ஊக்கம் உடைமை 6-04-49
ஊக்கம் உடையான் உறக்கம் அடையான்
உணவைக் கூட உண்பதை நினையான்
ஆக்கம் தேடிவரும் அயராது உழைத்தால்
ஆசைப்பட்ட தெல்லாம் அடைந்தே தீரலாம்
தேக்கிய வெள்ளமெனத் திரண்ட செல்வம்
வழிகேட்டு வந்து வாசலில் நிற்கும்
தாக்கும் அம்பையும் பொருட்படுத் தாத
தகரென ஊக்கம் கொண்டான் தனக்கே
நீரது ஆழத்துக்கு நீளும் ஆம்பல்போல்
நெஞ்சில் ஊக்கம் கொண்டான் உயர்வாம்
ஊரது மெச்ச உறுபொருள் கொடுக்கலாம்
உள்ளத்தில் ஊக்கம் கொண்ட செறுக்கால்
மாரது கொண்டு நகரும் பாம்பையும்
மார்பில் மாலையாய்ச் சூட்டிட முடியும்
பாரது எதிர்த்துப் படைகொண்ட போதும்
பயப்பட மாட்டான் பார்க்கலாம் என்பானே
எண்ணும் போதே ஏற்றமாய் எண்ணிடில்
எளிதில் வெற்றியை எட்டிப் பிடிக்கலாம்
மண்டியிட்டு இழுத்திடும் மாட்டினைப் போலவே
மனதில் ஊக்கம் கொண்டவன் நினைத்தால
விண்ணையும் தொடலாம் உள்ளத்தின் ஊக்கத்ததால்
வரிப்புலி கூட யானையை வென்றுடும்
கண்ணும் கருத்துமாய்க் காரியம் ஆற்றிடின்
காலமும் இடமும் தப்பியனும் வெற்றியே!
ஆக்கம் தொல்காப்பியச் செம்மல் புலவர் ஆ.காளியப்பன்
தலைவர் தொல்காப்பியர் தமிழ்ச்சங்கமம் பேரூர் ஆதீனம் 9788552993
No comments:
Post a Comment