இந்தித் திணிப்பும்
எதிர்ப்பும் எதனால்?.14-06-19
நாவலந்தீவு அல்லது பரதகண்டம் ஐரோப்பியர் வருவதற்கு முன்பு பல்வேறு தேசங்களாக பல்வேறு மன்னர்களின் ஆளுகைக்கு
உட்பட்டதாகவே இருந்தது. அவரவர் மரபுப்படியே வாழ்ந்தும் வந்தனர்.
பாரதத்தில் இங்கிலீசுக்காரர்
மட்டும் குடியேற்றங்களை அமைக்கவில்லை. பிரஞ்சுக்காரர் டச்சுக்காரர், ஸ்பானியர்கள்,
போர்த்துக்கீசியர் ஆகியோரும் குடியேற்றங்களை அமைத்தனர். அதைப்பார்க்கும் போதும்
பரதகண்டம் ஒன்றாக இணையாமல் தான் இருந்துள்ளது என்பதை உணரமுடிகிறது..இவர்களில்
எல்லாரிலும் இங்கிலீசுக்காரர் மேகோழியாக இருந்ததலால் பெரும்பான்மை நிலப்பகுதிகளை
இணைத்து இந்தியா என்ற ஓர் அமைப்பை உருவாக்கி ஆட்சி செய்தனர். அவர்களை எதிர்த்தே
விடுதலைப் போராட்டமும் நடைபெற்றது. இருந்தாலும் இங்கிலீசுக்காரர்கள் அந்தந்த பகுதி
மக்களின் பண்பாட்டிலும் சமயங்களிலும் சடங்குகளிலும் மொழிகளிலும் தலையிடவில்லை.
நாடு விடுதலை பெற்றவுடன் அந்த அடிப்படையிலேயே பிரிட்டீசுக்காரர் ஆண்ட
பகுதிகள் இருந்தன. நம் பெரியவர்களும் அந்தந்த மாநிலங்களின் மொழியும் பண்பாடும்
பழக்கவழக்கங்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதற்காகத்தான். மொழிவாரி மாநிலங்களாகப்
பிரித்தனர்.
வரலாறு எழுதியவர்களும்
இந்திய வரலாற்றை வடக்கிலிருந்தே தொடங்கினர். நாட்டின் தலைநகரமும் நாட்டின் நடுவில்
இல்லாமல் வடக்கிலேயே அமைந்து விட்டது. இந்தக்காரணங்களால் வடவர்கள் தாங்களே
இந்தியாவை ஆளுவதாக எண்ணிக்கொண்டனர். நாடு விடுதலை பெறும்போது உத்திரப்பிதேசம்
மிகப்பெரிய மாநிலமாக அதிகமான மக்களவைத் தொகுதிகளைப் பெற்றிருந்தது. அதனாலும்
இந்திக்காரர்களே முதன்மை அமைச்சராக வரவாய்ப்பினைப் பெற்றனர்.
வடஇந்தியாவில்
பெரும்பான்மையான மொழிகள் ஒலிப்பிலும் இலக்கணத்திலும் இந்தியைப் போலவே இருப்பதால்
அவர்களுக்கு இந்தி கற்பது பெரும்சுமையாக இருக்கவில்லை. தென்னிந்திய மொழிகளாகிய
தெலுங்கு மலையாளம் போன்றவை தமிழிழுடன் சமக்கிரதம்
கலந்ததால் தோன்றியவை. அதனால் அவர்களுக்கும் இந்தி கற்பதில் சிக்கல்
வரவில்லை.
தமிழ்மொழி வடஇந்திய மொழிகளுக்கு முற்றிலும் மாறுபட்டதால் தமிழர்களால்
இந்தியைக் கற்பதில் சிக்கல் ஏற்படுகிறது. அந்தக்காலத்தில் ஆரியர்களே
ஆசிரியர்களாகவும் அதிகாரிகளாகவும் இருந்தனர். அவர்களே பண்டையத் தமிழ் நூல்களுக்கு
உரை எழுதினர். உரை என்னும் சாக்கில் சமக்கிருத புராணங்களையும் சாத்திரங்களையும்
தமிழ் இலக்கியங்களில் புகுத்திவிட்டனர். படிப்பறிவில்லா பாமரர்களுக்கு இது
தெரியவும் இல்லை. இந்த அடிப்படையில்தான் தமிழ்நாட்டில்
உள்ள மேல்தட்டு இனத்தாரும் இந்தியை
வேண்டும் என்கின்றனர்.பெரும்பாலான
ஊடகங்கள் இன்னும் அவர்கள் கையில் இருப்பதால் மக்களின் மனத்தைக்
குழப்பிக்கொண்டு இருக்கின்றன.
இந்தி மொழி தெரியாதவர்கள் இருந்ததால் தான் இந்தி பேசும் மோடியால் தென்மாநிலங்களில் வெற்றி பெறமுடியவில்லை.
இந்தியாவை வடவர்களே ஆளவேண்டும் என்ற
நோக்கில்தான் இந்தியை இந்தியா முழுக்கக் கொண்டுவர மோடி அரசு முயல்கிறது.(ராகுல்
வந்தாலும்இந்தக்கதை மாறாது) இது இந்திய இறையாண்மைக்கு விரோதமானது. இந்தியா
ஒருதுணைக்கண்டமே அன்றி ஒருநாடல்ல என்ற உணர்வு வரும்போதே அந்தந்த மாநிலமொழிகளும்
கல்வியும் பண்பாடும் சமயவழிபாடுகளும் தனிமை பெற்று இந்தியத் துணைக்கண்டத்தில்
அமைதி நிலவும். இல்லையெனில் போராட்டங்களும் பூசல்களும் இருக்கத்தான் செய்யும் .இந்தியை
மட்டும் திணிக்கவில்லை. இந்திபேசும் மக்களையும் திணித்து தமிழர்களைச்
சிறுபான்மையர் ஆக்கும் திட்டமும் செயல்படுகிறது. தமிழர்நிலங்களைப் பிடிங்கி அவர்களை அநாதை ஆக்கும் திட்டமே எண்வழிச் சாலைத்
திட்டம் பன்னாட்டு விமானநிலையம், தொடர்வண்டித்தடங்களை அகலப்படுத்துதல்,
தொழில்வளர்ச்சி என்றபெயரில் பெரும்பெரும் தொழிற் சாலைகளுக்கு நிலம்
ஒதுக்குதல்,விலைநிலங்களில் அடுக்கங்களைக்கட்டுதல் கிராமங்களை நகர்மயம் ஆக்கல்,
போன்ற இனிப்புத் தடவிய நஞ்சினை ஊட்டுகிறார்கள்.இதை நாம் ஒருபோதும்
உணரப்போவதில்லை.நம்பேரக்குழந்தைகள் புதுடில்லி வீதியில் பிச்சை எடுக்கத்தான் போகிறார்கள். யாதும் ஊரே யாவரும் கேளீர் கேளீர் என்று
அலறத்தான் போகிறோம்.
பதிவு
தொல்காப்பியச்செம்மல்
புலவர் ஆ.காளியப்பன்
தலைவர் தொல்காப்பியர் பேரவை
No comments:
Post a Comment