Monday, 3 July 2017

கவிஞரும் கொத்தனாரும்



கவிஞரும் கொத்தனாரும் ஒன்று சிலேடை 02-07-17
செதுக்கி  அணிபடச் சீராக்கிக் வைத்து
புதுநூல் அறிந்துதான் கட்ட--மதுரைப்
பதியும் புகழ்பெறக் காரணம் யாதோ
கவிஞரொடு  கொத்தனார் தாம்.
             இதன்பொருள்
 கவிஞருக்குப் பொருத்தம்:சிறந்த சொற்களைத் தேர்ந்தெடுத்து அவற்றை செய்யுளின் ஓர் உறுப்பாகி சீராக்கி அழகாகச் செய்வர்.பல நூலிகளைக் கற்றுத் தான் ஒருபுது நூலை இயற்றுவர். மதுரை மாநகரம் சிறப்புப் பெறக்காரணம். முச்சங்கம் வைத்துத் தமிழ் வளர்த்த புலவர்களே.
கொத்தனார்க்குப் பொருத்தம்: சிறந்த கற்களைத் தேர்ந்தெடுத்து அவற்றைச்  செதுக்கி சீராக்கி அழகாக அடுக்கி வைத்துக் கட்டுவர். தூக்கு நூல் மற்றும் வரிநூல் போன்ற பல நூல்களைக் கொண்டு  ஒருபுதுக் கட்டடத்தைக் கட்டுவர். மதுரை மாநகரம் சிறப்புப் பெறக்காரணம்.சிறந்த கொத்தனார்கள் கட்டிய மதுரை
மீனாட்சியம்மன் கோவில்,திருமலைநாயக்கர் மஹால் போன்ற கட்டடங்கள் இருப்பதே.   எனவே கட்டடம் கட்டும் கொத்தனாரும் பாட்டுக்கட்டும் கவிஞர்களும் ஒப்பாவார்கள்.புலவர்.ஆ.காளியப்பன் 9788552993
.

No comments:

Post a Comment