தொல்காப்பிய முத்து
எல்லா உயிர்க்கும் இன்பம் என்பது
தானமர்ந்து வரூஉம் மேவற் றாகும் (தொல்.பொருள்.பொருளியல்1168)
பொருள்: உலகிலுள்ள ஓரறிவு உயிராகிய
தாவரங்கள் முதல் ஆறறிவு படைத்த மனிதர்வரை எல்லா உயிர்களுக்கும் ‘இன்ப உணர்வு’
(பாலுணர்வு)என்பது உண்டு. இந்தக் காம உணர்வு என்பது அந்த அந்த உயிரிகளின் பிறப்பிலேயே
தானாக விரும்பிப் பொருந்தி வருவதாகும். இந்த உணர்வு இருப்பதால்தான் எதிர்பால்
ஈர்ப்பு உண்டாகி ஒன்றினுள் கலந்து உலகில் உயிர்கள் தோன்றிக்கொண்டே இருக்கின்றன.இதுவே
இறுதியான முடிவு அதனால்தான் திருவள்ளுவரும் இறுதிக்குறளில்
“ஊடுதல் காமத்திற்கு இன்பம்
அதற்கின்பம்
கூடி முயங்கப் பெரின்” என்றார்(குறள்1330)
No comments:
Post a Comment