இன்சுவை
இலக்கணம்
1) மொழியின் பயன்யாது?
மொழி உளி போல் ஒரு கருவி.ஒருவர் தம் எண்ணத்தைப் பிறருக்குத் தெரியப்படுத்தவும்,பிறர் கருத்தைத் தாம் தெரிந்து கொள்ளவும் பயன்படுவது.மொழியாகும்
2.இலக்கணத்தை நாம் ஏன்
படிக்க வேண்டும் ஒருமொழியைப் பிழை இல்லாமல் பேசவும் எழுதவும், மொழியின் அமைப்பைத் தெரிந்து கொள்ளவும் இலக்கணத்தை நாம்
படிக்கவேண்டும். 3.தமிழ் இலக்கணம்
எத்தனை வகைப்படும்?
தமிழ் இலக்கணம் ஐந்து வகைப்படும் அவை 1 எழுத்து இலக்கண 2சொல் இலக்கணம் 3, பொருள் இலக்கணம் 4.யாப்பு இலக்கணம் 5.அணிஇலக்கணம் 4.எழுத்து என்றால்
என்ன?
மொழிக்கு முதற்காரணமாகவும் ஒலி அணுக்களின் காரியமாகவும் இருப்பவையே
எழுத்தெனப்படும்
4.தமிழ் எழுத்துகள் யாவை?
உயிர் எழுத்து ----- 12
மெய்
------ 18
உயிர்மெய் ------ 216
ஆய்தம் ----- 1
மொத்தம் 247
5.எழுத்து
எத்தனை வகைப்படும்?
முதல் எழுத்து சார்பு எழுத்து என எழுத்து இருவகைப்படும். 6.முதல் எழுத்து என்றால் என்ன?
தனித்து இயங்குவதோடு பிற எழுத்துகள் பிறப்பதற்கும் சார்ந்து வருவதற்கும்
முதன்மையாக உள்ள
எழுத்துக்கள் முதல் எழுத்து எனப்படும்.உயிரெழுத்து பன்னிரண்டும் மெய் எழுத்து
பதினெட்டும் ஆக முப்பது எழுத்துகளும் முதல் எழுத்துகள் ஆகும் 7. உயிர் எழுத்து
என்றால் என்ன? நமது உயிர் தனித்து இயங்குவதோடு உடம்போடு கூடியும் இயங்கும் அது போல் தனித்தியங்கும் ஆற்றலோடு மெய்
எழுத்துக்களோடுசேர்ந்து இயங்கும் எழுத்துகளை நாம் உயிரெழுத்து என்கிறோம்.. 8. உயிரெழுத்துகள் யாவை? அ,ஆ,இ,ஈ,உ,ஊ,எ,ஏ,ஐ,ஒ,ஓ,ஔ
என்னும் பன்னிரண்டும் உயிரெழுத்துகள் ஆகும். 9.உயிரெழுத்து எத்தனை வகைப்படும்?
ஓசை கருதி
குறில்,நெடில் என இரு வகைப்படுத்துவர்அவற்றைக்
குற்றெழுத்து, நெட்டெழுத்து என்றும் கூறுவார்.
10.குற்றெழுத்து எவை?
அ, இ,உ, எ,ஒ என்னும்
ஐந்தும் குறில் எழுத்துகளாகும்.
11.நெட்டெழுத்து எவை?
ஆ,ஈ,ஊ,ஏ,ஐ,ஓ ஔ என்னும் ஏழும் நெட்டு எழுத்துகள் ஆகும்
12.மெய்
எழுத்து எவை?
க்,ங்,ச்,ஞ்,ட்,ண்,த்,ந்,ப்,ம்,ய்,ர்,ல்,வ்,ழ்,ள்,ற்,ன்ஆக பதினெட்டும்
மெய் எழுத்துகள் ஆகும் 13மெய் எழுத்து எத்தனை வகைப்படும்?
வல்லெழுத்து மெல்லெழுத்து
இடையெழுத்து என மூவகைப்படும் .இவற்றை வல்லினம் மெல்லினம் இடையினம் என்றும் (வலி,மெலி
இடை) என்றும் கூறுவர்.
14. வல்லெழுத்து எவை?
க், ச்,ட்,த்,ப்,ற் எனும்
ஆறும் வல்லெழுத்து ஆகும்
15.மெல்லெழுத்து எவை?
ங் ஞ் ண் ந் ம் ன் எனும் ஆறும் மெல்லெழுத்தாகும்
16..இடை
எழுத்து எவை?
ய் ர் ல் வ் ழ் ள் எனும் ஆறும் இடைஎழுத்தாகும்
17.சுட்டு எழுத்து என்றால் என்ன?
சுட்டிக்காட்டும் விரல் சுட்டு விரல் என்பது
போல் சுட்டிக்காட்டப் பயன்படும் எழுத்து
சுட்டு எழுத்து எனப்படும்
18.சுட்டு எழுத்து எவை?
அ, இ, உஎனும் மூன்றும் சுட்டுப்பொருளில்
வரும்போது சுட்டு எழுத்துஎனப்படும்.
அவன்
இவன் உவன்
அவ்வீடு இவ்வீடு
உவ்வீடு
19.சுட்டெழுத்தை எவ்வாறெல்லாம் பிரிப்பர்? .
இடம் நோக்கி அகம்,
புறம் என்றும் பொருள் நோக்கி
அண்மைச்சுட்டு,சேய்மைச்சுட்டு என்றும் பிரிப்பர்
. 20..அகச்சுட்டு
என்றால் என்ன?
சொல்லில் உள்ள சுட்டு
எழுத்தை நீக்கியபின் மற்ற எழுத்துகள் பொருள்
தரவில்லை என்றால் அஃது அகச்சுட்டு எனப்படும்
எடுத்துக்காட்டு: அவன், இவன் இவற்றில் உள்ள அ, இ என்னும் சுட்டு எழுத்துக்களை நீக்கினால் வன் என்பதற்குப் பொருள்
இல்லை
21.புறச்சுட்டு என்றால் என்ன?
சொல்லில் உள்ள சுட்டு
எழுத்தை நீக்கியபின்னும் மற்ற எழுத்துகள் பொருள் தந்தால் அது புறச்சுட்டு எனப்படும் அக்குதிரை(அ+குதிரை) இவ்வீடு(இ+வீடு)
22.அண்மைச் சுட்டு என்றால் என்ன?
அருகில் உள்ள
பொருள்களைச் சுட்டிக்காட்டப் பயன்படும் சுட்டு எழுத்துஅண்மைச்சுட்டு
எனப்படும். (எ---டு) இவன் இப்பொருள்
23.சேய்மைச் சுட்டு என்றால் என்ன?
தொலைவில் உள்ள பொருள்களைச் சுட்டிக்காட்டப்
பயன்படும் எழுத்து
சுட்டு எனப்படும் (எ—டு)
அவன் அப்பொருள்
24.வினா எழுத்து என்றால் என்ன? அவை யாவை?
வினாக்களைக் கேட்கப் பயன்படும் எழுதவினாஎழுத்துஎன்பர் அவை எ, யா,ஆ, ஓ,ஏ
என்னும் ஐந்தும் வினா
எழுத்து எனப்படும் எ_டு)எவன்,யாவன்,அவனா,பொய்யோ, ஏன்
. (. 25 வினா எழுத்துகளை
எவ்வாறு பிரிப்பர்?
வினா எழுத்துக்களை அகவினா,
புறவினா எனப் பிரிப்பர். 26.அகவினா
என்றால் ஏன்ன?
சொல்லில் உள்ள வினா எழுத்தை நீக்கியபின் பிற எழுத்துகள் பொருள்
தரவில்லை என்றால் அஃது அகவினா எனப்படும்(எ-டு) எவன் யாவன் ஏன் இவற்றில்உள்ளவினா எழுத்து எ யா முதலிய எழுத்துகளை நீக்கியபின்
பிற எழுத்துகள் பொருள் தருவதில்லை அதனால்
இவற்றை அகவினா என்கிறோம்.
27.புற வினா என்றால் என்ன?
சொல்லில் உள்ள வினா எழுத்தை
நீக்கியபினும் பிற எழுத்துகள் பொருள் தந்தால்
அவ்வினா எழுத்து புற வினா எனப்படும் (எ_டு )எக்குதிரை,(எ+குதிரை) அவனா (அவன்+ஆ)இவற்றில் எ
மற்றும் ஆ –வை நீக்கினாலும் மற்ற எழுத்துகள்குதிரை,அவன் எனப் பொருள் தருகின்றன. 28.தமிழ்
எழுத்துகளுள் ஒன்றுக்கொன்று இனமாவன உளவோ?
உயிர் எழுத்துகளுள்
அகரத்துக்கு ஆகாரமும், இகரத்துக்கு ஈகாரமும், உகரத்துக்கு ஊகாரமும்,எகரத்துக்கு ஏகாரமும்,ஐகாரத்துக்கு
இகரமும், ஓகாரத்துக்கு ஒகரமும் ஔகாரத்துக்கு உகரமும் இனமாகவரும்(ஐ,ஔ இனமான குறில்
இன்மையால் இனமாக இ,உ வருகின்றன.) மெய் எழுத்துகளுள் கரத்துக்கு ஙகரமும்,
சகரத்துக்ஞசகரமும்,டகரத்துக்கு,ணகரமும், தகரத்துக்கு நகரமும்,றகரத்துக்கு னகரமும்
இனஎழுத்துக்களாக வரும். 29.இனம் என்றால் என்ன?
பிறக்கும் இடம், பிறப்பதற்கான
முயற்சி, அளவு,பொருள்,உருவம்,ஆகிய இவற்றுள் ஏதேனும் ஒரு வகையால் ஒத்து வருவன
ஒன்றுக்கு ஒன்று இனமாகும்.
.30.”அ”என்றுமட்டும் கூறாமல் அகரம் இகரம் எனக் கூறுவது ஏன்?
எடுத்துக்காட்டாக “இ” ய் யி இவற்றைக் கூறும் போது கூறியவர் எந்த எழுத்தைக் கூறினார்
எனக் குழப்பம் வரும்
அக்குழப்பத்தைப் போக்க கரம் காரம், கான் முதலிய சாரியைகளைச் சேர்த்துச்
சொல்கிறோம். 31எந்த எந்த எழுத்துகளுக்கு என்ன என்ன சாரியைகளைச் சேர்க்கிறோம்?
பொதுவாக குறில்
எழுத்துகளுடன் கரம் சாரியையும், நெடில்எழுத்துகளுடன்காரம்சாரியையும் சேர்ப்போம் “ஐ” “ஔ”இவற்றுடன்
காரம் சாரியை மட்டும் அல்லாமல் கான் சாரியையும் சேர்ப்போம். ஐகாரம்,ஐகான்,
ஔகாரம்,ஔகான் என்றுகாரம்,மற்றும் கான் சாரிகளைப் பெறும்.(குறிப்பு குறில்
எழுத்துகளோடு காரம் மற்றும் கான் சாரியைகளையும் சேர்ப்பதுண்டு.) மெய்
எழுத்துகளுடன்அகரச் சாரியையைச் சேர்த்துக்கொள்க
க் _என்பதை அகரச்சாரியை சேர்த்த ககரம் என்பர் பிற மெய் எழுத்துக்களுடன் இவ்வாறே
அகரச் சாரியையைச் சேர்த்துக்கொள்க (கரம் காரம்
,கான்,அகரம் இவற்றை எழுத்துச் சாரியை என்பர்) 32 ஒன்றனுக்கு எவ்வாறு பெயர்
வைப்பார்?
ஒன்றனுக்கு இடுகுறியாகவும் காரணம் கருதியும் பெயர்
வைப்பர
33 இடுகுறிப் பெயர் என்றால் என்ன?
எவ்விதக் காரணமும் இல்லாமல்
இதற்கு ஒரு பெயர் வேண்டுமே என்பதற்காக (இட்டு
வழங்க) வைக்கும் பெயர்
இடுகுறிப் பெயர் எனப்படும் எ_டு கல்,மரம் 34.இடுகுறிப் பெயர்
எத்தனை வகைப்படும்?
இடுகுறிப் பெயர் பொதுப் பெயர் என்றும்
சிறப்புப்பெயர் என்றும்இருவகைப்படும்?
35.இடுகுறிப் பொது
என்றால் என்னை?
பொதுவாக ஓரினம் முழுவதையும் குறிக்கும் இடுகுறிப் பெயர்களை இடுகுறிப்பொதுப்பெயர் என்பர். எ_டு மரம் பாம்பு இவை எல்லா வகை மரங்களையும் பாம்புகளையும் குறிப்பதால் இவை இடுகுறிப் பொதுப்
பெயராகும். 36.இடுகுறிச்சிறப்பு
என்றால் என்ன?
சிறப்பாக ஏதேனும் ஒரு பொருளை மட்டும்
குறிக்கும் பெயர்களை இடுகுறிச் சிறப்பு என்பர் எ_டு வாழை மரம் சாரைப்பாம்பு
இவை மரங்களில் ஒரு வகையான வாழை மரத்தையும்பாம்புகளில்ஒருவகையானசாரைப்
பாம்பையும் குறிப்பதால் இவை இடுகுறிச் சிறப்பாகும் 37.காரணப் பெயர் என்றால்
என்ன?
ஒன்றனுக்கு ஏதேனும் ஒருகாரணம்
கருதி பெயர் வைக்கப்பட்டால் அது காரணப் பெயர்
எனப்படும்.
38.காரணப் பெயர் எத்தனை வகைப்படும்? விளக்குக.
காரணப் பெயரானது காரணப்பொது காரணச்சிறப்பு என இரு வகைப்படும் எ—டு அணி இஃது அணியும் காரணத்தால்
அணி எனப்பட்டது எல்லா வகை அணிகளையும் பொதுவாகக் குறிப்பதால் இது காரணப்பொதுப்
பெயராயிற்று.வளையல் என்பது வளைந்திருப்பதால்
வளையல் ஆயிற்று இது வளையல் என ஓர் அணியை மட்டும் குறிப்பதால் காரணச் சிறப்பு
எனப்படும்.
No comments:
Post a Comment