உரையாசிரியர்கள்
1. நக்கீரர் இறையனார் களவியலுக்கு உரை
எழுதியுள்ளார்.இநர் உரையில் தான் முச்சங்கம் பற்றி முழுமையான செய்திகள்
காணப்படுகின்றன.
2. இழம்பூரணர்
உரையாசிரியர்களில் தலைமை சான்றவர். தொல்காப்பியம் முழுமைக்கும் உரை வகுத்துள்ளார்.
உரையாசிரியர் என்றாலே இவரைத்தான் குறிக்கும்.
3. பேராசிரியர்- தொல்காப்பியம் முழுமைக்கும் உரை
எழுதியிருந்தாலும் மெய்ப்பாடு, உவம் ,செய்யுள்,மரபு ஆகிய இயல்களுக்கு மட்டுமே
உரைகள் கிடைத்துள்ளன.குறுந்தொகை 380 பாடல்களுக்கும் ,திருக்கோவையாருக்கும் உரை எழுதியுள்ளார். மதுரை ஆசிரியர் என்றும்
இவரை அழைப்பர்.இவர் தண்டி அலங்காரத்தை மேற்கோள் காட்டுவதிலிருந்து இவரது காலம் 13
நூற்றாண்டு எனலாம்.
4. சேனாவரையர்
திருநெல்வேலி ஆற்றூரில் பிறந்தவர்.வடமொழிப் புலம் மிக்கவர். தொல் –சொல்லுக்கு
மட்டும் உரை எழுதியுள்ளார் இவரை வடநூற் கடலை நிலைகண்டு அறிந்த சேனாவரையர்
என்று சிவஞான முனிவர் போற்றுகின்றார்.
5. நச்சினார்க்கினியர் மதுரை பார்த்துவாச
குலத்தினர். அநதணர். இவர் சைவர். சிந்தாமணிக்கும் உரை எழுதியுள்ளார்.
சிந்தாமணிக்கு உரை எழுதும் போதுதான் சமணர் ஆனார்.தொல்காப்பியம் , பத்துப் பாட்டு,
கலித்தொகை, சீவகசிந்தமணி, குறுந்தொகை இறுதி 20 பாடல்களுக்கு உரைகண்டவர். உச்சிமேற்
புலவர்கொள் நச்சிளார்க்கினியர் என்று போற்றப்பட்டார்.
6 கல்லாடர் ,தெய்வச்சிலையார் போன்றோர்
இவர்கள்
தொல்காப்பியத்திற்கு உரை எழுதியவர்கள்.
புறநானூறு,பதிற்றுப்பத்து,ஐங்குறுநூறு, போன்றவற்றிக்கு உரைகள் உள.
7.அடியார்க்கு நல்லார் சிலப்பதிகாரத்திற்க்கு
உரை எழுதியுள்ளார்.இவரைப் போற்றிப் புரந்தவன் பொப்பண்ணக் காங்கேயன்
8. பரிமேலழகர் திருக்குறளுக்கு உரை
எழுதியுள்ளார் .திருமுருகாற்றுடைக்கும் உரை எழுதியதாகத் தெரிகிறது. நூலிற் பரித்தவுரையெல்லாம்
பரிமேலழகன் தெரித்தவுரையாமோ என்று தொண்டைமண்டலச் செய்தி கூறுகிறது.இவர் காஞ்சி
உலகளந்த பெருமாள் கோவில் அர்ச்சகர் குலத்தைச் சேர்ந்தவர்.
9. சிவஞானமுனிவர் இவர் தொல்காப்பியம்
பாயிரத்துக்கும்,முதற்சூத்திரத்திற்கும் உரை எழுதியுள்ளார். சிவஞாபோதத்திற்கு
மாபாடி.ம் என்னும் பேருரை எழுதி உள்ளார்.
10.மற்றும் பலர்
முதல் உரைகண்டவர் மயிலைநாதர்
விருத்தி உரைகண்டவர் சங்கரநமச்சிவாயர்
காண்டிகை உரை கண்டவர் ஆறுமுகநாவலர்
வீரசோழியத்திற்கு உரைஎழுதியவர் பெருந்தேவனார்.
யாப்பருங்கலம். காரிகை இரண்டிற்கும் குணசாகரர்
உரை எழுதியுள்ளார்.
ஆழ்வார்கள் இயற்றிய நாலாயிரத்திவ்வியப்
பிறந்தத்திற்கு வைணவ ஆசிரியர்கள் மணிப்பிரளவ நடையில் உரை எழுதி உள்ளனர்.
இவ்வுரைகளை வியாக்கியானம் என்பர்.
பெரியவாச்சான் பிள்ளை திருவாய்மொழி தவிர்த்து
மூவாயிரம் பாடல்களுக்கும் உரைஎழுதியுள்ளார்.
மணவாளமாமுனிகள் பெரியஜீயர் என்றும்
அழைக்கப்படுவார்.
No comments:
Post a Comment