Tuesday, 10 September 2019

புணர்ச்சி உயிர்முன் உயிர்


                         
முன்பு கூறியது போல் நிலைமொழியில் எந்த எழுத்து என்றும் வருமொழியில் எந்த இனம் எனப்பார்க்க
 இங்கு இ,ஈ,ஐ, என்ற எழுத்துகளுடன் பிற உயிர் எழுத்துகள் சேரும் விதத்தைப் பார்ப்போம்.
மணி
தீ
பனை
அன்று இ. ஈ. ஐ என முடியும் சொற்களை எடுத்துக்கொள்வோம்.
இதற்கு முன் அழகிது ,அழகு என்ற சொற்களாக வருவதாகக்கொள்வோம்

மணி+ அழகிது=
ஊசியும் ஊசியும் பாயாது உயிரும் உயிரும் சேராது.நினைவில் கொள்க.
மண்இ இது நிலைமொழி
வருமொழி அ
எனவே இ என்ற எழுத்தும் அ என்ற உயிரெழுத்தும் சேரா.அவற்றை உடன்படுத்துவதற்கு (சேர்ப்பதற்கு ய் என்னும் மெய்யெழுத்து வருகிறது.
மணி+(ய்+ அ) ழகிது.
ஒர் உடலைக் காணின் அந்த உடலுடன் உயிர் சேர்வது இயல்பு ஆகவே ய்+அ = ய ஆயிற்று. உடன்மேல் உயிர் வந்து ஒன்றுவது இயல்பே(நன்னூல்204)
இப்பொழுது மணி+யழகிது ஆகி மணி யழகிது ஆயிற்று
இதேபோல் தீ+எரி ஈ இறுதியிலும் எ என்ற உயிர் வருமொழியிலும் வந்ததால் உடம்படு மெய் ய் வந்து தீ+(ய்+ எ) ரிதீயெரி ஆயிற்று
அதேபோல் பனை+ அழகு= பனை+(ய்+அ)ழகு =பனையழகு ஆயிற்று.
இனி இ,ஈ,ஐ தவிர  ஏ நீங்கலாக பிற அ,ஆ,உ,ஊ, எ,ஒ,ஓ,ஔ என்ற எழுத்துகள்  வரின்(எ என முடியும் சொற்கள் தமிழில் இல்லை)
விள, பலா, கடு, பூ, நொ.கோ,கௌ
விள+அழகு= விள(ள்+அ)+(வ்+அ=வ)ழகு= விளவழகு அ விற்கு முன் அ
பலா+அழகு= பலா(ஆ)+(வ்+அ=வ)ழகு= பலாவழகு ஆ விற்கு முன் அ உயிர்
கடு+அழகு= கடு(உ)+(வ்+அ=வ)ழகு= கடுவழகு உ விற்கு முன் அ உயிர்
 உ வில் முடியும் சொற்களுக்கு சிறப்பு விதியும் உண்டு பிறகு பார்ப்போம்.
பூ  (ஊ)+(வ்+அ=வ)ழகு= பூவழகு ஊ விற்கு முன் அ உயிர்
நொ என்றால் துன்பப்படு (நோய்) என்று பொருள் இப்போது பயன்பாட்டில் இல்லை.
நொ(ஒ)+(வ்+அ=வ)ழகு= நொ+(வ்+அ)ழகு  ஒ விற்கு முன் அ உயிர்
கோ(ஓ)+(வ்+அ=வ)ழகு= கோவழகு ஓ விற்கு முன் அ உயிர்
கௌ(ஔ)+(வ்+அ=வ)ழகு= கௌவழகு ஔவிற்கு முன் அ உயிர்
 இனி ஏ எழுத்தில் ஒரு சொல்முடிந்தால் ய்,வ் என்ற இரண்டில் ஏதாவது ஒன்றைப்போட்டுக் கொள்ளலாம்.
 ஆதி பகவன் முதற்றே உலகு
முதற் றே(ற்+ஏ) உலகு
முதற்றே ஏ+(வ்+உ=வு)லகு முதற்றே வுலகு
முதற் றே(ற்+ஏ) உலகு

முதற்றே ஏ+(ய்+உ=யுலகு முதற்றே யுலகு

ஆயிடை=அவ்+இடை என்று நச்சினார்க்கினியர் பிரிக்கிறார்
அ+இடை என்று சிவஞான முனிவர் பிரிக்கிறார்
நிற்க
நன்னூல் படி
எகர வினாமுச் சுட்டின்
முன்னர்உயிரும் யகரமும் எய்தின்
வவ்வும்பிற வரின் அ வையும்
தூக்கிற் சுட்டு நீளின் யகரமும் தோன்றுதல் நெறியே
அந்த அடிப்படையில் அ என்னும் சுட்டு எழுத்து ஆ என நீளும் போது ய் வந்தது ஆயிடை= அ+இடை எனப்பிரிக்க வேண்டும் 
அ+இடை இ, ஈ ஐ வழி யவ்வும் எனும் சூத்திரப்படி வ் வந்தது பாட்டில் சுட்டெழுத்து வந்தது நீண்டதால் ய் வந்தது  பதிவு புலவர் ஆ.காளியப்பன்




1 comment:

  1. நேர்த்தியான முறையில் விளக்கம். இன்று முதல் வாசிக்கத் தொடங்கியுள்ளேன். நன்றியும், வணக்கமும்.
    வெ. நாதமணி

    ReplyDelete