Friday, 5 May 2017

தமிழ் பெண்பாற்பெயர்கள்



பெண்பாற்பெயர்                  
   1) கொண்டல்நாயகி
2)கோதைநாயகி
3)கொடிமலர்
4)கொடிமங்கை
 5) கொடிமலர்ச்செல்வி
 6)கோட்டுப்பூ
 7)கோப்பெருந்தேவி
 8)கோப்பெருஞ்செல்வி
 9)கோமகள்
 10)கோமதி
 11)கோவழகி
 12)கொம்புத்தேன்
 13)கொம்பனையாள்
 14)கொஞ்சுங்கிளி
 15)கொட்டிமலர்
 16)கொடிப்பூ
 17)கொத்தலர்
 18)கொவ்வைச்செவ்வாய்
 19)கொள்கைமணி
 20)கோமுகி
 21)கொன்றைமலர்
 22)கொம்பனாள்
 23)கொவ்வைக்கனி
 24)கொற்றவை
25)கோதரசி
26)கோதை
27)கோசலை
28)கோசலாதேவி
29)கோகிலம்
30)கோகிலாதேவி
31)கோட்டீஸ்வரி
32)கோட்டுப்பூ
33)கோணம்மாள்
34)கோனிம்மன்
35)கோன்முகி
36)கோதனம்
37)கோதையர்
38)கோதாவரி
39)கோபிகா
40)கோப்பெருந்தேவி
41)கோப்பெண்டு
42)கோமடந்தை
43)கோமணி
44)கோமளவல்லி
45)கோமுகை
46)கோரி-பகவதி என்றுபொருள்
47)கோல்வளை—சிறந்தபெண்
48)கோவர்த்தினி
49)கோவிந்தம்மாள்
50)கோவைநாயகி
51)கோற்றொடி-அழகியபெண்
52)கொளுந்து
53)கொன்றைமலர்
54)கொன்றைச்செல்வி
54கொன்றைவாணி
55)கொன்றை எழிலி
   56)கொன்றைமுத்து
57)கொன்றைசூடி
58)கோலச்செல்வி
59)கோலவிழி
60)கோகிலவாணி
61)கோசலாமணி

               பெண்குழந்தைப் பெயர்கள்
                      மகரவரிசை
மல்லிகை       மல்லிகா        மல்லீஸ்வரி     மணப்பூ   
மணியம்மாள்    மணியரசி       மணிமேகலை   மணிமொழி
மரகதம்         மரகதவல்லி     மகிளாசுந்தரி    மகிழம்பூ
மகா            மகாதேவி       மகாலக்குமி          மங்கலவல்லி
மங்கை         மங்கையர்திலகம்     மங்கையர்க்கரசி மங்கையரசி
மங்கைநாயகி    மடக்கொடி      மடந்தை        மடப்பிடி
மட்டுவார்குழலி  மணவழகி       மணிக்கண்ணு   மணிக்கிளி
மணிக்கொடி     மணிநகை       மணிமங்கை     மணிமாலை
மலர்           மலர்க்கொடி     மணியரசி       மணிவடிவு
மணிவிளக்கு    மதுரமொழி      மலர்க்கண்ணி   மலர்க்குழலி
மலர்சூடி        மலர்ச்சோலை   மலர்ப்பாவை    மலர்முகம்
மகராசி         மணியம்மை    மழையரசி       மலையரசி
மறைச்செல்வி   மன்றத்தரசி           மணவழகி       மர்த்தினி
மனதிற்கினியாள் மதியழகி        மதனவதனனி   மதிவதனி
மதிவாணி       மதியரசி        மதுமதி         மதுமிதா
மின்னல்        மின்னல்கொடி   மின்னொளி     மின்னற்கொடி
மிருணாதேவி   மிருளாயினி     மிதுனாதேவி    மிருநளாயினி

 
புலவர் ஆ.காளியப்பன் 9788552993



 

அருளுடைமை



                     அருளுடைமை  17-04-2017   
அருளெனப் பட்டது அனைத்துயிர் மாட்டும்
          அன்பொடு இரக்கம் அளாவி நிற்பது
பொருளெனப் பட்டது பதடிகள் கரத்திலும்
          பொருந்தி நின்று பொல்லாங்கு செய்வது
ஒருவழி  இல்லையே அருளது போல
          உற்ற துணையாய் எற்றைக்கும் வருவது
திருவருள் கூடும் தேவர் உலகில்
          தி்டமுடன் சேர்க்கும் அருளது தானே.

தன்னுயிர் அஞ்சும் தீவினை இல்லையே
          மன்னுயிர் மீதினில் கருணை உள்ளோர்க்கு
இன்மை மறுமை இரண்டு உலகிலும்
          இன்னல் அகற்றி இன்பம் தருவது
அன்னம் அளித்து அரும்பசி களைந்தது
          அருளால் வந்த அமுத சுரபியே
மன்னன் மனுநீதி மாட்டிடம் கொண்டதும்
          மருளது நீங்கிய அருளது தானே

பொருளெனும் செவிலி  போற்றி வளர்க்கும்
          அருளெனும் குழந்தையைப் பெற்றது அன்பே
பொருளைப் பெரிதாய் நினைக்கும் புல்லரே
          பொல்லாங் கெல்லாம் புவியில் செய்வார்
பொருளை இழந்தான் மீள்வான் ஒருநாள்
          அருளை இழந்தான் ஆழ்ந்தே போவான்
அருளின் ஆற்றல் அளத்தற்கு அரியது
          அகில இயக்கமே அதனால் தானே

அருளெனப் படுவது அற்றார் தனக்கு
          ஈட்டிய பொருளை ஈவது தானே.
அருட்பிர காசர் அருளால் தானே
          அரும்பசி களையும் சாலை அமைத்தார்
பொருள்தனைப் பெற்றோர் அருளொடு இருந்தால்
          பூமியில் இன்பம் பொங்கி வருமே
பொருள்தனை ஈட்டி அருள்தனை செய்து
           பொற்புடன் வாழ்வோம் புகழ்தனைப் பெற்றே.  
தொல்காப்பியச்செம்மல்
புலவர்.ஆ.காளியப்பன்MA;MEd                                                  முத்தம்மாள்நிலையம்                                        பூலுவபட்டி(அஞ்)                                                                                கோவை-641101 அலைபேசி 9788552993