Monday, 24 February 2025

காது பற்றிய 108 தகவல்கள்

 

 

                 காது கொடுத்துக் கேளுங்கள்

ஒருமுறை நான் திருப்பதி போய் இருந்தேன் .அப்போது பல மாநிலத்தாரும் ஒரே சத்திரத்தில் படுத்துக் கொண்டிருந்தோம். அப்போது  எங்களுடன் வந்த  திருநெல்வேலிப் பாட்டியின் காதில் பெரியபெரிய துளைகள் இருந்தன. பாம்படத்தைக் கழட்டி வீட்டில் வைத்து விட்டு வந்து விட்டது.ஏன்பாட்டி காதில் எதுவும் போடாமல் வந்து விட்டீர்கள் என்றதற்கு கள்ளனைக் குள்ளன் தட்டற காலம் இது என்றார்,

   பாட்டிக்குப் பக்கத்தில் தமிழே தெரியாத ரேணிகுண்டாவில் இருந்து வந்த பாட்டி ஒருவர் படுத்திருந்தார். அவர்கள் ஊரில்  மழை இருந்ததால் பெரிய கைபிடி உடைய குடையை வைத்திருந்தார்.  அவர் குடையை ஏமாந்து விடக்கூடாது என்பதற்காக இறுகப்பற்றி படுத்திருந்தவர் தூங்கி விட்டார். திரும்பிப் படுக்கும்போது குடைக்காம்பு திருநெல்வேலிப் பாட்டியின் காதில்எப்படியோ  மாட்டிக்கொண்டது. தமிழ்ப் பாட்டிக்கு காதுவலி. குடையை இழுத்தது. குடையை யாரோ எடுப்பதாக நினைத்துக் கொண்ட தெலுங்குப் பாட்டி நாதி நாதி(என்றது என்றது) என்று சத்தம் போட்டது. அப்போது திருநெல்வேலிப் பாட்டி காதுவலி தாங்க முடியாமல் காது காது என்று சத்தம் போட்டது. அதைக் கேட்ட தெலுங்குப்பாட்டி  காது என்பதற்கு இல்லை என்கிறார் என்பதாகப் பொருள் எடுத்துக் கொண்டு குடை நாதி நாதி என்று பலமாக இழுத்தது. திருநெல்வேலிப் பாட்டி  காது காது என்று காது வலிப்பதாக கூறியது. இடையில் தமிழ் தெரிந்த தெலுங்கர்  விளக்க  திருநெல்வேலிப் பாட்டியும், தெலுங்குப்பாட்டியும்  நாங்களும் சேர்ந்து சிரித்தோம். இதை அறிந்த எனக்குக் காதைப்பற்றி ஒரு கட்டுரை எழுதினால் என்ன? என்ற எண்ணத்தின் வெளிப்பாடே இது. இதற்காக பட்டிக்காட்டுப் பழமொழிகள் முதல் இணையதளம் வரை தேடோதேடோ என்று தேடி நான் புரிந்தை உங்கள் காதில் போடுகிறேன். இந்தக்காதில் வாங்கி அந்தக்காதில் விட்டாலும் சரி,  செவிடன் காதில் ஊதிய சங்காகப் போனாலும் சரி எல்லாம் நீங்கள் செவி மடுப்பதைப் பொருத்தது

                 வாங்க காதைப்பற்றிப் பேசுவோம்.

1செல்வத்துள் எல்லாம் தலையாகச் செவி சிறப்பிக்கப் படுகிறது. அதனால் தான் பாரதி 'செந்தமிழ் நாடெனும் போதினிலே இன்பத்தேன் வந்து பாயுது காதினிலே' என்று பாடினார்.

 

2.இரண்டு காதுகளும் ஒன்றாகப் பிறந்த இரட்டையர்கள் இருவரும் ஒருவரை யொருவர் இதுவரையில் கண்டதில்லை.

 

3.இருவர் செய்வதும் ஒரே வேலைதான் இருந்தாலும் இடக்காது இசையையும் வலக்காது உரையாடல்களையும் கேட்பதாக அமெரிக்க விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

 

4.குழந்தை பிறந்தவுடன்  காதை வைத்தே நிறத்தைச் சொல்லுவார்கள்.

 

5,ஐம்பொறிகளில் இறுதியில் தோன்றுவது செவிப்புலனே (ஐந்தறிவதே அவற்றொடு காதேதொல்காப்பியம் )

 

6.செவிமடல் தெரியும் விலங்குகள் குட்டி போட்டுப் பால்தரும் .

 

7.காது மடல் வெளிப் படையாகத் தெரியாத உயிரினங்கள் முட்டியிட்டுக் குஞ்சு பொரிக்கும். இவை சித்தர் பாடல்மூலம் அறிந்தேன்

 

8.முதுகெலும்புள்ள விலங்குகளின் காதுகள் அவற்றின் தலையின் இருபுறத்திலும் சற்றே சமச்சீர் நிலையில் அமைந்துள்ளன.

9.முதுகெலும்புள்ள விலங்குகளில்  முதுகுத்தண்டு தரையில் படுமாறு படுக்கும் ஒரே விலங்கு மனிதன் மட்டுமே.

 

10பாம்புக்கு காது கிடையாது .கண்ணே காதாகச் செயல்படுவதால் அதைக் கட்செவி என்று அழைப்பர்.அதனால் மகுடிகேட்டு மயங்கும் பாம்பு என்பது பொய்யாகிறது

 

11.முயலைக்காதைப் பிடித்தே தூக்குவர்.

 

12ஒருகாலத்தில் பள்ளியில் சேர்க்க, தலைமீது கைவைத்து காதைத்தொட்டால்தான் ஐந்து வயது ஆயிற்று என்று பள்ளியில் சேர்ப்பர்

 

13.பாடங்கள் மறந்து போனால் காதை முறுகியே தண்டனை கொடுப்பர். மேலும் காதை  பிடித்துக் கொண்டு தோப்புக்கரணம் போடவைப்பர்,

 

14.விநாயகர் வணக்கத்தின் போதும்  காதை  பிடித்துக் கொண்டு தோப்புக்கரணம் போடுவர்,

 

15.காதுமடல்கள் ஓ வடிவத்தில் இருப்பதால் ம் வைப்பதைப் போல் காது குத்திஓம் ஆக்குவர்

அப்போது மாமன் மடியில் அமரரும் வாய்ப்பு. மாமனுக்கும் செலவு உண்டு

.(வீட்டிற்கு ஒரு குழந்தை உறவுப்பெயர்கள் என்ன ஆகுமோ?)

 

16.காதுக்கு மட்டும் அணிபூட்டும்போது உறவினரை அழைத்து விருந்து வைப்பர்               தங்கம் இல்லைஎன்றாலும் பனையோலையைச் சுருட்டிச் செறுகி விடுவர்

 

17காது குத்தாது இறக்கும் குழந்தைகளுக்குக் கூட காரை முள்ளில் காது குத்தியே  புதைப்பர்

 

18.அறிவிற்கு அடிப்படை கல்வியும் கேள்வில்தான் குறிப்பிட்டுச் சொன்னால் உயர்ந்தவர்கள் காதுகளே (கற்றிலன் ஆயினும்கேட்க வள்ளுவர்)

 

19செவிடாய்ப்பிறக்கும் குழந்தைகள் பெரும்பாலும் ஊமைகளாகவே உள்ளன.

 

20உறங்கும் போதுங்கூட உசாராய்  இருக்கும் புலன்கள் காதே

 

21காது மந்தமானால் இறக்கும் காலம் வருவதற்குத் தொடக்க அறிவிப்பு 

 

22நடுக்காது உட்காது புறக்காது முப்பிரிவால் இருந்தாலும் உட்காதில் இருக்கும் நீரே

தடுமாற்றம் இல்லாமல் நிற்கச் செய்கிறது

 

23செவி மடலால் காதுக்கு அழகும் பாதுகாப்பும் தருவதைத் தவிர வேறு பயன் இல்லை.

 

24கண்ணுக்குக் கண்ணாடி அணிந்தாலும் அதன் பிடிகளைத்  தாங்குவன காதுகளே

 

25இப்போது மூக்குக்கு இடும் கவசங்களைத் தாங்குவதும் காதுகளே

 

26மூடியே இல்லாத உறுப்பு காதுகளே இருந்தாலும் காதை மட்டும் மூடும் காது மூடிகளும் வந்துவிட்டன..

 

27.ஒற்றுக்கேட்க உதவுபவை காதுகளே

 

28.இரவில் சுவர்க்கும் காது இருக்கும் என்பர்

 

29.சிவனுடைய காது குண்டலத்தில் இருந்து  பிறந்தவை தமிழும் சமசுகிருதமும் என்று கதை விடும் புராணங்களும் உண்டு.

 

30.காதலர் நோக்குவது முதலில் செவியைத்தான்(கணங்குழை மாதர் கொல் -குறள்)

அதனால்தான் செவி அறிவுறுத்தல் ,கூழை விரித்தல் காது ஒன்று களைதல்              ( தொல்.பொருள்)என்ற   துறைகளைத் தொல்காப்பியர்  வைத்தார்

 

31.திருஞானசம்பந்தர் இறைவனது காதையே முதலில் கண்டார் அவரது முதல்பாடலே தோடுடைய செவியன் என்றே தொடங்குகிறார்.

 

32.காதின் அணியின் பெயரால் ஒருகாப்பியம் குண்டலகேசி  காப்பியம்

 

33ஊசிக்கும் காது உண்டு. காதற்ற ஊசியும் கடைசியில் கூடவராது பட்டிணத்தார் சொன்னது

 

34.பாத்திரத்தின்  கைப்பிடிகளைக் காது என்று கூறும் வழக்கம் உள்ளது.   

வீணையின் முறுக்காணி காது என்று சொல்லப்படும்  

 

35.காதுகளின் சிறப்பை உணர்ந்த வள்ளுவர் ஓர்அதிகாரம்  வைத்தார். மற்றும்பல இடங்களில் காதைப் பற்றிப்பாடி உள்ளார்.

 

36.காதின் சுவையை உணராது நாவின் சுவையை விரும்பவர்கள்  உயிருடன் இருந்தாலும் செத்தாலும் ஒன்றுதான்

37.கேட்டலின் அவசியம் வள்ளுவன் கூட கற்றலின் கேட்டல் நன்று என்றும், 38.செவிக்குணவில்லாத போது வயிற்றுக்கும் ஈயப் படும் என்றும் கூறியுள்ளார்.    

39.செவி கைப்ப சொல் பொறுக்கும் பண்பு உடை வேந்தன் குறள்:39 9/1
40.செல்வத்துள் செல்வம் செவி செல்வம் அ செல்வம் குறள்:
42 1/1
41.செவி உணவின் கேள்வி உடையார் அவி உணவின் குறள்:
42 3/1
42.தோட்கப்படாத செவி குறள்:
42 8/2
43.செவி சொல்லும் சேர்ந்த நகையும் அவித்து ஒழுகல் குறள்:
70 4/1                     44.மழலைகள் சொல் கேட்டல் இன்பம் செவிக்கு குறள் 7:5
45.நசைஇயார் நல்கார் எனினும் அவர் மாட்டு
46.இசையும் இனிய செவிக்கு குறள்
120:9

மற்ற இலக்கியங்களும் காதைப்பற்றி பாடி உள்ளன

47.கடி மலர் பிண்டி தன் காதில் செரீஇ பரி 12/88
48கடிப்பு இகு காதில் கனம் குழை தொடர பரி
23/33
49கார்த்திகை காதில் கன மகர குண்டலம் போல் பரி
33/1
50ஐய எம் காதில் கனம் குழை வாங்கி பெயர்-தொறும் கலி
80/22

51.செவியுறு கேள்வி செல்வன் சென்னியின் இறைஞ்சி சொன்னான் கிட்:7 124

 

52.செவி வழியான தகவல்களே பல்லாயிரம் கி.மீ., துாரம் சென்று விடுகிறது.                     53.செவி வழியாக கேட்ட புராணங்களும்,பாடல்களுமே பின்னர் எழுத்து வடிவம் கொண்டன

54கவிதைகளைப் பற்றிச் சொல்லும்போது செவிநுகர் கனிகள்என்றார் கம்பர். அந்த அளவு 55.மொழிக்கு மிகவும் முக்கியமானது காது என்றும் செவி என்றும் அழைக்கப்படும் உறுப்பு.

எழுத்துக்கள் கண்டு பிடிப்பதற்கு முன்பு, செவி வழியாகத்தான் மொழியும் அறிவும் கடத்தப்பட்டு வந்தன.

56இலக்கியங்களையும் பிற துறை நூல்களையும் குரு சொல்லக் கேட்டு,                      

அதை மனதில் இருத்திக் கொள்வதுதான் முற்கால மரபு.

 

57.யாப்பு வடிவங்களுக்கும் செவிக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு

 

.58வெளியில் ஏற்படும் ஓசையைவாங்கி மூளைக்குப் பாய்ச்சுவது செவியாகும்.

 

59சிறுநீரகக் குறுக்குவெட்டுத் தோற்றமும் காது மடல்களும் ஒரே மாதிரியே இருக்கும்

 

60கோயில்களிலும் தேவாலயங்கிலும் நம் குறைகளையும்,வேண்டுதல்களையும் கேட்பவை காதுகளே (நந்தியின் காதிலி பேசுவது.கூண்டில் அமர்ந்துள்ள பாதிரியார் காதில் பேசுவது)

 

61காது கேளாமையைச்  சரிசெய்ய முடியாது. கருவிகள் மாட்டி, கேட்கும் திறனை அதிகரிக்கலாம்

 

62காது, மூக்கு, தொண்டை  மூவரும் நண்பர்கள் மூவர் துன்பத்தையும்  போக்குபவர் ஒரே மருத்துவர்

 

63.காதுகள் தனித்தனியாக மிகவும் தனித்துவமானவை, இரண்டு பேருக்கு ஒரே மாதிரியான காதுகள் இருப்பதற்கான வாய்ப்புகள் மிகக் குறைவு

64.மன அழுத்தம், பதட்டம், கூச்சம் மற்றும் கோபம் போன்ற வலுவான உணர்ச்சிகளால் ஒரு நபரின் காதுகள் அடிக்கடி சூடாகவும் சிவப்பாகவும் மாறும்

65.உள் காதைப் பாதுகாக்கும் டெம்போரல் எலும்பு , மனித உடலில் மிகவும் கடினமானது.

66.மனித உயிரினத்தின் மிகச்சிறிய எலும்பு காதில்தான்   உள்ளது 

67.காது மெழுகு அல்லது செருமென் , தூசி, அழுக்கு மற்றும் பாக்டீரியா அல்லது பூஞ்சை தொற்றுகளிலிருந்து நடுத்தர காதைப் பாதுகாக்க உடலால் சுரக்கப்படுகிறது.

68.காது கோளாதவர்களுக்குப் பயன்படும் மொழி சைகை மொழியாகும்.

69.அச்சைகை மொழிக்கென பிரத்தியேக சொற்களஞ்சியம், இலக்கணம், சொற்றொடரியம், விரல் அசைவுக் கூட்டல் ஆகியவை உண்டு

70காது கேட்பதால் வார்த்தைகள் அறியப்படகின்றன. மூளையில் பதியும் வார்த்தைகளை வாய் உச்சரிக்கிறது. வாய் உச்சரிப்பதினால் பேச்சு வளர்ச்சி அடைகிறது.

71.காதுகளின் ஒவ்வொரு பகுதிக்கும் ஏற்ப காதுக்கு இரத்த விநியோகம் மாறுபடும்

அவர் காதுல போட வேண்டியதைப் போட்டாச்சு. மத்தத அவர் தான் பார்த்து செய்யணும் என்பதான உரையாடல்கள்

         உதிரி

72.தற்போதும் வடநாடுகளில் காது குறும்பி எடுத்து விடுவோர் உள்ளனர்.

 

73.யானைகள் எப்பேதும் சாதுகளை அசைத்துக்கொண்டே இருக்கும்.

 

74இதனைச் செவி வழிச் செய்தியாக  நினைத்து விட்டு விடாமல் இதயம் உணர்த்தும் செய்தியாக நினைவில் கொள்வோம்.

 

75.செ‌வி‌யை‌ப் பாதுகா‌க்க நா‌ம் செ‌ய்ய வே‌ண்டியவை

76.ஒ‌‌வ்வொரு முறை கு‌ளி‌க்கு‌ம் போது‌ம் காதின் வெளிப்பக்கத்தைச்  சோப்பு மற்றும் தண்ணீர் விட்டு சுத்தம் செய்து கொள்ள வேண்டும்.

77.கு‌ளி‌த்த ‌பிறகு கா‌தி‌ன் வெ‌ளி‌ப்புற‌த்தை ஈர‌ம் இ‌ல்லாம‌ல் துடை‌த்து எடு‌க்க வே‌ண்டு‌ம்.

 

78.எ‌ந்த காரண‌த்தை‌க் கொ‌ண்டு‌ம் கா‌தி‌ற்கு‌ள் எதையு‌ம் ‌வி‌ட்டு சு‌த்த‌ப்படு‌த்த‌க் கூடாது.

‌நீ‌ங்க‌ள் சு‌த்த‌ம் செ‌ய்யு‌ம் பொரு‌ட்க‌ளி‌ல் இரு‌க்கு‌ம் ஏராளமான ‌கிரு‌மிக‌ள் காது‌க்கு‌ள் செ‌ல்ல வ‌ழி ஏ‌ற்ப‌ட்டு‌விடு‌ம்.

 

79.காதிற்குள் ஏதாவது பூ‌ச்‌சி நுழைந்து விட்டால் சில சொட்டுகள் தேங்காய் எண்ணெய் அல்லது ஏதாவது ஒரு சுத்தமான எண்ணெயை‌க் காதில் விட்டால் அந்தப் பூச்சி உடனடியாக இற‌ந்து ‌விடு‌ம். ‌பிறகு அ‌ந்த பூ‌ச்‌சியை வெ‌‌ளியே எடுத்துவிடலாம்.

80.அதுவு‌ம் பூச்சி கண்ணுக்கு தெரிந்தால் அதை எடுத்து விடலாம். இ‌ல்லை எ‌ன்றா‌ல் மருத்துவரிடம் சென்று சிகிச்சை பெற்றுக் கொள்வதே சிறந்ததாகும்.

81.காதில் எதையு‌ம் போ‌ட்டு குடையக்கூடாது. குச்சியைப் பயன்படுத்தினால் செவிப்பறை கிழிந்துபோக வாய்ப்புண்டு.

82.காதிலுள்ள உரோமங்கள் மிகவும் முக்கியமானவை, தூசியும், பூச்சியும் காதுக்குள் நுழையாமல் அவை தடுக்கின்றன. எனவே, இவற்றை வெட்டி எடுக்கக்கூடாது.

83.மூக்கை, வேகமாகச் சிந்தக்கூடாது. சிந்தினால் முக்கிலும் தொண்டையிலும் உள்ள கிருமிகள் நடுச் செவிக்குள் புகுந்து காதைச் செவிடாக்கிவிடக்கூடும்

காது தொடர்பான சொற்கள், தொடர்களில் சில:

84.ஊசிக்காது: (பார்த்துப் பேசு, உன் கணவருக்கு ஊசிக்காது.)

85.காதில் ஏறு: ( நான் எவ்வளவு சொன்னாலும் உனக்குக் காதில் ஏறாதே!)

86காதில் வாங்கு: (கழுதை மாதிரி கத்துகிறேனே, காதில் வாங்குகிறாளா பார்!)

87காதில் விழு: (ஏழைகள் குரல் அவர்கள் காதில் விழாது.)

88காதுபட: (என் காதுபடவே என்னைப் பற்றி அசிங்கமாகப் பேசுகிறார்கள்.)

89.காதும் காதும் வைத்தாற்போல: (தம்பி, இந்த வேலையைக் காதும்காதும் வைத்தாற்போல முடிக்க வேண்டும்.)

90காதை அடை: (பசி, காதை அடைக்கிறது.)

91.காதைக் கடி: (நான் அவரிடம் பேசிக்கொண்டிருந்தபோது என் மனைவி அவர் உங்களை ஏமாற்றப் பார்க்கிறார்என்று காதைக் கடித்தாள்.)

92.காதோடு காதாக: (காதோடு காதாக ஒரு விஷயத்தை அவளிடம் சொன்னேன்.)

93இந்தக் காதில் வாங்கி அந்தக் காதில் விடு: ( எவ்வளவு அறிவுரை சொன்னாலும் இந்தக் 94காதில் வாங்கி அந்தக் காதில் விட்டுவிடுவான்.)

95ஈயத்தைக்காய்ச்சி காதில்ஊற்றியது போல (துன்பம்தரும் சொற்கள்)

96செவிசாய்: (மக்களின் குரலுக்கு அரசு செவிசாய்த்தது.)

97 செவி வாயாக (படிக்கும் மாணாக்கருக்கு செவிதான் வாய் நன்னூல்.)

98செவிப்பறை: செவியில் உள்ள சவ்வு போன்ற உறுப்பு.

99.செவிவழி: (இந்தக் கோயிலைப் பற்றி நிறைய செவிவழிச் செய்திகள் உலவுகின்றன.)

100.கருண பரம்பரைக் கதை என வடமொழியில் கூறுவர்

101காதொலிக்கருவி: கேட்புத் திறன் பாதிக்கப்பட்டவர்கள் பயன்படுத்தும் சாதனம்.

102திண்ணைகளின் காதுகள் எல்லாம் அறுத்தெறியப்பட்டதால் திண்டாட்ட வாழ்க்கையோடே நகர்கிறது மனித சமூகம்.

103நான் காது பற்றிய செய்திகளை காதில் போட்டுவிட்டேன்                                              104அது செவிடன் காதில் ஊதிய சங்காகப் போய் விடக்கூடாது.   
அறிவுறுத்தியது தொல்காப்பியச் செம்மல் புலவர் ஆ.காளியப்பன்.

தலைவர் தொல்காப்பியர் தமிழ்ச்சங்கமம்  பேரூர் ஆதீனம்  9788552993

No comments:

Post a Comment