உலகத் தமிழர் நாம் ஒன்று கூடுவோம்!
முல்லையும்
மருதமும் முகிழ்க்கும் முன்னரே
கல்லாம்
குறிஞ்சியில் கணையொடு திரிந்தவன்
மற்றவர் மரத்தில் வாழ்ந்த போது
மாளிகை
கட்டி வாழ்ந்தவன் தமிழன்
மண்ணைத்
திருத்தி மருதம் ஆக்கினான்
எண்ணையும்
எழுத்தையும் உலகிற்கு உணர்த்தினான்
விரிகடல்
நெய்தலில் நிறுத்தினான் கலத்தைத்
திரிபுரம்
எரித்த விரிசடைக் கடவுளும்
குன்றம்
தடிந்த குமரக் கடவுளும்
மன்றம்
அமைத்து
வளர்த்த தமிழில்
இலக்கிய
இலக்கணத் தோப்பும் செழித்தன
தொல்காப் பியமரமும் தோன்றி வளர்ந்தது
பாட்டும்
தொகையும் படர்ந்தன கொடிபோல்
உலகப்
பொதுமறை காய்த்துக் கனிந்தது
வலத்தையும்
வளத்தையும் பெற்ற தமிழன்
அகம்புறம்
என்று அமைத்தான் வாழ்க்கையைத்
தொடியோள்
பௌவமும் நெடியோன் குன்றமும்
கொடிகட்டிப்
பறந்த கொள்கைத் தமிழன்
பன்மலை
அடுக்கத்துப் பஃறுளிக் கரையில்
நற்கலை
பலவும் நயமுடன் வளர்த்தான்
கிரேக்கம்
ரோமொடு கீழ்த்திசை நாட்டினர்
கொற்கை
முத்துவைக் கொள்ளக் குவிந்தனர்
பாரதப்
போரில் பெருஞ்சோ றிட்டான்
பாரதம் கடந்தும்
புகழ்க்கொடி நாட்டினான்
மல்லைச்
சிற்பம் மதுரைக் கோவிலொடு
கல்லணை
கட்டிக் காவிரி தேக்கினான்
பெரிய
கோவிலும் பேரிசைத் தூணும்
அரிய சித்திரச்
சித்தன்ன வாசலும்
கடாரம்
வென்று கம்போடிய நாட்டில்
கட்டிய
கோவில் என்றும் உரைக்கும்
அருந்தமிழர்
பெருமையை அடுக்கிச் சொல்ல
ஆதி
சேடனின் ஆயிரம்நாப் போதா
சிந்து
முதலாய்க் கீழடி ஈறாய்
இந்தியாக்
கடந்தும் எங்கும் பரவினர்
பரவிய
தமிழரை பாங்குடன் இணைக்க
பாடுபடும் சாந்றோர்க்குத் தோள்கொடுத்து நிற்போம்
உலகத்
தமிழர் உளமகிழ் வுடனே
பலரும்
கூடி ஓரணி ஆவோம்.
No comments:
Post a Comment