Thursday, 28 September 2017

தொல்காப்பியர் பேரவை -கொள்கை கோட்பாடுகள்



     

                

        கொள்கைகள் – கோட்பாடுகள்.
1)      தமிழ் இலக்கியம் மற்றும் தமிழர் பண்பாடு ஆகியவற்றின் வேர்களையும், விழுமியங்களையும் உலகிற்கு உணர்த்துதல்.
2)      பண்டைய இலக்கண, இலக்கியங்களை இக்கால இளைஞர்களுக்கும், மாணாக்கர்களுக்கும் உணரச்செய்து.அவற்றின் மீது நாட்டம் உண்டாக்கல்.
3)      சாதி,சமயம், இனம், அரசியல் கலப்பில்லாமல் தமிழின் உயர்வு ஒன்றை மட்டுமே எண்ணிச் செயல்படுதல்.
4)      திருவள்ளுவர் நாள், தொல்காப்பியர் நாள், தாய்மொழி நாள் ஆகியவற்றைச் சிறப்பாகக் கொண்டாடுதல்.
5)      திங்கள் தோறும் நடைபெறும் அமர்வுகளில் அந்தந்தத் திங்களின் சிறப்பு நாட்களையும் அந்தத் திங்களில் வரும் தமிழுக்குத் தொண்டாற்றிய சான்றோர்களின் பிறந்த, மறைந்த நாட்களை நினைவு கூர்தல்.
6)      தொல்காப்பிய வகுப்புகள் மூலம் இலக்கியத்தின் வேராகிய இலக்கணங்களைக் கற்பித்தல்.
7)      சிறந்த வல்லுனர்களைக் கொண்டு இலக்கண இலக்கிய ஆய்வுரைகள் நிகழ்த்துதல்.
8)      விரும்புவோர்க்கு பட்டிமன்றம், கவியரங்கம், பேச்சரங்குகளில் பங்கேற்கப் பயிற்சி அளித்தல்.
9)      அனைவருக்கும் ஒவ்வொரு திங்களும் கவிதை வாசிக்க வாய்ப்பளித்தல். (கவிதைகள் பொறுப்பாளர்களின் இசைவினைப் பெற்ற பின்பே வாசித்தல் வேண்டும் கவிதைகள் புதுக்கவிதை, மரபுக்கவிதை, துளிப்பாக்கள் எதுவாகவும் இருக்கலாம்)
10)   பேரவை வளர்ச்சிக்கு  உதவும் கருத்துக்களை யார்யார்வாய்க் கேட்பினும்  
சிறந்தவைகளை ஆய்வுக்குப்பின் ஏற்றுக்கொள்ளல்.                                                    
                                       முகவரி
               தொல்காப்பியர் பேரவை,
           முத்தம்மாள் நிலையம்,
           79,(1) பூலுவபட்டி(அஞ்சல்),
           ஆலாந்துறை(வழி),
           கோயமுத்தூர் மாவட்டம்,
           தமிழ் நாடு- 641101.
           அலைபேசி 9788552993, 8610684232
                        Email: amuthankaliappan@gmail.com


No comments:

Post a Comment