மயக்கம் 27-04-17
மயக்கம் என்றால் கூட்டம் என்று பொருள்.
எல்லா மெய் எழுத்துகளும். அகரத்துடன் சேர்ந்து வரும்.
எந்த மெய் எழுத்துடன் எந்த மெய் எழுத்து வரும் என்ரு பார்ப்போம்
வல்லினம் மெல்லினம் இடையினம்
க் ங் ய்
ச் ஞ் ர்
ட் ண் ல்
த் ந் வ்
ப் ம் ழ்
ற் ன் ள்
1) இவற்றில் க், ச், த், ப் நான்கு மெய் எழுத்துகளுக்குப் பக்கத்தில்
அந்த மெய் எழுத்துகள் மட்டும் வரும். பிற மெய் எழுத்துகள் வாரா.
எடுத்துக்காட்டு
பக்கம்= பக் க்+அ
ம்
அச்சம்= அச் ச்+அ
ம்
பத்து = பத் த்+
உ
பட்டம்= பட் ட்+அ
ம்
அக்சம் என்றெல்லாம் வராது.
2)மீதியிள்ள 14 எழுத்துகளுக்குப் பின்னால் வேறு எழுத்துகள்வரும்.அதே
எழுத்தும் வரும்.அவற்றுள் ர், ழ் இரண்டு எழுத்துகளுக்கு பிற எழுத்துகள்மட்டுமே
வரும் அந்த எழுத்துகள் வாரா.
தனிக்குறில் எழுத்துக்குப்
பின்னால் ர், ழ் என்ற எழுத்துக்கள் வாரா. அதாவது அர், அழ் கிழ் என்றெல்லாம்
வாராது. ஆனால் புகர், புகழ் என்று குறிலிணைக்கீழ் வரும். தனி நெடிலுக்குப்
பின்னாலும் தொடர் மொழியிலும் வரும்.
எடுத்துக்காட்டு ஆர், கீழ் ,
வருவர், தமிழ்
3)“ ங்”என்ற எழுத்துக்குப் பின்னால்“ க்” என்ற ஒரே
ஒரு எழுத்து மட்டுமே. வரும்.அல்லது அதே எழுத்து வரும். பிற மெய் எழுத்துகள்வாரா.
எடுத்துக்காட்டு அங்கு =அங்
க்+உ,இங்ஙனம்=இங்ங(ங் +அ ) னம்
அதே போல் “வ்”க்குப் பின்னால் “ ய்”
என்ற ஒரே ஒரு எழுத்து மட்டுமே. வரும்.அல்லது அதே எழுத்து வரும். பிற
மெய் எழுத்துகள்வாரா
எடுத்துக்காட்டு தெவ்யாது,தெவ்வர்
4) ஞ்,ந், என்ற எழுத்துகளுக்குப் பின்னால் அந்த எழுத்தோடு “ ய்”
என்ற ஒரே ஒரு எழுத்து மட்டுமே. வரும்.அல்லது அதே எழுத்து வரும். பிற
மெய் எழுத்துகள்வாரா
Nice post
ReplyDelete