழுக்கம் பிழைத்தோர்
       மனித னாயினும் மரக்கட்டை தானே
உறவினர் ஊரார் ஒழுகிய படியே
       ஒத்து நடத்தலே ஒழுக்கம் ஆகும்
குறவ ராயினும் குலக்குரு வாயினும்
       குலவழக்கம் தவறின் குப்பைக்கு நிகரே.

மழுவைக் காட்டினும் மறலியே வரினும்
       மானமே பெரிதென ஒழுக்கம் தவறார்
அழுது  புரளினும் அழிந்த ஒழுக்கம்
       அடைதல் என்பது ஆற்றில் கரைபுளி
அழுக்காறு கொண்டான் அழிதல் போலவே
       ஒழுக்க மில்லான் ஒழிதல் உறுதியே
விழுப்பம் வேண்டுவோர் விழைவுடன் மகிழ்ந்து
       ஒழுக்கக் கொடியை உயர்த்திப் பிடிப்பரே

படிப்பதை மறத்தல் பாவம் இல்லை
       பண்பினில் வழுவல் படுநரக உய்க்கும்
குடிப்பிறப்பு என்பது ஒழுக்கம் உடைமையே
       குன்றத்தில் வைத்துக் குவலயம் போற்றிடும
அடித்து நொருக்கினும் அணுவாய் நூறினும்
       அவரவர் நிலையில் நிற்றலே ஒழுக்கம்
நடிப்பால் வருவது ஒழுக்கம் அன்று
நாணமும் அடக்கமும் நல்கிடும் ஒழுக்கமே

ஒழுக்கம் உயர்வினைத் தருததால் தானே
      உயிரினும் மேலாய் உயர்த்தப் பட்டது
கழுமரம் ஏற்றினும் கைவிடார் ஒழுக்கத்தைக்
       கற்புநெறி தவறாக் காரிகை போல
ஒழுக்க உள்ளோர் நற்செயல் புரிவர்
       ஒற்றுமை வளரவும் உறுதுணை ஆவார்
வழுக்கியும் வாயாற் வசையும் பாடார்
       வாழ்க வளத்துடன் வாழ்க என்பார்.

   
         

           


              


        நாணுடைமை
மங்கையர் குணமதில் நாணமும் ஒன்றே
           மற்றதைக் கூறாது மற்றவர்க்கு வேண்டிய
எங்கும் தீயதைச் செய்ய நாணுதல்
       என்பது பற்றியே எடுத்துரைக் கின்றேன்
தங்கும் வீடும் தானணி  ஆடையும்
       தரணியில் யாவர்க்கும் பொதுவது தானே
பொங்கிவரும் நாணமோ பொல்லாங்கு யாருக்கும்
       புரியாதபெரியோரின் பண்பது தானே.

உடம்பால் உயிரும் பயனுறுதல் போல
          உயர்சால்பும் நாணால்அடையும் பெருமையை
தடம்காட்டும் சான்றோர்க்கு நகையன்றோ நாணுடைமை
          தப்பியே நடப்போர்க்குத் தணியாத பிணியாகும்
குடத்தினில் பாம்பாய் பழியை அடக்கியோர்
       குவலயம் தன்னால் கும்பிடப் படுவார்
மடமையால் பழிபாவம் மாநிலத்தில் செய்யாது
       மதிலாய்க் காப்பதும் நாணமது தானே.

உயிரதைக் காட்டிலும் உயர்ந்ததும்  உளவோ
       உளதென உலகினில் உரைத்தனர் பெரியோர்
மயிரது நீங்கின் மாண்டிடும் கவரிபோல்
       உயிரது நீப்பர் நாணது நீங்கின்
அயில்வேல் கொண்டு ஆழமாய்க் குத்தினும்
           அடாத பழியை யார்க்கும் செய்யார்
உயர்குலம்  கெடுமென  ஒருபோதும் செய்யார்
       உலகினில் நாணிணை கொண்டோர் தாமே.


















                                         

                பண்புடைமை                                                                                                                                                                                                            
பண்பெனப் படுவ பாங்குறப் பகரின்
      பல்லோர் தன்னொடு பழகும் பான்மை 
நண்பர் தன்னிடம் நகைத்தல் செய்திட     
     நயமிலா மொழிகளை நவிலல் குற்றம் 
சண்டையில் பகைவன் ஆயுதம் இழந்தால் 
     சட்டெனச் சமரினை நிறுத்தல் பண்பே
தண்டனை பெறுகிற கைதியே யாயினும்
    தனதுசொல் உரைக்கவே இடந்தரல் நலமே.

உறுப்பால் ஒத்ததால் மனிதன்  அல்லவே
      உயர்குடிப் பிறப்பும் அன்பொடு அருளையும்
பொறுமையும் உடையோன் பண்புடை மனிதன்
     பொருந்தும் நன்மையே புரியும் மாந்தனால் 
அறுந்து வீழா(து) அண்டம் உள்ளது
     அரும்பண் பின்றியே அரிதில் ஈட்டிய                                                     
உறுபொருள் அனைத்தும் ஊரினர் தமக்கு                                                              .     ஊறு செய்யும் உண்மையும் யதுவே  

படித்தும் பட்டும் தேடிய அறிவு
     பல்லினைப் உடைய கூரரம்பு எனினும்
துடிக்கும் மாந்தர் துன்பம் போக்காத் 
      துட்டன் பட்ட காய்மரம் யுலகினில் 
மடிவரும் பசுப்பால் உள்ள செம்பில்  
      மாய்க்கும் நஞ்சினைக்  கலந்தாற் போன்றது
இடித்துக் கூறும் நண்பர் இல்லா
      பண்பிலான் அடைந்த  செல்வம் தானே

நகுதல் அறியா பண்பிலான் தனக்கு
     நண்பகல் கூட நள்ளிருள் ஆகும் 
தகுதி யற்றவன் பதவி தன்னால்
    தரணி மாந்தர் துன்பம் கொள்வர்   
பகுத்துண் டறியா பண்பிலான் பெரும்பொருள்
    பயன்படா தழியும் உச்சிமரத் தேனென
வகுத்த குறட்படி வானுறை தெய்வமாய்
    வளம்பட வாழ்வோம் பண்புடன் நாமே.







                         பொறையுடைமை                                                         
              பாரையால் இடிப்பினும் வெடியாற் தகர்ப்பினும்
கொழுக்கொண்டு போழினும் வருந்துறாப்
பார்போல் அறிந்தும் தெரிந்தும் பழியது
புரிவோர் பொறுத்தல் கடனே
ஈரமில் நெஞ்சினர் இழைத்த தீங்கினைப்
பொறுத்தலோடு மறத்தல் கடனே
வீரத்தினுள் வீரம் வீணர்செய் வீம்பினை
       விவேகத்தால் பொறுத்தல் தானே.

பொறையுடை யாரே சான்றோர்  ஆவார்
                பொறுத்தார் தாமே பொன்னெனப் படுவார்
ஒறுத்தாரைத் தண்டித்தால் அன்றுதான் இன்பம்
பொறுத்துக் கொண்டால் என்றும் புகழே
உறுத்தும் பொல்லாங்கை உள்ளவன் செய்யினும்
மறந்து விடுவர் மாண்புடை மாந்தர்
செறுக்கால் ஒருவன் செய்யும் தீங்கைச்
செற்றம் இன்றிப் பொறுப்பதே தகுதி
                                                             
சுற்றம் நீங்கிய துறவியைக் காட்டிலும்
       குற்றச் சொல்லைப் பொறுப்பவர் மேலோர்
கற்றவர் பெற்ற மேன்மையைக் காட்டிலும்
          செற்றார் சொல்லைப் பொறுப்பவர் மேலோர்
உற்ற பசியைப் பொறுப்பதைக் காட்டிலும்
       மாற்றார் இழிசொல் பொறுத்தல் மேலாம்
பெற்றம் போலப் பொறுமை உடையோர்
          பெறுவார் உலகில் பெருமை தானே.
                
















  

   

      புகழோடு பல்லாண்டு வாழுங்கள்  
  (இஃது அறிவுரை அல்ல அனுபவ மொழிகள்)
    1. ன்றாடும் அரைமணி நேர நடைப்பயிற்சி செய்தல் 
    2. சனங்களை முறையாகக் கற்று மேற்கொள்ளும் தியானம்
    3 .ன்றைய வாழ்க்கையை மதித்தும் ரசித்தும் வாழப் பழகுதல் 
    4. கையே(தர்மம்) செய்தாலும் தனக்குப் பின்பே    
     5 .டல்நலம் குறைந்தாலும் உற்சாகமும் உறுதியும் குறையாத
        உள்ளம்
     6 .ர் மெப்புதலைக்கு வாழாமல் உன் வருவாய்க்குத் தக்கபடி
       வாழ்தல்
     7. ல்லார் முகங்களிலும் மலர்ச்சியை உண்டாக்கும் செயல்கள்
     8. ழுவயதிற்குக் குறைந்தவர் மற்றும் எழுபது வயதிற்கு                   
          மேற்பட்டவர்களோடு நெருங்கிய தொடர்பு
     9. யமே(சந்தேகம் )கூடாது நம்பிக்கையே வாழ்க்கை
    10. ரு தினையளவு தைரியம் மலையளவு துன்பத்தைத்  
        துடைக்கும் 
    11. தியவன்(படித்தவன்)என்பதைவிட ஒழுக்கமானவன் என்பதே
       சிறந்தது      
    12 ஒளதடதம் (மருந்து) குறைந்தால் ஆயுள் கூடும்         .
     13. அறிணை(விலங்குகள்)உயிர்களிடத்தும் அன்பு காட்டுதல்  
     14. டவுளை வணங்க கணநேரமாவது ஒதுக்குதல் 
     15. ’ங” என்னும் எழுத்துப்போல் குடும்பத்தைக் காப்பாற்று   
     16. மைத்த உணவை விட விளைந்த உணவுகளை நேரடியாய்              
        உண்ணுதல்
     17. யமாய்ப் பேசினாலும் உண்மையாய் இருக்கட்டும் 
     18. இத்தை அளந்து மதில் கட்டிய பின்பே வீட்டைக் கட்டுதல்
        வேண்டும்  
     19. இங்கிப் போவதால் இம்சைகள் குறைந்து இன்பம் பெருகும் 
     20. வறான சொல்லும் செயலும் பெரும் சங்கடத்தில் விடும்
     21. ல்ல செயல்களைத் துணிந்து செய்தால் நாளும் வெற்றியே 
22. சி நான்கு_ உடல்,குடல்,அறிவு,ஆன்மா இவை என்றும் தீரா                                                                                                               23. கிழ்ச்சியை விட மேலான ஊட்டச் சத்து எதுவும் இல்லை
     24 .இல்பாய் எதையும் எடுத்துக் கொள்வதே இதயத்தைக்
        காக்கும்வழி
11





       25.அவணைத்துப் போனால் அனைவரும் நண்பர்களே
     26.இஞ்சம் வாங்குபவனுக்கு பஞ்சம் தீராது
     27.ள்ளுவன் குறள் கற்றால் வையத்தில் வளமாய் வாழலாம் 
     28.இந்த நேரத்தை மறந்து விட்டு இருக்கும் நேரத்தைச்   
       சிறப்பாக்குக  
     29.இமையில் கற்ற பழக்கம் எக்காலத்திலும் போகாது
     30.இப்பது உடலாக இருந்தாலும் நிலைப்பது புகழாக இருக்கட்டும்
     31.இமும் குணமும் இனிதாய் இருந்தால் தனங்கள் யாவும் தானே   
        வரும்.



                





































வள்ளுவன் தந்த சொத்துக்கள் பத்து
                  தொல்காப்பியச் செம்மல்
     புலவர்.ஆ.காளியப்பன் க.மு.,கல்.மு




































         தொல்காப்பியர் பேரவை
      கோயம்புத்தூர் 9788552993























        

















           


       






    
                     

No comments:

Post a Comment