வாலி
வருசம் பலதான் கடந்தாலும் அவதாரப்
புருஷன் நீதான் என்றும் புவியில்
கவிதை என்னும் கடலைக் காகிதத்தில்
குவித்து அடக்கிய வித்தகன் நீதான்
பெண்ணால் அழிந்தான் இராமாயண வாலி
பென்னால் வளர்ந்தான் கலியுக வாலி
முற்கால தற்கால முதல்வர்கள் முதலாக
பிற்கால நாயகரும் பின்னனிப் பாடகரும்உன்
கற்கண்டு சொல்லைத்தான் பற்கொண்டு மென்றார்கள்
ஈயாத கஞ்சனையும் எழுத்தறியா மூடனையும்
காயாத மரத்தையம் கவியால் பாடியதால்
தேயாத உன்புகழில் சிறியதொரு கரும்புள்ளி
பாண்டவர் பூமியும் அவகாரப் புருசனும்
மாண்டாலும் உன்புகழை மாநிலத்தில் பறைசாற்றும்
வாலி உன்புகழ் என்றென்றும் வாழி
No comments:
Post a Comment