Sunday, 22 September 2019

இவர்தாம் பெரியார்


          அவர்தாம் பெரியார்

தூங்கிய தமிழன் தொடைதனில் கயிற்றினை
தாங்கியே ஆரியன் திரித்திடும் போதினில்
தட்டி எழுப்பி தன்மானம் ஊட்டினார்
கொட்டிய செங்கல்லாய் இருந்த தமிழரைக்
கோபுர மாக்கினார் கோதினைப் போக்கினார்
ஆபுத்திரன் கைஅமுத சுரபிபோல் அறிவால்
அனைவரையும் கவர்ந்தார் ஆண்டவனை மறுத்தார்
சாதியெனும் சாக்கடையை மதமாம் மலக்குழியை
ஆதியில்  அகற்றிட  சாடோடு முறமெடுத்தார்  
செருப்படி பொறுத்ததால் செப்புச்சிலை ஆனார்
நெருப்பில் புடமிட்ட சொக்கத் தங்கமவர்.
தொண்டன் ஆனாலே ஏச்சுண்டு பேச்சுண்டு
குண்டாந் தடியால் மொத்துண்டு நினையென்றார்
குறளுக்கு மாநாடு கூட்டியதும் அல்லாது
அறத்திற்கு மாறாக அணுவளவும் நடக்காது
பொருளைத் தேடியே பொத்திக் காத்தவர்
இன்பம் ஏழைக்கு எப்போதும் வேணுமென்பார்
முற்றிய நோயுடனே முட்டாள் தனம்போக்க
சுற்றிச்சுற்றி வந்தார் சொந்தபணத் தாலே
தமிழ்நாட்டு ஊர்களில் தாள்படா ஊரில்லை
உமியாகிப் போகாமல் மணியோடு சேர்ந்தாரே
கடைசிவரை கயிலியே ஆடை தானாம்
விடைபெற்ற போதும் விழுதுகள் தாங்குமய்யா.
கொள்கைகள் எப்போதும் குன்றென நிற்குமய்யா

                       ஆக்கம்
தொல்காப்பியச் செம்மல்
புலவர்ஆ.காளியப்பன்,க.மு,.கல்.மு.,
தலைவர் தொல்காப்பியர் தமிழ்ச்சங்கமம்
பூலுவபட்டி(அஞ்சல்),
கோயமுத்தூர் 641101.
அலைபேசி 9788552993 / 8610684232                                                         Email amuthankaliappan@gmail.com
www tholkappiyam.org
pulavarkaliappan.blogspot.in


No comments:

Post a Comment