இலக்கணக்குறிப்பு காணும் விதம்
நாம் தெரிந்து கொள்ள வேண்டிய இன்றிமையா இலக்கணக் குறிப்புகள் இவை முறையான இலக்கணம் அன்று தேர்வில் மதிப்பெண் பெறுவதற்காகச் சுருக்கு வழியில் கூறப்பட்டது
1) பண்புத்தொகை
2)வினைத் தொகை
3)உவம(மை)த்தொகை
4)உம்மைத் தொகை
5)அன்மொழித் தொகை
6)வேற்றுமைத் தொகை
7)எழுவாய்த் தொடர்
8)விளித் தொடர்
9)தெரிநிலை வினைமுற்று
10)குறிப்பு வினைமுற்று
11) வியங்கோள் வினைமுற்று
12) பெயர் எச்சம்
13)வினை எச்சம்
14) எதிர்மறைப் பெயரெச்சம்
15) ஈறு கெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்
16) அடுக்குத் தொடர்
17) இரட்டைக் கிளவி
18).வினையாலணையும் பெயர்
இன்னும்பல
1) பண்புத்தொகை: பண்புத் தொகை காண எளிய வழி ஒரு தொடரில் பொருள்ள சொல்லை மறைத்துக் கொள்க அதற்கு முன் அர்த்தமற்ற சொற்கள் இருந்தால் அது பண்புத் தொகை
எ-டு கடுந்திறல் இதில் திறல் ஐ நீக்கியபின் கடுந் பொருள் இல்லை ஆகவே அது பண்புத்தொகை நல்லாறு ஆறு நீக்கிய பின் நல்ல் பொருள் இல்லை
முதுமரம் மரம் நீக்கிய பின் முது பொருள் இல்லை ஆகவே அது பண்புத் தொகை மற்ற சொற்களைச் சோதித்துக் கொள்ளவும்
2) வினைத் தொகை
ஊறுகாய் இதில் அர்த்தமான சொல்லை (காய்) நீக்கியபின் முன்னால் கட்டளைச் சொல் உள்ளது .இப்படி அர்த்தமான சொல்லை நீக்கிய பின் முன்னால் கட்டளைச் சொல் இருந்தால் வினைத்தொகை எழுஞாயிறு ஞாயிறு நீக்கிய பின் எழு என்பது கட்டளைச்சொல் ஆகவே அது வினைத்தொகை
3)உவம(மை)த்தொகை ஏதாவது ஒரு பொருளை விளக்க உவமை கூறப்பட்டு அதில் போன்ற போல என்னும் உவம உருபுகள் மறைந்து வந்தால் அஃது உவமைத் தொகை எனப்படும்
பவளம் போன்ற வாய் இது உவமை இதில் போன்ற என்ற உவம உருபு மறைந்து பவளவாய் என வருவது, முத்துப்பல் போன்றன.
4)உம்மைத் தொகை இனமான பல பொருள்களைக் கூறும் போது இடையில் உம் போடாமல் கூறினால் உம்மைத் தொகை மாவும் பலாவும் வாழையும் என்பதை மா பலா வாழை எனக்கூறுவது
கடலை பொரி,தேங்காய் பழம் சேர சோழ பாண்டியர் போன்றன.
5)அன்மொழித் தொகை ஊறுகாய் என்பது ஊறுகாயைக் குறிக்கும்போது அதுவினைத்தொகை.அதுவே ஊறுகாயைக் குறிக்காமல் ஊறுகாய் விற்பவனைக் குறித்தால் அது வினைத்தொகைப் புறத்துப் பிறந்த அன்மொழித்தொகை ஏ ஊறுகாய் அங்கே வா
கடலைபொரி என்பது உம்மைத்தொகை அதுவே ஏ கடலைபொரி இங்கே வா என்னும் போது கடலைபொரி அதைக் குறிக்காமல் விற்பவனைக் குறிக்கிறது. எனவே அது உம்மைத் தொகை புறத்துப் பிறந்த அன்மொழித்தொகை
வெற்றிலை என்னும் போது பண்புத் தொகை அதுவே ஏ வெற்றிலை இங்கே வா என்னும் போது வெற்றிலையைக் குறிக்காமல் அதை விற்பவனைக் குறிக்கிறது. எனவே அது பண்புத் தொகை புறத்துப் பிறந்த அன்மொழித்தொகை
முத்துப்பல் எனத்தனியே சொல்லும்போது உவமைத்தொகை அதுவே ஏ முத்துப் பல்லே இங்கே வா என்னும் போது முத்துப்போன்ற பல்லைக் குறிக்காமல் முத்துப்போன்ற பல்லை உடையவளைக் குறிக்கிறது. எனவே அஃது உவமைத் தொகை புறத்துப் பிறந்த அன்மொழித்தொகை
6) வேற்றுமைவிரியம் வேற்றுமைத் தொகையும் வேற்றுமைப்பொருளில் வேற்றுமை உருபுகள் மறைந்து வந்தால் அது வேற்றுமைத்தொகை எனப்படும். வேற்றுமை உருபுகள் ஐ,ஆல்,கு,இன்,அது,கண் என்பன இவை மறைந்து வருவன வேற்றுமைத்தொகை வேற்றுமை உருபுகள் மறையாமல்வந்தால் வேற்றுமை விரி என்று கூறுவர்
வேற்றுமை வேற்றுமை விரி வேற்றுமைத்தொகை
இரண்டு பழத்தைத்தின்றான் பழம்தின்றான்
மூன்று கல்லால் எறிந்தான் கல்லெறிந்தான்
நான்கு இராமனுக்குத் தம்பி இராமன் தம்பி
ஐந்து மலையின் வீழ் அருவி மலைவீழ் அருவி
ஆறு எனது வீடு என் வீடு
ஏழு தோட்டத்தின்கண் வீடு தோட்ட வீடு
உருபும் பயனும் உருபும் பயனும் உடன்தொக்க தொகை
உருபுடன் வேறு சொற்களும் மறைந்து வந்தால் உருபும் பயனும் உருபும் பயனும் உடன்தொக்க தொகை எனப்படும்
பாற் குடம் ( பாலை உடைய குடம்) இரண்டாம் வேற்றுமை உருபும் பயனும் உடன்தொக்க தொகை
பொற்குடம் (பொன்னால் ஆகிய குடம்) மூன்றாம் வேற்றுமை உருபும் பயனும் உடன்தொக்க தொகை
குழந்தைப் பால் (குழந்தைக்குத் தரும்பால்) நான்காம் வேற்றுமை உருபும் பயனும் உடன்தொக்க தொகை
வாய்ப்பாட்டு (வாயில் வந்தபாட்டு) ஐந்தாம் வேற்றுமை உருபும் பயனும் உடன்தொக்க தொகை
தண்ணீர்ப் பாம்பு (தண்ணீரின்கண் வாழும்பாம்பு) ஏழாம் வேற்றுமைத் உருபும் பயனும் உடன் தொக்க தொகை
ஆறாம் வேற்றுமை, உருபு தொக்க தொகையாக மட்டுமே வரும்; உருபும் பயனும் உடன்தொக்கத் தொகையாக வருவதில்லை
7)எழுவாய்த் தொடர்
ஓர் எழுவாயும் () ஒருபயனிலை() மட்டும்வந்தால் அது எழுவாய்த் தொடர் எனப்படும் எ-டு கண்ணகி வந்தாள்
8)விளித் தொடர் ஒருவரை அழைப்பதுபோல் இருந்தால் அது விளித்தொடர் எனப்படும் எ-டு தேரா மன்னா, அம்ம போன்றன.
9)தெரிநிலை வினைமுற்று ஒருவன் ஒருசெயலை முழுமைபெறச் செய்வானாயின் அதில்காலம் வெளிப்படையாகத்தெரியும் பொருள் இடம் காலம் சினை குணம் தொழில் என்னும் ஆறையும் பயனிலையாக ஏற்று வருவது தெரிநிலை வினைமுற்று எ-டு சேலை நெய்தான்
10)குறிப்பு வினைமுற்று காலம் வெளிப்படையாகத் தெரியவில்லை எனின் குறிப்பு வினைமுற்று எ-டு நல்லன்
11) வியங்கோள் வினைமுற்று
மொழியின் கடைசியில் `க'வந்திருந்தால் அதை நீக்கியபின் கட்டளை சொல் இருந்தால் அது வியங்கோள் வினை முற்று எ-டு வாழ்க, ஒழிக,தருக,செய்க இவற்றில் க. வை நீக்கியபின் இருப்பது வாழ்,ஒழி,தா,செய் என்னும் கட்டளைச் சொற்கள் உள்ளன இவ்வாறு வருவன வியங்கோள் வினைமுற்று வாழி(வாழ்+இ)
வாழிய (வாழ்+இய)
வாழியர்(வாழ்+இயர்)
இவ்வாறு மொழிக்கு இறுதியில் க,இய இயர் இ என்பவை வந்து அவற்றை நீக்கியபின் கட்டளைச் சொல் இருப்பின் வியங்கோள் வினைமுற்று
12) பெயர் எச்சம் கருத்து முழுமை பெறாத வினைச்சொல் எச்சம் அல்லது எச்ச வினை எனப்படும் வந்த, வந்து போன்றன
ஓர் எச்சச்சொல் பெயரைக்கொண்டு முடிந்தால் அது பெயரெச்சம் எ-டு வந்த பையன்
13)வினை எச்சம் ஓர் எச்சச்சொல் வினையைக்கொண்டு முடிந்தால் அது வினையெச்சம் எ-டு வந்து நின்றான்
14) எதிர்மறைப் பெயரெச்சம்: ஒருபெயரெச்சம் எதிர்மறையாக இருந்தால் அஃது எதிர்மறைப் பெயரெச்சம் எனப்படும் எ-டு வாராத பையன்
15) ஈறு கெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்: எதிர்மறைப் பெயரெச்சத்தில் இறுதியிலுள்ள ‘த’ மறைந்து-கெட்டு- வந்தால் ஈறு கெட்ட எதிர்மறைப் பெயரெச்சம் எனப்படும்.
எ-டு ஓடாக் குதிரை, தேடாப் பொருள், வாராமாடு
சுருக்கமாக வந்த பையன்- பெயரெச்சம்
வாராத பையன் எதிர்மறைப் பெயரெச்சம்
வாராப் பையன் ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்
16) முற்றெச்சம்: இரண்டு வினைமுற்றுக்கள் சேர்ந்து வருவது
எ-டு படித்தனன் தேறினான் இதன் பொருள் படித்துத்தேறினான் என்பதாம்.முதலில் நிற்கும் படித்தனன் என்பது படித்து என்னும் வினையெச்சமாகப் பொருள் தருகிறது.இவ்வாறு வருவதை முற்றெச்சம் என்பர்.
17) அடுக்குத் தொடர் வந்த சொல் திரும்பத் திரும்ப வந்தால் அது அடுக்குத் தொடர் ஆனால் அதில் ஒருசொல்லை நீக்கினாலும் மற்ற சொல்லுக்குப் பொருள் இருக்க வேண்டும் அடுக்குத் தொடர் எ-டு பாம்பு !பாம்பு!
ஒரு பாம்பை நீக்கினாலும் இன்னொரு பாம்புக்குப் பொருள் உள்ளது
வருக வருக
17) இரட்டைக் கிளவி வந்த சொல் திரும்பத் திரும்ப வரும்போது அதில் ஒருசொல்லை நீக்கினாலும் மற்ற சொல்லுக்குப் பொருள் இல்லை என்றால் இரட்டைக் கிளவி எ-டு கலகல எனச் சிரித்தாள் இதில் கலகல இரட்டை கிளவி இதில் ஒரு கல நீக்கினால் மற்றொரு கல பொருள் தராது ஆகவே இஃது இரட்டைக்
18).வினையாலணையும் பெயர் ஒரு வினைமுற்று வேற்றுமை உருபை ஏற்றால் அது வினையாலணையும்பெயர் எனப்படும் வந்தான் வினைமுற்று அது ஐ என்னும் வேற்றுமை உருபை ஏற்று வந்தவனை என ஆயிற்று. இவ்வாறு வருவது வினையாலணையும்பெயர் எனப்படும் அடையாளம் கடைசி எழுத்துக்கு முன்னால் வ என்னும் எழுத்து வந்திருக்கும் வரும்
19) மரூஉ ஒருபெயர்ச்சொல் மருவி வழங்குவது மரூஉ எனப்படும்
கோயம்புத்தூரை கோவை என்பதும் தஞ்சாவூரைத் தஞ்சை என்பதும்போல்வன.
20) செய்யும் என்னும்வாய்பாட்டு வினைமுற்று ஒருகட்டளைச்சொல்லுடன் உம் இறுதியில் வருவது செய்யும் என்னும்வாய்பாட்டு வினைமுற்று எ-டு உண்ணும், செல்லும் போன்றன.
இதே இலக்கணத்தை இலக்கணப் படி கொள்ளாது மதிப்பெண் பெறும் நோக்கில் எடுத்துக் கொள்ளவும் பார்த்தவுடன் விடை எழுதும் வினாக்கள்
எழுதி வைத்து க் கொள்ளவும்
21)அளபெடை மொழிக்கு நடுவிலும் கடைசியிலும் அ ஆ போன்ற உயிர் எழுத்துகள் வாரா .அப்படி வந்தால் அது அளபெடை
தொழா அல்
அழீ இ போல் வருவன.
இனி அஃது என்ன அளபெடை எனக் கூறவேண்டும். மொழிக்கு இடையிலும் கடையிலும் "இ" வந்தால் சொல்லிசை அளபெடை
எ-டு அறனழீ இ , நசை இ போல்வன.
மற்ற(அ,உ,எ,ஒ) எழுத்துகள் வரும்போது மூன்று எழுத்துச் சொல்லாக இருப்பின் (எழுத்து எண்ணும் போது புள்ளி எழுத்தைக் கணக்கில் எடுத்துக்கொள்ளக் கூடாது)அது செய்யுளிசைஅளபெடை எனப்படும் இதற்கு இசைநிறை அளபெடை என்ற வேறு பெயரும் உண்டு. எ-டு
தொழாஅள் ,படூஉம் மூன்று எழுத்து வந்துள்ளது
மூன்றுக்கு மேல் எழுத்துகள் வந்தால் இன்னிசை அளபெடை
எ-டு கெடுப்பதூஉம் எடுப்பதூஉம் போல்வன 5 எழுத்துகள் வந்துள்ளன.
இறுதியாக இ வந்தால் சொல்லிசை
மூன்றுக்கு குறைவாக எழுத்து வந்தது செய்யுளிசை அல்லது இசை நிறை அளபெடை அதிக எழுத்து வரின் இன்னிசை அளபெடை
22)முரண் தொடை எதிர் எதிர்ச்சொற்கள் அருகருகே வருவது
எ-டு இரவும்பகலும்
23) எண்ணும்மை இரண்டு மூன்று சொற்களுக்கு இடையில் உம் என்னும் இடைச்சொல் வருவது
எ-டு பாலும் தெளிதேனும் பாகும்
24) உரிச்சொல் பெயர், வினைகளுக்கு உரிமைபூண்ட சொற்கள் உரிச்சொற்கள் எனப்படும் அவை ஒரு குணம் தழுவிய பல உரிச்சொற்கள் பலகுணம் தழுவிய ஓர் உரிச்சொல் என இதுவகைப் படும்
ஒரு குணம் தழுவிய பல உரிச்சொற்கள் சால,உறு, தவ, நனி,கூர், கழி என்ற ஆறும் இந்த ஆறும் மிகுதி என்னும் ஒரே பொருளைத் தரும்
எ-டு
சாலப் பசித்தது, உறுபசி,தவச்சிறிது, நனி தின்றான், கூர் பசி, கழி பேருவகை
அடுத்து
பலகுணம் தழுவிய ஓர் உரிச்சொல் கடி
இது காவல்,கூர்மை, மணம்,விளக்கம், அச்சம்,விரைவு,மிகுதி என்னும் பல பொருள்களில் வரும்
கடி நகர்- காவல் பொருந்திய நகர்
கடிவாள்- கூர்மையான வாள்
கடிமலர் மணம் பொருந்திய மலர் பொதுவாக கீழே வரும் சொற்களை மனனம் செய்து கொள்க
அச்சொற்கள் வந்தால் உரிச்சொல் தொடர் என இலக்கணக்குறிப்பு எழுதவும்
சால, உறு,தவ,நனி,கூர்,கழி, கடி,நளி, வை,விழு, மா என்ற சொற்களைப் பார்த்தவுடன்
இவை தனியாக வந்தால் உரிச்சொல் என்றும் வேறு சொற்களுடன் சேர்ந்து வந்தால் உரிச்சொல் தொடர் என்றும் இலக்கணக் குறிப்பு எழுதவும்
பார்த்தவுடன் எழுதக்கூடியவை
1. ஈறு கெட்ட எதிர்மறைப் பெயரெச்சம் ஒரு சொல்லின் இறுதியில் துணைக்கால் இருக்கும் எ-டு ஓடாக் குதிரை, தேடாப் பொருள், வாராமாடு
2.முற்றெச்சம்: இரண்டு வினைமுற்றுக்கள் சேர்ந்து வருவது படித்தனன் தேறினான்
3. வினையாலணையும்பெயர் ஒரு வினைமுற்றில் கடைசி எழுத்துக்கு முன்னால்(ஈற்றயல் எழுத்து) வ என்னும் எழுத்து வந்திருந்தால் வந்தவன்
4.கட்டளைச்சொல்லின்பின்னால் க.இய,இயர் வந்திருந்தால் வாழ்க, வாழிய,வாழியர்
5.முரண்தொடை எதிர் எதிர்சொற்கள் சேர்ந்து வந்தால் இரவும் பகலும்
6.அடுக்குத்தொடர் வந்த சொல்லே திரும்ப வருவது இரண்டிற்கும் பொருள் இருக்க வேண்டும் பாம்பு பாம்பு வருக வருக ஒரு வருக மட்டும்இருந்தால் வியங்கோள் வினைமுற்று
7. வந்த சொல்லே திரும்ப வருவது இரண்டில் ஒன்றைநீக்கினால் பொருள் இருக்கவில்லை என்றால் இரட்டைக்கிளவி கலகல
8 அளபெடை மொழிக்கு இடையிலும்கடையிலும் இ வந்தால் சொல்லிசை அளபெடை அ ,உ எ ஒ வந்து மூன்று எழுத்துமட்டும் இருந்தால் இசைநிறை அல்லது செய்யுளிசை அ ,உ எ ஒ வந்து மூன்று எழுத்துக்கு மேல் இருந்தால் இன்னிசை அளபெடை
9. உரிச்சொற்றொடர் முதலில் மா வந்திருந்தால் மாநகர்
10 வினைத்தொகை கட்டளைத்சொல்+சொல் வந்தால் அரி வாள்
11 எண்ணும்மை இரண்டு மூன்று சொற்களுக்கு இடையில் உம் என்னும் வந்தால் பாலும் பழமும்
12 உம்மைத்தொகை இரண்டு மூன்று சொற்களுக்கு இடையில் உம் வரவில்லை என்றால் பால் பழம்
அரசுப்பணிக்கான தேர்வு எழுதும் மாணாக்கர் நலம்கருதி வெளியிடுவோர் தொல்காப்பியர் தமிழ்ச்சங்கமத்லைவர் புலவர் ஆ.காளியப்பன் 9788552993
No comments:
Post a Comment