சங்க இலக்கியம் ஒருவரி வினாக்கள்
1.சங்கம் என்ற சொல் முதன்முதலில் களவியல் உரையில் காணப்படுகிறது.
2. சங்க இலக்கியங்களை
மேற்கணக்கு, கீழ்க்கணக்கு என
இருவகைப்படுத்துவர்.
3. பாட்டும் தொகையும்
மேற்கணக்கு ஆகும்.
4. பாட்டு என்பது பத்துப்பாட்டு, தொகை என்பது எட்டுத் தொகையைக் குறிக்கும்.
5. எட்டுத்தொகை நூல்கள்
1.
நற்றிணை
2.
(நல்ல)
குறுந்தொகை
3.
ஐங்குறுநூறு
4.
(ஒத்த)பதிற்றுப்பத்து
5.
(ஓங்கு)பரிபாடல்
6.
(கற்றறிந்தார்ஏத்தும்)கலித்தொகை
7.
அகம்
எனப்படும் அகநானூறு
8.
புறம்
எனப்படும் புறநானூறு
6.மேற்கணக்கு,
கீழ்க்கணக்கு நூல்களின் இலக்கணத்தைக் கூறும் நூல் பன்னிருபாட்டியல்.
7.மேல்
என்றால் பெரிய கணக்கு என்றால் நூல் என்று பொருள்
8.உறுதிப்பொருள்கள்
அறம்,பொருள்,இன்பம், வீடு என்ற நான்கும்
9.பல்வேறு
காலங்களில் பல்வேறு புலவர்களால் பாடப்பட்ட பாடல்களின் தொகுப்பு
ஆகையால் தொகை எனப்பட்டது
10.
இதை எண்பெருந்தொகை என்றும் கூறுவர்
11.இதில்
அகம் பற்றிய நூல்கள்-5 புறம்
பற்றியநூல்கள்-2 அகம்புறம் பற்றியன 1
12.எட்டுத்தொகையில்
காணப்படும் பாடல்களின் எண்ணிக்கை
கிட்டத்தட்ட 2360 பாக்கள்
13.பாடியோர்
எண்ணிக்கை 500புலவர்கள்.
14.பரிபாடல்,கலித்தொகை
இரண்டு நீங்கலாக ஏனைய ஆறும்ஆசிரியப்பாக்களால்ஆனவை.
15.நற்றிணை
என்பது நற்றிணை நானூறு என்றும் வழங்கப்படும்
16
குறைந்தது. 9 அடி அதிகம் 12 அடிகளைக்கொண்டது.
17.நற்றிணையைத்
தொகுப்பித்தவன் பன்னாடு தந்த பாண்டியன் மாறன் வழுதி
18.நற்றிணையைத்
தொகுத்தவர் பெயர் தெரியாது.
19.நற்றிணையை
பாடிய புலவர்கள்175 பேர்
20.
.நற்றிணையின் கடவுள் வாழ்த்துப்பாடியவர் பாரதம் பாடிய பெருந்தேவனார்.
21.
.நற்றிணையின் கடவுள் வாழ்த்து திருமால் பற்றியது.
22.எட்டுத்தொகை
நூல்களில் முதலாவதாக வைத்து எண்ணப்படுவது நற்றிணை.
23.
கண்ணகிகதை குறித்தபாடல் நற்றிணையில் வருகிறது.
24.முந்தையிருந்து
நட்டோர் கொடுப்பினும் நஞ்சும் உண்பர் நனிநாகரிகர் தொடர் இடம் பெற்ற நூல்
நற்றிணை
25.ஒருமுலை
அறுத்த திருமா உண்ணி கண்ணகி குறிப்பு வந்த நூல் நற்றிணை.
26.குறுந்தொகை—குறுமை+
தொகை எனப்பிரியும்.
27.
குறுந்தொகை நானூறும் என்றும் கூறுவர்.
28.
.நற்றிணையின் கடவுள் வாழ்த்துப்பாடியவர் பாரதம் பாடிய பெருந்தேவனார் 4
அடிச்சிறுமையும்
8 அடிப்பெருமையும் கொண்டது.
29.
குறுந்தொகையைத் தொகுப்பித்தவன் பூரிக்கோ
30.
குறுந்தொகையைத் தொகுத்தவர் உப்பூரி குடிகிழார்.
31.
குறுந்தொகையில் பாடிய புலவர் எண்ணிக்கை 205
32.குறுந்தொகையின் கடவுள் வாழ்த்துப் பாடியவர் பாரதம்பாடிய பெருந்தேவனார்
33. குறுந்தொகையின் கடவுள் வாழ்த்து செவ்வேள்அல்லது முருகவேள் பற்றியது
34. குறுந்தொகை நல்ல என்னும் அடைமொழ் பெற்றநூல் ஆகும்.
35. இறைவன் தருமிக்கு எழுதிக் கொடுத்த கொங்குதேர் வாழ்க்கை என்றபாடல் இடம்
பெற்றநூல்.
36.வினையே ஆடவர்க்கு உயிரே என்ற தொடர் இடம் பெற்றநூல் குறுந்தொகை.
37.ஊமன்கண்ணிற் காக்கும் வெண்ணெய் உணங்கல்போலஎன்றதொடர்இடம்பெற்றநூல்
குறுந்தொகை
38.யாய்- என் தாய், ஞாய்—உன்தாய்,எந்தை- என்தந்தை,நுந்தை-உன்தந்தை.
39.ஒவ்வொரு திணைக்கும் தனித்தனியாக 100 பாடல்களைக்கொண்டது ஐங்குறுநூறு.
40.
3அடிச்சிறுமையும் 6 அடிப்பெருமையும்
கொண்டது ஐங்குறுநூறு.
41.ஒவ்வொருநூறும்
பத்துப் பத்துப் பாடலாகப் பிரிக்கப்பட்டது. ஐங்குறுநூறு
42..ஐங்குறுநூறு
தொகுப்பித்தவன் யானைக்கட்சேய் மாந்தரஞசேரல் இரும்பொறை
43.ஐங்குறுநூறு
தொகுத்தவர் புலத்துறைமுற்றிய கூடலூர்கிழார்..
44.ஐங்குறுநூறு
பாடிய புலவர் எண்ணிக்கை 5 பேர்.
45.ஐங்குறுநூறு கடவுள் வாழ்த்துப் பாடியவர் பாரதம்பாடிய பெருந்தேவனார்
46.ஐங்குறுநூறு கடவுள் வாழ்த்து சிவன் பற்றியது
47.ஐங்குறுநூறு குறிஞ்சி பற்றிப் பாடியவர்—கபிலர்
48. ஐங்குறுநூறு முல்லைபற்றிப் பாடியவர்—பேயனார்
49. ஐங்குறுநூறு மருதம்
பற்றிப்பாடியவர்—ஓரம்போகியார்.
50. ஐங்குறுநூறு நெய்தல் பற்றிப்பாடியவர்—அம்மூவன்
51. ஐங்குறுநூறு பாலைபற்றிப்பாடியவர்--ஓதலாந்தை
பதிற்றுப்பத்து.
89.
பதிற்றுப்பத்து புறப்பொருள் பற்றி எடுத்துக் கூறும் நூல்
90
பதிற்றுப்பத்து சேர மன்னர் பத்துப் பேர் பற்றிப் பத்துப் புலவர்கள் பாடியது.
91
பதிற்றுப்பத்தில முதற்பத்தும் கடைசிப்பத்தும் கிடைக்கவில்லை
91.
2.ஆம் பத்து நெடுஞ்சேரலாதனைக் குமட்டூர் கண்ணனார் பாடியது
.92. 3 ஆம் பத்துஅவன் இளவல் பல்யானைச்
செல்கெழுகுட்டுவனை பாலைக்கௌதமனார்
பாடியது
94. 4ஆம்பத்து களங்காய்க்கண்ணி நார்முடிச்சேரலை
காப்பியாற்றுக் காப்பியனார் பாடியது
95. 5ஆம் பத்து கடல்பிறக்கோட்டிய
செங்குட்டுவனைப் பரணர் பாடியதுய
96. 6ஆம் பத்து ஆடுகோட்பாட்டுச் சேரலாதனை
காக்கைப்பாடினியார் நற்செள்ளையார்
பாடியது
97. 7ஆம்பத்து செல்வக்கடுங்கோ வாழியாதனைக்
கபிலர் பாடியது.
98. 8ஆம் பத்து பெருஞ்சேரல் இரும்பொறையை
அரிசில்கிழார் பாடியது.
99. 9ஆம் பத்துகுடக்கோ இளஞ்சேரல் இரும்பொறையைப்
பெருங்குன்றூர்க் கிழார்பாடியது.
100.முதற்பத்துஉதியஞ்சேரல் பற்றியதாகவும் இறுதிப்பத்து யானைக்கட்சேய் பற்றியதாகவும்
இருக்கலாம்.
101 பதிற்றுப்பத்து பாடல்களின் தலைப்புகள்
அப்பாடல்களில் பயின்றுவரும் பொருட்
செறிவுடைய சொற்றொடர்களால் வைக்கப்பட்டது.
102.ஒவ்வொரு பாட்டின் இறுதியிலும் வண்ணமும்
தூக்கும் துறையும் குறிக்கப்பட்டுள்ளன.
103.இதநால் இது இசையோடு பாடும் நூல் என்று
அறியலாம்
104.பகைவர்களின் பெண்டிரது கூந்தலை அரிந்து
கயிறாகத் திரித்து யானைகளைக் கட்டி
இழுத்து
வரும் பழக்கம் இருந்த்தை அறியலாம்-5ஆம் பத்தில்.
105.பதிற்றுப்பத்து சேரர் வரலாற்றைச் செப்பும்
களஞ்சியம்.
புறநானூறு
108. புறப்பொருள் பற்றிய 400 பாடல்கள் கொண்டது.
109.எட்டுத் தொகை நூல்களில் பதிற்றுப்பத்தும்
,புறநூனூறும் மட்டுமே புறப்பொருள்
பற்றிக் கூறிகின்றன்.
110. புறம் ,புறப்பாட்டு,புறம்பு 400 என்ற
வேறுபெயர்களாலும் வழங்கப் படுகிறது.
111.இதன் கடவுள் வாழ்த்துப் பாடலைப் பாடியவர்
பாரதம் பாடிய பெருந்தேவனார்.
112. .இதன் கடவுள் வாழ்த்துப் பாடல் சிவபெருமான்
பற்றியது
113 புறநானூறு பாடிய புலவர்கள்160 பேர். அதில்
10 க்கும் மேற்பட்ட பெண்பாற்
புலவர்கள் உள்ளனர்
114. புறநானூறு 4 அடிமுதல் 40 அடிகளைக்
கொண்டநூல்.
115. நெல்லும் உயிரன்றே நீரும் உயிரன்றே என்ற
தொடர் இந்நூலில் தான் உள்ளது.
116. யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற கணியன்
பூங்குன்றன்பாடல் உள்ளநூல்.
117.போப்பையர் இந்நூலை ஆங்கிலத்தில்
மொழிபெயர்த்துள்ளார்
118.எவ்வழிநல்லவர் ஆடவர் அவ்வழி வாழியநிலனே என்ற
கருத்து இந்நூலில் வருகிறது.
119இலக்கியங்கள் காலம் காட்டும் கண்ணாடி
என்பதற்கு இந்நூலே எடுத்துக்காட்டு.
120.பாரதப்போரில் பெருஞ்சோறு இட்டதாக
உதியஞ்சேரலாதன் குறிக்கப்படுகின்றான்
No comments:
Post a Comment