ஊடல்
அலைபேசி 9788552993 |
இன்று மருதத்திணையில் உரிப்பொருள் பற்றிப் பார்ப்போம் தொல்காப்பியர்
ஐந்து திணைகளுக்குரியஉரிப்பொருள்களைக் கூறும்போது
புணர்தல் பிரிதல் இருத்தல் இரங்கல்
ஊடல் அவற்றின் நிமித்தம் என்றிவை
தேருங்காலைத் திணைக்குரிப் பொருளே என்கிறார்.
மருதத்திணையின் உரிப்பொருள்
ஊடல் ஊடல்நிமித்தம்.
ஊடல் ஊடு+ அல்
என்றுபிரிக்கலாம். ஊடாடல் என்றும் கூறலாம்
மேலைநாட்டு நடத்தை அறிவியல் ஊடலைப் பல்வேறு கோணங்களில் பகுத்தாய்கிறது. நடத்தையியல் மேலைநாடுகளில் 19 ஆம் நூற்றாண்டில் உருவானது. தமிழில்
இந்த அறிவியல் கலை கிறித்துவுக்கு முன்பே தோன்றி வளர்ந்துள்ளது இதை பாமரர் மொழியில் சொன்னால் பிளுக்குதல் குச்சிமிட்டாய் தரவில்லை
என்பதற்காய்பள்ளிக்குச் செல்ல மாட்டேனென்றுஅடம்பிடிக்கும்சிறுமி நான் அம்மாவீட்டிற்குப் போகப்போகிறேனென்று மனைவிமார்கள்
மிரட்டுதல்
கூறும்போது
கூறும்போது
அன்பின் இணையரிடம் ஏற்படும் சிறு பிணக்குஊடல்
எனப்படும். அன்பினருக்குள் ஏற்படும்இந்த ஊடல் மேலும் அன்பினை மிகுவிக்கக்கூடியது
ஊடலும், கூடலும்
சேர்ந்ததுதான் வாழ்க்கை ஊடல் கூடல் காதலர் விளையாட்டு அன்புமிக்கோருள்
வருகின்ற விளையாட்டுக் கோபம்
பொய்க்கோபம் கொள்ளுதல், சிணுங்குதல்
இதுமனித இனத்தில் மட்டும் அல்ல பறவை, விலங்கினத்திலும் உண்டு ஆணினத்தை
அலைக்களித்தே பெண்ணினம் இணங்குகிறது பட்டிக்காட்டில் இருந்தால் இந்த இயல்புகளை
நேரில் காண வாய்ப்பு பொதுவாக ஊடல் இருக்கும் காமத்தைத் தூண்டவைக்கும் (சிறிய) பிணக்கு
இந்தவகையான பிணக்கைப் புலவி, ஊடல், துனி என்ற பல
சொற்களால் குறித்தாலும் இவற்றிடையே
சிறுசிறு வேறுபாடு உண்டு
இதன் வழியே பார்க்கும்போது துனி என்பது ஊடலின் உச்சக்கட்டம். கனிந்த பழம் போன்றது பழுத்திருக்கும் ஊடலும் கூடலில் இன்பமாக
அமைந்திருக்கும் புலவி
அதாவது ஊடலின் தோன்று நிலையே புலவி.பொய்யை இட்டுக்கட்டிக்கொண்டு ஊடும் பாங்கு புலவி எனப்படும் இது
பழுக்காமல் பிஞ்சு நிலையில் இருக்கும் கருக்காய் போன்றது. இதைத்தான் திருவள்ளுவர் துனியும் புலவியும் இல்லாயின் காமம்
கனியும் கருக்காயும் அற்று என்கிறார்புலவியைத் திருவள்ளுவர் புலத்தை என்னும் சொல்லாலும் குறிப்பிடுகிறார். அத் கணவன் தழுவ
வரும்போது தழுவாமல் இருப்பதாகும். புலந்து
உணர்தல் புலவி. இது பொய்யாகக் கணவன்மேல் சினம் கொள்ளுதல் ஆகும்.
பெண்
ஊடுதல் பற்றிய செய்திகள் திருக்குறளின் கடைசியில் உள்ள புலவி, புலவி நுணுக்கம், ஊடல் உவகை என்னும் மூன்று அதிகாரங்கள் ஊடல்
பற்றிய செய்திகளைக் கூறுகின்றன
களவு வாழ்க்கையின்போது இருவரும் கூடுவதற்குக் காதலி குற்றிட்ட
இடத்துக்கு அவள் வரத் தவறியபோது காதலன் ஊடுவான். இந்த ஊடல் புலவி என்னும்
போலிப் பிணக்காகவும் இருக்கும்.கற்பு வாழ்க்கையின்போதுதலைவனின் பரத்தமைப்பிரிவாகும் தன்னைத்தவிக்கவிட்டு
பரத்தையிடம்இன்பம் துய்த்து வந்த தலைவனிடம் தலைவி சினம் கொண்டு ஊடல் கொள்வாள்
அப்போதெல்லாம் தலைவியின் தோழி பக்குவமாக எடுத்துரைத்து அவர்களைக் கூட்டிவைப்பாள் புலத்தலும் ஊடலும் ஆகிய இடத்தும்
சொலத்தகு கிளவி தோழிக்கு உரிய (தொல்காப்பியம் கற்பியல் 16 தோழியின் ஊடல் நீக்கமானது களவு வாழ்க்கையில் காதலைத்
தொடரச் செய்யும், கற்பு வாழ்க்கையில் இல்லறத்தைச் சிறக்கச்
செய்யும்
சொலத்தகு கிளவி தோழிக்கு உரிய (தொல்காப்பியம் கற்பியல் 16 தோழியின் ஊடல் நீக்கமானது களவு வாழ்க்கையில் காதலைத்
தொடரச் செய்யும், கற்பு வாழ்க்கையில் இல்லறத்தைச் சிறக்கச்
செய்யும்
கற்பு வாழ்க்கையில் தலைவனின் பரத்தை ஒழுக்கத்தைக்கண்டிக்கும்
விதமாகத் தலைவி ஊடுவாள். திருமணத்துக்குப் பின்னர் கூடி வாழும்போது மனைவி தன் ஆவலைத் தணிக்காதபோது கணவன் ஊடுவா இந்த மனப்பாங்கு ஆண்களிடமும் இருப்பதைத் தொல்காப்பியம்
குறிப்பிடுகிறது. உணர்ப்புவரை இறப்பினும் செய்குறி பிழைப்பினும்
புலத்தலும் ஊடலும் கிழவோற்கு உரிய (தொல்காப்பியம் கற்பியல்
புலத்தலும் ஊடலும் கிழவோற்கு உரிய (தொல்காப்பியம் கற்பியல்
தலைவன், தலைவிக்குள் ஏற்படும் ஊடலை நீக்கும்
தோழிக்கே
ஊடல் தோழி தலைவனுக்காகப் பரிந்து பேசுவாள்.இதைத்தொல்காப்பியம்
ஊடல் தோழி தலைவனுக்காகப் பரிந்து பேசுவாள்.இதைத்தொல்காப்பியம்
உணர்ப்பு வயின்வாரா ஊடலுற்றோள் வயின் உணர்த்தல்
வேண்டி கிழவோன் பால்நின்று தான்
வெகுண்டாக்கிய தகுதி. ( தொல் கற்பு
148)
மருதத்திணையில்ஊடலுக்குக்காரணம் குறிஞ்சி/முல்லையில்
இல்லை; மருதத்தில் மட்டும் ஏன்? மருதம் -ன்னாலே பரத்தைமை இல்லை!
தலைவன் – தலைவி ஊடலுக்குப் பல காரணங்கள்! அதில் பரத்தைமையும் ஒன்று
* தலைவன்-தலைவியே களிக்கும் போது, ஏன் பரத்தையரை நாட வேண்டும்
தலைவன் – தலைவி ஊடலுக்குப் பல காரணங்கள்! அதில் பரத்தைமையும் ஒன்று
* தலைவன்-தலைவியே களிக்கும் போது, ஏன் பரத்தையரை நாட வேண்டும்
மருதத்தில் உள்ளவர்களுக்குச சோற்றுக்கு
பஞ்சம் இல்லை.
ஆறு மாதம் வேலை செய்தால் போதும் ஆறமாதம்
ஓய்வு ஓய்வு என்றால்
பொழுதுபோக்கு நிகழ்வுகளில் கலந்து
கொள்ளல்
அதுவே குடித்தல் சூதாடுதல் கணிகையருடன்
சேர்ந்து கூத்தாடுதல்
செல்வம் மிகுதியே மேற்கண்ட
செயல்களுக்குக்காரணம் இந்த இடத்தில் நாம் ஒன்றைக்கவனிக்க
வேண்டும்
பரத்தையர் பிரிவு அகப்பொருள் என்றாலும் அதை இன்பத்துப்பாலுள்
வைக்கவில்லை வள்ளுவர் இதனால்தான் வரைவின்
மகளிர் என்று பொருட்பாலில் வைத்துள்ளார்
இந்த உறவின் ஆழத்தையே பதித்து வைப்பார், ஓரம்போகியார்!
ஓரம் போதல் = “அங்கு” போதல்; குறிப்பு மொழி! அதைப் பாடிய இவர் பேரும் “ஓரம் போகியார்” என்றே ஆனது பரத்தையர் இருவகைப்படுவர் இற் பரத்தை/ நயப்புப் பரத்தை என இரு வகை உண்டு!
* இற் பரத்தை = ஒருவனே-தலைவனே என்று வாழ்பவள்!
* நயப்புப் பரத்தை = பலரையும் நயப்பவள் (தொழில்)! இரண்டாம் வகைக்குச் சான்றோர் ஆதரவு இல்லை!
முதல் வகை, காதல் கைகூடாது, வேறு இடத்தில் மணமாகி, பின்னும் தொடர்வது! தலைவியின்ஊடலைத் தீர்க்கத் தலைவன் தூது விடுவான். பாங்கன்
தூதாகச் செல்வான். தலைவி ஊடல் நீங்கத் தூது விட்டதாகக்
குறிப்புகள் இல்லை ஊடலைத்தணிக்க தலைவண் பல்வேறு முயற்சிகளைச் செய்வான் காலில் விழக்கூடத் தயங்க மாட்டான்
ஓரம் போதல் = “அங்கு” போதல்; குறிப்பு மொழி! அதைப் பாடிய இவர் பேரும் “ஓரம் போகியார்” என்றே ஆனது பரத்தையர் இருவகைப்படுவர் இற் பரத்தை/ நயப்புப் பரத்தை என இரு வகை உண்டு!
* இற் பரத்தை = ஒருவனே-தலைவனே என்று வாழ்பவள்!
* நயப்புப் பரத்தை = பலரையும் நயப்பவள் (தொழில்)! இரண்டாம் வகைக்குச் சான்றோர் ஆதரவு இல்லை!
முதல் வகை, காதல் கைகூடாது, வேறு இடத்தில் மணமாகி, பின்னும் தொடர்வது! தலைவியின்ஊடலைத் தீர்க்கத் தலைவன் தூது விடுவான். பாங்கன்
தூதாகச் செல்வான். தலைவி ஊடல் நீங்கத் தூது விட்டதாகக்
குறிப்புகள் இல்லை ஊடலைத்தணிக்க தலைவண் பல்வேறு முயற்சிகளைச் செய்வான் காலில் விழக்கூடத் தயங்க மாட்டான்
இதைத்
தொல்காப்பியர்
கொடுமை ஒழுக்கம் கோடல்
வேண்டி
அடிமேல் விழுந்த கிழவனை ( தொல் கற்பு 145)
.இப்படி நாயகி ஊடல் செய்யும்போது நாயகன் அவள் காலிலேயே போய்விழுவதாகச் சொல்வது கவி
மரபு ஊடல் – கூடலின் தத்வார்த்தம் : தெய்வத்தின் குரல் (ஐந்தாம் பகுதி)‘அத்ரி – ஜா’ என்னும் ‘மலைமகள்’ இருக்கிறாளே, ஸாக்ஷாத் பார்வதி,
அவளுக்கு பர்த்தாவிடத்தில் ய்க்கோபம். ‘க்ரீடா ருஷ்டா’ என்று விளையாட்டுக் கோபக்காரியைச் சொல்லியிருக்கிறார்.
‘கீத கோவிந்த’ த்தைப் பார்த்தால் க்ருஷ்ணன் ராதையின் காலில் போய் விழுந்தான் என்று இருக்கும். அருணகிரிநாதரில் (அவரது திருப்புகழில்)
பார்த்தால் வள்ளிக்குறத்தியின் காலிலே போய் சிவசக்தி குமாரராக
இருக்கப்பட்ட ஸுப்ரஹ்மண்யர் விழுந்தாரென்று இருக்கும்.
பிரபுலிங்க லீலையில் பார்வதியின்
ஊசலைத்தணிக்க சிவன் பார்வதிகாலில் விழுகிறார் பார்வதி சிரிக்கிறாள் சிவன் காலில்
விழுந்ததற்காகச் சிரிக்கவில்லை. தன் சக்கலத்தி கங்கையும் காலில் விழுந்ததை
எண்ணிச்சிரிக்கின்றாள்
இதை
கம்பர் இராவனைப்பற்றிக்கூறும் போது
அவன்தன் வீரத்தைப்பற்றிக் கூறும் ஊடலைத்தணிக்க மனைவி காலில் கூட விழுந்தது
இல்லை இந்த ராமனிடம் நான் மன்னிப்புக் கேட்க முடியுமா? என்கின்றான்
அப்படியும் தணியவில்லை என்றால் அதற்கு
உணர்வயின் வாரா ஊடல் என்று பெயர்
அப்படியும் தணியவில்லை என்றால் அதற்கு
உணர்வயின் வாரா ஊடல் என்று பெயர் .கோவலன் மிதமிஞ்சிய ஊடலே
மாதவியைப்பிரிதல்
கண்ணகியின் ஊடல்
சிலம்பில தன்னைப் பிரிந்து சென்ற கோவலன்மீது கண்ணகி ஊடல் கொள்ள
வில்லை.
வடுநீங்கு சிறப்பின் தன்மனையகம் மறந்து
விடுதல் அறியா இருப்பினன் ஆகி (சிலம்பு
அரங்கேற்றுக்காதை 174--175)
இப்படி இருந்த கோவலன்மீது கண்ணகிக்கு அளவுகடந்த கோபம்
வந்திருக்க வேண்டும்
சலம்புணர் கொள்கை சலதியோடாடி
குலம் தருவான்பொருள் குந்ரம் தொலைத்த
இலம்பாடு நீணுத்தரும்(சிலம்பு கனாத்திறம் உரைத்த 70-72)
அதே கண்ணகி மதுரையில்
ஆச்சியர் வீட்டில் இருக்கும் போது கோபம் கொந்தளிக்கிறது. கண்மகியின்
பொறுமையை புகழும் போது
வெளிப்படுகின்றது.
அறவோர்க் களித்தலும் அந்தணர் ஓம்பலும்
தன்மாமன் மாமி வருந்தியதைக் குறிப்பிட்டு போற்றா ஒழுக்கம் புரிந்தீர்
என்று வெளிப்படையாகவே குற்றவாளி ஆக்குகிறாள்.
தன் இன்பவாழ்வு கெட்டது என்று ஓரிடத்தில் கூடக்குறிப்பிடவில்லை.
கோப்பெருந்தேவின் ஊடல்
அரசன் அவையில் ஆடல்பாடல் நடைபெறுவது வழக்கம். பொய்யாகத்த தலைவலி என்று கூறு அந்த இடத்தை
விட்டு அந்தப்புரம் செல்லுகின்றாள்
அந்த ஊடலைத்தணிக்க மன்னன் சென்ற போதுதான் பொற்கொல்லன் முன்பு களவுபோன
அரசியின் காற்சிலம்பைக் களவாடிய கள்வனைப் பிடித்து வைத்துள்ளேன் என்று
கூறுகிறான்.பதற்றத்தில் சென்ற பாண்டியன் பகுத்து ஆராயாமல்
கொன்று அச்சிலம்பு கொணர்க என்று அரசன் ஆணை இடுகிறான் இதையே
வினையின் விளைவு என்கிறார் இளங்கோ
ஊடலே கதையின் திருப்புமுனையாக அமைகிறது
ஆகையால் ஊடல் என்பதை நீளவிடாது
உணவில் இடும் உப்புப்போல் இருக்க வேண்டும் உப்பு இல்லை என்றால் உணவில்
சுவை இருக்காது அதுவே அதிகமானால்
உணவை வாயிலேயே வைக்கமுடியாது.
இதைத்தான் வள்ளுவர்
உப்பமைந் தற்றால் புலவியது சிறிது
மிக்கற்றால் நீளவிடல் 1301
மிதமிஞ்சிய ஊடலே மாதவியும் கோவலனும் பிரிதற்குக்
காரணம். அகவே நாமும் நம்மிடையே தோன்றும் சிறுசிறு பிணக்குகளை பெரிது படுத்தாமல்
விட்டுக்கொடுத்துவாழவேண்டும்.
மனைவியிடம்
தோற்பவன் வாழ்க்கையில் அபார வெற்றி பெறுவான்
ஊடலிற்
தோற்றவர் வென்றார் அதுமன்னும்
கூடலிற்
காணப் படும்
.
No comments:
Post a Comment