தொல்காப்பியர் பேரவைத் தொடக்க விழா
அறிக்கை
திருவள்ளுவர் ஆண்டு
2048 மடங்கல் (ஆவணி) செவ்வாய்க் கிழமை(05-09-2017) பிற்பகல் 2.30 மணி அளவில் தவத்திரு.சாந்தலிங்க அடிகளார் கலைஅறிவியல் தமிழ்க் கல்லூரியின் முத்தமிழ் அரங்கத்தில் சீர்வளர்சீர் மெய் கண்டார்
வழிவழி கயிலை மாமுனி தவத்திரு.சாந்தலிங்க இராமசாமிஅடிகளார் ஆசியுடன் நடந்தேறியது.
விழாவின் தொடக்க நிகழ்வாக திருமதி.அம்சவேணிகாளியப்பன்,
திருமதி கமலம் வேலவன், திருமதிபூவரசி மறைமலையன், திருமதி இந்துமதி ,திருமதி
பிரேமலதாராசா ஆகிய ஐவரும் திருவிளக்கு ஏற்றிவைக்க ஒளிமல்க விழாத்தொடங்கியது.
தொல்காப்பியர் பேரவைத்தலைவர் தொல்காப்பியச்
செம்மல் புலவர்.ஆ.காளியப்பன் தலைமை ஏற்க பேரவைச் செயலாளர் புலவர் வேலவன் வரவேற்பு
உரை நிகழ்த்தினார். புலவர் காளியப்பன் அவர்கள் தம் தலைமை உரையில்“உலகின் முதல் இலக்கண
நூல் தொல்காப்பியமே ” என்று நிறுவி அதன்
சிறப்புக்களைப் பட்டியலிட்டு, பேரவையின் நோக்கங்களை அரங்கத்தில் எடுத்துரைத்தார்.
தொடர்ந்து சீர்வளர்சீர் மெய் கண்டார்
வழிவழி கயிலை மாமுனி தவத்திரு சாந்தலிங்க
இராமசாமி அடிகளார் தம்ஆசியுரையில்“பள்ளிக் கல்வி முறையில் மாற்றம் கொண்டு வரும் இவ் வேளையில்
தொல்காப்பியம் குறித்த சிந்தனைகளைப் பாடத்திட்டத்தில் இடம்பெறச் செய்வது அவசியம்,
மேலும் இக்காலக் குழந்தைகளுக்குத் தொல்காப்பியத்தைப் பாடல்களாக எடுத்து உரைத்தால் அவர்களின்
மனங்கள் எளிதாகப் பக்குவப்படும் ” என்றும் எடுத்துரைத்தார்.பிறகு சிரவை
ஆதீனம் குருமகாசந்நிதானம் தவத்திரு.குமரகுருசுவாமிகள், பேரூர் ஆதீனம் இளைய பட்டம்
தவத்திரு. மருதாசல அடிகளார்,ஆகியோர் அருளுரை வழங்கினர்.
வித்துவான் திரு.கு.கோ.முருகன்
எம்.ஏ.,எம்,எட்.,, புலவர் குடியாத்தம் குமணன், ஆகியோர் தொல்காப்பியம் அறிமுக உரை
நிகழ்த்தினர். விழாவில் தமிழ்ச்சிற்றிதழ்சங்கத்தலைவர் புலவர்.பூ.அ.இரவீந்திரன்,
பேரூர்த் தமிழ்ச்சங்கத் தலைவர் திரு.இராசமோகன், கணபதி தமிழ்ச்சங்கத் தலைவர். நித்தியானந்த
பாரதி, இந்திய மனோசக்தி பயிற்சி மைய நிறுவனர் மாசிலா மணி, வேளாண் விஞ்ஞானி திரு.முத்துமுருகன்,
கல்லூரிப்பேராசியர்கள் முனைவர் இராசேசுவரி மற்றும் முனைவர் திருநாவுக்கரசு ஆகியோர்
சிறப்பு உரையை நிகழ்த்தினர்.. தொல்காப்பியர் பேரவையின் முதற் பணியாக முனைவர்.சு
துரை மேனாள் அரசுக்கலைக் கல்லூரியின் பேராசிரியர் எழுதிய தொல்காப்பியர் கால
ஆராய்ச்சி என்னும் நூலை வளர்தமிழ் இயக்கப் பொதுச் செயலாளர். புலவர்.க.ச. அப்பாவு
வெளியிட, புலவர்.அர.வேலுசாமி அவர்கள் பெற்றுக்கொண்டார் .
இறுதியாக தொல்காப்பியர் பேரவையின் பொருளாளர்
அகவை முதிர்ந்த தமிழ்அறிஞர் பூவரசி மறைமலையன் நன்றி நவில விழா இனிதே
நடந்தேறியது.விழாநிகழ்வுகளைத் தொல்காப்பியர் பேரவையின் துணைச்செயலாளர்.கவிச்சுடர்
கா.உமாபதிஎம்,ஏ.,பி,எட் எம்ஃபில் அவர்கள் தொகுத்து வழங்கினார்.
இங்ஙனம்
தொல்காப்பியர்
பேரவை நிர்வாகிகள்
தலைவர் :
செயலாளர்:
பொருளாளர்:
துணைச்செயலாளர்:
1)
5)
2)
6)
3)
7)
4)
8)
No comments:
Post a Comment