Saturday, 13 May 2017

உடலும் கடலும் ஒன்று

               

               இரட்டுற மொழிதல் 13-05-2017
    உடலும் கடலும் ஒன்று
உப்புச் சுவைமிக்கு உள்ளாழம் கொண்டது                  
எப்பொருளும்  உள்ளே வைத்திடாது –செப்புபுகழ்
கோவையி்ன் முத்தமி ழாமரங்கில் எந்நாளும்
சேவைபுரி மெய்ந்நேர் கடல்.
இதன் பொருள்உடலுக்குப் பொருத்தம்:     
  உடலானது உவர்ப்புச்சுவை கொண்டது. அதனுள் இருக்கும் மனத்தின் ஆழத்தை யாராலும் அறியமுடியாது. உடல் தன்னுள் புகும் வெளியுலகப் பொருள்களை உள்ளே வைத்துக் கொள்ளாது. ஏதாவது ஒருவகையில் வெளியேற்றிவிடும். மனிதர்களுக்குச் சேவை செய்யக் காரணமாய் இருப்பதே உடலேயாகும்.
கடலுக்குப் பொருத்தம் :கடல் நீரானது  உவர்ப்புச்சுவை கொண்டது. அதனுள் இருக்கும் பொருட்களின் அளவையும்,அதன் ஆழத்தையும் அளவிட முடியாது.
வெளியுலகப் பொருள்களை அதனுள் போட்டால் ஏதாவது ஒருவகையில் வெளியேற்றி விடும்.மழையைப் பெய்வித்து உலகிற்குத் தொண்டாற்றுகிறது.
     சொல்லப் படுகின்ற புகழ்மிக்க கோவை முத்தமிழ் அரங்கில் எந்நாளும் மெய்யாகி உடலும் கடலும் ஒப்பாகும்.

No comments:

Post a Comment