குறிப்பு
வெளிப்படை21-11-16 இன்றைய இலக்கணம்
ஒருசொல் வெளிப்படையாக
எல்லாருக்கும் பொருள் புரியும் வண்ணம் பொருள் உணர்த்துவது வெளிப்படை
எனப்படும்.எ-டு மரம் வளர்ந்ததுஎல்லாருக்கும் எளிதில் புரியும்.
ஒருசொல் வெளிப்படையாக
எல்லாருக்கும் பொருள் புரியும்வண்ணம் பொருள் உணர்த்தாமல் ஏதேனும்
ஒருகுறிப்பால் பொருளை உணர்த்துவது குறிப்பு எனப்படும் .எ-டு இரண்டுக்குப் போகிறேன்
.மலம்கழிக்கச் செல்கிறேன் என்று பொது இடத்தில் கூறமுடியாது. ஆகவே இரண்டிற்கு
என்னும் குறிப்பால் உணர்த்துகிறோம்
குறிப்பால் பொருள் உணர்த்தவன
1.ஒன்றொழி பொதுச்சொல்
2.செய்யுள் விகாரங்கள்
3.தகுதி வழக்கு
4.ஆகுபெயர்
5.அன்மொழ்த்தொகை
6.வினைக்குறிப்பு
7.முதல்குறிப்பு
8.தொகைக்குறிப்பு
இவையும்இவைபோல்பிறவும்குறிப்புமொழிஎனப்படும்.இனி
ஒவ்வொன்றாகக்காண்போம்.
1. ஒன்றொழி பொதுச்சொல்
பொதுச்சொல் என்பது ஆண்பாலுக்கும் பெண்பாலுக்கும்
பொதுவான சொல்
எ-டு குழந்தை (ஆண்குழந்தைக்கும் பெண்குழந்தைக்கும் பொதுவான சொல்)
மக்கள் (ஆண்மக்களுக்கும்
பெண்மக்களுக்கும் பொவான பெயர்)
மாடு(பசுமாட்டிற்கும் காளை மாட்டிற்கும்
பொதுவான பெயர்)
மீசை துடிதுடிக்க மக்கள்
நால்வர் எழுந்தனர் இதில்
மீசை என்னும் குறிப்பால் மக்கள் என்னும் ஆண்பாலுக்கும் பெண்பாலுக்கும் பொதுவான
பெயர் பெண்மக்களை விலக்கி ஆண்மக்களை மட்டும் குறிக்கிறது.
இரண்டு மக்களை (பேரை) மக்கள் பேற்றிற்காக மருத்துவ
மனையில் சேர்த்தனர் இதில் மக்கள் பேற்றிற்காக என்னும் குறிப்பால் மக்கள் என்னும்
பொதுப்பெயர் பெண்மக்களாக்குறிக்கிறது .நான்கு
மாடுகள் பால் கறக்கின்றன எனும் போது கறக்கின்றன என்னும் குறிப்பால் மாடு என்னும்
பசுமாட்டிற்கும் காளைமாட்டிற்கும் பொதுவானமாடு கறக்கின்றன என்னும் குறிப்பால்
பசுமாட்டைக் குறிக்கிறது.
இவ்வாறு
ஆண்பாலுக்கும் பெண்பாலுக்கும் பொதுவான பெயர் ஏதேனும் குறிப்பால் ஒருபாலை ஒருபாலை
ஒழித்து மற்றொரு பாலை குறிப்பதுக் குறிப்பது ஒன்றொவி பொதுச்சொல் எனப்படும். (பிறபின்) அன்புடன் புலவர் ஆ.காளியப்பன்
No comments:
Post a Comment