உலகத்தொல்காப்பிய மன்றத்துடன் இணைந்து தொல்காப்பியர் பேரவை
எல்லாச் சொல்லும் பொருள்குறித்தனவே(தொல்.சொல் பெயர் 640)
ஒவ்வொரு சொற்களுக்கும் தனித்தனிப் பொருள் உண்டு. ஒரே பொருள் குறித்த
பல சொற்கள் இருந்தாலும் அவற்றிடையே சிறிய வேறுபாடு இருக்கும்.
எடுத்துக்காட்டு சொல்லல் என்ற சொல்லை எடுத்துக்கொள்வோம்
சொல்லல் -ஒருசெய்தியைக்கூறலல
பேசுதல்- இருவர் உரையைாடல் விவாதித்தல்
செப்பல், நீதி உலக இயல்பு பற்றிஅறிவுறுத்தல்
கூறுதல்-பலபொருளுள்ஒவ்வொன்றாககூறுபோட்டுச்சொல்லல்
விளக்கல் –தெளிவாகக்கூறல் ,
பகர்தல் –பகுத்துச்சொல்லல்
அறைதல் -இதுதான் என்று உறுதியாகக்கூறல்
உரைத்தல் - ஒன்றனுக்குப்பொருள்தெரியாத பொழுது அதை எடுத்துச்சொல்லல்
விளம்பல்-பலருக்கும் தனித்தனியாகச் சொல்லல்
இயம்பல்-கதைகளைக்கூறல்
கதைத்தல்- நிறையப்பேசல்
உளறல்- பொருள் அற்ற சொற்களைக்கூறல்
முனகல் அல்லது முனுமுனுத்தல்(பிறருக்குக்கேட்க வேண்டும் ஆனால்
என்னவென்று புரியக்கூடாது அப்படிப்பேசல்)
புலம்பல்(ஏதாவது இழந்த போது திரும்பத்திரும்ப தனக்குள்
சொல்லிக்கொள்ளல்)
கெஞ்சல்-ஒன்றை வேண்டுமென விடாது கேட்டல்
இறைஞ்சல்- பெரியோர்களிடம் ஒன்றை வேண்டுமெனக்கேட்டல்
எனவே எல்லாச்சொற்களுக்குச் தனித்தனிப் பொருள் உண்டு என்று அறியவும்
No comments:
Post a Comment