Saturday 10 August 2024

தொல்காப்பியத்தில் உழவு

 

                    உழவு  பதிவு11-8-2024

முன்னுரை நிலம்தீ நீர்வளி விசும்போடு ஐந்தும்கலந்த மயக்கம் உலகம்  (தொல்1589)உலகம் என்பது உயிர்த்தொகுதிஅவ்வுயிர்கள் அனைத்திற்கும் பசிப்பிணி  உண்டு.  அப்பிணி போக அரிய மருந்து உணவே. அதனால் தான் உண்டி கொடுத்தோர் உயிர்கொடுத்தோர் என புறநூனூறும் , மணிமேகலையும் உரைக்கின்றன.                       

அற்றார் அழிபசி தீர்த்தல்  அஃதொருவன்

பெற்றான் பொருள்வைப் புழி என்று வள்ளுவரும் கூறுகின்றனர்.

உணவிற்குக் காரணம் ஏர் உழுதல்அதனால் வள்ளுவரும்

சுழன்றும்ஏர் பின்னது உலகம்  அதனால்

உழன்றும் உழவே தலை  1031 என்றார்

உழுவார் உலகத்தாருக்கு அச்சாணி போன்றவர்கள் அவர்களே

உழுதுண்டு வாழ்பவர்கள் மற்றவர்கள் அவர்களைத் தொழுது வணங்கினால்தான் உணவினைப் பெற இயலும். அரசன் கூட   பல நாடுகளை வெல்வதற்குக் காரணம் உழவர்களே இதைத்தான்  செங்கோல் நடத்துவது உழவனின் ஏரடிக்கும் சிறுகோல்    (நல்வழி) என்றும்

பல குடை நீழலும் தம் குடைக்கீழ்க்காண்பர்

அலகுடை நீழ லவர்             - 1034 குறள் என்றும்

பொரு படை தரூஉம் கொற்றமும் உழு படை

ஊன்று சால் மருங்கின் ஈன்றதன் பயனே        - புறநாநூறு 35  என்றும்

இலக்கியங்கள் இயம்புகின்றன. 

உலகப்பற்றுக்கள்  அனைத்தையும் துறந்து விட்டோம்   என்னும் துறவிகள்கூட உழவர்களை  நம்பியேஆகவேண்டும். கடவுளை வேண்டுகிற அடியார்கள்கூட உணவுக்காகப் பிரார்த்திக்கின்றனர். திருமங்கை ஆழ்வார்,
கூறைசோறு இவைதந்து எனக்கு அருளி
அடியேனைப் பேணி ஆண்டுகொள் எந்தாய்

 

இவ்வுலகில் வாழும் எவரும் உழவருக்கு அடுத்த நிலையில் வைத்தே எண்ணத்தக்கவர்கள் என்பதை, இதைத்தான் வள்ளுவர் உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார் மற்றுஎல்லாம்
தொழுதுண்டு பின்செல் பவர்” (1033) என்கிறார்

அத்தகு சிறப்புமிக்க உழவின் சிறப்பினை எடுத்து ஓதுவதே இக்கட்டுரை நோக்கம்.

உழவின்சிறப்பு உணவுத்தொழிலில் உயர்ந்து விளங்கும் நாடே   செல்வத்தில் சிறந்து வாழும். இவ்வுண்மையைப் பண்டைத் தமிழர்கள் உணர்ந்திருந்தனர்

உழவர்க்கு உறுதுணை ஏர்முனை ஏர்முனைக்கு நிகர் எதுவுமில்லை. உணவிட்டு உயிர் காத்தலால் . அதற்கு வேளாண்மை என்று பெயர். வைத்தனர். அதனால் தமிழில் வேளாண்மைப் பற்றி பேசாத  இலக்கியங்களே  இல்லை எனலாம். உழவு பற்றி இலக்கியங்கள்

 ஓர் ஏர் உழவன் போல குறு 131/5

வாள் ஏர் உழவன் மற_களம் வாழ்த்தி வஞ்சி:26/234
கவடி வித்திய கழுதை ஏர் உழவன்
குடவர் கோமான் வந்தான் நாளை வஞ்சி:27/226,227

தத்து நீர் அடைகரை சங்கு உழு தொடுப்பின் மணி:8/3

 தொண்ட உழவர் ஆர தந்த திருவா:3/94

உழவன் உழத்தியர் கண் ஒக்கும் என்றிட்டு திருமந்:1619/3

உழவன் உழஉழ வானம் வழங்க திருமந்:1619/1
உழவன் உழவினில் பூத்த குவளை திருமந்:1619/2
உழவன் உழத்தியர் கண் ஒக்கும் என்றிட்டு திருமந்:1619/3
உழவன் அதனை உழவு ஒழிந்தானே திருமந்:1619/4

வன் சிறு தோல் மிசை உழத்தி மகவு உறக்கும் நிழல் மருதும் 4.மும்மை:4 8/1

உழும் நீர் வயல் உழவர் உழ பின் முன் பிழைத்து எழுந்த நாலாயி:1105/2
மாறாத மலர் கமலம் செங்கழுநீர் ததும்பி மது வெள்ளம் ஒழுக வயல் உழவர் மடை அடைப்ப நாலாயி:1235/3
சேற்று ஏர் உழவர் கோதை போது ஊண் நாலாயி:1361/3
கொடும் கால் சிலையர் நிரைகோள் உழவர் கொலையில் வெய்ய நாலாயி:2514/1

பத்தி உழவன் பழம் புனத்து மொய்த்து எழுந்த நாலாயி:2404/2

பழனம் உழவர் கொழுவில் எழுது பழைய பழநி அமர்வோனே

உரம் அற்றனர் கவசத்தொடும் உறழ் அற்றன உழவர்
சரம் அற்றனர் சாபத்தொடு சமம் அற்றன   தேம்பா:14 49/1,2              

இதை உணர்த்தவே தொல்காப்பியர்

வேளாண் மாந்தர்க்கு உழுதூண் அல்லது

இல்லென மொழிப பிறவகை நிகழ்ச்சி 1581 சீரைத்தேடின் ஏரைத்தேடு நெற்பயிர் விளை பூமி திருத்தி உண் தொழுதூண் சுவையின் உழுதூண்இனிது பண்ணிய பயிரில் புண்ணியம் தெரியும்

மேழிச் செல்வம் கோழைபடாது

நெல்லுக்கு இறைத்தநீர் வாய்க்கால் வழியோடி புல்லுக்கும் ஆங்கே பொசியுமாம்.

உழவர்க் கழகிங்கு  உழுதூண் விரும்பல்

வித்தும் ஏரும் உளவா யிருப்ப எய்தங்கிருக்கும் ஏழையும் பதரே

வித்திட வோர்க்கன்றி மேலோர் விளைவில்லை

கடவுள் என்னும் முதலாளி
கண்டெடுத்தத் தொழிலாளி
விவசாயி
என்று கவிஞர் மருதகாசி பாடுகிறார்

 

கலப்பையைப் பிடித்தவன் கடவுளுக்குச் சமம்

கைபடாத குழந்தையும், கால்படாத பூமியும் வளர்ச்சி பெறாது

புல்லற உழுதால் நெல்லற விளையும்

முன்னத்தி ஏருக்குப் பின்தான் பின்னத்தி ஏரும் போகும்

 

'உழவன் சேற்றில் கால் வைத்தால்தான் மற்றவர்  சோற்றில் கை வைக்க முடியும்

எங்க ஏரோட்டம் நின்னு போனாஉங்கக் காரோட்டம் என்னவாகும்
என்று கேள்வி எழுப்புகிறார் கவிஞர் கண்ணதாசன்

உழவுத்தொழிலே தமிழர் தம் அடிப்படைத் தொழிலாகும் உழவுத்தொழிலைச் சார்ந்தே பிற தொழில்கள் நடைபெற்றன

உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம் - வீணில்

 உண்டுகளித் திருப்போரை நிந்தனை செய்வோம்

தலைமை கருதி உழவுத் தொழில் பேசப்படுகிறது

அறிவியல் நோக்கில் வேளாண்மை என்ற சொல்லுக்கு பயிர்செய்தல்,கால்நடைகள் வளர்த்தல், மனித சமுதாயத்திற்கும் பயன்படும் ஒவ்வொரு பயிரையும் மற்றும் உயிரிகளையும் வளர்த்தல் கோழிப்பண்ணை,பால்பண்ணை எனப்பொருள்படும் அறிவியல் பெருஞ்சொல்லாகப் பயன்படுகிறது

தொழில்களில் எல்லாவற்றிலும் முதன்மையான தலையாய தொழில் உழவே.  என்பதால் சீரைத்தேடின் ஏரைத்தேடு”(கொன்றை வேந்தன்) என்றனர். எனவே பயிர்த்தொழிலை ஒரு முக்கியமான முதனிலைத் தொழில் என்றனர். இத்தொழிலில் மனிதன் இயற்கையிலிருந்து கிடைக்கும் பொருள்களைச் சேகரித்துப் பயன்படுத்திக் கொள்வதோடு நிறுத்திக் கொள்ளாமல், அவ்வியற்கையோடு ஒன்றிணைந்து பணியாற்றி உணவுப் பொருட்களை உற்பத்தி செய்து கொள்கிறான் என்பதால்

உழுதுண்டு வாழ்வதற் கொப்பில்லை கண்டீர்

பழுதுண்டு வேறோர் பணிக்கு” (நல்-12 (3-4))

உழுதுண்டு வாழ்வரே வாழ்வார் மற்றெல்லாம்

தொழுதுண்டு பின்செல் பவர் (குறள் 1033) என்ற குறள் வெளிப்படுத்துகிறது.

தொழுதூண் சுவையின் உழுதூண் இனிது” (கொன் - 46)

உழைத்து உண்ணும் உணவே சிறந்த உணவாகும்” (கொன்-69) என்றெல்லாம்   வேளாண்மையை வலியுறுத்திக் கூறியுள்ளனர். மேழிச் செல்வம் கோழை படாது.  உழுத்தொழில் செய்யும் வலிமை இல்லாது பிற தொழில் செய்கின்றவரையும் தாங்குவதால்,உலகத்தார்க்கு அச்சாணி போன்றவர் அவர் இதனை, 

       உழுவார் உலகத்தார்க்கு ஆணிஅஃது ஆற்றாது

  எழுவாரை எல்லாம் பொறுத்து.(குறள் 1032) என்ற குறள் வெளிப்படுத்துகிறது

உழவுத்தொழிலே தமிழர் தம் அடிப்படைத் தொழிலாகும் உழவுத்தொழிலைச் சார்ந்தே பிற தொழில்கள் நடைபெற்றன

 

 உழவின்சிறப்புஉழவு என்றால்

  உழ என்றால் வருந்து, துன்புறு என்றே பொருள். தமிழ் அகர முதலி உழவு என்பதற்கு உடம்பினால் உழைத்தல்  என்று  விளக்கம் தருகிறது. உழத்தல் என்பது இடைவிடாது முயலும் மெய்ம்முயற்சியைக் குறிக்கும் சொல்லாகும். இடைவிடாது உழைக்கும் மெய்ம்முயற்சி பயிர்த்தொழிலுக்கு வேண்டப்படுதலின் இத்தொழிலை உழவு என்ற சொல்லால் பண்டையோர் வழங்கினர் போலும் உழவு என்றால் உழத்தல்  மிக்கது.

    உழத்தல் என்னும் சொல்லுக்குச் செய்தல்; பயிலுதல்; பழகுதல்; முயலுதல்; வெல்லுதல்; வருந்துதல்; பட்டனுபவித்தல்; துவைத்தல் எனப்பல பொருள்கள் உண்டு. இவை அனைத்தும் உழவுக்குப் பொருந்தும்

 பண்டைத் தமிழர்களின் உழவுத்தொழில் என்பது மிகவும் தொன்மையானது என்பதை உணர முடிகின்றன.. மழை, பனி, வெயில் என்னும் கால வேறுபாட்டால் உடம்புக்குளவாகுத் தொல்லைகளை ஒரு சிறுபொழுதும் பொருட்படுத்தாது, நெற்றி வியர்வை நிலத்தில் விழ இடைவிடாது உழைக்கும் மெய்ம்முயற்சி இப்பயிர்த் தொழிலுக்கு வேண்டப்படுவதாகலின், இத்தொழிலை உழவுஎன்ற சொல்லால் பண்டையோர் வழங்கினர்

 

உழவர். உழவர்க்கு உறுதுணை ஏர்முனை ஏர்முனைக்கு நிகர் எதுவுமில்லை.

உணவிட்டு உயிர் காத்தலால் . அதற்கு வேளாண்மை என்று பெயர். வைத்தனர். அதனால் தமிழில் வேளாண்மைப் பற்றி பேசாத  இலக்கியங்களே  இல்லை எனலாம்.

சீரைத்தேடின் ஏரைத்தேடு நெற்பயிர் விளை பூமி திருத்தி உண் தொழுதூண் சுவையின் உழுதூண்இனிது பண்ணிய பயிரில் புண்ணியம் தெரியும் மேழிச் செல்வம் கோழைபடாது

நெல்லுக்கு இறைத்தநீர் வாய்க்கால் வழியோடி புல்லுக்கும் ஆங்கே பொசியுமாம் உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம் உழவர்க் கழகிங்கு  உழுதூண் விரும்பல்

வித்தும் ஏரும் உளவா யிருப்ப எய்தங்கிருக்கும் ஏழையும் பதரே

வித்திட வோர்க்கன்றி மேலோர் விளைவில்லை

கடவுள் என்னும் முதலாளி

கண்டெடுத்தத் தொழிலாளி

விவசாயி

என்று கவிஞர் மருதகாசி பாடுகிறார்

உணவுத்தொழிலில் உயர்ந்து விளங்கும் நாடே   செல்வத்தில் சிறந்து வாழும். இவ்வுண்மையைப் பண்டைத் தமிழர்கள் உணர்ந்திருந்தனர்

      உழவுத் தொழில் என்பது ஒரு தொழில் மட்டுமன்று. அது ஒரு பண்பாட்டின் தொடர்ச்சி. நாகரீகத்தின் வளர்ச்சி. மக்களின் பசி போக்கும் உன்னதத் தொழில். இயற்கையை வளப்படுத்தும் மகத்தான பணி வேளாண்மை ஆகும்

உழவு என்றால் தொழில்களில் எல்லாவற்றிலும் முதன்மையான தலையாய தொழில் உழவே.  என்பதால் “சீரைத்தேடின் ஏரைத்தேடு”(கொன்றை வேந்தன்) என்றனர். எனவே பயிர்த்தொழிலை ஒரு முக்கியமான முதனிலைத் தொழில் என்றனர். இத்தொழிலில் மனிதன் இயற்கையிலிருந்து கிடைக்கும் பொருள்களைச் சேகரித்துப் பயன்படுத்திக் கொள்வதோடு நிறுத்திக் கொள்ளாமல், அவ்வியற்கையோடு ஒன்றிணைந்து பணியாற்றி உணவுப் பொருட்களை உற்பத்தி செய்து கொள்கிறான் என்பதால்

உழுதுண்டு வாழ்வதற் கொப்பில்லை கண்டீர்

பழுதுண்டு வேறோர் பணிக்கு” (நல்-12 (3-4))

 

உழுதுண்டு வாழ்வரே வாழ்வார் மற்றெல்லாம்

தொழுதுண்டு பின்செல் பவர் (குறள் 1033) என்ற குறள் வெளிப்படுத்துகிறது.  உழவு என்பது ஏரால்  தொடிப்புழுதியைக் கால் பலம் மாக மாற்றி  எருவிட்டு நீர் பாய்ச்சி களை நீக்கி காத்தலே ஆகும்.

அவ்வாறு பயிர்த்தொழில் செய்வதே வேளாண்மை எனப்பட்டது. அவ்வாறு வேளாண்மை செய்தல் பற்றி செம்மையாக அறிந்தவர். தொல்காப்பியர் உணவுத்தொழிலில் உயர்ந்து விளங்கும் நாடே   செல்வத்தில் சிறந்து வாழும். இவ்வுண்மையைப் பண்டைத் தமிழர்கள் உணர்ந்திருந்தனர்.

 தமிழ் நூல்களில் மிகப் பழமையதாகிய தொல்காப்பியம் வேளாளர்களுக்கு அவர்களுக்கே சிறப்பாக உரிய உழவுத் தொழிலும் ஒருங்கே வைத்துச் சொல்லப்படுதல் பெரிதும் நினைவிற் பதிக்கற்பாற்று.

சிறப்பு

பொரு படை தரூஉம் கொற்றமும் உழு படை

ஊன்று சால் மருங்கின் ஈன்றதன் பயனே        - புறநாநூறு 35

உழுவார் உலகத்தாருக்கு அச்சாணி போன்றவர்கள் அவர்களே

உழுதுண்டு வாழ்பவர்கள் மற்றவர்கள் அவர்களைத் தொழுது வணங்கிளால்தான் உணவினைப் பெற இயலும். அரசன் கூட   பல நாடுகளை வெல்வதற்குக் காரணம் உழவர்களே.  உலகப்பற்றுக்கள்  அனைத்தையும் துறந்து விட்டோம்   என்னும் துறவிகள்கூட உழவர்களை  நம்பியேஆகவேண்டும்

. உழத்தல்என்பது இடைவிடாது முயலும் மெய்ம்முயற்சியைக் குறிக்கும் சொல்லாகும். மழை, பனி, வெயில் என்னும் கால வேறுபாட்டால் உடம்புக்குளவாகுத் தொல்லைகளை ஒரு சிறுபொழுதும் பொருட்படுத்தாது, நெற்றி வியர்வை நிலத்தில் விழ இடைவிடாது உழைக்கும் மெய்ம்முயற்சி இப்பயிர்த் தொழிலுக்கு வேண்டப்படுவதாகலின், இத்தொழிலை உழவுஎன்ற சொல்லால் பண்டையோர் வழங்கினர்

உழுதவன் கணக்குப்பார்த்தால் உழக்கு கூட மிஞ்சாது என்ற சொலவடை

படும்பாடு துன்பம்  சொல்லி மாளாது. நிலத்தை உழுது, பண்படுத்தி, விதை விதைத்து, நீர் பாய்ச்சி, உரமிட்டு, களைபறித்து, பயிர் முளைக்கத் தொடங்கிய நாளில் இருந்து, பாதுகாத்து அறுவடை செய்து  உணவாகச்செய்யும்வரை ஓய்வில்லை அந்தணர் அரசர் வணிகர் மூவரும் தம்தொழிலுக்கு சிறிது ஓய்வு விட்டாலும் அடையும் நட்டம் ஏதும் இல்லை, உழவன் அப்படி இருக்கமுடியுமா? விதைக்குபோதும் வீட்டில் இருந்து விட்ட அறுக்கிற காலத்தில் அரிவாளை எடுத்துச் சென்றால் என்ன இருக்கும். உழவுத்தொழிலே தமிழர் தம் அடிப்படைத் தொழிலாகும் உழவுத்தொழிலைச் சார்ந்தே பிற தொழில்கள் நடைபெற்றன

பண்டைக் காலத்தில் வழக்கிலிருந்த பயிர் வகைகள் என்னென்ன, அவை பயிர் செய்யும் முறை, காலம், இடம் எவை என்பதையும் அவற்றின் தோற்றம், தன்மை, பயன் ஆகியவை குறித்தும் பல குறிப்புகள் பரவலாகக் காணப்படுகின்றன. அவற்றைத் தொகுத்துப் பார்க்கையில் நம் முன்னோர் அக்காலத்திலேயே உழவுத் தொழிலில் எத்தகு மேன்மையுற்றிருந்தனர் என்பது புலப்படும்.   

 மக்களின் வாழ்விற்கும் வசதிக்கும் பயன்படும் வாழ்வியல் தொழில்கள் பல                  அவை,

கைத்தொழில்: பயிர்த்தொழில்- நெசவு -தச்சு-,மட்கலம்செய்தல்- கொல்லுத்தொழில் உலோகத்தொழில், அணிகலன்தொழில் - தோல் தொழில்

இத்தொழில்களில் எல்லாவற்றிலும் முதன்மையான தலையாய தொழில் உழவே.  என்பதால் சீரைத்தேடின் ஏரைத்தேடு”(கொன்றை வேந்தன்) என்றனர். எனவே பயிர்த்தொழிலை ஒரு முக்கியமான முதனிலைத் தொழில் என்றனர். இத்தொழிலில் மனிதன் இயற்கையிலிருந்து கிடைக்கும் பொருள்களைச் சேகரித்துப் பயன்படுத்திக் கொள்வதோடு நிறுத்திக் கொள்ளாமல், அவ்வியற்கையோடு ஒன்றிணைந்து பணியாற்றி உணவுப் பொருட்களை உற்பத்தி செய்து கொள்கிறான் என்பதால்

உழுதுண்டு வாழ்வதற் கொப்பில்லை கண்டீர்

பழுதுண்டு வேறோர் பணிக்கு” (நல்-12 (3-4))

வருபடை தாங்கிப் பெயர்புறத் தார்த்து                                                      பொருபடை தரூஉம் கொற்றமும் உழுபடைஊன்றுசால் மருங்கின் ஈன்றதன் பயனேஎன்கிறார் வெள்ளைக்குடி நாகனார். இதிலிருந்து உழுதல் என்பது வேளாண் தொழிலில் முதன்மையானது என்பதை அறியலாம்                         

உழவுத் தொழில் என்பது ஒரு தொழில் மட்டுமன்று. அது ஒரு பண்பாட்டின் தொடர்ச்சி. நாகரீகத்தின் வளர்ச்சி. மக்களின் பசி போக்கும் உன்னதத் தொழில். இயற்கையை வளப்படுத்தும் மகத்தான பணி வேளாண்மை ஆகும்

உழவு என்பது ஏரால்  தொடிப்புழுதியைக் கால் பலம் மாக மாற்றி  எருவிட்டு நீர் பாய்ச்சி களை நீக்கி காத்தலே ஆகும்

அவ்வாறு பயிர்த்தொழில் செய்வதே வேளாண்மை எனப்பட்டது. அவ்வாறு வேளாண்மை செய்தல் பற்றி செம்மையாக அறிந்தவர். தொல்காப்பியர் இதை உணர்த்தவே தொல்காப்பியர்

வேளாண் மாந்தர்க்கு உழுதூண் அல்லது

இல்லென மொழிப பிறவகை நிகழ்ச்சி 1581

  உழ என்றால் வருந்து, துன்புறு என்றே பொருள். தமிழ் அகர முதலி உழவு என்பதற்கு உடம்பினால் உழைத்தால்  என்று  விளக்கம் தருகிறது. உழத்தல் என்பது இடைவிடாது முயலும் மெய்ம்முயற்சியைக் குறிக்கும் சொல்லாகும். இடைவிடாது உழைக்கும் மெய்ம்முயற்சி பயிர்த்தொழிலுக்கு வேண்டப்படுதலின் இத்தொழிலை உழவு என்ற சொல்லால் பண்டையோர் வழங்கினர் போலும் உழவு என்றால் உழத்தல்  மிக்கது.

    உழத்தல் என்னும் சொல்லுக்குச் செய்தல்; பயிலுதல்; பழகுதல்; முயலுதல்; வெல்லுதல்; வருந்துதல்; பட்டனுபவித்தல்; துவைத்தல் எனப்பல பொருள்கள் உண்டு. இவை அனைத்தும் உழவுக்குப் பொருந்தும்.

தொல்காப்பியத்தில் வேளாண்மைத் தொழிலில்; ஈடுபடும் வேளாளருக்கும் பயிர்களை விளைவித்த பயனைத் தருவதன்றி வேறு தொழில் இல்லை என்பதை,

 வேளாண் மாந்தர்க்கு உழுதூண் அல்லது

இல்லென மொழிப பிறவகை நிகழ்ச்சி 1581

ஆகவே காலம் நேரம் பார்க்காமல் உழைக்க வேண்டும். அதை உணர்த்தவே வெயிலத்துக்கொண்டாம் மழையத்துக் கொண்டான் பனியத்துக் கொண்டான்.என்ற நூற்பாக்களை இயற்றி உள்ளார்.உழவன் வைகறை எழுந்து விளைநிலம் சென்றால் தான் காலை நேரத்தில் திரியும் புழுப்பூச்சிகளை அழிக்க உழவு செய்யும் முடியும்.. கால் நடைகளை வீட்டிற்குக்கொண்டு வரும் நேரமாகிய மாலையை முல்லைக்கு ஆக்கினார்.

தொல்காப்பியர் பொருளை முதற்பொருள் கருப்பொருள் உரிப்பொருள் மூவகை என்கிறார்

கருப்பொருள் என்பது ஒவ்வொரு நிலத்திலும் விளையும் பயிர்கள் அங்குள்ள மக்கள் உண்ணும் உணவு செய்யும்தொழில் கூறி இருப்பதே தொல்காப்பியர் வேளாண் வல்லார் என்பதற்கு எடுத்துக் காட்டாகும்

 நிலத்தின் தன்மையைப்பொருத்து குறிஞ்சி முல்லை மருதம் நெய்தல் எனப்பகுத்தார் தொல்காப்பியர்

ஒவ்வொரு நிலங்களின் அவ்வவ்நிலங்களுக்கு ஏற்ற முறையில் வேளாண்மை நடைபெற்றது. குறிஞ்சி நிலம் எனில் தினை,மற்றும் கிழங்கு வகைகளைப் பயிர் செய்தான் முல்லை நிலம் என்றால் வரகு சாமை முதிரை போன்ற பயிர்கள் தான் பயிரிடமுடியும், என்பதைத் தொல்காப்பியர் கூறியுள்ளார்

முடிவுரை

உலகுக்கே உணவளிக்கும் உன்னதமான தொழில் விவசாயம். அந்த புனிதமான தொழிலை செய்யும் விவசாயிகள் சமுதாயத்தால் போற்றப்பட வேண்டியவர்கள்  

 

உழவுத் தொழில்வளர்ப்போர் உயிரை வளர்ப்போராம்!

பழகு தமிழ் நாட்டீர்! பசுமைப் புரட்சி செய்யோம்!

பண்டிதரும் படிக்கத் தயங்கும் தொல்காப்பியத்தைப்  பாமர்ருக்கும் கொண்டு செல்ல வேண்டும் என்ற குறிக்கோளுடன் என் உடல் பொருள் ஆவி அனைத்தயும் ஈந்து தொல்காப்பியர் தமிழ்ச்சங்கமத்தை நிறுவி செயல் பட்டு வருகிறேன் என்பதை பெருமையோடு இந்நேரத்தில் கூறிக்கொள்ள விழைகிறேன்,

அதிக பணம் வைத்திருப்பவர்கள் எதிர்கால முதலீடாக நிலங்களை வாங்கிப்போட்டு விவசாயம் செய்யாமல் வைத்திருக்கிறார்கள். இந்த வேலையை பெரும்பாலும் செய்வது அயல்நாடு வாழ் இந்தியர்கள் என்பது குறிப்பிடத்தக்கது                 தொல்காப்பியசெம்மல்புலவர் ஆ.காளியப்பன் 9788552993