Friday, 20 April 2018

மருதம்


                           மருதம்    4-03-2018  அமர்வு 7          
நானிலங்களில் முல்லையும்  குறிஞ்சியும் முதலில் பார்த்தோம். இந்த அமர்வில்      மருதம் பற்றிப்பார்ப்போம். மருதம் வயலும் வயலைச் சார்ந்த இடத்தைக் குறிக்கும். இந்நிலப்பகுதியானது ஆறு,ஏரி, குளங்களைச் சார்ந்திருந்தது.   இப்பகுதியுடன் தொடர்புடைய மரமான மருத மரத்தின் பூவினை வைத்தே இந்தத் திணைக்கும் பெயரிட்டனர் நம் முன்னோர்கள்
குறிஞ்சி கரடு முரடு ஆனது வாழ்வதற்கு ஏற்ற சூழல் இல்லாதது, பசியைப் போக்க காய்களும் கனிகளும் அல்லது வேட்டையாடிய விலங்கின் இறைச்சி.மட்டுமே
கடுமையான மழை.இயற்கை பாதிப்புகள் அதிகம்  காத்துக்கொள்ள வசதிகள் குறைவு.ஏற்றம் இறக்கம் அதிகம் வீடுகள் அமைக்க கடினம்.மொத்தத்தில்  வாழ்வு சிக்கலானது.
முல்லை நிலத்தில் சமமான நிலப்பரப்பு குறைவு. தாம் பழக்கிய ஆடு மாடுகளுக்குப் புல் வெளிகள் உண்டு. கூடாரம் அடித்துக்கொள்ள முடியும். தனக்கு வேண்டிய வரகு,சாமை இவற்றை விளைவித்துக் கொள்ள முடியும். இருப்பினும் மழையை நம்பியே வாழ வேண்டிஉள்ளது
மருதம் காட்டை அடுத்துள்ள, சமதளமும், ஆற்றங்கரைக்குஅருகிலும் அழகாகவும் உள்ள பூமியை மருதம் என்று வழங்கினார்கள்.
.பள்ளமான ஆற்றங்கரைச் சமவெளிப் பகுதியில் முதன் முதலில் உணவுத் தானியங்களை பயிரிடும் வேளாண்மையை முல்லை நிலத்திலிருந்து இடம் பெயர்ந்த ஒரு கூட்டம் கண்டுபிடித்தது ஒப்பில்லா உணவு  உற்பத்தியின் உச்சமாக நெல் வேளாண்மையைக் கண்டுபிடித்தனர்     
மனிதனின் உழைப்பாலும் முயற்சியாலும் உருவான நிலம் மருதம். மழைநீருக்கு மாற்றாக ஆற்று நீரைத் தடுத்து தேக்கி வைத்து அந்த நீரைப் பயன்படுத்திப் பயிர்த்தொழில் செய்தனர், குறிஞ்சியையும் முல்லையையும் விட விளைச்சலில் முந்திச் சென்ற நிலம் மருதம் என்றால், அது மிகையாகாது.
   ஏனென்றால், நிலையான நீர்ப்பாசன வசதி, வண்டல் படிந்த ஆற்றுப் படுகைகள் என்று விளைச்சலுக்கு ஏற்ற பரப்பாக மருத நிலம் இருந்தது இதனால்  நிலத்தை உழுது நெல் விதை தூவப்படுவதால், அதைச் செய்தவர்கள் உழவர்கள் எனப் பெயர் பெற்றார்கள்

மற்ற நிலப் பகுதிகளை ஒப்பிடும்போது  மனிதனின் முக்கிய வாழ்வாதாரமான உணவும், நீரும், இருப்பிடமும் மருத நிலத்திலேயே பெருமளவில் இருந்தன
உலக வரலாற்றில் ஆற்றங்கரைகளிலும், ஏரிக்கரைகளிலுமே நாகரிகம் வளர்ந்ததாகக் காண்கிறோம். அதேப் போன்று தமிழருடைய நாகரிகமும், பண்பாடும் இந்த மருத நிலங்களிலேயே ஏற்பட்டன    

முல்லையாகி  காட்டைத் திருத்தி புழுதியாக்கி நன்றாகச் செய்து          
வயல்களைச் செய்ததலால் வயல்களைச் செய் என்றனர். அதுமாதிரியே கவிதையும் மூளை உழைப்பால் எதுகையும் மோனையும் கூட்டி நன்றாகச் செய்வதால் தான் கவிதையைச் செய்யுள் என்றனர்

மார்க்சிய தத்துவத்தின்படி சொல்லப்படும் குடும்பம்-சொத்து- அரசு என்ற நிறுவனங்கள் முதன் முதலில் மருதநிலத்திலேயே நிறுவப்பட்டன
நாகரிக வாழ்வின் பரிணாமவளர்ச்சியின் முதற்கட்டமாக   உறவு முறையற்ற காட்டு மிராண்டி வாழ்வு சீரமைக்கப்பட்டு குடும்பம்என்ற அமைப்பு மருத நிலத்தில் தோற்றுவிக்கப்பட்டது. எனவேதான் மருதநில மக்கள் குடும்பர்எனவும் அழைக்கப்படுகின்றனர்.

 மனிதன் குடும்பமாக வாழ ஆரம்பித்தவுடன் அக்குடும்பத் தலைவன் குடும்பன் எனப்பட்டான். பல்வேறு குடும்பங்கள் சேர்ந்து ஒரு சிறு கூட்டமாக வாழ்ந்த பகுதி ஊர் எனப்பட்டது. எனவேதான் மருத நிலக் குடியிருப்புகள் மட்டுமே ஊர் என அழைக்கப்பட்டன
அவ்வூரின் தலைவன்ஊர்க் குடும்பன்எனப்பட்டான்.இவ்வாறு பல ஊர்களையும் ஒருங்கிணைத்து நாடுகள் எனும் சிறுசிறு நிலப்பகுதியும் அந்நாடுகளின் தலைவர்கள் “நாட்டுக் குடும்பர்கள்”  எனவும் அழைக்கப்பட்டனர்
இப்படியான பல நாடுகளையும் ஒருங்கிணைத்து உருவானதே அரசு எனும் பெரும் நிறுவனம் ஆகும். அவ்வாறான பெரும் பாண்டிய அரசின் மன்னர்களில் பெருங்குடும்பனே முதுகுடுமி பெருவழுதியாவான்

தமிழகத்தில் மருத நிலத்தில் முதன் முதலில்   நெல் கண்டுபிடிக்கப்பட்டு விளைவிக்கப்பட்ட காலத்தில் குடும்பம், ஊர். பேரூர், நகரம், நாடு, அரசுகள் தோன்றின நெல் நாகரிகத்தின் பண்பாட்டுத் தலைவன் இந்தப் பண்பாட்டினை உடைய மக்களுக்குத் தலைவனானான். தமிழ் இலக்கியங்களில் நமக்குக் கிடைக்ககூடிய மிகப் பழமையான நூலான தொல்காப்பியம் இந்தப் பண்பாட்டுத் தலைவனை வேந்தன் எனக் கூறுகிறது
இந்நூலில் இந்தப் பண்பாட்டுத் தலைவனான வேந்தன் கடவுள் நிலைக்கு உயர்த்தப்பட்ட மிகவும் வளர்ச்சி அடைந்த நிலையைக் கூறுகிறது. வேந்தன் மேயத் தீம்புனல் உலகமும் தொல்காப்பியம் பொருளதிகாரம் நெல் நாகரிகம் தோன்றிய மருத நிலத்தின் கடவுள் வேந்தன் எனக் கூறுகிறது
இப்படி   வேந்தன்’, குல முதல்வனாகி, காக்கும் தெய்வமாகவும் ஆகிறான். இதையே தொல்காப்பியம், ‘வேந்தன் மேய தீம்புனல் உலகம்என்று இலக்கணம் வகுக்கிறது. மேயஎன்பதுக்குத் தகுதியான என்று பொருள். ஆக, மருத நிலத்துக்குத்  (தீம்புனல் இனிமையான நீர் அதாவது ஆற்றுநீர்) தகுதியான ஆட்சியாளன் வேந்தன்என்கிறது தமிழ் இலக்கணம்.



இந்த வேந்தர்களின் பரம்பரையே சேர, சோழ, பாண்டிய வேந்தர்கள்       

.வேந்தன்என்ற சொல்லை இந்த மூன்று பேர் மட்டுமே பெற்றவர்களாகத் தமிழ் இலக்கியத்தில் விளங்குகிறார்கள்
மற்றவர்கள் வேளிர்’, ‘மன்னன்’, ‘கோஎன் பெயரிலும் அரசன்என்ற பெயரால் மட்டுமே அறியப்பட்டிருக்கிறார்கள்
கைத்தொழில்களும், கல்வியும், கலைகளும், வாணிகமும், செல்வமும், அரசியலும், அமைதியான வாழ்க்கையும் மருத நிலங்களில் செழித்து வளர்ந்தன. மருத நிலத்து மக்கள் கட்டடங்களையும், மாளிகைகளையும், அரண்மனைகளையும் அமைத்துக் கொண்டு நாகரிகமாக வாழ்ந்துள்ளனர்
மருதநிலத்தின் பெருஞ்செல்வமானது  பகைவர்களையும் கள்வர்களையும் மருத நிலம் நோக்கி திரும்பிப் பார்க்க வைத்தது.            
       பகைவர்களிடமிருந்தும் கள்வர்களிடமிருந்தும்  மக்களைக் காக்கும் பொருட்டு அரசு என்ற அமைப்பு தோற்றுவிக்கப்பட்டது. இவ்வரசு எனும் அமைப்பானது பல்வேறு பரிணாம வளர்ச்சிக்குப் பின் பேரரசு எனும் நிலையை அடைந்தது.
இதையே திருவள்ளுவர்
முறைசெய்து காப்பாற்றும் மன்னவன் மக்கடகு
இறையென்று வைக்கப் படும்

பொழுது மருத நிலத்தின் பொழுதுகள்                                                      வைகறை விடியல் மருதம்  வைகறை,(இரவின் பிற்கூறு) விடியல்(பகலின் முற்கூறு) என்னும் சிறுபொழுதுகளும் மருத நிலத்துக்குரிய பொழுதுகளாகும்
வைகறை விடியல் மருதம்" என்பது தொல்காப்பியம்

 கார், கூதிர், முன்பனி, பின்பனி, இளவேனில், முதுவேனில் என்னும் பெரும் பொழுதுகளும் சிறப்பாக கார், இளவேனில் முதுவேனில் ஆகிய மூன்று காலங்களும் சிறப்பானவை

            கருப்பொருள்
கருப்பொருள் என்பது அந்தந்த நிலங்களின் அமைப்பாலும் சூழலாலும் ஏற்பட்ட பொருள்கள்
தெய்வே உணவே மாமரம் புள்பறவை
செய்தி யாழின் பகுதியொடு
அவ்வகை பிறவும் கருவென மொழிப

இவற்றுள் முதலில் தெய்வத்தைப் பற்றிப் பார்ப்போம்
"வேந்தன் மேய தீம்புனல் உலகமும்" - தொல்காப்பியம். இவ்வாறு தொல்காப்பியம் மருதநில கடவுளாக வேந்தனை கூறுகிறது



தொல்காப்பியர் காலத்துக்கு மிக மிகப் பிற்காலத்தவரான         பக்கம் 4
உரையாசிரியர்கள் வேந்தன் என்பதற்கு இந்திரன் என்று பொருள் கூறினார்கள்.
அதனால் பிற்கால நூல்கள் இந்திரனை மருதநிலக் கடவுளாக கூறுகிறது. வேந்தனே ஆரிய கலப்பினால் இந்திரனாக மாறியிருப்பதாக தமிழ் ஆய்வாளர்கள் கருதுகின்றனர் தமிழ் முருகனும், வட நாட்டு சுப்பிரமணியனும் ஒன்றிணைந்தபோது, இதுவும் நடந்தது. தமிழ்க் கொற்றவை, சிவனுக்குச் சக்தியாக மாற்றப்படும் போது இதுவும் நடந்திருக்கிறது.
ஆரியக் கலப்பு, தமிழ் பூமியில் ஏற்பட்டு இந்து மதம் கட்டமைக்கப்பட்டபோது, தமிழ் வேந்தனும், ஆரிய தேவவேந்திரனும் ஒன்றிணைக்கப்படுகிறான்
உழவர்களுக்கு ஆதிக் கடவுள் வேந்தன், பிறகு தேவேந்திரானாகி(தேவ+ இந்திரன்
வேந்தனாகிய இந்திரனுக்கு நன்றி தெரிவிக்கவே, அவன் மழை தந்தமைக்காகப் போகித் திருநாள் கொண்டாடுகிறோம்.போகிஎன்ற பெயர் இந்திரனுக்கு உண்டு. தேவலோகத்துப் போகங்களை (சிற்றின்பங்களை) அனுபவிக்கிறவன். அதனால் இந்திரனுக்குப் போகி என்று பெயர். அறுவடைக்கு முந்தைய நாள் இந்திரனுக்கு நன்றி கூறும் நாள். அதுவே போகி.

    மறுநாள் பொங்கல் என்று இன்று நாம் சொல்லும் நாள், அறுவடை நாள் ஆகும். புதிய மகசூலைப் பொங்கலாக்கி, சூரியனுக்குப் படைக்கும் நாள், பொங்கல் நாள் ஆகும். ஒரு பக்கம் அறுவடை மறுபக்கம் புது உழவுக்குத் தொடக்க நாளும் ஆகும். வேந்தன் நெறிப்பட்ட தமிழர் மழை வணக்கமும், வேத நெறிப்பட்ட இந்திர வணக்கமும் ஒன்றையொன்று கலந்து, இந்திர விழாவில் முடிந்தன.
சங்க காலத்தில் அறிமுகமான இந்திரன், மரியாதைக்குரிய மழைக் கடவுளாக மாறி சிலப்பதிகாரம், மணிமேகலை காலமான 1800 ஆண்டுகளுக்குப் பிந்தைய (கி.பி.2ம் நூற்றாண்டு) கால அளவில் இந்திர வணக்கம் தமிழ்ச் சமுதாயத்தில் வேர் ஊன்றியது. இந்திரவிழா பற்றிச் சிலம்பிலும், மணிமேகலையிலும், சான்றுகள் இருக்கின்றன.கோவைமாவட்டம், பேரூர் பட்டீஸ்வரன் கோயிலில் இந்திர விழ நிகழ்வதைச் சான்றாக்கியுள்ளார் தமிழகத்தில் மருத நிலத்தில் முதன் முதலில் மள்ளர்களால் நெல் கண்டுபிடிக்கப்பட்டு விளைவிக்கப்பட்ட காலத்தில் குடும்பம், ஊர். பேரூர், நகரம், நாடு, அரசுகள் தோன்றின. நெல் நாகரிகத்தின் பண்பாட்டுத் தலைவன் இந்தப் பண்பாட்டினை உடைய மக்களுக்குத் தலைவனானான்.    தொல்காப்பியம் இந்தப் பண்பாட்டுத் தலைவனை வேந்தன் எனக் கூறுகிறது இந்தப் பண்பாட்டுத் தலைவனான வேந்தன் கடவுள் நிலைக்கு உயர்த்தப்பட்ட மிகவும் வளர்ச்சி அடைந்த நிலையைக் கூறுகிறது. உழவுக்குக் கடவுள் மழையே. தமிழ் மரபில் மழைக் கடவுளாக வேந்தன் இருந்திருக்கிறான். விவசாயம் சார்ந்த சடங்குகளுக்குக் கடவுளும் வேந்தனாகவே இருந்திருக்கிறான்                                                            இதை மனதில்கொண்டே திருவள்ளுவரும்                                                                                                                         வானோக்கி வாழும் உலகெல்லாம் மன்னவன்                                                                            கோல்நோக்கி வாழும் குடி என்கிறார்



உழவுக்குக் கடவுள் மழையே. தமிழ் மரபில் மழைக் கடவுளாக       பக்கம்5
வேந்தன் இருந்திருக்கிறான். விவசாயம் சார்ந்த சடங்குகளுக்குக் கடவுளும் வேந்தனாகவே இருந்திருக்கிறான்திருவள்ளுவரும்
குடிபுறங் காத்தோம்பிக் குற்றம் கடிதல்                                      வடுவன்று வேந்தன் தொழில்
·         வேந்தன்=அரசன்!
·         மாறிக் கொண்டே இருப்பதால், இவர்கட்கு தனித்த அடையாளமோ, ஆலயமோ, கூத்தோ, துறையோ இல்லை! மக்கள் வாழ்வியலில் கிடையாது! வெறும் நில அடையாளங்கள் மட்டுமே;
·         மக்கள் தொல்காப்பியம் மருதநிலத்தில் வாழ்கின்ற மக்களெனத் தனியாகக் குறிப்பிடாமல்     “ஏனோர் பாங்கினும் எண்ணுங் காலை ஆனா வகைய திணைநிலைப் பெயரே” (தொல்.பொருள்-968)
·         முல்லைக்கு மக்களைக்குறிப்பிபட்டவர் குறிஞ்சி மருதம் நெய்தல் நிலங்களுக்கு குறிக்கவில்லை மன்னர் பாங்கின் பின்னோர் ஆகுப
என்று அந்தந்த நிலத்திற்குரிய, நிலப்பெயர் அடிப்படையில் மக்கட்பெயர் பகுக்கப்பட்டிருக்கும் என்று தொல்காப்பியர் சொல்கின்றார்உழவுத் தொழிற் தலையாகிய தொழிலாகவாகவும் உழவர்கள் தலை மக்களாகவும் போற்றப்பட்டனர். தெரிவிக்கின்றனர்.                                                     உண்டி கொடுத்தோ ருயிர்கொடுதோரே உண்டி முதற்றே யுணவின் பிண்டம் உணவெனப்படுவது நிலத்தொடு நீரே - புறநானூறு – 18,  . சுழன்றும் ஏர்பின்னது உலகம் அதனால் உழந்தும் உழவே தலை - குறள் 1031 உழதுண்டு வாழ்வாரே வாழ்வர் மற்றெல்லாம் தொழுதுண்டு பின் செல்பவர். - குறள் 1033இவ்வாறு உழவர்கள் பெருமைப்படுத்தப்பட்டனர்.
அவர்கள்தலைமக்கள் என்றும்  பொதுமக்கள் என்றும் வகுக்கப்பட்டனர்
உயர்ந்தோர் - ஊரன், மகிழ்நன்,  கிழவன் கிழத்தி, மனைவி.
பொதுமக்கள் - உழவர், உழத்தியர், கடையர், கடைசியர்
களமர்,தொழுவர்,மள்ளர்,கம்பளர்,விளைஞர்
உழவர்,கடைஞர்,கிளைஞர் என்று அவையவை
கழனிக்கு அடைந்தவர் பெயரே.எனத்திவாகர நிகண்டு கூறுகிறது.
இம்மருதநில மக்களோடு மருதநில தொழிற்மக்கள்பதினெட்டு வகையினரும் இருந்ததாக இலக்கியச் சான்றுகள் உண்டு.






இன்றைய  சாதி என்பது தமிழர்களின் தொழில் அடிப்படையில்          பக்கம்6 இருந்த அடையாளம் ஆகும். அவ்வடையாளத்தை எவ்வித சிக்கலும் இல்லாமல்தான் தமிழர்கள் வைத்திருந்தனர். வந்தேறி களால் வேந்தர்களின் வீழ்ச்சி  தமிழரின் வாழ்வியல் அமைப்பையே தலைகீழாய்ப்  புரட்டிப்போட்டது. தொழிற்பிரிவுகள் சாதிகளாக இருக்கப்பட்டன
விலங்கு எருமை, பசு, நீர் நாய் போன்ற விலங்குகளும்
பறவை வண்டானம், மகன்றில், நாரை, அன்னம் பெருநாரை, கம்புள், குருகு, தாரா அன்றில்
மரம் காஞ்சி, வஞ்சி, மருதம் 
மருத மரத்தில் வெண்மருது [கருமருது, பில்லமருது எனப் பல வகைகள் உண்டு. பில்லமருது  வீட்டுக்கு நிலை, சன்னல் சட்டங்கள் போன்றவை செய்யப் பயன்படுகிறது
திருவிடைமருதூர், திருஇடையாறுசப்தரிஷீஸ்வரர் ஆலயம் ஆகிய திருத்தலங்களில் மருதம் தலமரமாக விளங்குகின்றது. இதில், கருமருது, கலிமருது, பூமருது என பல்வேறு இனங்கள்.இலை, பழம், விதை, பட்டை முதலியன மருத்துவக் குணங்கொண்டவைஇலை, பழம், விதை ஆகியவை சதை நரம்புகளைச் சுருங்கச் செய்யும். பட்டை உடலுரமாக்கும்; இதய பலவீனம் தீர்க்கும்; இசிவு நீக்கும்.
·         மகாராஷ்டிராவின் மாநில மலர் மருதம் ஆகும்
·         இளவேனில் காலத்தில் (முன்கோடை அதாவது ஏப்ரல் ஜூன் மாதங்களில்) பூக்கும் மரங்களில் ஒன்று மருதமரம். இம்மரம் உழவர்க்கு நிழல்
·         நெல்லை விடியலில் போரடித்த உழவர் நண்பகலில் மருதமர நிழலில் எருதுகளுடன் இளைப்பாறுவார்களாம் ஆங்கிலத்தில் Queen’s Pride of India  
·         பூ அந்நீர் நிலைகளில் தாமரைப்பூக்கள் நிறைந்து காணப்பட்டதால் இந்நிலப்பகுதியின் முக்கிய மலராக தாமரை விளங்குகிறது. குவளைப்பூ, கழுநீர்ப்பூ போன்ற மலர்களும் இங்கு காணப்படுகின்றன திருபரங்குன்றத்தைத் தொழ வந்த சூரர மகளிர் தலையில் சண்பகப் பூவையும், மார்பில் மருத மர மலர்களை இலைகளோடு சேர்த்துக் கட்டிய மாலையையும் அணிந்திருந்தார்களாம்






 ஊர் வசிப்பிடம் பேரூர், மூதூர் என வழங்கப்பட்டன          பக்கம்7 

நீர் குளம் =  ஊருணி * கேணி, கிணறு ஓடை, மடை  *ஏந்தல், தாங்கல் பொய்கை, ஆறு யாற்று நீர், கிணற்று நீர், குளத்து நீர்.

உணவு அரிசியை முக்கிய உணவாக உட்கொண்டனர்         


அடிப்படைத் தேவையான உணவு உற்பத்தி அதிக அளவில் மருதநிலத்தில் வேளாண்மை செய்யப்பட்டதால் பிற நிலத்து மக்களும் மருதநிலத்தைச் சார்ந்தே வாழும் நிலை ஏற்ப்பட்டது செந்நெல், வெண்நெல்                                         பண்: மருதப்பண் பறை : நெல்லரிகிணை, மணமுழா
யாழ் மருத யாழ்
தொழில்: இங்கு வாழ்ந்த மக்கள் பெரும்பாலும் உழவுத் தொழில் புரிவோர்களாக இருந்தனர். நிலத்தைப் பண்படுத்தி உழுது பயிர் செய்தனர்
கரும்பு மற்றும் பிற தானியங்களையும் பயிரிட்டனர்                         களைகட்டல், நெல்லரிதல், கடாவிடல் விழாச்செய்தல், வயற்களைகட்டல், நெல் அரிதல், கடாவிடுதல், குளம் குடைதல், புது நீராடல்
இந்நிலப்பகுதியில் வாழ்ந்த மக்கள், நெல், கரும்பு முதலியவற்றைப் பயிர் செய்தார்கள். வாணிகத்தையும் செய்தனர். மருத நிலத்தில் விளைந்த நெல் முதலிய தானியங்களைப் பிற நிலத்தைச் சார்ந்தவர்களுக்குக் கொடுத்து,பண்டமாற்ற வாணிபம் செய்தனர் முதன் முதலில் மனிதன் மீன் பிடிக்க கற்றுக்கொண்டதே ஆறு மற்றும் குளங்களில்தான். அதன்பின் மனிதன் கடலில் மீன்பிடிக்கவும் கற்றுக்கொண்டான். அவ்வாறு மருதநில ஆறுகளில் மீன்பிடித்த மக்களே கரையாளர் என அழைக்கப்பட்டனர் கடலில் மீன்பிடிக்கக் கற்றுக்கொண்ட மருதநில மக்களே நெய்தல்நில மக்களாகவும் மீனவர், பரதவர்முக்குவர் எனவும் அழைக்கப்பட்டனர்
எந்நில மருங்கிற் பூவும் புள்ளும்                                             அந்நிலம் பொழுதொடு வாரா வாயினும்                                            வந்த நிலத்தின் பயத்த ஆகும்.
மருத நிலத்தின் உரிப்பொருள் ஊடலும் ஊடல் நிமித்தமும் அதுபற்றி அடுத்த அமர்வில் ஆய்வோம்.இன்றைய வாழ்வில் குடும்பத்தில்குழப்பமும் மணமுறிவும் வரக்காரணம் என்பது பற்றிய ஆய்வாக அமையும்.




No comments:

Post a Comment